Go to full page →

உலகத்தொடர்பு குறித்து எச்சரிக்கையாயிருங்கள் கச 61

இந்தத் தூது (வெளி. 18:1-3) ஒலித்துக்கொண்டிருக்கும்பொழுது, அறிவிக்கப்படும் சத்தியம், அதன் பிரித்தெடுக்கும் பணியைச் செய்து கொண்டிருக்கும்பொழுது, தேவனுடைய உண்மையான காவற்காரர்களாகிய நாம், நம்முடைய உண்மையான நிலை என்ன என்பதைத் தெளிவாக அறிந்துகொள்ள வேண்டும். உலகத்தாரின் ஆவியினால் உந்தப்படாமல் இருக்கும்படியாகவும், நமது ஆவிக்குரிய பகுத்தாராயும் தன்மை குழப்பமடைந்து, சத்தியத்தைப் பெற்று கர்த்தரின் செய்தியை வைத்திருக்கும் கிறிஸ்தவ சபைகள் என்று தங்களளை அழைத்துக்கொள்ளுகின்ற சபைகளின் நிலைப்பாட்டிலிருந்து பார்க்காதிருக்கும் படியாகவும் நாம் உலகத்தாரோடு நம்மை பிணைத்துக்கொள்ளாமல் இருக்கவேண்டும். அதே சமயம் பரிசேயர்களைப் போல அவர்களிடமிருந்து ஒதுங்கியிருக்கவும் கூடாது. — EGW’ 88 1161 (1893). கச 61.1

வானத்தின் மேகங்களிமீது கிறிஸ்து வருவதை எதிர்பார்த்துக் காத்திருக்கின்ற மக்கள், களியாட்ட குழுக்களிலும், தங்களது சொந்த கேளிக்கைகளுக்காக கூடும் கூட்டங்களிலும் உலகத்துடன் ஒன்றிணைந்திருக்கமாட்டார்கள். — Ms 4, 1898. கச 61.2

நம்முடைய விசுவாசத்தில் இல்லாதவர்களுடன் ஒப்பந்தங்கள் மூலமாகவோ அல்லது கூட்டு வணிகத்தின் மூலமாகவோ அல்லது தொழில் சங்கங்களின் மூலமாகவோ, நாம் ஒன்றாக இணைந்திருப்பது தேவனுடைய ஒழுங்குமுறையில் இல்லை. — RH Aug. 4, 1904. கச 61.3

நம்மால் இயன்ற அளவிற்கு மற்ற மக்களுடன் நம்முடைய கொள்கைகளைத் தியாகம் செய்யாமல் நாம் இணைந்திருக்க வேண்டும். அப்படி இணைந்திருப்பதென்பது, நாம் அவர்களது சங்கங்களில் பங்கு கொள்ளவேண்டும் என்றோ, அவர்களது தங்கும் இடங்களில் தங்கியிருக்கவேண்டும் என்றோ அர்த்தமல்ல. மாறாக, இச்சையடக்கம் பற்றின கேள்வியிலே நாம் மனமுவந்து அவர்களுக்கேற்றவாறு இணங்கமாட்டோம் என்பதை அவர்கள் புரிந்துக்கொள்ளும்படியாக நாம் நடந்து கொள்ளவேண்டும். — Te 220 (1884). கச 61.4