தேவனுடைய கற்பனைகளைக் கைக்கொள்ளுகின்ற மக்களாகிய நாம், கண்டிப்பாகப் பட்டணங்களை விட்டு வெளியேற வேண்டும். ஏனோக்கு செய்ததைப்போல, நாம் பட்டணங்களில் ஊழியம் செய்ய வேண்டும். ஆனால் அவைகளில் வசிக்கக்கூடாது. — Ev 77, 78 (1899). கச 70.5
தொலைவான பகுதிகளில் இருந்துகொண்டு பட்டணங்களில் ஊழியம் செய்யவேண்டும். “பட்டணங்கள் எச்சரிக்கப்பட வேண்டாமா? வேண்டும். தேவனுடைய ஜனங்கள் அவைகளில் வாழ்ந்து அல்ல, மாறாக பூமியின்மீது வரவிருக்கின்றதைக் குறித்து அவர்களை எச்சரிப்பதற்கு அவைகளுக்கு விஜயம் செய்து” என்று தேவனுடைய தூதுவன் கூறினான். — 2SM 358 (1902). கச 70.6
பட்டணங்களை மையப்படுத்தி நமது வேலைகளை ஆரம்பிக்கக்கூடாது என்ற காரியத்தில், ஒரு விசேஷித்த வெளிச்சம் பல ஆண்டுகளாக எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கின்றது. இந்த பட்டணங்களை நிறைக் கக்கூடிய கலவரங்களும் குழப்பங்களும், தொழிற் சங்கங்களாலும் வேலை நிறுத்தங்களாலும் கொண்டுவரப்படக்கூடிய சூழ்நிலைகளும், நமது வேலைக்கு ஒரு மாபெரும் தடங்கலாக இருக்கும் என்பதை நிரூபிக்கும். — 7T 84 (1902). கச 70.7
ஒரு தேசத்தில் அக்கிரமம் பெருகும்போது, சோதோமிலே லோத்தின் குரல் கேட்கப்பட்டதுபோல, போதனையும் எச்சரிப்பும் கொடுக்கின்ற ஏதாவதொரு சத்தம் எப்பொழுதும் கேட்கப்பட வேண்டும். ஆயினும், லோத்து தனது இல்லத்தை இந்த துன்மார்க்கமான தூய்மைக்கேடடைந்த பட்டணத்தில் அமைக்காது இருந்திருப்பாரானால், அநேகத் தீமைகளிலிருந்து தனது குடும்பத்தை பாதுகாத்திருக்கக்கூடும். லோத்துவும் அவரது குடும்பமும் சோதோமில் செய்ததை பட்டணத்திலிருந்து சற்றுத் தொலைவிலுள்ள ஒரு இடத்தில் அவர்கள் வாழ்ந்துகொண்டு செய்துகொண்டிருந்திருக்கலாம். — Ev 78 (1903). கச 71.1
தற்போதைக்கு, சிக்காகோ பட்டணத்தில் வேலை செய்யவேண்டிய நிர்ப்பந்தம் சிலருக்கு இருக்கலாம். ஆனால் அவர்கள் நாட்டுப்புற இடங்களிலே ஊழிய மையங்களை அமைத்துகொண்டு; அங்கிருந்து பட்டணங்களில் ஊழியஞ்செய்ய தயார் செய்ய வேண்டும். தேவனுடைய பிள்ளைகள் தங்களையே ஆராய்ந்து பார்த்து, எளிமையானதும் அதிக செலவில்லாததுமான இடங்களை, தாங்கள் வேலை செய்வதற்கேற்ற ஊழிய மையங்களாக அமைத்துக்கொள்ள வேண்டுமென்று தேவன் விரும்புகிறார். அவ்வப்போது பெரிதான இடங்கள் அதிசயிக்கும் வகையில் குறைந்த விலைக்கு அவர்களால் வாங்கிகொள்ள இயலும் விதத்தில் அவர்களது கவனத்திற்கு வரும். — Ev 402 (1906). கச 71.2