Go to full page →

இயற்கையின் சூழலில் வளமான ஆசீர்வாதங்கள் கச 71

“பட்டணங்களிலிருந்து வெளியேறுங்கள்’ என்று நாங்கள் மறுபடியும் சொல்லுகின்றோம். அப்படி மலைகள் மற்றும் குன்றுகள் போன்ற இடங்களுக்குச் செல்லவேண்டியதை ஒரு மாபெரும் இழப்பாகக் கருதவேண்டாம். மாறாக, தேவனோடு தனித்திருந்து அவரது சித்தத்தையும் வழியையும் கற்றுகொள்ளவதற்கு ஏதுவான ஒதுக்கிடத்தை தேடுங்கள்… கச 71.3

ஆவிக்குரிய தன்மையை தேடுவதையே தங்களது வாழ்க்கைப் பணியாக கொள்ளவேண்டும் என நமது ஜனங்களை நான் ஊக்குவிக்கின்றேன். கிறிஸ்து வாசலண்டையில் நிற்கின்றார். எனவேதான் நமது ஜனங்களுக்கு நான் சொல்லுகிறதாவது: பட்டணங்களை விட்டு நாட்டுப்புறப் பகுதிகளுக்குச் செல்லும்படியாக அழைக்கப்படும்போது, அதை நீங்கள் தனிமையாகக் கருதவேண்டாம். மாறாக, அதைப் புரிந்து கொண்டு செயல்படுபவர்களுக்கு அங்கே செழிப்பான ஆசீர்வாதங்கள் காத்திருக்கின்றன. இயற்கைக் காட்சிகளையும் சிருஷ்டிகரின் கிரியைகளையும் நோக்கிப்பார்ப்பதினாலும், தேவனின் கைவேலைப்பாடுகளை ஆராயந்து பார்ப்பதினாலும், புலன்களால் எளிதில் உணரப்படாத அவரது சாயலாகவே நீங்கள் மாற்றப்படுவீர்கள். — 2SM 355, 356 (1908). கச 71.4