தங்களது பிழைப்பு மற்றும் ஜீவனத்துக்கானவைகளை நாட்டுபுறத்தைக்காட்டிலும் பட்டணங்களில் பெற்றுகொள்வது எளிது என்ற கற்பனை மனோபாவம் பெற்றோர்களிடத்தில் காண்ப்படுவதால், அவர்கள் தங்கள் குடும்பத்துடன் நகரத்தில் வசிப்பதற்க்குச் சென்றுவிடுகின் றனர். பிள்ளைகள் பள்ளிகூடத்திற்குச் செல்லாதபோது. செய்வதற்கு ஒன்றும் இல்லாதிருப்பதால், தெருக்கல்வியை அவர்கள் பெற்றுக்கொள்கின்றனர். தீய நண்பர்களிடமிருந்து ஒழுக்கக்கேடான பழக்கங்களையும், காலம் மற்றும் இளமை ஆகியவற்றை வீணாக்குகின்ற பல தீய பழக்கங்களையும் தேடிப் பெற்றுக்கொள்கின்றனர். — 5T 232 (1882). கச 71.5
பட்டணங்களில் அமைந்துள்ள பள்ளிகளுக்கு நம் பிள்ளகளை அனுப்பும்போது, அங்கே சோதனையின் ஒவ்வொரு நிலையும் அவ்ர்களைக் கவர்ந்துகொள்ளவும் ஒழுக்கத்தை சீர்குலைக்கவும் காத்திருக்கின்றது. எனவே, பட்டணங்களில் நல்ல குணநனங்களைக் கட்டும் பணி, பெற்றோரும் பிள்ளைகளுமாகிய இரு சாராருக்குமே பத்து மடங்கு கடினமாகிவிடுகின்றது. — FE 326 (1894). கச 72.1
பட்டணங்களெல்லாம் சோதனைகளால் நிறைந்திருக்கின்றன. இத்தகைய தூய்மைக்கேட்டினின்று எந்தளவிற்கு தூரமான இடத்திற்குக் கொண்டுசென்று, நம்முடைய வாலிபப் பிள்ளைகளை அச்சூழ்நிலை பாதிக்காத வகையில் நாம் வைத்துகொள்ள முடியுமோ, அந்த அளவிற்கு நமது வேலைகளை நாம் திட்டஞ்செய்ய வேண்டும். — AH 136 (1902). கச 72.2
நமது மக்கள் தங்களது குடும்பங்களைப் பட்டணங்களிலிருந்து அதிக ஒதுக்கிடமான இடங்களுக்கு அழைத்துச் செல்லக்கூடிய காலம் இதுவே ஆகும். இல்லாவிடில், நமது வாலிபர்களில் அநேகரும், வயதில் பெரியவர்களில் அநேகருங்கூட, சத்துருவின் கண்ணிகளில் அகப்பட்டு, கொண்டுசெல்லப்பட்டுவிடுவார்கள். — 8T 101 (1904). கச 72.3
பட்டணங்களில் தங்கி வசிப்பதன் மூலம் நூற்றில் ஒரு குடும்பம்கூட சரீரரீதியாக, மனரீதியாக அல்லது ஆவிக்குரிய ரீதியாக வளர்ச்சி அடைவதில்லை. வயல்களும், குன்றுகளும், மரங்களும் நிறைந்த தனிமையான இடங்களிலே, விசுவாசம், நம்பிக்கை, அன்பு, சந்தோஷம் ஆகியவற்றை அதிக இலகுவாகப் பெற்றுக்கொள்ளலாம். பட்டணத்தின் சப்தங்கள் மற்றும் காட்சிகளிடமிருந்தும், சாலைவாகனங்களின் ஒலியிலிருந்தும், மக்கள் கூட்டத்தின் இரைச்சலிலிருந்தும், உங்கள் பிள்ளகளைத்தூர எடுத்துச் சென்றுவிடுங்கள். எங்கே அவர்களுடைய மனங்கள், மிகுந்த ஆரோக்கியமுடையதாக மாறும், அப்போது தேவனுடைய வார்த்தையின் சத்தியத்தை அவர்கள் தங்களது இருதய மாகிய இல்லத்திற்கு எடுத்துச்செல்வது மிகவும் எளிதாகக் காணப்படும். — A H 137 (1905). கச 72.4