Go to full page →

நியூயார்க் பட்டணம் கச 82

இரக்கமில்லாமல் தேவன் தமது கோபத்தை நிறைவேற்றுவதில்லை. அவரது கரம் இன்னமும் நீட்டப்பட்டிருக்கின்றது, மாபெரும் நியூயார்க் பட்டணத்திற்கு தேவனுடைய தூது கொடுக்கப்படவேண்டும். மாபெரும் இறுதி நாளுக்கு எதிராக, மக்கள் சேர்த்துக் குவித்துவைத்திருக்கின்ற சொத்துக்களை தேவன் தமது கரத்தின் தொடுதலினால் எப்படி அழித்துவிட முடியும் என்ற காரியம் மக்களுக்குக் காட்டப்படவேண்டும். — 3MR 310, 311 (1902). கச 82.5

நியூயார்க் பட்டணத்தின்மீது என்ன வரவிருக்கின்றது என்பதைத் குறித்து குறிப்பிட்ட வெளிச்சம் என்னிடம் கிடையாது. ஆயினும், ஒருநாள் இந்த மிகப்பெரிய கட்டிடங்கள் தேவனுடைய வல்லமையினால் கவிழ்க்கப்பட்டு, வீழ்த்தப்பட்டு, அழிக்கப்படும் என்பதை மாத்திரம் நான் அறிந்திருக்கின்றேன். மரணம் எல்லா இடங்களிலும் உண்டாகும். இதனால்தான் பட்டணங்கள் எச்சரிக்கப்பட வேண்டும் என்று நான் மிகவும் கவலைப்படுகின்றேன். — RH July 5, 1906. கச 82.6

ஒரு சமயத்தில், நியூயார்க்க பட்டணத்திலே நான் இருந்தபோது, அங்கிருந்த வானபரியந்தம் உயரமாக எழும்பியிருக்கின்ற அடுக்கு மாடிக்கட்டிடங்களை இராத்தரிசனத்திலே காணும்படியாக அழைக்கப்பட்டேன். இந்த கட்டிடங்கள் நெருப்பினால் பாதிக்கப்படாது என்று சான்று பெற்றவையாயிருந்தன. மேலும் இவைகள், இந்த கட்டிடங்களினுடைய கட்டிடக் கலைஞர்கள் மற்றும் உரிமையாளர்களை மகிமைப்படுத்துவதற்காய் எழுப்பப்பட்டிருந்தன… கச 83.1

எனக்கு முன்பாகக் கடந்துசென்ற அடுத்த காட்சி தீயைப்பற்றின ஒரு ஆபத்து எச்சரிக்கையாகும். மிக உயர்ந்ததும். நெருப்பினால் பாதிக்கப்படாது என்று யூகிக்கப்பட்டதுமான கட்டிடங்களைப் பார்த்து மனிதர்கள், “அவைகள் பரிபூரண பாதுகாப்பில் இருக்கின்றன” என்று கூறினர். ஆனால், சாதாரண கொட்டகையைப் போல இந்தக் கட்டிடங்கள் அழிக்கப்பட்டன. தீயனைப்பு இயந்திரங்களால் இந்த அழிவை நிறுத்த எதுவுமே செய்ய இயலவில்லை. தீயணைப்புப் படையினரும்கூட தங்களது எந்திரங்களை இயக்க இயலாதவராயிருந்தனர். 9T 12, 13 (1909). கச 83.2