Go to full page →

ஞாயிறு ஆசரிப்பாளர்களுக்கு ஆதரவளியாமல் தேவப்பிரமாணத்தை உயர்த்துங்கள் கச 93

மதச்சுதந்தரத்தை அடக்கும்படியாகவும், தங்களது சக மனிதர்களை ஞாயிற்றுக்கிழமையை ஓய்வுநாளாக ஆசரிப்பதற்கு வழிநடத்துவதற்கும் அல்லது கட்டாயப்படுத்துவதற்கும், அடக்குமுறை அளவுகளை நடைமுறைப்படுத்தும்படியாகவும், தங்களது செல்வாக்கைப் பயன்படுத்துகிறவர்களை பிரியப்படுத்துவதற்காக நாம் வேலை செய்யக்கூடாது. வாரத்தின் முதல் நாள் பயபக்திக்குரிய ஒரு பரிசுத்த நாள் கிடையாது. அது ஒரு போலியான ஓய்வுநாள் ஆகும். எனவே, கர்த்தருடைய குடும்பத்தின் அங்கத்தினர்கள், இந்த நாளை மேன்மைப்படுத்தி தேவனுடைய ஓய்வுநாளை மிதித்துப்போடுவதின்மூலமாக, தேவனுடைய பிரமாணத்தை மீறுகின்ற ஜனங்களோடு பங்குகொள்ள முடியாது. அப்படிப்பட்ட மனிதர்களை பதவியில் வைப்பதற்காக தேவனுடைய மக்கள் வாக்களிக்ககூடது. ஏனெனில் அப்படி இவர்கள் வாக்களிக்கின்ற போது, பதவிக்கு வந்தபின்பு அவர்கள் செய்யவிருக்கிற பாவங்களில் அவர்களுடன் சேர்ந்து இவர்களும் பங்கெடுக்கிறார்கள். — FE 475 (1899). கச 93.5

இந்த ஞாயிறு ஆசரிப்புச் சட்ட இயக்கத்தைக்குறித்து, எக்காளம் நிச்சயமான ஒரு முழக்கத்தைக் கொடுக்கும் என்று நான் நம்புகிறேன். நமது பத்திரிகைகளிலே, தேவனுடைய பிரமாணத்தின் நித்தியத் தன்மையின் கருத்து, ஒரு விசேஷமானதாக ஆக்கப்பட்டிருக்குமானால், அது சிறந்த நன்மையாக இருந்திருக்கும் என்று எண்ணுகின்றேன்… இந்த ஞாயிறு ஆசரிப்புச் சட்டத்தை வீழ்த்திட நம்மால் முடிந்த அனைத்தையும் நாம் இப்போதே செய்துகொண்டிருக்கவேண்டும். — CW 97, 98 (1906). கச 93.6