Go to full page →

அமெரிக்க ஐக்கியநாடுகள் ஞாயிறு ஆசரிப்புச் சட்டத்தை அமல்படுத்தும் கச 94

நமது நாடு ஞாயிறு ஆசரிப்புச் சட்டத்தைக் கொண்டுவரும்படி அதனுடைய அரசாங்கத்தின் கொள்ளைகளை விட்டுக்கொடுக்கும்போது, புராட்டஸ்டண்ட் மார்க்கம் இந்த சட்டதத்திலே போப்பு மார்க்கத்தோடு கைகோர்த்துக்கொள்ளும். - 5T 712 (1889). கச 94.1

புராட்டஸ்டண்ட் மக்கள் தங்களது முழு செல்வக்கையும் பலத்தையும் போப்பு மார்க்கத்திற்கு ஆதரவாகத் திருப்புவர். நாடு தழுவிய ஒரு சட்டத்தின் மூலம் பொய்யான ஓய்வுநாளை வலியுறுத்தும்போது ரோம அரசாங்கத்தின் சீர்கெட்டுப்போன நம்பிக்கைக்கு, அவர்கள் ஜீவனையும் வல்லமையையும் அளிப்பர். இதன் மூலமாக, அவளது (ரோம்) கொடுங்கோலாட்சிக்கும், மனச்சாட்சியின் அடக்குமுறைக்கும் மறு உயிரூட்டுவர். — Mar 179 (1893). கச 94.2

வெகு சீக்கிரத்திலோ அல்லது சற்றுத் தாமதமாகவோ, ஞாயிறு ஆசரிப்புச் சட்டங்கள் அமலுக்குக் கொண்டுவரப்படும். — RH Feb. 16, 1905. கச 94.3

ஞாயிறு ஆசரிப்புச் சட்டங்கள் வெகு சீக்கிரத்தில் வலியுறுத்தப்பட்டு நடைமுறைக்குக் கொண்டுவரப்படும். அப்போது நம்பகமான பதவிகளில் இருப்பவர்கள், தேவனுடைய பிரமாணத்தைக் கைக்கொள்ளுகின்ற, சிறிதளவு எண்ணிக்கையுள்ள கூட்டத்திற்கு எதிராக வெறுப்புடையவர்களாக இருப்பர். — 4MR 278 (1909). கச 94.4

ஆட்டுக்குட்டிக்கொப்பான கொம்புகளை உடைய மிருகத்தினால் சுட்டிக்காட்டப்பட்ட வல்லமை பூமியும் அதன் குடிகளும், “சிறுத்தையைப்போன்ற மிருகத்தினால்” அடையாளப்படுத்தப்பட்ட போப்பு மார்க்கத்தை வணங்கும்படி செய்யும் என்பதை வெளிப்படுத்தல் 13-ம் அதிகாரத்தின் தீர்க்கதரிசனம் அறிவிக்கின்றது. ரோமன் கத்தோலிக்க சபை தன்னுடைய மேலாதிக்கத்தின் விசேஷமான அங்கீகரிப்பு என்று உரிமைபாராட்டும் ஞாயிற்றுக்கிழமையை ஆசரிக்கும்படியான சட்டத்தை அமெரிக்க ஐக்கியநாடு வலியுறுத்தும்போது இந்தத் தீர்க்கதரிசனம் நிறைவேறும்… கச 94.5

நியாயத்தின் மீதான அன்பையும், சத்தியத்தின் மீதான பற்றையும், அரசியல் சீர்கேடு அழித்துக்கொண்டிருக்கிறது. சுதந்திர அமெரிக்காவிலும் கூட, ஆட்சியாளர்களும் சட்டமியற்றுபவர்களும், பொது ஜன ஆதரவைப்பெறவேண்டி, ஞாயிறு ஆசரிப்பை வலியுறுத்துகின்ற ஒரு சட்டத்திற்கான ஏகோபித்த வேண்டுகோளுக்கு இணங்கிப்போவார்கள். — GC 578, 579, 592 (1911). கச 94.6