Go to full page →

வானத்திலே அடையாளங்கள் கச 12

போப்பு மார்க்கத்தினால் உண்டாகும் மாபெரும் உபத்திரவத்தின் முடிவின்போது, சூரியன் இருளடையும், சந்திரன் தன் ஒளியைக் கொடாதிருக்கும் என்றும் கிறிஸ்து அறிவித்தார். மேலும் அவர்: “அத்திமரத்தினால் ஒரு உவமையைக் கற்றுக்கொள்ளுங்கள்; அதிலே இளங்கிளை தோன்றி, துளிர்விடும்போது, வசந்தகாலம் சமீபமாயிற்று என்று அறிவீர்கள். அப்படியே இவைகளையெல்லாம் நீங்கள் காணும் போது, அவர் சமீபமாய் வாசலருகே வந்திருக்கிறார் என்று அறியுங்கள்” ( மத். 24 : 32, 33) என்று கூறுகின்றார். கச 12.3

தமது வருகைக்கான அடையாளங்களைக் கிறிஸ்து கொடுத்திருக்கின்றார். அவர் சமீபமாய் வந்துவிட்டார், வாசலுக்கு அருகில் வந்து விட்டார் என்பதைக்கூட நாம் அறிந்துகொள்ளலாம் என்று அவர் கூறியிருக்கின்றார். “இவைகளெல்லாம் சம்பவிக்குமுன்னே இந்தச் சந்ததி ஒழிந்து போகாது” என்று இந்த அடையாளங்களை பார்ப்பவர்களைப்பற்றி அவர் கூறுகின்றார். இந்த அடையாளங்கள் நடை பெற்றுவிட்டன.1 கர்த்தருடைய வருகை மிகவும் சமீபமாய் இருக்கிறதென்பதை, இப்பொழுது நாம் நிச்சயமாகவே அறிந்து கொள்ளலாம். - DA 632 (1898). கச 13.1