Go to full page →

பூமியின் மீதான அடையாளங்கள் கச 13

“சூரியனிலும், சந்திரனிலும், நட்சத்திரங்களிலும் அடையாளங்கள் தோன்றும்; பூமியின் மேலுள்ள ஜனங்களுக்குத் தத்தளிப்பும் இடுக்கணும் உண்டாகும்” (லூக். 21:25; மத். 24:29; மாற். 13:24 - 26; வெளி. 6:12 -17) என்று இயேசு அறிவிக்கின்றார். அவரது வருகையின் இந்த முன்னடையாளங்களைக் காண்பவர்கள். “அவர் சமீபமாய் வாசலருகே வந்திருக்கிறார்” (மத். 24:33) என்பதை அறிந்துகொள்ளவேண்டும். - GC 37, 38 (1911). கச 13.2

நாடுகள் அமைதலின்றி இருக்கின்றன. குழப்பமான காலங்கள், நமக்கு முன்பாக இருக்கின்றன. பூமியின்மேல் வந்துகொண்டிருக்கின்ற ஆபத்துகளுக்குப் பயந்து எதிர்பார்த்திருக்கிறதினால், மனுஷருடைய இருதயங்கள் சோர்ந்துபோய்க்கொண்டிருக்கின்றன. ஆயினும், தேவனை நம்புகிறவர்கள் புயலின் மத்தியிலும்: நான்தான்; பயப்படாதிருங்கள், என்று கூறும் அவரது சத்தத்தைக் கேட்பார்கள். - ST Oct. 9, 1901. கச 13.3

தேவனுடைய மகாநாளுக்கு சற்று முன்னதாக விரைவாக நடைபெற வேண்டுமென கூறியறிவிக்கப்பட்டிருந்த நிகழ்வுகளாகிய வியப்பூட்டக் கூடியதும், பரபரப்பூட்டும் சம்பவங்கள் நிறைந்ததுமான, சரித்திர நிகழ்வுகள் பரலோகத்தின் புத்தகங்களிலே பதிவு செய்யப்பட்டு வருகின்றன. உலகத்திலுள்ள அனைத்துக் காரியங்களும் ஒரு சீரற்ற நிலையில் இருக்கின்றன. - 3MR 313 (1908). கச 13.4