Go to full page →

ஞாயிற்றுக்கிழமையில் வேலையிலிருந்து விலகியிருங்கள் கச 101

அமெரிக்காவின் தென்பகுதியைக் 2பார்க்கவும்: அமெரிக்காவின் தென்பகுதியில், 1880 மற்றும் 1890-ம் வருடங்களில், ஞாயிறு ஆசரிப்புச் சட்டம் மிகத் தீவிரமாயிருந்தது; பார்க்கவும்: American State Papers (Review & Herald, 1943), pp. 517-562. குறித்த காரியத்தில், இயன்ற வரை அங்கு ஊழியம் மிக ஞானமாகவும் ஜாக்கிரதையாகவும் செய்யப்பட வேண்டும். கிறிஸ்து எப்படி வேலை செய்திருந்தாரோ, அதேபோன்ற விதத்தில் வேலை செய்யப்பட வேண்டும். மக்கள் உங்களிடத்தில் கேள்விகளை கேட்பதனால், ஓய்வுநாளையும் ஞாயிற்றுக் கிழமையையுங்குறித்த உங்கள் நமிபிக்கையை அவர்கள் விரைவாக கண்டுகொள்வார்கள். அப்பொழுது நீங்கள், அவர்களுக்கு சத்தியத்தை சொல்லி புரிய வைக்கலாமே ஓழிய, நீங்கள் செய்யக்கூடிய உங்கள் வேலையிலே அவர்களது கவனத்தை ஈக்கும்விதத்தில் அதைச் சொல்லக்கூடாது. ஞாயிற்றுக்கிழமைகளில் வேலை செய்வதன் மூலம், உங்கள் ஊழியத்தை நீங்களாகவே குறைத்துக்கொள்ளவேண்டிய அவசியமில்லை… கச 101.2

ஞாயிற்றுக்கிழமையில் வேலையிலிருந்து விலகியிருத்தல் என்பது மிருகத்தின் முத்திரையைப் பெற்றுக்கொள்வது என்று அர்த்தம் அல்ல… உபத்திரவம் எழும்புவது போன்ற எதிர்ப்பு எங்கு மிகவும் கடுமையாக இருக்கின்றதோ, அந்த இடங்களிலே வேலை ஞாயிற்றுக்கிழமையில் செய்யப்படவேண்டியது இருக்குமானால், நமது சகோதரர்கள் உண்மையான மிஷனெரி ஊழியம் செய்வதற்கு ஒரு நல்ல தருணமாக அந்த நாளைப் பயன்படுத்திக்கொள்ளலாம். — SW 69, 70 (1895). கச 101.3

அவர்கள் உங்களிடத்தில் வந்து, நீங்கள், “ஞாயிற்றுக் கிழமைகளில் உங்கள் வேலையை நிறுத்த வேண்டும், உங்களது அச்சகங்களை மூடவேண்டும் என்று சொல்வார்களானால், “உங்கள் அச்சகங்களில் வேலை தொடர்ந்து நடக்கட்டும்”… என்று நான் உங்களுக்குச் சொல்லமாட்டேன். ஏனெனில் போராட்டம் உங்களுக்கும் உங்கள் தேவனுக்கும் இடையில் உள்ளதல்ல. — Ms 163, 1898. கச 101.4

ஞாயிற்றுக்கிழமையை விக்கிரமாக்கிக்கொண்டிருக்கிற நமது அயலகத்தாரை, தீர்மானிக்கப்பட்ட முயற்சிகளினால் எரிச்சலூட்ட நம்மீது கட்டளையிடப்பட்டிருக்கிறது என்பதுபோல் நாம் எண்ணிக்கொள்ளவும் கூடாது. அந்த நாளில் (ஞாயிற்றுக்கிழமையில்) நம்மீது பணியை வருவித்துக்கொண்டு, அவர்களுக்கு முன்பாக வேண்டுமென்றே பணிசெய்ய சுதந்தரிரம் பெற்றிருக்கிறோம் என்று காட்டிக்கொள்ளவும் கூடாது. நம்முடைய சகோதரிகள், தங்கள் துணிகளைத் துவைப்பதாக வெளிக்காட்டிக்கொள்ள, ஞாயிற்றுக்கிழமையைத் தெரிந்தெடுத்துக் கொள்ள வேண்டிய அவசியமில்லை. - 3SM 399 (1889). கச 101.5