Go to full page →

ஞாயிற்றுக்கிழமையில் ஆவிக்குரிய செயல்களில் ஈடுபடுங்கள் கச 101

ஞாயிறு ஆசரிப்புச் சட்டம் வலியுறுத்தப்படும்போது, நீங்கள் என்ன செய்யவேண்டும் என்ற உங்களது கேள்விக்கு நான் பதில் கொடுக்க முயற்சிக்கின்றேன். கச 101.6

ஒரு சமயத்தில், நெருங்கிகொண்டிருக்கிற ஒரு உபத்திரவத்தை நீங்கள் எதிர்பார்த்துக்கொண்டிருப்பதுபோலவே நாங்கள் எதிர்பார்த்திருந்தபோது கர்த்தரால் எனக்குக் கொடுக்கப்பட்ட வெளிச்சம் என்னவெனில், கீழிருந்து வரக்கூடிய ஒரு வல்லமையால் ஞாயிறு ஆசரிப்பை வலியுறுத்துவதற்கென்று மக்கள் ஏவப்படும்பொழுது, ஏழாம்நாள் அட்வென்டிஸ்ட் மக்கள் அந்த நாளில் தங்களது சாதாரண வேலையை செய்யாதபடிக்கு விலகியிருந்து, அந்த நாளை மிஷனெரி வேலைக்கான முயற்சி எடுப்பதற்காக தத்தம் செய்வதின் மூலம் தங்களது ஞானத்தைக் காட்ட வேண்டும் என்பதாகும். கச 102.1

ஞாயிறு ஆசரிப்புச் சட்டங்களை வெளிப்படையாக எதிர்த்து நிற்பதென்பது, அந்தச் சட்டத்தை வலியுறுத்தும் மதவெறியர்களின் உபத்திவரப்படுத்துகின்ற காரியத்திலே அவர்களை இன்னும் உறுதிப்படுத்தும். நீங்கள் சட்டத்தை மீறுபவர்கள் என்று உங்களை அழைக்கும் விதமாக, எவ்விதத்திலும் நீங்கள் அவர்களுக்கு இடமளிக்க வேண்டாம்… குற்றமாகக் கருதப்படக்கூடிய வேலையைச் செய்யாமல் தன்னை விலக்கிக்கொண்டு, சமாதானத்தைக் காத்துக்கொள்ளக்கூடிய ஞானத்தை உணர்ந்தவனாயிருக்கின்றேன் என்று வெளிக் காட்டுவதினால் ஒருவன் மிருகத்தின் முத்திரையைப் பெறுவதில்லை… கச 102.2

கர்த்தருக்காக செய்து முடிக்கக்கூடிய அதிகமான வேலையை, பல்வேறு வழிகளில் கொண்டுசெல்லும்படியாக ஞாயிற்றுக்கிழமையைப் பயன்படுத்திக்கொள்ளலாம். அந்நாளிலே திறந்த வெளிக் கூட்டங்கள், வீட்டுக்கூட்டங்கள் போன்றவை நடத்தப்படலாம். வீடுவீடாகச் சென்று ஊழியம் செய்யலாம். எழுதக்கூடியவர்கள், தங்களது கட்டுரைகளை எழுதுவதற்காக இந்த நாளை ஒதுக்கலாம். எப்பொழுதெல்லாம் முடியுமோ அப்பொழுதெல்லாம், மதசம்பந்தப்பட்ட ஆராதனைகளை ஞாயிற்றுக்கிழமைகளில் நடத்தலாம். இப்படிப்பட்ட கூட்டங்களை மிகவும் சுவாரஸ்யமானதாக ஆக்குங்கள். உண்மையான எழுப்புதல் பாடல்களைப் பாடுங்கள். நமது இரட்சகருடைய அன்பைக்குறித்து வல்லமையோடும் நிச்சயத்தோடும் பேசுங்கள். — 9T 232, 233 (1909). கச 102.3

வெவ்வேறு இடங்களில் கூட்டங்கள் நடத்துவதற்காகவும், மருத்துவ மிஷனெரி வேலை செய்வதற்காகவும், மாணவர்களை வெளியே அழைத்துச் செல்லுங்கள். அந்நாளிலே அவர்கள் மக்களை அவர்களது இல்லங்களில் கண்டு, சத்தியத்தைக் கொடுப்பதற்கான மிகச்சிறந்த ஒரு சந்தப்பத்தைப் பெற்றுக்கொள்வார்கள். இவ்விதமாக, ஞானயிற்றுக்கிழமையை செலவழித்தல் கர்த்தருக்கு எப்பொழுதுமே ஏற்றதாகும். — 9T 238 (1909). கச 102.4