Go to full page →

அநேகர் மரணத்திற்கு ஒப்புக்கொடுக்கப்படுவர் கச 109

தேவனிடத்தில் மிகவும் நெருங்கிவருவதே, நாம் செய்கின்ற மிக உன்னதமான காரியமாகும். ஒருவேளை, சத்தியத்திற்காக இரத்த சாட்சிகளாய் நாம் மரிக்கவேண்டுமென்று ஆண்டவர் நம்மை வைத்திருப்பாரானால், அதுவே அநேகரை சத்தியத்திற்குள் கொண்டுவருவதற்கு வழியாயிருக்கும். - 3SM420 (1886). கச 109.6

அநேகர் சிறையில் அடைக்கப்படுவார்கள், அநேகர் தங்கள் ஜீவனைக் காப்பாற்றிக்கொள்ள பட்டணங்களிலிருந்தும் கிராமங்களிலிருந்தும் தப்பியோடிவிடுவார்கள். இன்னும் அநேகர் சத்தியத்தைப் பாதுகாக்கவேண்டி, கிறிஸ்துவிற்காக நிற்பதினால் இரத்தசாட்சிகளாய்மரிப்பார்கள். — 3SM 397 (1889). கச 109.7

சிறைதண்டனை மற்றும் சொத்துக்களையும் உயிரையும்கூட இழக்கக்கூடிய அபாயகரமான நிலையில், தேவனுடைய பிரமாணத்தை மெய்ப்பித்துக்காட்டுவதற்காகத் தொடர் போராட்டமான ஒரு காரியம் நமக்கு முன்பாக இருக்கின்றது. - 5T 712 (1889). கச 110.1

தெய்வீகச் சட்டத்தை மீறி, மானிடச் சட்டங்களுக்குப் பணிந்துபோக வேண்டும் என்று மனிதர்கள் கட்டாயப்படுத்தப்படுவார்கள். தேவனுக்கு உண்மையாயிருப்பவர்கள் பயமுறுத்தப்படுவார்கள், வெளிப்படையாக குற்றஞ்சுமத்தப்படுவார்கள், ஆபத்தானவர்கள் என்று வெளிப்படையாக அறிவிக்கப்படுவார்கள், அவர்கள், “பெற்றோராலும், சகோதரராலும், உற்றாராலும், நண்பர்களாலும் மரணத்தைச் சந்திக்கும் படியாகக்கூட காட்டிக்கொடுக்கப்படுவார்கள்.” — PK588 (c.1914). கச 110.2

முந்தைய காலத்தின் இரத்த சாட்சிகளாகிய அவர்கள் இருந்த நிலைக்குள்ளாக நாம் கொண்டுவரப்படும்வரையிலும், அவர்களுடைய தைரியமும், துன்பத்தைத் தாங்கும் மனபலமும், இப்பொழுது நமக்கு இருக்கவேண்டிய அவசியமில்லை... மீண்டுமாக ஒரு உபத்திரவம் வருமானால், உண்மையான ஒரு வீரச் செயலைக் காட்டுவதற்கு, ஆத்துமாவின் ஒவ்வொரு வல்லமையையும் எழுப்பத்தக்கத் தேவையான கிருபை அளிக்கப்படும். — OHC125 (1889). கச 110.3

அப்படிப்பட்ட கிருபை அவசியப்படும்வரைக்கும், இரத்த சாட்சிகளின் தைரியமும் மனபலமும் சீஷர்களுக்கு அளிக்கப்படவில்லை. — DA354 (1898). கச 110.4