Go to full page →

உபத்திரவத்தின் கீழாக எப்படி உறுதியாய் நிற்பது கச 110

இயேசு கிறிஸ்துவின் கரங்களைத் தவிர, மற்ற அனைத்துக் கரங்களையும் நாம் விட்டுவிடவேண்டும் என்பதை நாம் கண்டுகொள்வோம். சிநேகிதர்கள் தங்களது நம்பிக்கை துரோகத்தை நிரூபித்து நம்மைக் காட்டிக்கொடுப்பார்கள். சத்துருவினால் வஞ்சிக்கப்பட்ட உறவினர்களும், நமது விசுவாசத்தை நாம் மறுதலித்துவிடுவோம் என்று எதிர்பார்த்து, கடினமான இடங்களுக்குள்ளாக நம்மைக் கொண்டுவரத்தக்கதாக, அனைத்து வழிகளிலும் மிக அதிகமான முயற்சிகளை எடுப்பார்கள். இப்படி நம்மை எதிர்ப்பதால், தேவனுக்குத் தொண்டு செய்கின்றோம் என்றும் அவர்கள் நினைத்துக்கொள்வார்கள். ஆனால் நாமோ, ஆபத்திலும் இருளிலும்கூட நம்முடைய கரங்களை கிறிஸ்துவின் கரங்களுக்குள்ளாக வைத்து நம்பிக்கைக் கொள்ளலாம். — Mar197 (1889). கச 110.5

போராட்டத்தில் உறுதியாக நிற்பதற்குத் தகுதியடையக்கூடிய மனிதர்களுக்கு இருக்கின்ற ஒரே வழி, கிறிஸ்துவில் ஆழமாக வேரூன்றப்படுவதும் உறுதியாக நிலைநாட்டப்பெறுவதுமே ஆகும். கிறிஸ்து இயேசுவிலிருக்கக்கூடிய அதே சத்தியத்தை, கண்டிப்பாக அவர்கள் பெற்றிருக்க வேண்டும். சத்தியம் இப்படியாக கொடுக்கப்பட்டால் மாத்திரமே, அது ஆத்துமாவின் தேவைகளைச் சந்திக்க முடியும். சிலுவையில் அறைப்பட்ட கிறிஸ்துவை, நமது நீதியாயிருக்கின்ற கிறிஸ்து வைப்பற்றிய போதனையே, ஆத்துமாவின் பசியைத் திருப்திபடுத்தக்கூடிய காரியமாக இருக்கின்றது. இந்த மாபெரும் மையமான சத்தியத்தில், மக்களது ஆர்வத்தை நாம் பெறும்போது, நம்பிக்கையும் விசுவாசமும் தைரியமும் இருதயத்திற்குள்ளாக வரும். —GCDB Jan. 28, 1893. கச 110.6

அநேகர் தங்களது விசுவாசத்திற்காக இங்கிருக்கும் வீடுகளை விட்டும், சொந்தபந்தங்களை விட்டும் துண்டிக்கப்படுவார்கள். ஆயினும் கச 110.7

கிறிஸ்துவினுடைய கிருபையின் தூதைப் பெற்றுக்கொண்டு, தங்களது பதிலாளியும் பிணையாளியுமாயிருக்கின்ற தேவ குமாரனாகிய அவர்மீது சார்ந்துகொண்டவர்களாகத் தங்களது இருதயத்தைக் கிறிஸ்துவுக்கு ஒப்புக்கொடுப்பார்களானால், அந்த நிலையிலும்கூட அவர்கள் மகிழ்ச்சியால் நிரப்பப்படுவார்கள. — ST June 2,1998. கச 111.1