Go to full page →

உண்மையிலிருந்து இந்த போலி எவ்விதத்தில் மாறுபட்டிருக்கும் கச 120

கிறிஸ்துவினுடைய இரண்டாம் வருகையின் விதத்தைப் போலியாகக் காட்டுவதற்குச் சாத்தான் அனுமதிக்கப்படவில்லை. — GC 625 (1911). கச 120.4

சாத்தான்… பெரிய வல்லமையான அற்புதங்களைச் செய்து, கிறிஸ்துவைப்போலத் தோற்றமளித்து வருவான். இயேசு கிறிஸ்துவை வணங்குவதுப்போல நினைத்து, மனிதர்கள் அவன்முன் விழுந்து அவனை வணங்குவார்கள். உலகம் கிறிஸ்துவை மகிமைப்படுத்தக்கூடிய விதத்தில், நாம் அவனை வணங்கவேண்டுமென கட்டளையிடப்படுவோம். நாம் என்ன செய்ய வேண்டும்? தன்னை தேவனென்று சொல்லிக்கொண்டு உரிமைகோரும் மனிதனின் மோசமான எதிரியான அப்படிப்பட்ட சத்துருவைக்குறித்து, கிறிஸ்து நம்மை எச்சரித்திருக்கின்றார் என்றும், கிறிஸ்து வரும்போது அவரது வருகை மிகுந்த மகிமையுடனும் வல்லமையுடனும் இருக்கும் என்றும், ஆயிரமாயிரமும் பதினாயிரம் பதினாயிரமுமான தூதர்களுடன் அவர் வருவார் என்றும், அப்படி அவர் வரும்போது அவர் சத்தத்தை நாம் அறிந்துகொள்வோம் என்றும் அவர்களிடம் கூறுங்கள். — 6BC 1106 (1888). கச 120.5

தனக்குச் சாதகமான அனைத்தையும் அடைந்துகொள்ள சாத்தான் போராடுகின்றான்… ஒளியின் தூதனுடைய வேஷத்தில், அதிசயங்களைச் செய்பவனாக இப்பூமியிலே நடந்து திரிவான். மிக அழகான மொழியில், ஆரவாரமான மன உணர்ச்சிகளை அருளுவான். அவனால் நல்ல வார்த்தைகள் பேசப்படும்; நல்ல செயல்கள் செய்யப்படும். இப்படிச் செய்வதால், கிறிஸ்துவே தோற்றமளிப்பதுபோல் இருக்கும், இருந்த போதும், ஒரு காரியத்திலே ஒரு பெரிய வித்தியாசம் காணப்படும். சாத்தான் தேவனுடைய பிரமாணத்திலிருந்து மக்களைத் திருப்புவான். அதோடு நில்லாது, நீதியைக் குறித்து நன்முறையில் அவன் காட்டுகின்ற போலியான காரியம், கூடுமானால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக்கிறதாயிருக்கும். முடிசூட்டப்பட்ட தலைவர்கள், அதிபர்கள், இன்னும் மேலிடங்களில் இருக்கின்ற ஆட்சியாளர்கள், அவனது பொய்யான கோட்பாடுகளுக்குத் தலைவணங்குவார்கள். — FE 471, 472 (1897). கச 120.6