Go to full page →

அற்புதங்கள் ஒன்றையும் நிரூபிப்பதில்லை கச 122

அற்புத அதிசயங்களை செய்யும் வல்லமை வெளிக்காட்டப்பட்டு, எதிரியானவன் ஒரு ஒளியின் தூதனைப்போல வரும்போது, தேவ னுடைய உண்மையான கிரியையும், அந்தகார வல்லமைகளின் போலியான கிரியையும், நீங்கள் வேறுபடுத்தி இனங்கண்டுகொண்டு, சத்தியம் என்றால் என்ன என்பதை அறியும்படிக்கு, உங்களுக்காகத் தேவனிடம் சென்று, தெய்வீக அறிவிற்காக (தெளிவிற்காக) ஜெபியுங்கள். — 3SM 389 (1888). கச 122.6

கிறிஸ்து ஊழியஞ்செய்த விதமெல்லாம் வேதவாக்கியங்களைப் போதிப்பதும், குணமாக்கும் அற்புதமான கிரியைகள் மூலமாக வேதனைப் படுவோரை விடுவிப்பதுமே. ஆனால் அற்புதங்களை செய்வதின்மூலம், சாத்தான் தனது வல்லமையை பயன்படுத்துவான். ஆதலால் இப்போது நாம் இந்த முறையிலே 2உரத்த சத்தத்தின்போது தேவனுடைய மக்களின் ஊழியத்தில் அற்புதங்கள் நிகழும். (14-ம் அதிகாரத்தைப் பார்க்கவும்). ஆயினும், கிறிஸ்துவின் நாட்களில் இருந்த முக்கியத்துவம் அவைகளுக்கு இருக்காது. அற்புதங்கள் செய்யப்படுகின்ற காரியம் இனி ஒருபோதும் தெய்வீக சம்மதத்தின் அடையாளமாக இருக்காது. ஊழியம் செய்ய முடியாது என்று நான் வலியுறுத்தப்பட்டேன். தெய்வீக வல்லமை என்று சொல்லிக்கொண்டு போலியான சுகமளிக்கும் அற்புதங்கள் செய்யப்படுகின்றனபடியால், தேவனுடைய ஊழியக்காரர்கள் இன்று அற்புதங்களின் வழியாக ஊழியஞ்செய்ய இயலாது. — 2SM 54 (1904). கச 123.1

சாத்தான் போலியான அற்புதங்களை செய்துகாட்டுவதால், அற்புதங்கள் செய்வதில் தேவனுடைய மக்கள் தங்களது பாதுகாப்பைக் கண்டுகொள்ள மாட்டார்கள். — 9T 16 (1909). கச 123.2