Go to full page →

அற்புதங்கள் வேதாகமத்தின் இடத்தை எடுத்துக்கொள்ள முடியாது கச 123

வியாதிகளைக் குணமாக்குகிறவர்கள் இத்தகைய வெளிப்பாடுகளின் அடிப்பைடையில், தேவனுடைய பிரமாணத்தைப் புறக்கணிக்க சாக்குப்போக்குகளை ஏற்படுத்திக்கொண்டு கீழ்ப்படியாமையில் நிலைத்திருப்பார்களெனில், எப்படிப்பட்ட வல்லமையை எந்த அளவுக்கு உடையவர்களாயிருந்தாலும், அவர்கள் தேவனுடைய மாபெரும் வல்லமையைப் பெற்றிருக்கவில்லை என்பது புலனாகிறது. மாறாக, அது மாபெரும் வஞ்சகனின் அற்புதங்களை நடப்பிக்கும் வல்லமையே ஆகும். — 2SM 50, 51 (1885). கச 123.3

அற்புத வெளிப்பாடுகளால், ஒருபோதும் வேதம் ஒதுக்கித்தள்ளப்பட முடியாது. சத்தியம் படிக்கப்பட வேண்டும், புதையுண்டிருக்கின்ற பொக்கிஷத்தைப்போல அது தேடப்படவேண்டும். வேதவாக்கியங்களைத் தவிர்த்து வேறு எதன் மூலமாகவும், அற்புத சத்திய வெளிப்பாடுகள் கொடுக்கப்படமாட்டாது அல்லது வேதவாக்கியங்களின் இடத்தை வேறு எதுவும் எடுத்துக்கொள்ளவும் முடியாது. வேத வார்த்தையைப் பிடித்துக்கொள்ளுங்கள், மனிதரை இரட்சிப்புக்கேற்ற ஞானவான்களாகக்கூடிய, மனதில் ஊன்ற வைக்கும் வேத வார்த்தையைப் பெற்றுக்கொள்ளுங்கள். — 2SM 48 (1894). கச 123.4

கடைசி மாபெரும் வஞ்சகம் விரைவில் நம் முன் திறக்க இருக்கின்றது. நம் கண்களுக்கு முன்பாக அந்திக்கிறிஸ்து தனது அதிசயமான கிரியைகளை செய்யவிருக்கின்றான். ஏறக்குறைய உண்மையைப் போன்றே அந்தப் போலியும் மிக நெருக்கமாக ஒத்திருக்கப்போவதினால், பரிசுத்த வேத எழுத்துக்களைத் தவிர வேறு எதைக்கொண்டும் அவைகளுக்கு நடுவிலுள்ள வித்தியாசத்தைக் கண்டறிய முடியாது. அவைகளின் சாட்சியைக் கொண்டு, ஒவ்வொரு கூற்றும் ஒவ்வொரு அற்புதமும் சோதித்துப் பார்க்கப்படவேண்டும். — GC 593 (1911). கச 123.5