Go to full page →

2 - ஆலயமும் பிரதிஷ்டையும் தீஇவ 35

கர்த்தருக்கு ஆலயம் கட்ட வேண்டுமென்ற தாவீதின் நீண்ட நாள் திட்டத்தை சாலொமோன் மிகவும் ஞானத்தோடே செயல்படுத் தினான். அற்புத ஆலயத்தைக் கட்டிமுடிக்க ஏழு வருடம் ஆயிற்று. ஆலயம் கட்டுவதற்கான நிலத்தைச் சமப்படுத்துவதிலும், அதில் பெரும் தடுப்புச்சுவர் கட்டுவதிலும், வெட்டினதும் விலையேறப் பெற்றதுமான கற்களால் அகலமான அஸ்திபாரம் போடுவதிலும், லீபனோன் காடுகளிலிருந்து வந்த மரங்களைச் செதுக்குவதிலுமாக அந்த ஏழு வருடங்களும் எருசலேமில் பணியாட்கள் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்தார்கள். தீஇவ 35.1

ஆயிரக்கணக்கானோரின் அயராத உழைப்பில் கல்லும் மர மும் ஆயத்தமாகிக்கொண்டிருந்த அதே வேளையில் திருவைச் சேர்ந்த ஈராமின் தலைமையில் ஆலயத் தட்டுமுட்டுச் சாமான்கள் தயாரிப்பும் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருந்தது. அவன் ‘புத்திமானாகிய நிபுணன். அவன் பொன்னிலும் வெள்ளியிலும் வெண்கலத்திலும் இரும்பிலும் கற்களிலும் மரங்களிலும் இரத்தாம் பர நூலிலும் இளநீலநூலிலும் மெல்லிய நூலிலும் சிவப்பு நூலிலும் வேலை செய்ய அறிந்தவன்’. 2 நாளாகமம் 2:13, 14. தீஇவ 35.2

மோரியா மலையின்மேல் நடைபெற்ற கட்டுமானப் பணி எந்த ஓசையுமில்லாமல் நடைபெற்றது. ஏனென்றால், அது பணிதீர்ந்து கொண்டு வரப்பட்ட கற்களாலே கட்டப்பட்டது. ஆகையால், அது கட்டப்படுகிறபோது சுத்திகள், வாச்சிகள் முதலான எந்த இருப்பு ஆயுதங்களின் சத்தமும் அதிலே கேட்கப்படவில்லை’. 1 இராஜா 6:7; 2 நாளா 4:19. மேலும், ‘ஆலயத்துக்கு வேண்டிய சகல பணிமுட்டுகளையும் ‘ செய்யவேண்டிய விதம் பற்றி தாவீது தன் மகனிடம் தந்திருந்த மாதிரியின்படியே தளவாடங்கள் செய்யப் பட்டன். 2 நாளா 4:19. தூப்பீடமும், சமுகத்தப்ப மேஜையும், விளக்குத்தண்டுகளும், விளக்குகளும், பரிசுத்த ஸ்தலத்தில் ஆசாரியர் ஊழியஞ்செய்யத் தேவையான பாத்திரங்களும் கருவி களும் ‘சுத்த தங்கத்தினால் செய்யப்பட்டன. தகன பலிபீடம், பன்னி ரண்டு ரிஷபங்கள்மேல் நின்றிருந்த கடல்தொட்டி, சிறு தொட்டிகள், பணிமுட்டுகள் ஆகியவற்றை யோர்தானுக்கடுத்த சமனான பூமியில் சுக்கோத்திற்கும் சரேத்தாவுக்கும் நடுவே களி மண் தரையிலே ராஜா வெண்கலத்தில் வார்ப்பித்தான். 2 நாளா 4:17. தட்டுமுட்டுச் சாமான்கள் எல்லாம் தட்டுப்பாடு ஏற்படாத அள விற்கு ஏராளமாகச் செய்யப்பட்டன. தீஇவ 36.1

தேவனுக்காகவும் அவரை ஆராதிப்பதற்காகவும் சாலொமோ னும் அவன் உதவியாளர்களும் கட்டின கம்பீரமான கட்டடமானது ஈடு இணையற்ற அழகோடும் பொலிவோடும் விளங்கியது. அது ரத்தினக்கற்களால் அழகுபடுத்தப்பட்டு, சுற்றிலும் விசாலமான வளாகங்களுடனும், அழகான பாதைகளுடனும் அமைக்கப்பட் டிருந்தது. ஆலயத்தின் உட்புறத்தில் கேதுரு மரப்பலகைகளும் பொன் தகடுகளும் பதிக்கப்பட்டு, சித்திரவேலைகள் செய்யப் பட்டிருந்தன. பூவேலைசெய்யப்பட்ட தொங்கல்களும் விலையேறப் பட்ட பணிமுட்டுகளும் இருந்த ஆலயத்தின் அமைப்பு இந்தப் பூமி யிலுள்ள தேவசபைக்குப் பொருத்தமான சின்னமாக விளங்கியது. ஜீவனுள்ள சபையானது காலாகாலமாக தேவதிட்டத்திற்கு ஏற்றபடி கட்டப்பட்டு வருகிறது. ‘பொன், வெள்ளி, விலையேறப்பெற்ற கற் கள்’ ஆகியவற்றோடு ஒப்பிடப்படும் காரியங்களாலும், சித்திரம் தீர்ந்த அரமனை மூலைக்கற்களைப்போன்ற காரியங்களாலும் தேவ சபை இன்று கட்டப்பட்டு வருகிறது. 1கொரி 3:12; சங்கீதம் 144:12. ஆவிக்குரிய இந்த ஆலயத்திற்கு அஸ்திபாரம் கிறிஸ்துவே . திருச் சபையாகிய இந்த மாளிகைக்கு, கிறிஸ்துவே ‘மூலைக்கல்லாய் இருக்கிறார். அவர்மேல் மாளிகை முழுவதும் இசைவாய் இணைக்கப்பட்டு, கர்த்தருக்குள் பரிசுத்த ஆலயமாக எழும்புகிறது’. எபே 2:20, 21. தீஇவ 36.2

தாவீது ராஜா திட்டமிட்ட ஆலயத்தை அவன் மகன் சாலொ மோன் கட்டிமுடித்தான். ‘ஆலயத்தில் சாலொமோன் செய்ய மன தாயிருந்ததெல்லாம்’ அவனுக்கு அனுகூலமாயிற்று’.2நாளா 7:11. மோரியா மலைக்கு மகுடம்போல் அமைந்திருந்ததும், அரண்மனை போன்றதுமான ஆலயக்கட்டடம் தாவீதின் விருப்பப்படி, ‘மனுஷ னுக்கு அல்ல, தேவனாகிய கர்த்தருக்கு’ வாசஸ்தலமாக விளங்கும் படி கட்டப்பட்ட ஒன்று. யேகோவாவை ஆராதிக்க அவருக்கு அந்த ஆலயத்தைப் பிரதிஷ்டை பண்ணுகிற புனிதமான சடங்கு நடைபெற வேண்டிய வேலைமட்டும் எஞ்சியிருந்தது. தீஇவ 37.1

தேவாலயம் கட்டப்பட்ட இடமானது காலாகாலமாக புனித மானஸ்தலமாகக் கருதப்பட்ட இடமாகும். விசுவாசிகளின் தகப்ப னாகிய ஆபிரகாம் அந்த இடத்தில்தான் யேகோவாவின் கட்ட ளைக்குக் கீழ்ப்படிந்து, தன் ஒரே மகனைப் பலிகொடுக்க தன் சம் மதத்தை வெளிப்படுத்தினான். ஆசீர்வாத உடன்படிக்கையை ஆபிரகாமோடு தேவன் அங்குதான் புதுப்பித்துக்கொண்டார். அந்த உடன்படிக்கையில் மகிமையான மேசிய வாக்குத்தத்தம் இருந்தது. அதன்படி, உன்னதமானவரின் குமாரன் தன்னையே பலியாகக் கொடுப்பதன் மூலம் மனிதருக்கு மீட்பு உண்டாக இருந்தது. ஆதி 22:9,16-18. சங்காரத்தூதனின் பட்டயத்தைத் தடுத்து நிறுத்த தகன பலியும் சமாதான பலியும் தாவீது செலுத்தின் இடமும், தேவன் வானத்திலிருந்து இறங்கின அக்கினியின் மூலம் அவருக்குப் பதில ளித்த இடமும் அதுதான். நாளா 21. இப்பொழுது மீண்டும் யேகோவாவின் விசுவாசிகள் தங்கள் தேவனைச் சந்திக்கவும், தங்கள் விசுவாசப் பிரமாணங்களைப் புதுப்பிக்கவும் அதே இடத் தில் ஒன்று கூட இருந்தார்கள். தீஇவ 37.2

ஏழாம் மாதத்தில் ஆலயத்தைப் பிரதிஷ்டை பண்ணத் திட்ட மிட்டிருந்தார்கள். அது எல்லோருக்கும் வசதியான ஒரு சமயமாக இருந்தது. ஏனெனில், அந்த மாதத்தில்தான் கூடாரப்பண்டிகையை ஆசரிப்பதற்காக ராஜ்யத்தின் வெவ்வேறு பகுதிகளிலிருந்து மக்கள் எருசலேமில் ஒன்றுகூடுவார்கள். மற்றப் பண்டிகைகளைவிட அந்தப் பண்டிகைதான் மகிழ்ச்சியான வைபவமாக அனுசரிக்கப்பட்டது. அறுவடைக்கால வேலைகள் முடிந்து, புதிய ஆண்டின் உழைப்பு தொடங்குவதற்கு முன்னான அந்தச் சமயத்தில்தான் மக்கள் தங்கள் கவலைகளை மறந்து இருப்பார்கள். எனவே, பரிசுத்தமானதும் சந்தோஷமானதுமான நிகழ்ச்சிகளில் மக்கள் தங்களை முற்றிலும் ஈடுபடுத்திக்கொள்ள, அதுதான் ஏற்ற சமயமாக இருந்தது. தீஇவ 37.3

குறித்த நாள் வந்தது. இஸ்ரவேலிலிருந்து திரளான ஜனங்கள் ஆலய வளாகத்தில் கூடினார்கள்; மிடுக்கான உடை அணிந்து, பிற தேசங்களிலிருந்து வந்த பிரதிநிதிகளும் அங்கு கூடினார்கள். முன்பு அங்கு இருந்திராத புதுப்பொலிவு அங்குக் காட்சியளித்தது. சாலொமோனும், இஸ்ரவேலின் மூப்பர்களும், மக்களுக்குள் அதிக செல்வாக்குப் பெற்றவர்களும் அந்நகரத்தின் இன்னொரு பகுதியிலிருந்த உடன்படிக்கைப் பெட்டியை எடுத்துவந்தார்கள். கிபியோனின் மேடுகளிலிருந்த பரிசுத்த ஸ்தலத்திலிருந்த ஆசரிப் புக் கூடாரமும் அதில் இருந்த பணிமுட்டுகளும் எருசலேமுக்கு மாற்றப்பட்டன. 2நாளா 5:5. அதாவது, இஸ்ரவேலர் வனாந்தரத்தில் அலைந்து திரிந்ததையும், பின்னர் கானானைச் சுதந்தரித்துக் கொண் டதையும் நினைவூட்டிய அந்த நினைவுச்சின்னங்கள் முன்பு ஆசரிப் புக் கூடாரத்தில் இருந்தன். ஓரிடத்திலிருந்து இன்னோரிடத்திற்கு எளிதில் எடுத்துச் செல்ல வசதியாக அதை முன்பு அமைத்திருந்தார் கள். தற்காலிக ஆசரிப்புக் கூடாரத்திற்குப் பதிலாக, இப்போது நிரந்தரமாக ஒப்புயர்வற்ற ஓர் ஆலயத்தைக் கட்டி, அதனுள் அவற்றை வைத்தார்கள். தீஇவ 38.1

பரிசுத்த உடன்படிக்கைப் பெட்டியையும் இடம் மாற்றி னார்கள். தேவனுடைய விரலால் பத்துக் கற்பனை எழுதப்பட்டிருந்த இரண்டு கற்பலகைகள் அதில் இருந்தன. முன்பொருமுறை அந்தப் பரிசுத்த உடன்படிக்கைப் பெட்டியை இடம் மாற்றினபோது தாவீது எப்படி நடந்து கொண்டானோ, அப்படியே சாலொமோனும் நடந்து கொண்டான். ஆறு காலடிக்கு ஒரு முறை சாலொமோனும் பலி செலுத்தினான். கீதவாத்தியங்களுக்கு ஏற்ப்பாடல்கள் பாடிக்கொண்டு, மகாகொண்டாட்டமாய் ‘ஆசாரியர் கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியை ஆலயத்தின் சந்நிதியாகிய மகா பரிசுத்தமான ஸ்தலத் திலே கொண்டுவந்து வைத்தார்கள். ‘நாளா 5:7. அங்கிருந்து அந்த ஆசாரியர்கள் வெளியே வந்தபோது, அவர்கள் தங்களுக்கு நியமிக் கப்பட்டிருந்த வரிசைமுறை ஒழுங்கின்படி நின்றுகொண்டார்கள். பாடகரான லேவியரனைவரும் மெல்லிய புடவைகளைத் தரித்து, கைத்தாளங்களையும் தம்புருகளையும் சுரமண்டலங்களையும் பிடித்து, பலிபீடத்திற்குக் கிழக்கே நின்றார்கள். அவர்களோடும் கூடப் பூரிகைகளை ஊதுகிற ஆசாரியர்கள் நூற்றிருபது பேர் நின் றார்கள். 2நாளா 5:12. தீஇவ 38.2

அவர்கள் ஒருமிக்கப் பூரிகைகளை ஊதி, ஏக் சத்தமாய்க் கர்த் தரைத் துதித்து ஸ்தோத்திரித்துப் பாடினார்கள் : ஆசாரியர் பரிசுத்த ஸ்தலத்திலிருந்து புறப்பட்டு, பூரிகைகள் தாளங்கள் கீத வாத்தியங் களுடைய சத்தத்தைப் பாடகர் தொனிக்கப்பண்ணி, தீஇவ 38.3

’கர்த்தர் நல்லவர்,
அவர் கிருபை என்றுமுள்ளது’ தீஇவ 39.1

என்று அவரை ஸ்தோத்திரிக்கையில், கர்த்தருடைய வீடாகிய தேவா லயம் மேகத்தினால் நிறைந்தது. அந்த மேகத்தினிமித்தம் ஆசாரியர் கள் ஊழியஞ்செய்து நிற்கக்கூடாமற்போயிற்று; கர்த்தருடைய மகிமை தேவனுடைய ஆலயத்தை நிரப்பிற்று. 2 நாளா 5:13, 14. தீஇவ 39.2

அந்த மேகத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்தவனாக, ‘’கர்த் தர் ‘காரிருளிலே வாசம்பண்ணுவேன்’ என்று சொன்னார்; ஆனால், தேவரீர் வாசம்பண்ணத்தக்க வீடும், நீர் என்றைக்கும் தங்கத்தக்க நிலையான ஸ்தானமுமாகிய ஆலயத்தை உமக்குக் கட்டினேன்’‘ என்று சாலொமோன் சொன்னான். 2 நாளா 6:1, 2. தீஇவ 39.3

கர்த்தர் ராஜரிகம் பண்ணுகிறார்,
ஜனங்கள் தத்தளிப்பார்களாக;
அவர்கேருபீன்களின் மத்தியில் வீற்றிருக்கிறார்,
பூமி அசைவதாக.


கர்த்தர் சீயோனில் பெரியவர்;
அவர் எல்லா ஜனங்கள் மேலும் உயர்ந்தவர்.
மகத்துவமும் பயங்கரமுமான உமது நாமத்தை அவர்கள் துதிப்பார்களாக;
அது பரிசுத்தமுள்ளது.


நம்முடைய தேவனாகிய கர்த்தரை உயர்த்தி,
அவர் பாதபடியிலே
பணியுங்கள்; அவர் பரிசுத்தமுள்ளவர். தீஇவ 39.4

சங்கீ தம் 99:1-3, 5.

’ஐந்து முழ நீளமும் ஐந்து முழ அகலமும் மூன்று முழ உயர முமான வெண்கலப் பிரசங்கப் பீடத்தை உண்டாக்கி, அதை ஆலயத்தின் நடுப்பிராகாரத்திலே சாலொமோன் வைத்திருந்தான். அதின் மேல் அவன் நின்றுகொண்டு தன் கரங்களை உயர்த்தி, தனக்கு முன்பாகக் கூடியிருந்த திரளான ஜனங்களை ஆசீர்வதித்தான். அங்கு ‘இஸ்ரவேல் சபையார் எல்லாரும் நின்றார்கள்’. 2நாளா 6:13, 3. தீஇவ 39.5

’’இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு ஸ்தோத்திரம்); அவர் என் தகப்பனாகிய தாவீதுக்குத் தம்முடைய வாயினால் சொன்னதை, தம்முடைய கரத்தினால் நிறைவேற்றினார் ” என்றான் சாலொமோன். ‘என் தகப்பனாகிய தாவீதிடம், ‘என் நாமம் விளங்கும் ஸ்தானமாக எருசலேமைத் தெரிந்துகொண்டேன்’ என்று தேவன் அன்று சொன்னதை இன்று நிறைவேற்றினார்’‘ என்றான். வச. 4, 6. தீஇவ 39.6

பிறகு, அந்த மேடையின் மேலே சாலொமோன் முழங்கால்படி யிட்டு, சகல ஜனங்களுக்கும் கேட்கும் வண்ணமாக பிரதிஷ்டை ஜெபத்தை ஏறெடுத்தான். சபையார் குனிந்து, தரைமட்டும் தலை வணங்கி நின்றிருந்த வேளையில், ராஜா தன் கரங்களை வானத் திற்கு நேராக உயர்த்தி, பின்வருமாறு மன்றாடினான்: ‘இஸ்ரவே லின் தேவனாகிய கர்த்தாவே, வானத்திலும் பூமியிலும் உமக்கு ஒப்பான தேவனில்லை; தங்கள் முழு இருதயத்தோடும் உமக்கு முன்பாக நடக்கிற உமது அடியாருக்கு உடன்படிக்கையையும் கிரு பையையும் காத்துவருகிறீர். தீஇவ 40.1

’’தேவன் மெய்யாக மனுஷரோடே பூமியிலே வாசம்பண்ணு வாரோ? இதோ, வானங்களும், வானாதி வானங்களும் உம்மைக் கொள்ளாதே; நான் கட்டின் இந்த ஆலயம் எம்மாத்திரம்? என் தேவனாகிய கர்த்தாவே, உமது அடியேன் உமது சந்நிதியில் செய்கிற விண்ணப்பத்தையும் மன்றாட்டையும் கேட்டு, உமது அடி யேனுடைய விண்ணப்பத்தையும் வேண்டுதலையும் திருவுளத்தில் கொண்டருளும். உமது அடியேன் இவ்விடத்திலே செய்யும் விண் ணப்பத்தைக் கேட்க, என் நாமம் விளங்குமென்று நீர் சொன்ன ஸ்தல மாகிய இந்த ஆலயத்தின் மேல் உம்முடைய கண்கள் இரவும் பகலும் திறந்திருப்பதாக. உமது அடியேனும், இந்த ஸ்தலத்திலே விண்ணப்பம் செய்யப் போகிற உமது ஜனமாகிய இஸ்ரவேலும் பண்ணும் ஜெபங் களைக் கேட்டருளும்; பரலோகமாகிய உம்முடைய வாசஸ்தலத்திலே நீர் அதைக் கேட்பீராக, கேட்டு மன்னிப்பீராக. தீஇவ 40.2

’’உம்முடைய ஜனங்களாகிய இஸ்ரவேலர் உமக்கு விரோத மாகப் பாவஞ்செய்ததினிமித்தம் சத்துருவுக்கு முன்பாக முறிந்து போய், உம்மிடத்திற்குத் திரும்பி, உம்முடைய நாமத்தை அறிக்கை பண்ணி, இந்த ஆலயத்திலே உம்முடைய சந்நிதியில் விண்ணப்பத் தையும் வேண்டுதலையும் செய்தால், பரலோகத்திலிருக்கிற தேவரீர் கேட்டு, உம்முடைய ஜனமாகிய இஸ்ரவேலின் பாவத்தை மன்னித்து, அவர்களுக்கும் அவர்கள் பிதாக்களுக்கும் நீர் கொடுத்த தேசத்துக்கு அவர்களைத் திரும்பிவரப் பண்ணுவீராக. தீஇவ 40.3

’’அவர்கள் உமக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்ததினால், வானம் அடைபட்டு மழை பெய்யாதிருக்கும்போது, அவர்கள் இந்த ஸ்தலத்திற்கு நேராக விண்ணப்பஞ்செய்து, உம்முடைய நாமத்தை அறிக்கைபண்ணி, தேவரீர் தங்களைக் கிலேசப்படுத்துகையில் தங் கள் பாவங்களைவிட்டுத் திரும்பினால், பரலோகத்திலிருக்கிற தேவ ரீர் கேட்டு, உமது அடியாரும் உமது ஜனமாகிய இஸ்ரவேலும் செய்த பாவத்தை மன்னித்து, அவர்கள் நடக்கவேண்டிய நல்வழியை அவர் களுக்குப் போதித்து, தேவரீர் உமது ஜனத்திற்குச் சுதந்தரமாகக் கொடுத்த உம்முடைய தேசத்தில் மழை பெய்யக் கட்டளையிடுவீ ராக. வச 26, 27. தீஇவ 41.1

’’தேசத்திலே பஞ்சம் உண்டாகிறபோதும், கொள்ளை நோய் உண்டாகிறபோதும், வறட்சி, சாவி, வெட்டுக்கிளி, பச்சைக்கிளி உண்டாகிற போதும், அவர்களுடைய சத்துருக்கள் அவர்கள் வாசஞ் செய்கிற தேசத்திலே அவர்களை முற்றிக்கைபோடுகிறபோதும், யாதொருவாதையாகிலும் யாதொரு வியாதியாகிலும் வந்திருக்கிற போதும், எந்த மனுஷனானாலும், இஸ்ரவேலாகிய உம்முடைய ஜனத்தில் எவனானாலும், தன் தன் வாதையையும் வியாகுலத்தை யும் உணர்ந்து, இந்த ஆலயத்திற்கு நேராகத் தன் கைகளை விரித் துச் செய்யும் சகல விண்ணப்பத்தையும், சகல வேண்டுதலையும், உம்முடைய வாசஸ்தலமாகிய பரலோகத்திலிருக்கிற தேவரீர் கேட்டு மன்னித்து, தேவரீர் எங்கள் பிதாக்களுக்குக் கொடுத்த தேசத் தில் அவர்கள் உயிரோடிருக்கும் நாளெல்லாம் உமக்குப் பயப்பட்டு, உம்முடைய வழிகளில் நடக்கும்படிக்குத் தேவரீர் ஒருவரே மனுப் புத்திரரின் இருதயத்தை அறிந்தவரானதால், நீர் அவனவன் இரு தயத்தை அறிந்திருக்கிறபடியே, அவனவனுடைய எல்லா வழிக ளுக்கும் தக்கதாய்ச் செய்து, பலன் அளிப்பீராக. வச 28-31. தீஇவ 41.2

’’உம்முடைய ஜனமாகிய இஸ்ரவேல் ஜாதியில்லாத அந்நிய ஜாதியார் உம்முடைய மகத்துவமான நாமத்தினிமித்தமும், உம் முடைய பலத்த கரத்தினிமித்தமும், ஓங்கிய உம்முடைய புயத்தினி மித்தமும், தூர தேசங்களிலிருந்து வந்து, இந்த ஆலயத்துக்கு நேராக நின்று விண்ணப்பம் பண்ணினால், உமது வாசஸ்தலமாகிய பர லோகத்திலிருக்கிற தேவரீர் அதைக் கேட்டு, பூமியின் ஜனங்க ளெல்லாரும் உம்முடைய ஜனமாகிய இஸ்ரவேலைப் போல, உம் முடைய நாமத்தை அறிந்து உமக்குப் பயப்பட்டு, நான் கட்டின் இந்த ஆலயத்திற்கு உம்முடைய நாமம் தரிக்கப்பட்டதென்று அறியும் படிக்கு அந்த அந்நிய ஜாதியான் உம்மை நோக்கி வேண்டிக்கொள் வதின்படியே தேவரீர் செய்வீராக தீஇவ 41.3

’’நீர் உம்முடைய ஜனங்களை அனுப்பும் வழியிலே அவர் கள் தங்கள் சத்துருக்களோடு யுத்தம்பண்ணப் புறப்படும்போது, நீர் தெரிந்து கொண்ட இந்த நகரத்துக்கும், உம்முடைய நாமத்திற்கு நான் கட்டின இந்த ஆலயத்திற்கும் நேராக விண்ணப்பம் பண்ணி னால், பரலோகத்தில் இருக்கிற தேவரீர் அவர்கள் விண்ணப்பத் தையும் வேண்டுதலையும் கேட்டு, அவர்கள் நியாயத்தை விசாரிப் பீராக. தீஇவ 42.1

’’பாவஞ் செய்யாத மனுஷன் இல்லையே; ஆகையால் அவர் கள் உமக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்து ; தேவரீர் அவர்கள் மேல் கோபங்கொண்டு, அவர்கள் சத்துருக்கள் கையில் அவர்களை ஒப்புக் கொடுக்கிறதினால், அவர்களைச் சிறை பிடிக்கிறவர்கள் அவர்களைத் தூரத்திலாகிலும் சமீபத்திலாகிலும் இருக்கிற தங்கள் தேசத்திற்குக் கொண்டுபோயிருக்கையில், அவர்கள் சிறைபட்டுப் போன தேசத்திலே தங்களில் உணர்வடைந்து, மனந்திரும்பி, ‘நாங்கள் பாவஞ்செய்து அக்கிரமம் பண்ணி, துன்மார்க்கமாய் நடந்தோம்’ என்று தங்கள் சிறையிருப்பான தேசத்திலே உம்மை நோக்கிக் கெஞ்சி, தாங்கள் சிறைகளாகக் கொண்டுபோகப்பட்ட தங்கள் சிறையிருப்பான தேசத்திலே, தங்கள் முழு இருதயத்தோடும் தங்கள் முழு ஆத்துமாவோடும் உம்மிடத்தில் திரும்பி, தேவரீர் தங்கள் பிதாக்களுக்குக் கொடுத்த தங்கள் தேசத்திற்கும், தேவரீர் தெரிந்து கொண்ட இந்த நகரத்திற்கும், உம்முடைய நாமத்திற்கு நான் கட்டின இந்த ஆலயத்திற்கும் நேராக உம்மை நோக்கி விண் ணப்பம் பண்ணினால், உம்முடைய வாசஸ்தலமாகிய பர லோகத்திலிருக்கிறதேவரீர் அவர்கள் விண்ணப்பத்தையும் ஜெபங் களையும் கேட்டு, அவர்கள் நியாயத்தை விசாரித்து, உமக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்த உம்முடைய ஜனத்திற்கு மன்னித் தருளும். தீஇவ 42.2

’’இப்போதும் என் தேவனே, இந்த ஸ்தலத்திலே செய்யப்ப டும் விண்ணப்பத்திற்கு உம்முடைய கண்கள் திறந்தவைகளும் உம்முடைய செவிகள் கவனிக்கிறவைகளுமாயிருப்பதாக. தேவ னாகிய கர்த்தாவே, உம்முடைய தாபர ஸ்தலத்திற்குத் தேவரீர் உமது வல்லமைவிளங்கும் பெட்டியுடன் எழுந்தருளும்; தேவனாகிய கர்த் தாவே, உமது ஆசாரியர் இரட்சிப்பைத் தரித்து, உம்முடைய பரி சுத்தவான்கள் நன்மையிலே மகிழ்வார்களாக. தேவனாகிய கர்த் தாவே, நீர் அபிஷேகம் பண்ணினவனின் முகத்தைப் புறக்கணியா மல், உம்முடைய தாசனாகிய தாவீதுக்கு வாக்குத்தத்தம் பண்ணின கிருபைகளை நினைத்தருளும்” என்றான். 2 நாளாகமம் 6:32-42. தீஇவ 42.3

கர்த்தரே மகா தேவனும், எல்லா தேவர்களுக்கும்
மகா ராஜனுமாயிருக்கிறார்.
நம்மை உண்டாக்கின கர்த்தருக்கு முன்பாக
நாம் பணிந்து குனிந்து முழங்காற்படியிடக்கடவோம்
வாருங்கள். தீஇவ 44.1

சங்கீதம் 95:3, 6.

சாலொமோன் ஜெபித்தவுடன், அக்கினி வானத்திலிருந்து இறங்கி, சர்வாங்க தகனபலியையும் மற்றப் பலிகளையும் பட்சித் தது’. ‘கர்த்தருடைய மகிமை கர்த்தருடைய ஆலயத்தை நிரப்பி னதால்’ ஆசாரியர்கள் ஆலயத்திற்குள் பிரவேசிக்கக் கூடாதிருந் தது. ‘கர்த்தருடைய மகிமை ஆலயத்தின்மேல் தங்கியிருக்கிறதை இஸ்ரவேல் புத்திரர் எல்லோரும் கண்டபோது, தளவரிசைமட்டும் தரையிலே முகங்குப்புறக் குனிந்து பணிந்து, ‘’கர்த்தர் நல்லவர், அவருடைய கிருபை என்றுமுள்ளது’‘ என்று சொல்லி, அவரைத் துதித்தார்கள்.’ தீஇவ 45.1

அதன்பின் ராஜாவும் சகல ஜனங்களும் கர்த்தருடைய சந்நிதி யில் பலிசெலுத்தினார்கள். ‘இவ்விதமாய் ராஜாவும் சகல ஜனங் களும் தேவனுடைய ஆலயத்தைப் பிரதிஷ்டைபண்ணினார்கள்’. 2நாளாகமம் 7:1-5. ‘ஆமாத்தின் எல்லையிலிருந்து எகிப்தின் நதிமட்டும்’ பரந்து விரிந்து கிடந்த இஸ்ரவேல் ராஜ்யத்தின் ஒவ் வொரு பகுதியிலுமிருந்து வந்த திரளான ஜனங்களாகிய ‘மகா பெரிய கூட்டம் அனைத்தும் ‘ஏழு நாளளவும் சந்தோஷமாகப் பண்டிகை கொண்டாடினார்கள். அதற்கு அடுத்த வாரத்தில் ஜனங்கள் மிகுந்த மகிழ்ச்சியோடே கூடாரப்பண்டிகையை ஆசரித்தார்கள். அந்நாட்களில் ஜனங்கள் தங்களை மீண்டும் தேவனுக்குத்தத்தம் செய்தார்கள்; தேவனுக்குள் களிகூர்ந்தார்கள். இதற்காகக் கூடிய அந்நாட்கள் முடிந்த பிறகு, ‘தாவீதுக்கும், சாலொமோனுக்கும், தமது ஜனமாகிய இஸ்ரவேலுக்கும் கர்த்தர் செய்த நன்மைக்காகச் சந்தோஷமும் மனமகிழ்ச்சியுமாய் ‘ தங்கள் வீடுகளுக்குத் திரும்பி னார்கள். வச. 8, 10. தீஇவ 45.2

அவருடைய பரிசுத்த நாமத்தை மகிமைப்படுத்த, அவர்கள் தேவனைச் சேவிக்கவேண்டியிருந்தது; ஜனங்கள் தங்களை முற்றி லும் அவரிடத்தில் அர்ப்பணிக்க வேண்டியிருந்தது. அவ்வாறு செய்யும்படி அவர்களை ஊக்குவிக்க, தன் சக்திக்கு உட்பட்ட அனைத்தையும் ராஜா செய்தான். அவனுடைய ஆட்சியின் ஆரம்பக் காலத்தில் கிபியோனில் அவனுக்கு ஏற்பட்ட அனுபவத்தைப் போலவே இந்த முறையும் தேவனுடைய ஒப்புதலையும் ஆசீர் வாதத்தையும் அவனால் உணரமுடிந்தது. கர்த்தர் இரவிலே சாலொ மோனுக்குத் தரிசனமாகிப் பேசினார்: ‘நான் உன் விண்ணப்பத்தைக் கேட்டு, இந்த ஸ்தலத்தை எனக்குப் பலியிடும் ஆலயமாகத் தெரிந்து கொண்டேன். நான் மழையில்லாதபடிக்கு வானத்தை அடைத்து, அல்லது தேசத்தை அழிக்கவெட்டுக்கிளிகளுக்குக் கட்டளையிட்டு, அல்லது என் ஜனத்திற்குள் கொள்ளைநோயை அனுப்பும்போது, என் நாமம் தரிக்கப்பட்ட என் ஜனங்கள் தங்களைத் தாழ்த்தி, ஜெபம் பண்ணி, என் முகத்தைத் தேடி, தங்கள் பொல்லாத வழி களைவிட்டுத் திரும்பினால், அப்பொழுது பரலோகத்திலிருக்கிற நான் கேட்டு, அவர்கள் பாவத்தை மன்னித்து, அவர்கள் தேசத் துக்கு ஷேமத்தைக் கொடுப்பேன். இந்த ஸ்தலத்திலே செய்யப்படும் ஜெபத்திற்கு, என் கண்கள் திறந்தவைகளும், என் செவிகள் கவனிக்கிறவைகளுமாயிருக்கும். என் நாமம் இந்த ஆலயத்தில் என்றென்றைக்கும் இருக்கும்படி, நான் இதைத் தெரிந்துகொண்டு பரிசுத்தப்படுத்தினேன்; என் கண்களும் என் இருதயமும் எந்நாளும் இங்கே இருக்கும்’ என்றார். 2 நாளாகமம் 7:12-16. தீஇவ 45.3

இஸ்ரவேலர் தேவனுக்கு உண்மையுடன் இருந்திருந்தால், அந்த மகிமையான கட்டடமும் என்றும் நிலைத்திருந்திருக்கும். தாம் தெரிந்துகொண்ட ஜனங்கள்மேல் அவர் காட்டின் விசேஷித்த தயவுக்கு அது ஒரு நிலையான அடையாளமாக இருந்திருக்கும். தீஇவ 46.1

’’கர்த்தரைச் சேவிக்கவும், கர்த்தருடைய நாமத்தை நேசிக்க வும், அவருக்கு ஊழியக்காரராயிருக்கவும், அவரைச் சேர்ந்து, ஓய்வுநாளைப் பரிசுத்தக் குலைச்சலாக்காதபடி ஆசரித்து, என் உடன்படிக்கையைப் பற்றிக்கொண்டிருக்கிற அந்நிய புத்திரர் அனைவரையும், நான் என் பரிசுத்த பர்வதத்துக்குக் கொண்டு வந்து, என் ஜெபவீட்டிலே அவர்களை மகிழப் பண்ணுவேன்; அவர்களுடைய சர்வாங்க தகனங்களும், அவர்களுடைய பலி களும் என் பலிபீடத்தின் மேல் அங்கீகரிக்கப்பட்டிருக்கும்; என் னுடைய வீடு சகல ஜனங்களுக்கும் ஜெபவீடு என்னப்படும்” என் றார் தேவன். ஏசாயா 56:6, 7. தீஇவ 46.2

’சாலொமோன் ராஜாவையும் அவனுடைய செயல்களையும் தேவன் ஏற்றுக்கொண்டார்’ என்கிற நிச்சயத்தை ராஜாவுக்கு தேவன் தந்தபிறகு, ராஜா நடக்கவேண்டிய வழிமுறைகளையும் தெளிவாக எடுத்துரைத்தார் தேவன். ‘’உன் தகப்பனாகிய தாவீது நடந்தது போல, நீ எனக்கு முன்பாக நடந்து, நான் உனக்குக் கற்பித்த படியெல்லாம் செய்து, என் கட்டளைகளையும் என் நியாயங்களை யும் கைக்கொள்வாயானால், அப்பொழுது இஸ்ரவேலை அரசா ளும் புருஷன் உனக்கு இல்லாமற்போவதில்லை என்று நான் உன் தகப்பனாகிய தாவீதோடே உடன்படிக்கை பண்ணினபடியே, உன் ராஜ்யபாரத்தின் சிங்காசனத்தை நிலைக்கப்பண்ணுவேன்’‘ என்றார் தேவன். 2 நாளா 7:17, 18. தீஇவ 46.3

தாவீதின் காலத்தில் அவன் செல்வாக்கால் சுற்றுப்புற தேசத் தார் மத்தியில் நல்லெண்ணம் ஏற்பட்டது. சாலொமோன் ஆளு கையின் ஆரம்பக்காலங்களில் அவனுடைய ஞான வார்த்தை களாலும், சிறந்த செயல்களாலும் அதே போன்ற நல்லெண்ணம் ஏற்பட்டது. அவன் எப்போதும் கர்த்தருக்கு அடங்கி, பணிவிடை செய்திருந்தால், மிகநன்மையான மாற்றங்கள் பல ஏற்பட்டிருக்கும். செல்வமும் லெளகீக மேன்மையும் கடுஞ் சோதனைகளைக் கொண்டுவருமென்பது தேவனுக்குத் தெரியும். அதனால், வழி விலகலின் தீமை குறித்தும், அதன் பயங்கர விளைவுகள் குறித்தும் முன்னுரைத்தார். பின்னர் இஸ்ரவேலர் தங்கள் பிதாக்களின் தேவ னாகிய கர்த்தரை விட்டு அந்நிய தேவர்களைச் சேவித்தார்களா னால், இப்போது பிரதிஷ்டை செய்யப்பட்ட அந்த அழகிய ஆல யத்தைக் கூட, ‘எல்லா ஜனசதளங்களுக்கும் பழமொழியாகவும் வசைச்சொல்லாகவும் வைப்பேன்’ என்று எச்சரித்தார். 2நாளா 7:20, 22. தீஇவ 47.1

இஸ்ரவேலருக்காக தான் செய்த ஜெபத்திற்கு தேவன் செவி கொடுத்தார் எனும் செய்தி பரலோகத்திலிருந்து கிடைத்தபோது, சாலொமோனின் இருதயம் பெலப்பட்டது; மிகுந்த மகிழ்ச்சி அடைந்தான். தன் ஆளுகையின் மிக உன்னத காலக்கட்டத்திற்குள் நுழைந்தான். ‘சாலொமோனின் இருதயத்தில் தேவன் அருளிய ஞானத்தைக் கேட்பதற்குப் பூமியின் ராஜாக்கள் எல்லாரும் அவன் முகதரிசனத்தைத் தேடினார்கள்’. 2நாளா 9:23. அநேகர் அவனிடம் வந்தனர்; நெருக்கடிகளில் எப்படி நிர்வாகம் பண்ணுவது என்ப தைக் குறித்த நெறிமுறைகளை சாலொமோனிடம் பெற்றுச் சென்ற னர். தீஇவ 47.2

இந்த ஜனங்கள் சாலொமோனைச் சந்தித்தபோது, ‘தேவனே சகலத்தையும் சிருஷ்டித்தவர்’ என்று அவர்களுக்குக் கற்பித்தான். அவர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்பினபோது, இஸ்ரவேலின் தேவனைக்குறித்த தெளிவான எண்ணத்துடன், அவர் மனித இனத் தின்மீது வைத்துள்ள அன்பைப் புரிந்துகொண்டவர்களாகச் சென் றார்கள்; இயற்கையின் செயல்பாடுகளில் தேவ அன்பின் வெளிப் பாட்டையும் அவருடைய குணாதிசயங்களின் பிரதிபலிப்பையும் பார்த்தார்கள்; இஸ்ரவேலின் தேவனைத் தங்கள் தேவனாகத் தொழுது கொள்ள அநேகர் முடிவு செய்தார்கள். தீஇவ 47.3

இராஜ்ய பாரத்தை சாலொமோன் ஏற்றுக்கொண்டபோது, ‘’நான் சிறு பிள்ளையாயிருக்கிறேன்” என்று தேவனுக்கு முன்பாக ஒத்துக்கொண்டு, அவன் தாழ்மையாய் நடந்தான். 1இராஜா 3:7. அவன் தன் தேவன்மேல் வைத்திருந்த அன்பும், தெய்வீக காரியங் கள்மேல் இருந்த ஆழமான பயபக்தியும் வெளிப்பட்டன; சுயத்தை அவன் நம்பவில்லை என்பது வெளிப்பட்டது; சகலத்தையும் சிருஷ் டித்தவரை உயர்த்துவதில் அவனுக்கிருந்த ஆர்வமும் வெளிப் பட்டது. நமக்கு முன்மாதிரியாக இருக்கிற இந்தக் குணங்கள் யாவும், ஆலயப் பிரதிஷ்டை நிகழ்ச்சிகளின்போது மீண்டும் ஒரு முறை சாலொமோனில் வெளிப்பட்டன. அந்தப் பிரதிஷ்டை ஜெபத்தில், அவன் தன்னைத் தாழ்த்தி, முழங்காலிட்டு , மன்றா டினான். தேவபயத்தையும் பய பக்தியையும் இழக்கத்தூண்டுகிற மனநிலையிலிருந்து கிறிஸ்துவின் அடியார்கள் தங்களைப் பாது காத்துக்கொள்ளவேண்டும். தெய்வீக மத்தியஸ்தர்மேல் விசுவாசம் வைத்து, தாழ்மையோடும் பயபக்தியோடும் மனிதர் தங்கள் சிருஷ் டிகரிடம் வரவேண்டுமென்று வேதம் போதிக்கிறது. தீஇவ 48.1

’’கர்த்தரே மகாதேவனும்,
எல்லாதேவர்களுக்கும் மகாராஜனுமாயிருக்கிறார்.
நம்மை உண்டாக்கின கர்த்தருக்கு முன்பாக நாம் பணிந்து குனிந்து
முழங்காற்படியிடக்கடவோம் வாருங்கள்”
என்கிறார் சங்கீதக்காரன். தீஇவ 48.2

சங்கீ தம் 95:3, 6.

பொது ஜெபமோ, தனி ஜெபமோ எதுவாயிருந்தாலும், நாம் தேவனுக்கு முன் நம் விண்ணப்பங்களைத் தெரிவிக்கிறபோது, முழங்கால்படியிட்டு ஜெபிப்பது நமக்குக் கிடைத்துள்ள சிலாக் கியமாகும். இயேசுவே இதற்கு முன்மாதிரி. அவர் முழங்கால்படி யிட்டு ஜெபித்தார். லூக்கா 22:41. அவர் சீஷரும் ‘முழங்கால் படியிட்டு ஜெபித்ததாக ‘வேதாகமம் கூறுகிறது. அப்9:40. ‘’நம்மு டைய கர்த்தராயிருக்கிற இயேசு கிறிஸ்துவினுடைய பிதாவை நோக்கி முழங்கால்படியிட்டு ‘‘ என்கிறார் பவுல். எபேசியர் 3:15. இஸ்ரவேல் ஜனங்களுடைய பாவத்தை தேவனுக்கு முன்பாக அறிக்கையிடுகையில் எஸ்றா முழங்கால்படியிட்டார். எஸ்றா 9:5. தானியேல் ‘தினம் மூன்று வேளையும் தன் தேவனுக்கு முன்பாக முழங்காற்படியிட்டு ஜெபம் பண்ணி, ஸ்தோத்திரம் செலுத்தினான்’. தானியேல் 6:10. தீஇவ 48.3

தேவனுடைய எல்லையில்லா மேன்மையையும் பிரசன்னத் தையும் உணரும்போதுதான், அவர்மேல் நமக்கு மெய்ப்பக்தி வரும். அதரிசனமானவரைக் குறித்த இந்த உணர்வு நம் இருதயத் தில் ஆழமாகப் பதிய வேண்டும். ஜெப நேரமும் இடமும் புனித மானவை; ஏனெனில், நாம் ஜெபிக்கும்போது, தேவன் அங்கு இருக்கிறார். நம் மனதிலும் செயலிலும் பயபக்தி வெளிப்பட வேண்டும்; அப்போது பய பக்தியை உண்டாக்கும் உள்ளுணர்வு மேலும் ஆழப்படும். அவருடைய நாமம் பரிசுத்தமும் பயங்கரமு மானது’ என்கிறார் சங்கீதக்காரன். சங் 111:9. தூதர் அந்நாமத்தை உச்சரிக்கும்போது, தங்கள் முகங்களை மூடிக்கொள்கின்றனர். பாவிகளாகிய நாம் அந்த நாமத்தை எவ்வளவு பயபக்தியோடு உச்சரிக்கவேண்டும்! தீஇவ 48.4

தேவனுடைய விசேஷித்த பிரசன்னமுள்ள இடத்தை நாம் எவ் வளவு மதிக்கவேண்டும் என்பதைக் கூறுகிற வேதவாக்கியங்களை முதியோரும் இளையோரும் தியானித்தால் நலமாயிருக்கும். ‘’உன் கால்களில் இருக்கிற பாதரட்சையைக் கழற்றிப்போடு; நீ நிற்கிற இடம் பரிசுத்த பூமி’‘ என்று எரிகிற முட்செடியின் நடுவிலிருந்து தேவன் மோசேக்குக் கட்டளையிட்டார். யாத்3:5. தூதனானவரைப் பார்த்தபின், “மெய்யாகவே கர்த்தர் இந்த ஸ்தலத்தில் இருக்கிறார். இதை நான் அறியாதிருந்தேன். இது தேவனுடைய வீடேயல்லாமல் வேறல்ல, இது வானத்தின் வாசல்’‘ என்று ஆச்சரியத்தோடு கூறி னான் யாக்கோபு. ஆதி 28:16,17. தீஇவ 49.1

தங்கள் தேவனைக் கோவில்களில் கட்டிப்போட்டு வைத்தி ருப்பதாக அஞ்ஞானிகள் நம்பினார்கள். அந்த மூடநம்பிக்கையால் அஞ்ஞானிகளின் எண்ணங்கள் மரத்துப்போயிருந்தன. பிரதிஷ்டை ஆராதனையில் பேசினபோது, அங்குக் கூடியிருந்தவர்களின் எண்ணங்களிலிருந்து சிருஷ்டிகரைப் பற்றின இந்த மூடநம்பிக் கையைக் களைந்து போட முயற்சித்தான் சாலொமோன். அஞ்ஞானி களின் தெய்வங்களைப்போல, கைகளால் கட்டப்பட்ட கோவில் களில் சிறைப்பட்டுக்கிடப்பவர் அல்லர் பரலோகின் தேவன்; ஆனா லும், தம்மைத் தொழுவதற்காகப் பிரதிஷ்டை செய்யப்பட்ட வீட்டில் கூடுகிற தம் பிள்ளைகளை அவர் தம் ஆவியானவர் மூலம் சந்திக் கிறார். தீஇவ 49.2

பல நூற்றாண்டுகளுக்குப்பின் இதே உண்மையைப் பவுல் கூறுகிறான்: ‘உலகத்தையும் அதிலுள்ள யாவற்றையும் உண்டாக் கினதேவனானவர் வானத்திற்கும் பூமிக்கும் ஆண்டவராயிருக்கிற படியால், கைகளினால் கட்டப்பட்ட கோவில்களில் அவர் வாசம் பண்ணுகிறதில்லை. எல்லோருக்கும் ஜீவனையும் சுவாசத்தையும் சகலத்தையும் கொடுக்கிற அவர், தமக்கு யாதொன்று தேவையா னதுபோல, மனுஷர்கைகளால் பணிவிடை கொள்ளுகிறதுமில்லை. கர்த்தராகிய தம்மை அவர்கள் தடவியாகிலும் கண்டுபிடிக்கத்தக்க தாகத் தம்மைத் தேடும் படிக்கு அப்படிச் செய்தார்; அவர் நம்மில் ஒருவருக்கும் தூரமானவரல்லவே. ஏனெனில், அவருக்குள் நாம் பிழைக்கிறோம், அசைகிறோம், இருக்கிறோம்’. அப் 17:24-28. தீஇவ 49.3

கர்த்தரைத் தங்களுக்குத் தெய்வமாகக் கொண்ட ஜாதியும்,
அவர் தமக்குச் சுதந்தரமாகத் தெரிந்துகொண்ட ஜனமும் பாக்கியமுள்ளது.
கர்த்தர் வானத்திலிருந்து நோக்கிப் பார்த்து,
எல்லா மனுபுத்திரரையும் காண்கிறார்.
தாம் வாசமாயிருக்கிற ஸ்தானத்திலிருந்து
பூமியின் குடிகள் எல்லார் மேலும் கண்ணோக்கமாயிருக்கிறார்.
கர்த்தர் வானங்களில் தமது சிங்காசனத்தை ஸ்தாபித்திருக்கிறார்;
அவருடைய ராஜரிகம் சர்வத்தையும் ஆளுகிறது.
தேவனே, உமது வழி பரிசுத்த ஸ்தலத்திலுள்ளது;
நம்முடைய தேவனைப் போலப் பெரிய தேவன் யார்?
அதிசயங்களைச் செய்கிற தேவன் நீரே;
ஜனங்களுக்குள்ளே உம்முடைய வல்லமையை விளங்கப்பண்ணினீர். தீஇவ 50.1

சங்கீ தம் 33:12-14; 103:19; 77:13,14.

கைகளால் செய்த கோவில்களில் தேவன் வாசம் செய்யாத போதிலும், தம் ஜனங்கள் ஒன்றாகக் கூடுகையில் தம் பிரசன்னத் தால் அவர்களை அவர் கனப்படுத்துகிறார். அவரைத் தேடவும், பாவ அறிக்கையிடவும், ஒருவருக்காக ஒருவர் ஜெபிக்கவும் நாம் கூடினால், தம் ஆவியானவர் மூலம் நம்மைச் சந்திப்பதாக வாக்குப் பண்ணியிருக்கிறார். ஆனால், அவரைத் தொழுதுகொள்ள ஒன்று கூடுகிறவர்கள் தீமையான சகல காரியங்களையும் விட்டுவிட வேண்டும். தேவனைத் தொழுதுகொள்கிறவர்கள் ஆவியோடும் உண்மையோடும் பரிசுத்தம் எனும் அலங்காரத்தோடும் தொழாத பட்சத்தில், அவர்கள் ஒன்றாகக் கூடுவதில் எப்பயனும் இல்லை. இப்படிப்பட்டவர்களைக் குறித்து, ‘’இந்த ஜனங்கள் தங்கள் வாயி னால் என்னிடத்தில் சேர்ந்து, தங்கள் உதடுகளினால் என்னைக் கனம்பண்ணுகிறார்கள்; அவர்கள் இருதயமோ எனக்குத் தூரமாய் விலகியிருக்கிறது’‘ என்கிறார் தேவன். மத்தேயு 15:8. தேவனைத் தொழுதுகொள்வோர் அவரை ‘ஆவியோடும் உண்மையோடும் தொழுதுகொள்ளவேண்டும். தம்மைத் தொழுது கொள்ளுகிறவர்கள் இப்படிப்பட்டவர்களாய் இருக்கும்படி பிதாவானவர் விரும்புகிறார்.’ யோவான் 4:23. தீஇவ 50.2

’கர்த்தரோவென்றால், தமது பரிசுத்த ஆலயத்தில் இருக் கிறார்; பூமியெல்லாம் அவருக்கு முன்பாக மெளனமாயிருக்கக் கடவது.’ஆபகூக் 2:20. தீஇவ 50.3