யெரொபெயாமின் மரணகாலம் முதல் ஆகாபின் முன் எலியா தோன்றும் காலம் வரையிலும் இஸ்ரவேலரின் ஆவிக்குரிய நிலை வெகுவாக வீழ்ச்சியடைந்தது. யேகோவாவின் மேல் பயமில் லாமல், புதுமையான ஆராதனைகளை ஊக்குவித்தவர்கள் ஆட்சி செய்ததால் ஜீவனுள்ள தேவனைச் சேவிக்கும் தங்கள் கடமையைப் பெரும் பாலான ஜனங்கள் வெகுவாக மறந்துபோனார்கள்; அதிக மாகச் சிலை வழிபாட்டு முறைகளையே பின்பற்றினார்கள். தீஇவ 109.1
யெரொபெயாமின் குமாரன் நாதாப், இஸ்ரவேலின் சிங்காச னத்தில் சில மாதங்களே அமர்ந்திருந்தான். அவனுடைய படைத் தளபதிகளில் ஒருவனாகிய பாஷா, ராஜ்யத்தைத் தன் கட்டுப்பாட் டில் கொண்டுவர சதிசெய்து, நாதாபின் பாவவாழ்வுக்கு முற்றுப் புள்ளி வைத்தான். ‘யெரொபெயாம் செய்ததும், இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு உண்டாக்கின கோபத்தினிமித்தமும், கர்த்தர் சீலோனி யனான அகியா என்னும் தமது ஊழியக்கார னைக்கொண்டு சொல்லியிருந்த வார்த்தையின்படியே, ‘அரசுரி மைக்குட்பட்டதன் வீட்டார் அனைவரோடுங்கூட நாதாப் கொல்லப் பட்டான். 1 இராஜா 15:29, 30. தீஇவ 109.2
இப்படியாக யெரொபெயாமின் வீட்டார் அழிந்தனர். அவனால் அறிமுகப்படுத்தப்பட்ட சிலைவழிபாட்டின் பாவத்திற்கு ஆளான வர்கள்மேல் பரலோகத்தின் நியாயத்தீர்ப்புகள் கொண்டுவரப் பட்டன. ஆனாலும், அவனைத் தொடர்ந்து பாஷா, ஏலா, சிம்ரி, உம்ரி போன்ற ராஜாக்களும், கிட்டத்தட்ட நாற்பது வருடங்கள் இத் தகைய தவறான போக்கிலேயே சென்றார்கள். தீஇவ 110.1
இஸ்ரவேலர் தேவனை அதிகமாக மறந்துபோன அக்காலக் கட்டத்தில், யூதா ராஜ்யத்தில் ஆசா அரசாண்டுவந்தான். அநேக வருடங்கள், ஆசா தன் தேவனாகிய கர்த்தரின் பார்வைக்கு நன்மை யும் செம்மையுமானதைச் செய்தான். அந்நிய தேவர்களின் பலி பீடங்களையும் மேடைகளையும் அகற்றி, சிலைகளை உடைத்து, விக்கிரகத்தோப்புகளை வெட்டி, பிதாக்களின் தேவனாகிய கர்த் தரைத் தேடவும், நியாயப்பிரமாணத்தின்படியும் கற்பனையின் படியும் செய்யவும் யூதாவுக்குக் கற்பித்து, யூதாவுடைய எல்லாப் பட்டணங் களிலுமிருந்து மேடைகளையும் விக்கிரகங் களையும் அகற்றினான்; அவனுக்கு முன்பாக ராஜ்யம் அமரிக்கையாயிருந் தது.’ 2நாளா 14:2-5. தீஇவ 110.2
’அவர்களுக்கு விரோதமாக எத்தியோப்பியனாகிய சேரா பத்து லட்சம் பேர்கள் சேர்ந்த சேனையோடும் முந்நூறு இரதங் களோடும் புறப்பட்டு ‘ தேசத்திற்குள் புகுந்தபோதுதான் ஆசாவின் விசுவாசம் கடுஞ் சோதனைக்கு உள்ளானது. வச9. அவன் ‘யூதா விலே அரணான பட்டணங்களைக் கட்டி, அவைகளுக்கு அலங் கங்கள், கோபுரங்கள், வாசல்கள் உண்டுபண்ணி, தாழ்ப்பாள் போட்டுப் பலப்படுத்தியிருந்தான்’. அந்த இக்கட்டான சமயத்தில் அவைகளின் மேலோ, நன்கு போர்ப்பயிற்சி பெற்றிருந்த தன் ‘பராக்கிரமசாலிகள்’ மேலோ அவன் நம்பிக்கை வைக்கவில்லை. வச 6-8. சேனைகளின் யேகோவாமேல் ராஜா நம்பிக்கை வைத் தான். முந்தைய இஸ்ரவேலர் அவருடைய நாமத்தில்தான் ஆச்சா ரிய விடுதலைகளைப் பெற்றிருந்தனர். தன் படைகளை யுத்தத் திற்கு அணிவகுத்து நிற்கச் செய்துவிட்டு, தேவ உதவியை நாடி னான். தீஇவ 110.3
இருதரப்புப் படைகளும் நேருக்குநேராக நின்றன. கர்த்தரைச் சேவித்தவர்களுக்கு அது சோதனையின் காலமாகவும் வேதனை யின் காலமாகவும் இருந்தது. ஒவ்வொரு பாவமும் அறிக்கை செய் தாயிற்றா? விடுவிக்கக்கூடிய தேவ வல்லமை மேல் யூதா மனித ருக்கு முழு நம்பிக்கை இருக்கிறதா?’ என்பது போன்ற கேள்விகள் தலைவர்களின் மனதில் இருந்தன. எகிப்திலிருந்து வந்த அந்தப் பெரும் படை தங்களுக்கு முன்னிருந்த யாவற்றையும் வாரிக் தீஇவ 110.4
கொள்ளப் போவதாகவே ஒவ்வொருவரும் கருதியிருக்க வேண் டும். ஆனால், சமாதான காலத்தில் ஆசா சிற்றின்பக் கேளிக்கை களில் நேரம் செலவிடவில்லை ; எத்தகைய அவசர நிலையையும் சந்திக்க ஆயத்தமாகிக் கொண்டிருந்தான். யுத்தப் பயிற்சி பெற்ற படை அவனிடம் இருந்தது; தன் ஜனங்கள் தேவனோடு சமாதான மாயிருக்கும்படி அவர்களை வழிநடத்த முயற்சிகள் மேற்கொண் டிருந்தான். ஆனாலும், இப்பொழுது எதிரிகளைக் காட்டிலும் அவனுடைய படையினர் குறைவாகவே இருந்தனர். இருந்தபோதி லும், அவன் யாரைத் தன் நம்பிக்கையாகக் கொண்டிருந்தானோ, அவர்மேல் ராஜா வைத்திருந்த விசுவாசம் குறையவில்லை. தீஇவ 111.1
ஆசீர்வாதத்தின் நாட்களில் கர்த்தரைத் தேடினபடியால், இக் கட்டான காலத்திலும் அரசனால் கர்த்தரைச் சார்ந்திருக்க முடிந்தது. தேவனுடைய அற்புத வல்லமை அவனுக்குப் புதுமையானதல்ல என் பதை அவனுடைய ஜெபம் வெளிப்படுத்தியது. ‘கர்த்தாவே, பலமுள்ளவனுக்காகிலும் பலனற்றவனுக்காகிலும் உதவி செய் கிறது உமக்கு லேசான காரியம்; எங்கள் தேவனாகிய கர்த்தாவே, எங்களுக்குத் துணை நில்லும்; உம்மைச் சார்ந்து உம்முடைய நாமத் தில் ஏராளமான இந்தக் கூட்டத்திற்கு எதிராகவந்தோம்; கர்த்தாவே, நீர் எங்கள் தேவன்; மனுஷன் உம்மை மேற்கொள்ள விடாதேயும்’ என்று அவன் வேண்டினான். வச 11. தீஇவ 111.2
ஆசாவின் ஜெபம் ஒவ்வொரு கிறிஸ்தவ விசுவாசியும் ஏறெடுப்பதற்கு ஏற்ற ஜெபமாகும். மாம்சத்தோடும் இரத்தத்தோடு மல்ல; துரைத்தனங்களோடும், அதிகாரங்களோடும், வானமண்ட லங்களிலுள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகளோடும் நாம் போராடிக் கொண்டிருக்கிறோம். எபே 6:12. ஒளிக்கு எதிராக அணிவகுத்து நிற்கும் தீய சக்திகளை வாழ்க்கைப் போராட்டத்தில் நாம் சந்தித்தே ஆக வேண்டும். மனிதனை அல்ல, ஜீவனுள்ள தேவனையே நாம் நம்ப வேண்டும். அவர் நாமத்தின் மகிமைக்காக மனிதர்களின் பிரயாசங்களோடு தம் எல்லையில்லா வல்லமை யையும் இணைப்பார் என்பதை முழு நிச்சயத்தோடு விசுவாசிக் கலாம். அவருடைய நீதி எனும் மார்க்கவசத்தைத்தரித்தால், எதிரி எவரையும் ஜெயங்கொள்ளலாம். தீஇவ 111.3
இராஜாவாகிய ஆசாவின் விசுவாசத்திற்கு மேன்மையான பதில் கிடைத்தது. ‘அப்பொழுது கர்த்தர் அந்த எத்தியோப்பியரை ஆசாவுக்கும் யூதாவுக்கும் முன்பாக முறிய அடித்ததினால் எத்தி யோப்பியர் ஓடிப்போனார்கள். அவர்களை ஆசாவும் அவனோ டிருந்த ஜனங்களும் கேரார் மட்டும் துரத்தினார்கள்; எத்தியோப் பியர் திரும்பப் பலங்கொள்ளாதபடிக்கு முறிந்து விழுந்தார்கள்; கர்த்தருக்கும் அவருடைய சேனைக்கும் முன்பாக நொறுங்கிப் போனார்கள்’. 2 நாளா 14:12, 13. தீஇவ 111.4
யூதா மற்றும் பென்யமீனரின் படைகள் வெற்றியோடு எரு சலேமுக்குத் திரும்பிவந்தபோது, ‘தேவனுடைய ஆவி ஓதேதின் குமாரனாகிய அசரியாவின் மேல் இறங்கினதினால், அவன் வெளி யே ஆசாவுக்கு எதிர்கொண்டுபோய், அவனை நோக்கி, ‘’ஆசா வே, யூதா பென்யமீன் கோத்திரங்களின் சகல மனுஷரே, கேளுங் கள்; நீங்கள் கர்த்தரோடிருந்தால், அவர் உங்களோடிருப்பார்; நீங் கள் அவரைத் தேடினால், உங்களுக்கு வெளிப்படுவார்; அவரை விட்டீர்களேயாகில், அவர் உங்களை விட்டுவிடுவார். நீங்களோ உங்கள் கைகளை நெகிழவிடாமல் திடன்கொள்ளுங்கள்; உங்கள் கிரியைகளுக்குப் பலன் உண்டு ” என்றான்.’ நாளா 15:1, 2, 7. தீஇவ 112.1
இவ்வார்த்தைகளால் ஊக்கமடைந்து, யூதாவில் இரண்டாவது சீர்திருத்தத்தைக் கொண்டுவந்தான் ஆசா. ‘ஆ சா இந்த வார்த்தை களையும் தீர்க்கதரிசியாகிய ஓதேதின் தீர்க்கதரிசனத்தையும் கேட்டபோது, அவன் திடன்கொண்டு, அருவருப்புகளை யூதா பென்யமீன் தேசம் அனைத்திலும், எப்பிராயீமின் மலைத்தேச த்தில்தான் பிடித்த பட்டணங்களிலுமிருந்து அகற்றி, கர்த்தருடைய மண்டபத்தின் முன்னிருக்கிற கர்த்தருடைய பலிபீடத்தைப் புதுப் பித்தான். தீஇவ 112.2
’அவன் யூதா பென்யமீன் ஜனங்களையும், அவர்களோடே கூட எப்பிராயீமிலும் மனாசேயிலும், சிமியோனிலும் இருந்து வந்து அவர்களோடு சஞ்சரித்தவர்களையும் கூட்டினான்; அவனுடைய தேவனாகிய கர்த்தர் அவனோடிருக்கிறதைக் கண்டு, இஸ்ர வேலிலிருந்து திரளான ஜனங்கள் அவன் பட்சத்தில் சேர்ந்தார்கள். ஆசா அரசாண்ட பதினைந்தாம் வருஷம் மூன்றாம் மாதத்திலே எருசலேமிலேகூடி, தாங்கள் கொள்ளையிட்டு ஓட்டிக் கொண்டு வந்தவைகளில் அந்நாளிலே எழுநூறு மாடுகளையும் ஏழாயிரம் ஆடுகளையும் கர்த்தருக்குப் பலியிட்டு, தங்கள் பிதாக்களின் தேவ னாகிய கர்த்தரைத் தங்கள் முழு இருதயத்தோடும் தங்கள் முழு ஆத்துமாவோடும் தேடுவோம் என்று ஆணையிட்டு, தங்கள் முழு மனதோடும் அவரைத் தேடினார்கள். கர்த்தர் அவர்களுக்கு வெளிப்பட்டு, சுற்றுப்புறத்தாரால் யுத்தமில்லாதபடிக்கு அவர் களை இளைப்பாறப் பண்ணினார். ‘வச 8-12, 15. தீஇவ 112.3
ஆசா நீண்ட நாட்கள் உண்மையோடிருந்தான். ஆனாலும், சில தவறுகளால் அவனுடைய வரலாறு களங்கமடைந்தது. தேவனை முற்றிலும் நம்ப மறந்த நாட்களில் அவன் அத்தவறுகளைச் செய் தான். ஒருசமயம் யூதா தேசத்தின்மேல் இஸ்ரவேலின் ராஜா படை யெடுத்து வந்து ராமாவைப் பிடித்தான். எருசலேமிருந்து ஐந்து மைல் தொலைவில் அந்த அரணான பட்டணம் இருந்தது. அப்போது, சீரியாவின் மன்னனான பெனாதாத்தோடு கூட்டணி அமைத்து, விடு தலைதேடினார். உதவி தேவைப்பட்டபோது, தேவனை மட்டும் நம் பத்தவறினதால், தீர்க்கதரிசியாகிய அனானி அவனைக் கடுமை யாகக் கடிந்துகொண்டான். அவன் ஆசாவினிடத்தில் வந்து சொன்ன செய்தி இதுதான்: தீஇவ 113.1
‘ நீர் உம்முடைய தேவனாகிய கர்த்தரைச் சார்ந்துகொள்ளா மல், சீரியாவின் ராஜாவைச் சார்ந்துகொண்டபடியினால், சீரியா ராஜாவின் இராணுவம் உமது கைக்குத் தப்பிப்போயிற்று. மிகவும் ஏராளமான இரதங்களும் குதிரை வீரருமுள்ள எத்தியோப்பியரும் லூபியரும் மகாசேனையாயிருந்தார்கள் அல்லவா? நீர் கர்த்தரைச் சார்ந்து கொண்டபோதோவெனில், அவர்களை உமது கையில் ஒப்புக்கொடுத்தாரே. தம்மைப் பற்றி உத்தம் இருதயத்தோடிருக் கிறவர்களுக்குத் தம்முடைய வல்லமையைவிளங்கப்பண்ணும்படி, கர்த்தருடைய கண்கள் பூமியெங்கும் உலாவிக் கொண்டிருக்கிறது; இந்த விஷயத்தில் மதியில்லாதவராயிருந்தீர்; ஆகையால், இது முதற்கொண்டு உமக்கு யுத்தங்கள் நேரிடும் என்ற செய்தியைத் தெரிவித்தான். 2நாளா 16:7-9. தீஇவ 113.2
தன்னுடைய தவற்றின் நிமித்தம் தேவனுக்கு முன்பாக அவன் தன்னைத் தாழ்த்தியிருக்க வேண்டும். அதற்குப்பதிலாக, ‘ஆசா ஞான திருஷ்டிக்காரன் மேல் சினந்து கடுங்கோபங்கொண்டு அவ னைக் காவலறையிலே வைத்தான்; இதல்லாமலும் அக்காலத்தில் ஜனங்களுக்குள் சிலரைக் கொடூரமாய் நடப்பித்தான். ‘ வச. 10. தீஇவ 113.3
’ஆசா அரசாண்ட முப்பத்தொன்பதாம் வருஷத்திலே தன் கால் களில் வியாதிக்கண்டு, அவன் நோவு மிகவும் உக்கிரமாயிருந்தது; அவன் தன் வியாதியிலும் கர்த்தரை அல்ல, பரிகாரிகளையே தேடி னான். ‘வச . 12. தன்னுடைய ஆளுகையின் நாற்பத்தோராம் வரு டத்தில் ராஜா மரித்தான்; அதன்பிறகு அவனுடைய குமாரனான யோசபாத் ராஜாவானான். தீஇவ 113.4
ஆசாவின் மரணத்திற்கு இரண்டு வருடங்களுக்கு முன்பு இஸ்ரவேல் ராஜ்யத்தில் ஆட்சிப்பொறுப்பேற்றான் ஆகாப். அவ னுடைய ஆளுகையின் ஆரம்பத்திலிருந்தே புதுமையும் பயங்கர முமான வழிவிலகல் உண்டாயிற்று. சமாரியாவுக்கு அஸ்திபாரம் போட்ட அவனுடைய தகப்பனான உம்ரி என்பவன், ‘கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்து, தனக்கு முன்னிருந்த எல்லாரைப் பார்க்கிலும் கேடாய் நடந்தான்’. 1 இராஜா 16:25. ஆனால், ஆகாபின் பாவமோ அதைவிடப் பெரியதாக இருந்தது. ‘இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்குக் கோபம் உண்டாக்கும் படிக்கு தனக்கு முன்னிருந்த இஸ்ரவேலின் ராஜாக்களெல்லாம் செய்ததைப் பார்க்கிலும் அதிகமாய்ச் செய்து வந்தான். நேபாத்தின் குமாரனாகிய யெரொபெயாமின் பாவங்களில் நடப்பது கொஞ்சக் காரியமென்று நினைத்தாற்போல்’ செயல்பட்டான். 1 இராஜா 16:33,31. பெத்தேலிலும் தாணிலும் நடைபெற்றுவந்த தொழுகை முறைகளை ஊக்குவித்தது போதாதென்று, யேகோவாவைத் தொழுவதற்குப் பதிலாக பாகாலைத் தொழுமாறு மக்களை அஞ் ஞான மார்க்கத்திற்குள் தைரியமாக வழிநடத்தத் துணிவுகொண் டான். தீஇவ 114.1
பாகாலின் பிரதான பூஜாசாரியான ஏத்பாகால்தான் சீதோனி யரின் ராஜாவுமாக இருந்தான். அவனுடைய குமாரத்தி யேசபேலை ஆகாப் விவாகம்பண்ணினான்; அத்தோடு பாகாலையும் சேவித்து அதைப் பணிந்துகொண்டு, தான் சமாரியாவிலே கட்டின பாகாலின் கோவிலில் பாகாலுக்குப் பலிபீடத்தை எடுப்பித்தான் ஆகாப். 1இரா 16:31, 32. தீஇவ 114.2
தலைநகரமாகிய சமாரியாவில் பாகாலின் தொழுகையை அறிமுகப்படுத்தினது மட்டுமல்லால், ‘மேடான இடங்கள் பல வற்றில் யேசபேலின் தலைமையில் அந்நிய தேவர்களுக்குப் பலி பீடங்களையும் அமைத்தான் ஆகாப். அப்பகுதிகளைச் சுற்றிலும் மிருந்த பாகாலின் தீர்க்கதரிசிகளும், அத்தகைய வழிபாட்டோடு சம்பந்தப்பட்டவர்களும் தங்கள் மோசமான செல்வாக்கை ஆங் காங்கே வெளிப்படுத்தினார்கள்; கிட்டத்தட்ட இஸ்ரவேலர் அனை வருமே பாகாலைப் பின்பற்றினார்கள். ‘தன் மனைவியாகிய யேச பேல் தூண்டிவிட்டபடியே, கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப் பானதைச் செய்ய, தன்னை விற்றுப்போட்ட ஆகாபைப்போல ஒருவனுமில்லை. கர்த்தர் இஸ்ரவேல் புத்திரருக்கு முன்னின்று துரத்திவிட்ட எமோரியர் செய்தபடியெல்லாம், அவன் நரகலான விக்கிரகங்களைப் பின்பற்றி, மகா அருவருப்பாய் நடந்து கொண் டான்.’ 1இராஜா 21:25, 26. தீஇவ 114.3
ஒழுக்கத்தன்மையில் ஆகாப் பலவீனமானவன். அப்படிப் பட்டவன் மோசமானவளும் மனத்துணிவுடையவளுமான ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொண்டதால், அவனுக்கும் அவன் தேசத்திற்கும் அது பேரழிவாக அமைந்தது. உறுதியான கொள்கை யும் நேர்மையான நடத்தையும் இல்லாத அவனுடைய குணமானது உறுதிமிக்க யேசபேலின் சொற்படி மாற ஆரம்பித்தது. தேவன் காட்டிய இரக்கங்களை அவனால் உணர்ந்து கொள்ள முடிய வில்லை; தெரிந்துகொள்ளப் பட்ட ஜனங்களின் தலைவனாகவும், பாதுகாவலனாகவும் தனக்கிருந்த கடமைகளையும் அவனால் உணரமுடியவில்லை . அதற்கு அவனுடைய சுயநலம் தான் காரண மாக இருந்தது. தீஇவ 115.1
ஆகாபின் ஆட்சி ஏற்படுத்திய மோசமான தாக்கத்தால் ஜீவ னுள்ள தேவனைவிட்டு வெகுதூரம் சென்ற இஸ்ரவேலர் தேவ னுக்கு முன்பாகத் தங்கள் வழிகளைக் கெடுத்துக்கொண்டனர். பயபக்தியும் தெய்வ பயமுமான மனப்பான்மை கொஞ்சம் கொஞ் சமாக அவர்களைவிட்டு அநேக வருடங்களாக நீங்கிக் கொண்டி ருந்தது. அங்கு நிலவிய தேவதூஷணத்தை எதிர்த்துத் தைரியமாக நிற்கக்கூடியவர்கள் ஒருவர் கூட இல்லாதது போல் தோன்றியது. வழிவிலகல் எனும் இருள் தேசம் முழுவதையும் மூடியிருந்தது. பாகால் மற்றும் அஸ்தரோத்தின் சொரூபங்கள் எங்கும் காணப் பட்டன். மனிதரின் கைக்கிரியைகளைத் தொழுது கொள்ளும் இட மான விக்கிரகத்தோப்புகளும் கோவில்களும் பெருகின. பொய்த்தெய்வங்களுக்குச் செலுத்தப்பட்ட பலிகளிலிருந்து எழுந்த புகையால் காற்று மாசுப்பட்டது. சூரியனுக்கும் சந்திரனுக் கும் நட்சத்திரங்களுக்கும் பலியிட்ட அஞ்ஞானப் பூஜாசாரிகளின் குடிமயக்கச் சத்தங்கள் மலையிலும் பள்ளத்தாக்கிலும் எதிரொ லித்தன. தீஇவ 115.2
’அங்கு நிறுவப்பட்டிருந்த சிலைத்தெய்வங்களே கடவுள்கள்’ என்றும், ‘பூமி, அக்கினி, நீர் போன்ற விசித்திர வல்லமைகளால் அவை ஆட்சி செய்கின்றன’ என்றும் மக்களுக்குப் போதிக்கும்படி, யேசபேலும் பூஜாசாரிகளும் தங்கள் தீய செல்வாக்கால் ஏற்பாடு செய்தனர். ஓடும் நீரோடைகள், ஜீவத்தண்ணீருள்ள நதிகள், மென்மையாகப் பெய்யும் பனி, பூமியைக் குளிரச் செய்து வயல் களை அபரிதமாக விளையைச் செய்யும் மழை போன்ற சகல பர லோக ஆசீர்வாதங்களுக்குக் காரணர் தேவனே. நன்மையும் பூரண முமான ஈவுகளைத் தருபவர் அவரே. ஆசீர்வாதங்களுக்குக் கார ணர் தேவனே என்று அவரைச் சுட்டிக்காட்டாமல், பாகாலையும் அஸ்தரோத்தையும் காட்டினார்கள். ‘மலை, பள்ளத்தாக்கு, நதி, நீருற்று அனைத்தும் ஜீவனுள்ள தேவனுடைய கரங்களில் இருக் கின்றன; சூரியனையும் வானமேகங்களையும் இயற்கையின் சகல வல்லமைகளையும் கர்த்தரே கட்டுப் படுத்துகிறார்’ என்பதை மக்கள் மறந்தார்கள். தீஇவ 115.3
தம்மை மறந்த ராஜாவையும் மக்களையும் தம் உண்மை ஊழி யர்கள் மூலம் மீண்டும் மீண்டும் எச்சரித்தார் ஆண்டவர். ஆனால், அந்த எச்சரிப்பின் வார்த்தைகள் வீணாயின. ‘இஸ்ரவேலின் தேவனாயிருக்கும் உரிமை யேகோவாவிற்கு மாத்திரமே உரியது’ என்று தேவ ஊழியர்கள் உறுதிப்படுத்தினதும் வீணாகியது; தேவ னால் அவர்களுக்குக் கொடுக்கப் பட்டிருந்த பிரமாணங்களை அவர்கள் கைக்கொண்டதும் வீணாகவே இருந்தது. சிலை வழிபாட்டின் கவர்ச்சிமிக்க சடங்குகளாலும், பகட்டுகளாலும் சிறைப் பட்டவர்களாய், ராஜா மற்றும் அவனுடைய அரசவையினரின் முன் மாதிரியை மக்கள் பின்பற்றினர்; தொழுகையை உணர்வுக்கினிய தாய் மாற்றி, அதன் கேடான , மதிமயக்குகிற சந்தோஷத்திற்குத் தங்களை ஒப்புக்கொடுத்தனர். கண்மூடித்தனமான மடமையால் தேவனையும் அவரைத் தொழுவதையும் புறக்கணித்தார்கள். கிருபையாக அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட ஒளி, இருளடைந் தது; பசும்பொன் மங்கியது. தீஇவ 116.1
அந்தோ, இஸ்ரவேல் எப்படியாக தன் மகிமையை இழந்து போனது! தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட ஜனங்கள் அவருக் குத் துரோகம் செய்ய இவ்வளவு இழிவாக ஒருபோதும் சென்ற தில்லை. ‘பாகாலின் தீர்க்கதரிசிகள் நானூற்றைம்பது பேர்’ தவிர ‘தோப்பு விக்கிரகத்தின் தீர்க்கதரிசிகள் நானூறு பேர் இருந்தார்கள். 1இராஜா 18:19. தேவ வல்லமையால் ஓர் அற்புதம் நிகழ்ந்தா லொழிய தேசம் முற்றிலும் அழிந்து போவதிலிருந்து வேறெதுவாலும் தப்புவிக்கக் கூடாதிருந்தது. இஸ்ரவேல் தானாகவே தன்னை யேகோவாவிடமிருந்து விலக்கிக்கொண்டது. ஆனாலும், பாவத்திற்குள்ளாக வழி நடத்தப்பட்டவர்கள்மேல் கர்த்தர் தம் கருணையால் இரக்கம் கொண்டார்; தம்முடைய வல்லமையான தீர்க்கதரிசிகளில் ஒருவனை அவர்களிடத்திற்கு அனுப்ப இருந் தார். அவன் மூலமாக அவர்களில் அநேகர் தங்கள் முற்பிதாக்களின் தேவன் மேல் மீண்டும் பற்றுக்கொள்ள வழிநடத்தப்பட இருந்தனர். தீஇவ 116.2