தாவீதின் வீட்டாருக்கு எதிராகக் கலகம் பண்ணின பத்துக் கோத்திரத்தாரால் சிங்காசனத்தில் அமர்த்தப்பட்டவனும், சாலொ மோனின் முன்னாள் ஊழியக்காரனுமான யெரொபெயாம், அரசி யல் மற்றும் மதக்காரியங்களில் ஞானமான சீர்திருத்தங்களைக் கொண்டு வருவதற்கான சூழ்நிலைகளைப் பெற்றிருந்தான். சாலொ மோனின் ஆளுகையின்போது, யெரொபெயாமிடம் திறமையும் அறிவுக்கூர்மையும் வெளிப்பட்டது. அவர் உண்மையோடு சேவை செய்த அந்நாட்களில் அவர் பெற்றுக்கொண்ட அறிவானது அவன் விவேகத்தோடு ஆட்சி செய்ய அவனைத் தகுதிப் படுத்தியது. ஆனால், தேவனைத் தன் நம்பிக்கையாகக் கொள்வதை மறந்தான் யெரொபெயாம். தீஇவ 99.1
’வருங்காலத்தில் என்றாவது ஒருநாள் தன்னுடைய குடிமக்கள் தாவீதின் சிங்காசனத்தில் வீற்றிருக்கும் அரசன் மேல் பிரியங் கொள்ளக் கூடும் என்பதே யெரொபெயாமின் மிகப்பெரிய பய மாக இருந்தது. யூத அரசின் தலைநகரான எருசலேமில் சாலொ மோனின் ஆட்சியில் நடைபெற்றது போல அப்பொழுதும் ஆராதனை கள் நடைபெற்று வந்தன. எனவே, பத்துக் கோத்திரத்தாரும் அங்கு அடிக்கடி செல்ல அனுமதிக்கப்பட்டால், அவர்களில் பலர் எரு சலேமின் அரசன் மேல் மீண்டும் பிரியம் வைத்துவிடுவார்கள் என்று நினைத்தான். அதுகுறித்து தன் ஆலோசகர்களிடம் ஆலோசித் தான். எனவே, நிகழ்வதற்கு வாய்ப்பிருந்த கலகத்தை இயன்ற ளவுக்குத் தணிக்க, துணிவான ஒரு முயற்சியை மேற்கொண்டான் யெரொபெயாம். புதிதாக அமைக்கப்பட்ட தன் ராஜ்யத்தில், பெத்தேலிலும் தாணிலும் தொழுகை மையங்களை அமைத்து, தன் திட்டத்தைச் செயல்படுத்த விரும்பினான். தேவனைத் தொழுது கொள்ள எருசலேமில் கூடுவதற்குப் பதிலாக, அந்த இரு இடங்களி லும் கூடுமாறு பத்துக் கோத்திரத்தாரையும் அழைத்தான். தீஇவ 99.2
அதரிசனமான தேவனை அடையாளப்படுத்தும் வகையில் கண்களால் காணக்கூடிய ஒன்றை அவர்களுக்கு முன்பாக வைத்து, இஸ்ரவேலரின் மனதைக் குளிரப்பண்ண நினைத்தான் யெரொ பெயாம். எனவே, பொன்னினால் இரண்டு கன்றுக் குட்டிகளை வார்க்கும் படிச் செய்தான். அங்கு அமைக்கப்பட்டிருந்த தொழுகை ஸ்தலங்களுக்குள் அவைவைக்கப்பட்டன. கடவுளை அடையாளப் படுத்த மேற்கொண்ட முயற்சியில் யேகோவாவின் தெளிவான கட்டளையை மீறினான் யெரொபெயாம்: ‘யாதொரு விக்கிரகத் தையாகிலும் நீ உனக்கு உண்டாக்கவேண்டாம். நீ அவைகளை நமஸ்கரிக்கவும் சேவிக்கவும் வேண்டாம்’ என்கிறார் தேவன். யாத் 20:4, 5. தீஇவ 100.1
பத்துக்கோத்திரத்தாரும் எருசலேமிலிருந்து தள்ளியே இருக்க வேண்டும் என்பதில் தீவிரமாக இருந்தான் யெரொபெயாம். அத னால்தான், தன்னுடைய திட்டத்தின் அடிப்படைப் பெலவீனத்தை அவனால் கண்டுகொள்ள முடியவில்லை. இஸ்ரவேலின் மூதாதை யர்கள் எகிப்தில் அடிமைப்பட்டிருந்த நாட்களில், கடவுளின் அடை யாளமாக அச்சிலையை வணங்குவதை வழக்கமாகக் கொண் டிருந்தனர். இப்பொழுது, அதே சிலையை அவர்களுக்கு முன்பாக நிறுவினதால், பெரிய அழிவுக்குள் அவர்களை இழுத்துச்சென்று விட்டான். அதை எண்ணிப்பார்க்க அவன் மறந்தான். சமீபத்தில் தான் எகிப்திலிருந்து திரும்பியிருந்தான் யெரொபெயாம். அத்த கைய அஞ்ஞான காரியங்களை ஜனங்களுக்கு முன்பாக வைக்கும் பழக்கத்தை அங்கிருந்து அவன் கற்றிருக்கலாம். வடதேசத்தின் கோத்திரத்தார் வருடாவருடம் பரிசுத்த நகரத்திற்குச் சென்றுவந்த செயலைத் தடை செய்யத் துணிந்ததே, மோசமான நடவடிக்கைகளை ஏற்படுத்த அவரை வழி நடத்தியது. ‘’நீங்கள் எருசலேமுக்குப் போகிறது உங்களுக்கு வருத்தம் ; இஸ்ரவேலரே, இதோ, இவை கள் உங்களை எகிப்து தேசத்திலிருந்து வரப்பண்ணின் உங்கள் தேவர்கள்’‘ என்றான். 1 இராஜாக்கள் 12:28. இப்படியாக, பொன் னாலான சொரூபங்களைப் பணிந்துகொள்ளவும், புதுமையான முறையில் தொழுகை செய்யவும் அவர்கள் அழைக்கப்பட்டனர். தீஇவ 100.2
பெத்தேலிலும் தாணிலும் புதிதாக அமைக்கப்பட்ட தொழுகை ஸ்தலங்களில் ஆசாரியராகப் பணிபுரியும்படி, தன் ஆட்சிப் பகுதி யில் வாழ்ந்த சில லேவியர்களை வற்புறுத்த முயன்றான் ராஜா. ஆனால், அந்த முயற்சி தோல்வியடைந்தது. எனவே, ‘ஜனத்தில் ஈனமானவர்களை’ ஆசாரியராக நியமிக்கவேண்டிய நிலைக்கு ஆளானான். வச 31. இந்தக் காரியத்தால் எச்சரிப்படைந்த லேவி யரிலும், ஜனங்களில் உண்மையோடிருந்தவர்களிலும் அநேகர் தங்கள் தேவனுடைய நிபந்தனைகளின்படி தொழுகை செய்ய எருச லேமுக்கு ஓடிப்போனார்கள். தீஇவ 101.1
’யூதாவில் ஆசரிக்கப்படும் பண்டிகைக்கொப்பாக எட்டாம் மாதம் பதினைந்தாம் தேதியிலே யெரொபெயாம் ஒரு பண்டிகை யையும் கொண்டாடி, பலிபீடத்தின் மேல் பலியிட்டான்; அப்படியே பெத்தேலிலே தான் உண்டாக்கின கன்றுக்குட்டிகளுக்குப் பலி யிட்டு, தான் உண்டு பண்ணின மேடைகளின் ஆசாரியர்களைப் பெத்தேலிலே ஸ்தாபித்தான். ‘வச 32. தீஇவ 101.2
இப்படியாக, தேவன் ஏற்படுத்தின காரியங்களை விலக்கி, தேவனை எதிர்க்க ராஜா துணிவு கொண்டது கண்டிக்கப்படாமல் விடப்படவில்லை. பெத்தேலில் அவன் அமைத்திருந்த பலிபீடத் தின் பிரதிஷ்டையின்போது, அங்கு அவன் தூபங்காட்ட நின்ற வேளையில் தானே யூதா ராஜ்யத்தைச் சேர்ந்த தேவ மனிதன் ஒருவன் அங்கு வந்தான். புதுமையான தொழுகை முறைகளை அறிமுகப்படுத்த துணிவு கொண்டதால், அவனுடைய குற்றத்தை வெளிப்படுத்தும்படி அவன் அங்கு அனுப்பப்பட்டான். பலிபீடத் திற்கு எதிராக அந்தத் தீர்க்கதரிசி சத்தமிட்டு, ‘’பலிபீடமே, பலி பீடமே, இதோ, தாவீதின் வம்சத்தில் யோசியா என்னும் பேருள்ள ஒரு குமாரன் பிறப்பான்; அவன் உன்மேல் தூபங் காட்டுகிற மேடைகளின் ஆசாரியர்களை உன் மேல் பலியிடுவான்; மனுஷரின் எலும்புகளும் உன்மேல் சுட்டெரிக்கப்படும் என்பதைக் கர்த்தர் உரைக்கிறார்” என்று கர்த்தருடைய வார்த்தையைக் கூறினான். தீஇவ 101.3
’’அன்றையதினம் அவன் ஒரு அடையாளத்தையும் சொல்லி, இதோ, இந்தப் பலிபீடம் வெடித்து, அதின்மேலுள்ள சாம்பல் கொட்டுண்டுபோம், கர்த்தர் உரைத்ததற்கு இதுவே அடையாளம்’‘ என்றான். அந்நேரத்திலேயே ‘தேவனுடைய மனுஷன் கர்த்தரு டைய வார்த்தையால் குறித்திருந்த அடையாளத்தின்படியே பலி பீடம் வெடித்து, சாம்பல் பலிபீடத்திலிருந்து கொட்டுண்டு போயிற்று.’ 1இராஜா 13:2, 3, 5. தீஇவ 101.4
இதைக் கண்டதும், தேவனுக்கு விரோதமான ஆவியால் நிரப்பப் பட்டான் யெரொபெயாம். அச்செய்தியைச் சொன்ன வனைச் சிறைப்படுத்த முயற்சித்தான். கோபத்தோடே, ‘’அவனைப் பிடியுங்கள்” என்று தன் கையைப் பலிபீடத்திலிருந்து நீட்டினான்; தன்னுடைய யோசனையற்ற அவசரச் செயலுக்காக அந்நேரத் திலேயே கண்டிக்கப்பட்டான். யேகோவாவின் தூதுவனுக்கு எதிராக நீட்டப்பட்டகரமானது, உடனடியாகப் பலனற்று, மரத்துப் போயிற்று: நீட்டின் கையை அவனால் மடக்க முடியாமல் போயிற்று. தீஇவ 102.1
திகிலடைந்தவனாய், தனக்காக தேவனிடம் வேண்டிக்கொள் ளுமாறு தீர்க்கதரிசியிடம் வேண்டிக்கொண்டான் ராஜா. ‘’நீ உன் தேவனாகிய கர்த்தருடைய சமுகத்தை நோக்கி வேண்டிக்கொண்டு, என்கை முன்போலிருக்கும்படிக்கு எனக்காக விண்ணப்பம் பண்ண வேண்டும்” என்றான். அப்பொழுது தேவனுடைய மனுஷன் கர்த்த ருடைய சமூகத்தை நோக்கி வருந்தி விண்ணப்பம் செய்தான், ராஜா வின் கை முன்னிருந்தபடி சீர்ப்பட்டது.’வச 4,6. தீஇவ 102.2
விநோதமான ஒரு பலிபீடத்தைப் பய பக்தியுடன் பிரதிஷ்டை பண்ணவும், எருசலேம் தேவாலயத்தில் நடைபெற்ற யேகோவா வின் தொழுகையை அவமதிக்கும் வகையில் அந்நிய பலிபீடத் துக்கு மரியாதை செலுத்தவும் யெரொபெயாம் மேற்கொண்ட முயற்சி வீணாய்ப் போனது. தீர்க்கதரிசியின் செய்தியால், இஸ்ர வேலின் ராஜா மனந்திரும்பியிருக்க வேண்டும்; ஜனங்களை மெய் யான தொழுகையிலிருந்து விலகச்செய்த தன்னுடைய துன்மார்க்க எண்ணங்களை அவன் விலக்கியிருக்க வேண்டும். ஆனால், அவனுடைய இருதயம் கடினப்பட்டது. சொந்த வழியைப் பின் பற்றுவதில் தீர்மானமாயிருந்தான். தீஇவ 102.3
பெத்தேலிலே நடைபெற்ற அப்பண்டிகையின்போது, இஸ்ர வேலரின் இருதயம் முற்றிலுமாகக் கடினப்பட்டிருக்கவில்லை . பரிசுத்த ஆவியானவரின் தூண்டுதல்களுக்கு அநேகர் செவிசாய்க் கிறவர்களாக இருந்தனர். காலம் பிந்திவிடாததற்கு முன்னரே, அவபக்திக்கு நேராய் வேகமாகச் சென்று கொண்டிருந்தவர்களை தீஇவ 102.4
கர்த்தராகிய தேவனுக்கு ஸ்தோத்திரமுண்டாவதாக; அவரே
அதிசயங்களைச் செய்கிறவர். அவருடைய மகிமைபொருந்திய
நாமத்துக்கு என்றென்றைக்கும் ஸ்தோத்திரமுண்டாவதாக;
பூமி முழுவதும் அவருடைய மகிமையால் நிறைந்திருப்பதாக.
ஆமென், ஆமென். தீஇவ 104.1
சங்கீதம் 72:18,19
உடனடியாக அவ்வழியிலிருந்து தடுத்து நிறுத்தவும், அத்தகைய அவபக்தியின் விளைவை ராஜாவுக்கும் மக்களுக்கும் வெளிப் படுத்தவும் அவர் தம் தூதுவனை அனுப்பினார். இஸ்ரவேலில் ஏற்படுத்தப்பட்ட அந்த அருவருப்பை தேவன் வெறுத்தாரென் பதற்கு அடையாளமாக அந்தப் பலிபீடம் வெடித்துச் சிதறியது. தீஇவ 105.1
பாவிகளை அழிப்பதற்கு அல்ல, அவர்களைக் காப்பாற்றவே ஆண்டவர் விரும்புகிறார். பாவிகளைத் தப்புவிப்பதில் அவர் மகிழ்ச்சி அடைகிறார். ‘’நான் துன்மார்க்கனுடைய மரணத்தை விரும்புகிறதில்லை’‘ என்று என் ஜீவனைக் கொண்டு சொல்லு கிறேன்’ என கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார். எசே 33:11. பாவிகள் தங்கள் பாவங்களை விட்டு விலகி, தன்னிடம் திரும்பி, ஜீவனைப் பெறுமாறு எச்சரிப்புகளினாலும் வேண்டுகோள்களினா லும் அவர்களை அழைக்கிறார். தம்மால் தெரிந்துகொள்ளப்பட்ட தம் தூதுவர்களுக்குப் பரிசுத்தமான தைரியத்தைக் கொடுத்து, அவர்களுடைய வார்த்தைகளுக்குக் செவி கொடுப்பவர்கள் பயந்து, மனந்திரும்பும்படி செய்கிறார். எத்தனைத் துணிவோடு ராஜாவை அந்தத் தேவமனிதன் கடிந்துகொண்டான்! அந்தத் துணிவு அவசியம்தான்; அங்குக் காணப்பட்ட தீமைகளைக் கண்டிக்க அதைவிட வேறு வழியில்லை. தேவன் தம்முடைய ஊழியக்காரனுக்குத் துணிச்சலைக் கொடுத்தார். அவன் பேசி னதைக் கேட்டவர்களின் நடுவே நிலையான ஒரு தாக்கம் ஏற் படுவதற்கு அது ஏதுவானது. மனிதரைக் கண்டு கர்த்தருடைய ஊழி யக்காரர்கள் அஞ்சக்கூடாது : நீதிக்காக அவர்கள் உறுதியுடன் நிற்க வேண்டும். தேவனிடத்தில் அவர்கள் நம்பிக்கையோடு இருக்கும் வரை அவர் கள் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. ஏனெ னில், அவர் களுக்கு ஊழியப்பணியைக் கட்டளையிட்டவர் தாமே தம்முடைய பாதுகாப்பின் நிச்சயத்தையும் அவர்களுக்குக் கொடுக் கிறார். தீஇவ 105.2
அந்தத் தீர்க்கதரிசி தன் செய்தியைச் சொல்லிவிட்டுத் திரும்ப நினைத்தபோது, அவனிடத்தில் யெரொபெயாம், ‘’நீ என்னோடே கூட வீட்டுக்கு வந்து இளைப்பாறு; உனக்கு வெகுமானம் தரும் வேன்” என்றான். அதற்கு, ‘’நீர் எனக்கு உம்முடைய வீட்டில் பாதி கொடுத்தாலும், நான் உம்மோடே வருவதுமில்லை, இந்த ஸ்தலத்தில் அப் பம் புசிப்பதுமில்லை, தண்ணீர் குடிப்பதுமில்லை. ஏனென்றால் நீ அப்பம் புசியாமலும், தண்ணீர் குடியாமலும், போனவழியாய்த் திரும்பாமலும் இருவென்று கர்த்தர் தம்முடைய வார்த்தையால் எனக்குக் கட்டளையிட்டிருக்கிறார்’ என்று பிரதி யுத்தரம் சொன்னான் தீர்க்கதரிசி. 1இராஜா 13:7-9. தீஇவ 105.3
தாமதமின்றி யூதாவிற்குத் திரும்பிச் செல்லும் நோக்கத்தில் தீர்க்கதரிசி உறுதியாயிருந்திருப்பானானால் நலமாயிருந்திருக்கும். அவன் தன் வீட்டிற்கு வேறுவழியாகத் திரும்பிச் செல்கையில், தீர்க்கதரிசியென்று சொல்லிக்கொண்ட ஒரு முதியவர் அவனைத் தொடர்ந்து வந்து சந்தித்தான். அவன் அந்தத் தேவ மனிதனிடம் பொய்யான காரியங்களைக் கூறி, ‘’உம்மைப்போல நானும் தீர்க்க தரிசிதான். அவன் அப்பம் புசித்துத் தண்ணீர் குடிக்க, நீ அவனைத் திருப்பி, உன் வீட்டுக்கு அழைத்துக்கொண்டு வா’ என்று ஒரு தூதன் கர்த்தருடைய வார்த்தையாக என்னோடே சொன்னான்” என்றான். தன் னோடு வருமாறு தேவ மனிதனை இணங்கப் பண்ணும் வரைக்கும் மீண்டும் மீண்டும் அந்தப் பொய்யைச் சொன்னான் அந்த முதிய வன். தீஇவ 106.1
தன் கடமை ஒழுங்குக்கு முரணான ஒரு வழியைத் தேர்ந் தெடுக்க அந்த மெய்த்தீர்க்கதரிசி தன்னை ஒப்படைத்ததால், அந்த மீறுதலுக்கான தண்டையை அவன் அடைய தேவன் அனுமதித் தார். பெத்தேலுக்குத் திரும்பிவரும்படி அவனை அழைத்த முதிய வனும் அவனும் பந்தியில் உட்காந்திருந்தபோது, சர்வல்லவரின் ஏவுதலைப் பெற்ற அந்தப் பொய்த் தீர்க்கதரிசி , யூதாவிலிருந்து வந்த தேவனுடைய மனுஷனைப் பார்த்துச் சத்தமிட்டு, ‘உன் தேவ னாகிய கர்த்தர் உனக்குக் கற்பித்த கட்டளையை நீகைக்கொள்ளாமல் கர்த்தருடைய வாக்கை மீறினதால், உன்னுடைய பிரேதம் உன் பிதாக்களின் கல்லறையிலே சேருவதில்லையென்று கர்த்தர் சொல் லுகிறார்” என்றான். வச 18-22 தீஇவ 106.2
சொல்லப்பட்ட தீர்க்கதரிசனத்தின்படியே அந்தத் தீர்க்கதரிசிக்கு அழிவு ஏற்பட்டது. ‘’அவன் போஜனபானம் பண்ணி முடிந்த பின்பு, அவனுக்குக் கழுதையின்மேல் சேணம் வைத்துக் கொடுத் தான். அவன் போன பிற்பாடு வழியிலே ஒரு சிங்கம் அவனுக்கு எதிர்ப்பட்டு, அவனைக் கொன்று போட்டது; அவன் பிரேதம் வழி யிலே கிடந்தது ; கழுதை அதினண்டையிலே நின்றது ; சிங்கமும் பிரேதத்தண்டையிலே நின்றது. அந்த வழியே கடந்து வருகிற மனு ஷர், வழியிலே கிடக்கிற பிரேதத்தையும், பிரேதத்தண்டையிலே நிற்கிற சிங்கத்தையும் கண்டு, கிழவனான தீர்க்கதரிசி குடியிருந்த பட்டணத்திலே வந்து சொன்னார்கள். அவனை வழியிலிருந்து திரும்பப் பண்ணின தீர்க்கதரிசி அதைக் கேட்டபோது, ‘’அவன் கர்த்தருடைய வாக்கை மீறின தேவனுடைய மனுஷன்தான்” என் றான். வச 23-26. தீஇவ 106.3
உண்மையற்ற ஊழியக்காரனுக்குக் கொடுக்கப்பட்ட தண்ட னை அந்தப் பலிபீடத்தைக்குறித்துச் சொல்லப்பட்ட தீர்க்கதரிச னத்தின் நிஜத்தன்மைக்கு மேலும் ஓர் ஆதாரமாக அமைந்தது. அந்தத் தீர்க்கதரிசி கர்த்தருடைய வார்த்தைக்குக் கீழ்ப்படியாத பிறகும், தண்டிக்கப்படாமல் விடப்பட்டிருந்தால், ராஜா தன்னு டைய கீழ்ப்படியாமையை நியாயப்படுத்த அதை ஒரு காரணமாகக் கூறியிருக்கக்கூடும். பலி பீடம் உடைந்தது; கை மரத்துப்போனது ; யேகோவாவின் தெளிவான கட்டளைக்குக் கீழ்ப்படியாதிருக்கத் துணிந்த மனிதன் கோரமுடிவைச் சந்தித்தான். இவற்றிலிருந்து, தேவனின் அதிருப்தியை யெரொபெயாம் கண்டுணர்ந்திருக்க வேண்டும்; தவறு செய்வதில் நிலைத்திராதபடிக்கு அந்தத் தீர்ப்பு கள் அவனை எச்சரித்திருக்க வேண்டும். ஆனால், மனந்திரும்பத் தயங்கிய யெரொபெயாம், ‘மறுபடியும் ஜனத்தில் ஈனமானவர் களை மேடைகளின் ஆசாரியராக்கினான்; எவன்மேல் அவனுக்கு மனதிருந்ததோ, அவனைப் பிரதிஷ்டை பண்ணினான். அப்படிப் பட்டவர்கள் மேடைகளின் ஆசாரியரானார்கள். அதன்மூலம் அவன் மாத்திரம் பெரும் பாவத்திற்கு உட்படாமல், இஸ்ரவேல் ஜனங்களையும் பாவத்துக்குட்படுத்தினான். ‘யெரொபெயாமின் வீட்டாரைப் பூமியின்மேல் வைக்காமல் அதம் பண்ணி அழிக்கும் படியாக இந்தக் காரியம் அவர்களுக்குப் பாவமாயிற்று. ‘வச் 33, 34; 14:16. தீஇவ 107.1
ரெகொபெயாமுக்குப் பிறகு யூதாவின் மன்னனான அபியா வோடு நடைபெற்ற யுத்தத்தில் பேரழிவையும் தோல்வியையும் சந்தித்தான் யெரொபெயாம். அவனுடைய இன்னல்மிக்க இருபத் திரண்டு வருட ஆளுகையின் முடிவில் அது நடைபெற்றது. ‘அப்புறம் அபியாவின் நாட்களில் யெரொபெயாம் பலங்கொள்ள மாட்டாதே போய், கர்த்தர் அவனை அடித்ததினால் மரணமடைந் தான்’. 2நாளாகமம் 13:20. தீஇவ 107.2
யெரொபெயாமின் ஆளுகையில் அறிமுகமான தெய்வத் துரோகமானது, இறுதியில் இஸ்ரவேல் ராஜ்யம் முழுவதுமாக அழிந்துபோக ஏதுவாகுமட்டும் அதிகதிகமாகப் பெருகியது. யெரொபெயாம் சிங்காசனத்தில் அமரவிருந்ததைப் பல வருடங் களுக்கு முன்னரே முன்னுரைத்தவன் சீலோவின் தீர்க்கதரிசியான அகியா. யெரொபெயாம் மரிக்கும் முன்பதாக அவன், ‘’தண்ணீ ரிலே நாணல் அசைகிறதுபோல, கர்த்தர் இஸ்ரவேலை முறிந்தசை யப்பண்ணி, அவர்கள் பிதாக்களுக்குத் தாம் கொடுத்த இந்த நல்ல தேசத்திலிருந்து இஸ்ரவேலை வேரோடே பிடுங்கி, அவர்கள் தங்களுக்குத் தோப்பு விக்கிரங்களை வைத்து, கர்த்தருக்குக் கோபம் உண்டாக்கினபடியினால், அவர்களை நதிக்கப்பாலே சிதற டித்து, யெரொபெயாம் செய்ததும் இஸ்ரவேலைச் செய்யப்பண்ணி னதுமான பாவத்தினிமித்தம் இஸ்ரவேலை ஒப்புக்கொடுத்து விடு வார்” என்று அறிவித்தான். 1இராஜா 14:15, 16. தீஇவ 107.3
ஆனாலும், இஸ்ரவேலர் தம் மேல் மீண்டும் பற்றுக்கொள்ளும் படி, அவர்களைத் தம்மிடம் வழிநடத்த தம்மால் கூடிய அனைத்தை யும் தேவன் செய்யாமல் இருக்கவில்லை. இஸ்ரவேலின் ஒவ் வோர் அரசனும் பரலோகத்திற்கு எதிராக, துணிந்து சிலை வழி பாட்டிற்குள்ளாக மக்களை இழுத்துச் சென்ற அந்தகாரமான நாட் களில், மாறுபாடுள்ள தம் ஜனங்களுக்குத் தொடர்ந்து தூது அனுப் பிக் கொண்டிருந்தார் தேவன். தெய்வதுரோகத்திற்கு நேரான போக்கைத் தடுத்து நிறுத்தி, தம்மிடம் திரும்புவதற்கான ஒவ்வொரு வாய்ப்பையும் தேவன் தம் தீர்க்கதரிசிகளின் மூலம் அவர்களுக்கு அருளினார். இராஜ்யம் பிரிக்கப்பட்ட பிறகான நாட்களில், எலி யாவும் எலிசாவும் அங்குப் பிரயாசப் பட வேண்டியிருந்தது. ஓசியா , ஆமோஸ், ஒபதியா போன்றோரின் கனிவான வேண்டு கோள் தேசத்திலே கேட்கப்பட இருந்தது. பாவத்திலிருந்து இரட் சிக்கும் தேவனுடைய மகத்துவவல்லமை குறித்த உண்மையான சாட் சிகள் இல்லாமல் இஸ்ரவேல்ராஜ்யம் ஒருபோதும் இருந்ததில்லை. அந்தகாரமான நேரங்களிலும், தங்கள் தெய்வீக ராஜாவுக்கு உண் மையோடிருந்த சிலர் இருக்கவே செய்தனர். சிலை வழிபாட் டிற்கு மத்தியிலும் பரிசுத்த தேவனுடைய பார்வையில் அவர்கள் குற்றமற்றவர்களாக வாழ்ந்தார்கள். உண்மையுள்ள அவர்கள் மீதமானவர்களான பரிசுத்தவான்களோடு எண்ணப்பட்டனர்; இறுதியில் அவர்கள் மூலமாகவே யேகோவாவின் நித்திய நோக்கம் நிறைவேறவிருந்தது. தீஇவ 108.1