ஆகாபிற்கு முன்பாக நின்றான் எலியா. பாகால் - அஸ்தரோத் தின் தீர்க்கதரிசிகளையும் தன்னையும் கர்மேல் மலைமேல் சந்திக்க இஸ்ரவேல் அனைவரும் கூடிவரவேண்டுமென எலியா கேட்டுக் கொண்டான். ‘’இஸ்ரவேலனைத்தையும், பாகாலின் தீர்க்கதரிசி கள் நானூற்றைம்பது பேரையும், யேசபேலின் பந்தியில் சாப்பிடு கிற தோப்பு விக்கிரகத்தின் தீர்க்கதரிசிகள் நானூறு பேரையும் என் னிடம் கர்மேல் பர்வதத்திற்குக் கூட்டிக்கொண்டுவர ஆட்களை அனுப்பும்” என்று கட்டளையிட்டான். தீஇவ 143.1
யேகோவாவின் பிரசன்னத்தில் நிற்கிறவரிடமிருந்து பிறந்த கட்டளையாக அது இருந்தது; அரசன்போல தீர்க்கதரிசி கட்டளை யிட, குடிமகன் போல உடனே கீழ்ப்படிந்தான் ஆகாப். ராஜ்ய மெங்கும் தூதுவர்கள் விரைந்து சென்று, பாகால் - அஸ்தரோத்தின் தீர்க்கதரிசிகளையும் எலியாவையும் சந்திக்க வரும்படி அறிவித் தனர். குறிக்கப்பட்ட நாளில் கூடிவரும் படி ஒவ்வொரு நகரத்தி லும் கிராமத்திலும் இருந்த ஜனங்கள் ஆயத்தமானார்கள். கர்மேல் நோக்கிப் பயணிக்கையில், ஏதோ நிகழப்போவதாக உணர்ந்து, அநேகரின் இருதயங்கள் கலக்கத்தால் நிறைந்திருந்தன். ‘ஏதோ விநோதமான ஒன்று நிகழப்போகிறது; இல்லையெனில், கர்மேல் மலையில் கூடுமாறு ஏன் சொல்லவேண்டும்? நமக்கும் தேசத்திற் கும் புதிதாக இன்னும் என்ன தீங்கு நிகழப்போகிறதோ?’ என்று தங்கள் மனதில் ஜனங்கள் யோசித்தார்கள். தீஇவ 143.2
பஞ்சத்திற்கு முன்பு கர்மேல் மலையானது சொர்க்கப்பூமியாக இருந்தது. அதன் வற்றாத நீரூற்றுகளிலிருந்து ஓடைகள் புறப் பட்டன. வளமிக்க அதன் சரிவுகளில் அழகான மலர்களும் செழு மையான மரங்களும் நிறைந்திருந்தன. ஆனால், இப்பொழுதோ வறட்சியின் சாபத்தால் அதன் அழகு வாடிநின்றது. பாகால் - அஸ்த தோரத்தின் தொழுகைக்காகக் கட்டப்பட்டிருந்த பலிபீடங்கள் இப் போது இலைகளற்ற மரங்கள் மத்தியில் நின்றன. இதற்கு முற்றிலும் மாறுபட்ட காட்சியாக, மிகவும் உயரமான மலைமுகடு ஒன்றின் மேல் உடைந்த நிலையில் யேகோவாவின் பலிபீடம் கிடந்தது. தீஇவ 144.1
கர்மேல் மேலிருந்து பார்த்தால், தேசத்தின் பரந்துவிரிந்த காட்சி தெரியும்; தேசத்தின் பல பகுதிகளிலுமிருந்து அதன் உச்சி யைக் காணலாம். மலைமேலே நிகழ்வதைத் தெளிவாக காணக் கூடியவாறு சில இடங்கள் மலையடிவாரத்தில் இருந்தன. மலைச் சரிவுகளிலிருந்த மரங்களின் கீழே சிலைகளைத் தொழுது, தேவனைப் பலர் வெகுவாக அவமதித்தார்கள். எனவேதான், தேவனுடைய வல்லமையை வெளிப்படுத்தவும் அவருடைய நாமத்தின் மகிமை யை நிலைநாட்டவும் மிகச் சிறந்த இடமாக, மலையின் உச்சியை எலியா தேர்ந்தெடுத்திருந்தான். தீஇவ 144.2
தேவனை மறந்திருந்த இஸ்ரவேலர் இப்போது குறிக்கப்பட்ட நாள் அதிகாலையில் பெரும் ஆர்வத்தோடு மலை உச்சியருகே கூட்டம் கூட்டமாகக் கூடினார்கள். யேசபேலின் தீர்க்கதரிசிகள் கவர்ச்சிகர ஆடையணிந்து அணிவகுத்து வந்தார்கள். அரசனுக் குரிய ஆடம்பரத்தோடு வந்த ராஜா, அந்தப் பூசாரிகளுக்கு முன் வந்து நின்றான். சிலைவழிபாட்டுக்காரர்கள் ராஜாவை வரவேற்று, கோஷம் எழுப்பினார்கள். ஆனால், ‘தீர்க்கதரிசியின் வார்த்தை யின்படி இஸ்ரவேல் தேசம் மூன்றரை வருடம் மழையையும் பனி யையும் காணவில்லை என்பதை நினைத்து, அப்பூசாரிகள் தங்கள் இருதயங்களில் பயங்கொண்டிருந்தார்கள். மிக மோசமான ஏதோ ஒன்று நிச்சயமாகச் சம்பவிக்கப்போவதை உணர்ந்தார்கள். அவர் கள் நம்பின் தெய்வங்களால், எலியாவைப் பொய்த் தீர்க்கதரிசி யாகக் காட்டமுடியவில்லை. அவர்களின் வெறிகொண்ட ஆர்ப் பரிப்பையும் வேண்டுதல்களையும் கண்ணீரையும் அவமானத்தையும் அருவருப்பான தொழுகையையும் இடைவிடாத பலிகளையும் பார்த்தும் அவர்களுடைய தெய்வங்கள் எதுவும் செய்யவில்லை. தீஇவ 144.3
தேவரீர் பூமியை விசாரித்து அதற்கு நீர்ப்பாய்ச்சுகிறீர்;
தண்ணீர் நிறைந்த தேவந்தியினால் அதை மிகவும் செழிப்பாக்குகிறீர்;
இப்படி நீர் அதைத் திருத்தி,
அவர்களுக்குத் தானியத்தை விளைவிக்கிறீர். தீஇவ 146.1
சங்கீதம் 65:8.
கூடியிருந்த இஸ்ரவேல் கூட்டத்தார் புடைசூழ, ராஜாவாகிய ஆகாபுக்கும் பொய்த்தீர்க்கதரிசிகளுக்கும் எதிராக நின்றான் எலியா. யேகோவாவின் மகிமையை நிலைநாட்டுவதற்கென அவன் ஒருவன் மாத்திரமே இருந்ததுபோல் தோன்றியது. இஸ்ர வேலின் ராஜாவும் பாகால் தீர்க்கதரிசிகளும் படைவீரர்களும் ஆயிரக்கணக்கான மக்களும் அங்கிருக்க, ‘சாபத்திற்கான கார ணன்’ என்று அனைவராலும் குற்றஞ்சாட்டப்பட்டவன், பாதுகாப் பின்றி நிற்பதுபோல் தோன்றியது. ஆனால், எலியா தனியாளாய் நிற்கவில்லை; பரலோகச் சேனையிலிருந்த பெலம் வாய்ந்த தூதர் கள் அவனுக்கு மேலேயும், அவனைச் சுற்றிலும் இருந்து, அவ னைக் காத்துக்கொண்டிருந்தனர். தீஇவ 147.1
தன் கடமையை உணர்ந்தவனாய், தேவ கட்டளைப்படிச் செய்ய பயமும் வெட்கமுமின்றி அக்கூட்டத்தாருக்கு முன்பாக நின்றான் தீர்க்கதரிசி. தெய்வீக ஒளி அவன் முகத்தில் பிரகாசித்தது. அவன் பேசுவதைக் கேட்க, மிகுந்த ஆவலோடு மக்கள் காத்திருந்தனர். உடைத்துப் போடப்பட்டிருந்த யேகோவாவின் பலிபீடத்தைப் பார்த்தான்; பிறகு அக்கூட்டத்தாரை நோக்கி, எக்காளம் போன்ற சத்தத்தோடு, ‘’நீங்கள் எந்த மட்டும் இரண்டு நினைவுகளால் குந்திக் குந்தி நடப்பீர்கள்; கர்த்தர் தெய்வமானால் அவரைப் பின்பற்றுங்கள்; பாகால் தெய்வ மானால் அவனைப் பின்பற்றுங்கள்” என்றான். தீஇவ 147.2
அவனுக்குப் பிரதியுத்தரமாக ஜனங்கள் ஒன்றும் பேச வில்லை. அப்பெருங்கூட்டத்தாரில் ஒருவர்கூட யேகோவாவின் மேல் தாங்கள் பற்றுவைத்திருப்பதாகச் சொல்லவில்லை. வஞ்சக மும் குருட்டுத்தன்மையும் இருண்ட மேகம்போல இஸ்ரவேல் மீதெங் கும் பரவியிருந்தது. எடுத்த எடுப்பிலேயே அத்தகைய கொடிய அவபக்தி அவர்களை ஆட்கொண்டுவிடவில்லை. அவ்வப்போது ஆண்டவர் அவர்களுக்கு அனுப்பிய எச்சரிப்பின் வார்த்தைகளுக் கும், கடிந்து கொள்ளுதலின் வார்த்தைகளுக்கும் செவிகொடுக்கத் தவறினதால், படிப்படியாகவே அவர்கள் விழுந்தார்கள். நீதியைச் செய்வதிலிருந்து ஒவ்வொரு முறை மாறி, மனந்திரும்ப மறுத்த போதெல்லாம் அவர்கள் பாவம் பெலப்பட்டது; பரலோகத்தை விட்டு அவர்களைத்தூரேவிலக்கியது. இப்பொழுதும் அந்நெருக்கடி யான நிலையிலும் தேவனுக்காக உறுதியுடன் நிற்கமாட்டோமென்று, தொடர்ந்து தேவனை மறுதலித்து வந்தார்கள். தீஇவ 147.3
ஆண்டவர் வேலையில் நெருக்கடி ஏற்படும்போது, அலட் சியத்தோடு பிடிப்பில்லாமல் இருப்பதை அவர் அருவருக்கிறார். நன்மைக்கும் தீமைக்கும் இடையேயான மாபெரும் போராட்டத்தின் இறுதிக் கட்ட நிகழ்வுகளை விவரிக்கமுடியாத ஆவலோடு சர்வ லோகமும் பார்த்துக் கொண்டிருக்கிறது. நித்திய உலகின் எல்லை யைத் தேவமக்கள் நெருங்கிவிட்டனர். ஆகவே, அவர்கள் பரலோக தேவனுக்கு உண்மையாய் இருப்பதைக் காட்டிலும் முக்கியமானது வேறு என்ன இருக்கமுடியும்? யுகம் நெடுகிலும் தேவனுடைய பக்கம் ஒழுக்க வீரர்கள் இருந்தார்கள்; இன்றும் இருக்கிறார்கள். யோசேப்பு, எலியா, தானியேல் போன்றோர் தங்களை அவருடைய விசேஷித்த ஜனங்களாக ஒத்துக்கொள்ள வெட்கப்படவில்லை . அவருக்காகச் செயல்படும் மனிதரின் பிரயாச ங்களோடு அவருடைய விசேஷித்த ஆசீர்வாதமும் செல்கிறது. அப்படிப்பட்டவர்கள் தங்கள் கடமையின் நேர் பாதையிலிருந்து விலகாமல் தேவ வல்லமையுடன், ‘’கர்த்தருடைய பட்சத்தில் இருக்கிறவர்கள் யார்?’ என்று விசாரிப்பார்கள். யாத் 32:26. அத் தோடு நிற்காமல், ‘தேவ மக்களின் பக்கம் நிற்கத் தெரிந்து கொண்ட யாவரும் முன்வந்து, ராஜாதிராஜாவும் கர்த்தாதி கர்த்தா வுமானவருக்குத் தங்கள் பற்றை முற்றிலுமாக வெளிப்படுத்தக் கடவர்கள்” என்று கேட்டுக்கொள்வார்கள். தங்கள் சித்தத்தையும் திட்டங்களையும் தேவபிரமாணத்திற்குக் கீழ்ப்படுத்துகிறவர்கள் அவர்களே. அவர் மேலுள்ள அன்பினால் தங்கள் ஜீவனையும் அவர்கள் பிரியமாக எண்ணுவதில்லை. வார்த்தையின் ஒளியைப் பெற்றுக்கொண்டு, அதைத் தெளிவாகவும் தொடர்ச்சியாகவும் உலகிற்குப் பிரகாசிக்கச் செய்வதே அவர்கள் பணியாயிருக்கிறது. தேவனிடம் மெய்ப்பற்று வைப்பதே அவர்கள் குறிக்கோளா யிருக்கிறது. தீஇவ 148.1
கர்மேல் மேலிருந்த இஸ்ரவேலர் சந்தேகமும் தயக்கமும் கொண்டிருந்த வேளையிலே, எலியா மீண்டும் பேசி, அந்த அமைதி யைக் குலைத்தான். ‘’கர்த்தரின் தீர்க்கதரிசிகளில் மீந்திருக்கிறவன் நான் ஒருவன்; பாகாலின் தீர்க்கதரிசிகளோ நானூற்றைம்பது பேர். இப்போதும் இரண்டு காளைகளை எங்களிடத்தில் கொண்டு வரட் டும்; ஒரு காளையை அவர்கள் தெரிந்துகொண்டு, அதைச் சந்து சந்தாகத் துண்டித்து, நெருப்புப் போடாமல், விறகுகளின்மேல் வைக்கக்கடவர்கள்: நான் மற்றக் காளையை அப்படியே செய்து, நெருப்புப் போடாமல் விறகுகளின்மேல் வைப்பேன். நீங்கள் உங் கள் தேவனாகிய நாமத்தைச் சொல்லிக் கூப்பிடுங்கள்; நான் கர்த்தருடைய நாமத்தைச் சொல்லி கூப்பிடுவேன்; அப்பொழுது அக்கினியினால் உத்தரவு அருளும் தெய்வமே தெய்வம்” என் றான். தீஇவ 148.2
எலியாவின் கோரிக்கையில் நியாயம் இருந்ததால், ஜனங்கள் அதற்கு மறுப்பு தெரிவிக்க முடியவில்லை. எனவேதான், துணிவை வரவழைத்துக்கொண்டு, ‘’இது நல்ல வார்த்தை’‘ என்றார்கள். அதற்கு மறுப்பு தெரிவித்துப்பேச பாகால் தீர்க்கதரிசிகளும் துணிய வில்லை . அவர்களிடம் எலியா, ‘’நீங்கள் அநேகரானதால் நீங் களே முந்தி ஒரு காளையைத் தெரிந்துகொண்டு, அதை ஆயத்தம் பண்ணி, நெருப்புப் போடாமல் உங்கள் தேவனுடைய நாமத்தைச் சொல்லிக் கூப்பிடுங்கள்’‘ என்று கட்டளையிட்டான். தீஇவ 149.1
வெளித்தோற்றத்தில் துணிவும் திமிரும் உடையவர்கள்போல் காணப்பட்டாலும், அக் கள்ளத்தீர்க்கதரிசிகளின் அக்கிரம் இருதயங்களில் பீதி ஏற்பட்டிருந்தது. பலிபீடத்தை ஆயத்தம் பண்ணி, விறகையும் பலியையும் அதின்மேல் வைத்தார்கள்; மந்திரங்களை ஓதினார்கள். காடு மலையெங்கும் அவர்கள் கீச்சொலி எதிரொலித்தது. பலி பீடத்தைச் சுற்றிலும் நின்ற பூசாரிகள், ‘பாகாலே, எங்களுக்கு உத்தரவு அருளும்’‘ என்று குதித்தும், நெளிந்தும், சத்தமிட்டும், முடியைப் பிடுங்கியும், உடலைக் காயப் படுத்தியும் தங்களுக்கு உதவுமாறு தங்கள் கடவுளிடம் வேண்டிக் கொண்டார்கள். தீஇவ 149.2
காலைபோய், மதியம் வந்தது. ஆனாலும், மோசம் போனதன் பக்தர்களின் கூக்குரலைப் பாகால் கேட்டதற்கான எந்த அறி குறி யும் இல்லை. மூர்க்கமான அவர்களுடைய கூக்குரலுக்குப் பிரதியுத் தரமாக, பதிலேதும் கிடைக்க வில்லை . பட்சிக்கப்படாமல் அந்தப் பலி அப்படியே இருந்தது. தீஇவ 149.3
வெறித்தனமான அவர்களின் தொழுகை தொடர்ந்துகொண் டிருந்தது. ஏதாவது ஒரு வழியில் பலிபீடத்தின்மேல் தீக்கொளுத்தி விட்டு, அந்த அக்கினி பாகாலிடமிருந்து நேரடியாக வந்ததாக மக் களை நம்பச்செய்ய, சூதுநிறைந்த அந்தப் பூசாரிகள் தொடர்ந்து முயற்சித்துக்கொண்டே இருந்தார்கள். ஆனால், ஒவ்வொரு அசை வையும் எலியா பார்த்துக்கொண்டிருந்தான்; அந்தப் பூசாரிகளோ, ஏமாற்றுவதற்கு ஏதாவது தருணம் கிடைக்குமா?’ என்று மிகவும் எதிர்பார்த்து, தங்கள் அர்த்தமற்ற சடங்குகளைத் தொடர்ந்து கொண் டிருந்தார்கள் தீஇவ 149.4
’மத்தியான வேளையிலே எலியா அவர்களைப் பரியாசம் பண்ணி, ‘’உரத்த சத்தமாய்க் கூப்பிடுங்கள்; அவன் தேவனாமே, அவன் தியானத்தில் இருப்பான்; அல்லது அலுவலாயிருப்பான்; அல்லது பிரயாணம் போயிருப்பான்; அல்லது தூங்கினாலும் தூங் குவான்; அவனை எழுப்ப வேண்டியதாக்கும்’‘ என்றான். அவர் கள் உரத்தசத்தமாய்க் கூப்பிட்டு, தங்கள் வழக்கத்தின்படியே இரத் தம் தங்கள்மேல் வடியுமட்டும் கத்திகளாலும் ஈட்டிகளாலும் தங் களைக் கீறிக்கொண்டார்கள். மத்தியான வேளை சென்ற பின்பு, அந்திப்பலி செலுத்தும் நேரமட்டாகச் சன்னதம் சொல்லிக்கொண் டிருந்தார்கள்; ஆனாலும் ஒரு சத்தமும் பிறக்கவில்லை , மறு உத் தரவு கொடுப்பாரும் இல்லை, கவனிப்பாரும் இல்லை.’ தீஇவ 150.1
தன்னால் வஞ்சிக்கப்பட்டு, தன் சேவைக்குத் தங்களை அர்ப் பணித்த அவர்களுக்கு உதவ சாத்தான் சந்தோஷமாக வந்திருப் பான். மின்னலை அனுப்பி, பலியைப் பட்சிக்கவிரும்பியிருப்பான். ஆனால், சாத்தானுக்கு எல்லைக்கோடு குறித்திருந்தார் யேகோவா; அவன் வல்லமையைத் தடுத்திருந்தார். சத்துருவின் சகல தந்திரங் களாலும் பாகாலின் பலிபீடத்தில் ஒரு தீப்பொறிகூட ஏற்ற முடிய வில்லை . தீஇவ 150.2
கத்திகத்தி, அவர்களுடைய குரல்கள் கரகரத்துப் போயின. தங்களைக் கீறிக்கொண்டதால் வடிந்த ரத்தம் அவர்கள் வஸ்திரங் களை நனைத்திருந்தன. தாங்கள் ஏமாந்தபோதும் கொஞ்சங்கூட அசராமல் கத்தினார்கள், இப்பொழுது தங்கள் வேண்டுதலோடு சேர்த்து, தங்கள் சூரிய தேவனைப் பயங்கரமாகச் சபிக்கவும் செய் தார்கள். விடாது அவர்களைப் பார்த்துக்கொண்டிருந்தான் எலியா. ஏனெனில், ஏதாவது விதத்தில் பூசாரிகள் தீயைக் கொளுத்திவிட் டால், தன்னைக் கூறுபோட்டுவிடுவார்கள் என்பதை அறிந்திருந் தான். தீஇவ 150.3
மாலை நேரம் வந்தது. பாகால் தீர்க்கதரிசிகள் சோர்வும் களைப் பும் குழப்பமும் அடைந்தனர்; ஆளுக்கொரு கருத்தைச் சொல்லிக் கொண்டார்கள். இறுதியில், தங்கள் முயற்சியைக் கைவிட்டார்கள். கர்மேல் மலையில் எதிரொலித்த அவர்கள் கூக்குரல்களும் சாபங் களும் அதன்பிறகு கேட்கப்படவில்லை. ஏமாற்றத்தோடு அப் போட்டியிலிருந்து விலகினார்கள். தீஇவ 150.4
தோற்றுப்போன பூசாரிகளின் ஆட்டம் அனைத்தையும் அன்று முழுவதும் மக்கள் கண்டார்கள். தங்கள் நோக்கத்தை நிறைவேற்ற, சூரியனின் சுடர்களைப் பிடிக்கப்போகிறவர்கள் போல, பலி பீடத்தைச் சுற்றிக் காட்டுத்தனமாகத் துள்ளினதையும் கண்டார்கள். அவர்கள் தங்களைத் தாங்களே வெட்டிக்கொண்ட காட்சியையும் பயத்தோடு பார்த்தனர்; சிலைவழிபாட்டின் மூடத்தனத்தைக் காண ஒரு வாய்ப்பு அவர்களுக்குக் கிடைத்தது. அங்கிருந்த அநேகர் பேய்மார்க்கத்தின் ஆட்டத்தைக் கண்டு வெறுத்துப்போயினர்; இப்பொழுது எலியாவின் நடவடிக்கையைக் காண ஆவலோடு இருந்தார்கள். தீஇவ 150.5
அது அந்திப்பலி செலுத்தும் நேரம். ‘’என் கிட்ட வாருங்கள்’‘ என்று மக்களை அழைத்தான் எலியா. நடுக்கத்தோடு அவர்கள் நெருங்கி வந்தார்கள். தகர்க்கப்பட்டுக் கிடந்த பலிபீடத்தண்டை சென்று, அதைச் செப்பனிட்டான். பரலோக தேவனைத் தொழும் இடமாக ஒரு சமயத்தில் அது விளங்கியது. அஞ்ஞான மார்க்கத்தா ரின் பகட்டான பலிபீடங்களைக் காட்டிலும், தகர்ந்துகிடந்த அந்தக் குவியலே எலியாவுக்கு விலையேறப் பெற்றதாயிருந்தது. தீஇவ 151.1
யோர்தானைக் கடந்து வாக்குத்தத்த தேசத்திற்குள் சென்ற போது இஸ்ரவேலருடன் கர்த்தர் செய்த உடன்படிக்கையை எலியா உயர்வாக மதித்தானென்பது அப்பலிபீடத்தை அவன் திரும்பக் கட்டினதில் வெளிப்பட்டது. ‘யாக்கோபுடைய குமாரரின் கோத் திரங்களுடைய இலக்கத்தின்படியே, பன்னிரண்டு கற்களை எடுத்து, அந்தக் கற்களாலே கர்த்தருடைய நாமத்திற்கென்று ஒரு பலிபீடத்தைக் கட்டினான்.’ தீஇவ 151.2
ஏமாற்றமடைந்த பாகால் தீர்க்கதரிசிகள், தங்கள் வீண் முயற்சி களால் களைத்திருந்தனர்; எலியா செய்ய இருந்ததை எதிர்பார்த் திருந்தனர். தங்கள் தேவர்களின் பலவீனத்தையும் திறனின்மை யையும் வெளிப்படுத்தும் வகையில் ஒரு பரீட்சை வைத்ததால், அந்தத் தீர்க்கதரிசியை அவர்கள் வெறுத்தார்கள்; ஆனாலும், அவன் சக்தியைக் கண்டு பயந்தார்கள். எலியா ஆயத்தங்களைச் செய்துகொண்டிருக்க, மக்களும் பயந்துபோய், ஆடாமல் அசை யாமல் எதிர்பார்ப்போடு பார்த்துக்கொண்டிருந்தனர். அறிவற்றும் வெறிகொண்டும் மூர்க்கமாகச் செயல்பட்ட பாகாலின் தீர்க்கதரிசி களுக்கு நேர்மாறாக, அங்கு அமைதியாகச் செயல்பட்டுக் கொண் டிருந்தான் எலியா. தீஇவ 151.3
பலிபீடம் செப்பனிட்டு முடிந்தது. அதனைச் சுற்றிலும் வாய்க் கால் வெட்டி, கட்டைகளை அடுக்கி, காளையை ஆயத்தப்படுத்தி னான் தீர்க்கதரிசி. பிறகு, அந்தப் பலியைப் பலிபீடத்தின்மேல் வைத்து, அதின்மேலும் பலிபீடத்தின் மேலும் தண்ணீரை ஊற்றுமாறு மக்களுக்குக் கட்டளையிட்டான். ‘’நீங்கள் நாலுகுடம் தண்ணீர் கொண்டுவந்து, சர்வாங்க தகனபலியின் மேலும், விறகுகளின் மேலும் ஊற்றுங்கள்” என்றான். பின்பு இரண்டாந்தரமும், ‘’அப் படியே ஊற்றுங்கள்” என்றான்; இரண்டாந்தரமும் ஊற்றினார்கள்; அதற்குப் பின்பு, மூன்றாம்தரமும், ‘’அப்படியே ஊற்றுங்கள்” என் றான்; மூன்றாம் தரமும் ஊற்றினார்கள். பலிபீடத்தைச் சுற்றிலும் தண்ணீர் ஓடினது; வாய்க்காலையும் தண்ணீரால் நிரப்பினான்’. தீஇவ 151.4
தேவனை வெகுநாட்களாய் மக்கள் மறந்துவிட்டார்கள். அத னால் யேகோவாவின் கோபம் எழும்பினது. அதை அவர்களுக்கு நினைவுபடுத்தி, தேசத்தின் சாபம் நீங்க, தங்கள் இருதயங்களைத் தாழ்த்தி, தங்கள் பிதாக்களின் தேவனிடம் திரும்புமாறு அவர்களைக் கேட்டுக்கொண்டான் எலியா. பிறகு, அதரிசனமான தேவனுக்கு முன் பக்தியோடு குனிந்து, வானத்தை நோக்கி தன் கைகளை உயர்த்தி, ஜெபத்தை ஏறெடுத்தான். காலை முதல் மாலை வரை பாகால் தீர்க்கதரிசிகள் கத்தினார்கள்; குதித்தார்கள். எலியா ஜெபித்தபோதோ, கர்மேலின்மேல் அர்த்தமற்ற கூக்குரல் எதுவும் எதிரொலிக்கவில்லை. அங்கு நிகழ்வதைப்பார்த்துக்கொண்டும் தன் வேண்டுதலைக் கேட்டுக் கொண்டும் யேகோவா அங்கு நிற் பதுபோல அவன் ஜெபித்தான். பாகால் தீர்க்கதரிசிகள் அர்த்தமின்றி காட்டுத்தனமாக வேண்டினார்கள். ஆனால், இஸ்ரவேலர் தேவ னிடத்தில் திரும்ப வழி நடத்தப் பட, பாகாலைவிட தேவன் மகத்துவமானவர் என்பதை அவர் வெளிப் படுத்தவேண்டுமென்று எலியா ஊக்கத்தோடு ஜெபித்தான். தீஇவ 152.1
’’ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் யாக்கோபுக்கும் தேவனாகிய கர்த்தாவே, ‘இஸ்ரவேலிலே நீர் தேவன்’ என்றும், ‘நான் உம்மு டைய ஊழியக்காரன்’ என்றும், ‘நான் இந்தக் காரியங்களை யெல்லாம் உம்முடைய வார்த்தையின்படி செய்தேன்’ என்றும் இன் றைக்கு விளங்கப் பண்ணும். கர்த்தாவே, நீர் தேவனாகிய கர்த்தர்’ என்றும், ‘தேவரீர் தங்கள் இருதயத்தை மறுபடியும் திருப்பினீர்’ என்றும் இந்த ஜனங்கள் அறியும்படிக்கு என்னைக் கேட்டருளும், என்னைக் கேட்டருளும்” என்று வேண்டிக்கொண்டான் தீர்க்கதரிசி. தீஇவ 152.2
மிகுந்த பய பக்தியைக் கொடுக்கும் ஒருவித அமைதி அனை வர் மேலும் தங்கியது. பாகாலின் தீர்க்கதரிசிகள் பீதியால் நடுங்கி னார்கள். அவர்கள் தங்கள் குற்றத்தை உணர்ந்தவர்களாய், தங் களுக்கு உடனடியாகக் கிடைக்கப்போகும் தண்டனையை எதிர் நோக்க ஆரம்பித்தனர். தீஇவ 152.3
எலியா ஜெபித்து முடித்ததுமே, பிரகாசமிக்க மின்னல் போல அக்கினி ஜுவாலைகள் வானத்திலிருந்து இறங்கி, மீண்டும் கட்டப்பட்ட அந்தப் பலிபீடத்தின் மேல் அமர்ந்து, பலியையும் பலி பீடத்தின் கற்களையும் பட்சித்து, வாய்க்காலிலிருந்த தண்ணீரையும் நக்கிப் போட்டது. அந்தத் தீச்சுவாலையின் ஒளியால் மலை பிர காசித்தது; அங்கு நின்றிருந்த ஏராளமானவர்களின் கண்களையும் அது கூசச் செய்தது. மேலே நடப்பதை அறியாமல் கீழே பள்ளத் தாக்கிலிருந்த அநேகர் ஆவலோடு பார்த்துக் கொண்டிருந்தனர். அக்கினி இறங்கி வந்ததை அவர்களால் தெளிவாகக் காணமுடிந்தது. அதைக் கண்டு அனைவரும் ஆச்சரியமடைந்தனர். சிவந்த சமுத் திரத்தில் இஸ்ரவேல் புத்திரருக்கும் எகிப்திய சேனைக்கும் நடுவே நின்ற அக்கினி ஸ்தம்பம் போல அது காட்சியளித்தது. தீஇவ 153.1
மலைமேலிருந்த மக்கள் பயபக்தியுடன் அதரிசனமான அந்தத் தேவனுக்கு முன்பாக முகங்குப்புற விழுந்தார்கள். பரலோகத்தி லிருந்து அனுப்பப்பட்ட அக்கினியைப் பார்த்துக் கொண்டிருக்க அவர்கள் துணியவில்லை. தங்களையும் அது பட்சித்துப்போடுமோ வென்று பயந்தார்கள். மேலும், எலியாவின் தேவனே தங்கள் பிதாக்களின் தேவன் என்பதையும், அவரையே தாங்கள் தொழுது கொள்ளவேண்டும் என்பதையும் ஒப்புக்கொள்வது தங்கள் கடமை என்று உணர்ந்து, அவர்கள் எல்லாரும் ஒரே சத்தமாய், ‘’கர்த்தரே தெய்வம், கர்த்தரே தெய்வம்” என்றார்கள். ஆச்சரியமான தெளி வோடு எழுந்த அந்தச் சத்தமானது மலையில் பட்டு, கீழுள்ள சம் வெளியில் எதிரொலித்தது. ஒருவழியாக இஸ்ரவேலர் மனந் திரும்பி, வஞ்சகத்திலிருந்து தப்பி, விழித்துக்கொண்டார்கள். தாங்கள் எவ்வளவு தூரம் தேவனை அவமதித்துள்ளோம் என்பதை யும் அவர்கள் கண்டுகொண்டார்கள். பாகால் தொழுகையின் தன் மைக்கும், மெய்யான தேவனைத் தொழ வேண்டியதின் நியாயமான கோரிக்கைக்கும் இடையே இருந்த வித்தியாசம் அங்கு முற்றிலுமாக வெளிப்பட்டது. தேவனுடைய நாமத்தை அறிக்கைபண்ண , தேவன் தங்களை இழுத்து வந்திருப்பதையும், அதுவரை மழை யையும் பனியையும் தடை செய்ததில் தேவன் வெளிப்படுத்திய அவர் நீதியையும் இரக்கத்தையும் மக்கள் கண்டார்கள். அங்கிருந்த சிலை ஒவ்வொன்றையும்விட எலியாவின் தேவன் உயர்ந்தவர் என்பதை ஒத்துக்கொள்ள, இப்பொழுது அவர்கள் ஆயத்தமாக இருந் தார்கள். தீஇவ 153.2
யேகோவாவுடைய வல்லமையின் அற்புத வெளிப்பாட்டைப் பாகாலின் தீர்க்கதரிசிகள் பயத்தோடு பார்த்துக்கொண்டிருந்தனர். தங்கள் தோல்விக்கும் தெய்வீக மகிமையின் பிரசன்னத்திற்கும் மத்தியிலும் தங்கள் தீயவழியை விட்டு மனந்திரும்ப அவர்கள் மறுத்தார்கள். தொடர்ந்து பாகாலின் தீர்க்கதரிசிகளாக நீடிக்கவே விரும்பினார்கள். இப்படியாக, தாங்கள் அழிவுக்கு ஏதுவாயிருப் பதைக்காட்டினார்கள். ஆனால், இஸ்ரவேலர் மனந்திரும்பினார் கள். பாகாலைத் தொழுமாறு தங்களுக்குப் போதித்தவர்கள் ஏற் படுத்தின் மருட்சிகளிலிருந்து இப்பொழுது அவர்கள் காக்கப்பட வேண்டும். எனவே, அந்தக் கள்ளத்தீர்க்கதரிசிகளை அழிக்குமாறு எலியாவுக்கு கர்த்தர் கட்டளையிட்டார். அக்கிரமத்திலிருந்த தலைவர்களுக்கு எதிராக மக்களின் கோபம் ஏற்கனவே பற்றிய ருந்தது. எனவே, நீங்கள் பாகாலின் தீர்க்கதரிசிகளில் ஒருவனும் தப்பிப்போகாதபடிக்கு அவர்களைப் பிடியுங்கள்’‘ என்று எலியா கட்டளையிட்டதும், அவர்கள் உடனடியாகக் கீழ்ப்படிந்தார்கள். அந்தப் பூசாரிகளைப் பிடித்து, கீசோன் ஆற்றங்கரைக்குக் கொண்டு போனார்கள். உறுதியான ஒரு சீர்திருத்தம் உருவாகியிருந்த அந்த நாள் முடிவதற்கு முன்பாக பாகாலின் ஊழியர்கள் கொல்லப் பட் டார்கள். ஒருவர்கூட உயிரோடு விடப்படவில்லை . தீஇவ 153.3