Go to full page →

12 - யெஸ்ரயேலிலிருந்து ஓரேபுக்கு தீஇவ 155

பாகாலின் தீர்க்கதரிசிகளைக் கொன்றுவிட்டதால், வட தேசத் தின் பத்துக் கோத்திரத்தார் மத்தியில் வல்லமையான ஆவிக்குரிய சீர்திருத்தம் ஒன்று ஏற்பட வழிபிறந்தது. ஜனங்கள் முன் அவர்கள் ளுடைய அவபக்தியை நிரூபித்தான் எலியா. தங்கள் இருதயங் களைத் தாழ்த்துமாறும், கர்த்தரிடத்தில் திரும்புமாறும் அவர்களை எலியா அழைத்தான். பரலோக நியாயத்தீர்ப்புகள் நிறைவேற்றப் பட்டன; தங்கள் பாவங்களை அறிக்கை செய்து, தங்களுடைய பிதாக்களின் தேவனே ஜீவனுள்ளவர் என்பதை ஜனங்கள் ஒத்துக் கொண்டனர். எனவே, பரலோகத்தின் சாபம் அவர்களைவிட்டு விலக்கப் பட்டு, லெளகீக ஆசீர்வாதங்கள் புதிதாக அவர்களுக்கு மீண்டும் வர இருந்தன. தேசம் மழையால் செழிக்க இருந்தது. நீர் போம், போஜனபானம்பண்ணும்; பெருமழையின் இரைச்சல் கேட் கிறது’‘ என்று ஆகாபிடம் சொன்னான் எலியா. அதன்பிறகு, ஜெபம் பண்ணுவதற்காக மலைச்சிகரத்தில் ஏறினான். தீஇவ 155.1

’மழை பெய்வதற்கான அறிகுறி வெளிப்படையாகத் தென் பட்டதால், மழைவரும்முன் ஓடும்படி அதிக நம்பிக்கையோடு ஆகாபிடம் எலியா சொன்னான்’ என்பது தவறு. வானத்தில் மேகங் களைத் தீர்க்கதரிசி பார்க்கவும் இல்லை; இடிமுழக்கத்தைக் கேட்க வும் இல்லை. தன்னிலிருந்த அசையா விசுவாசத்தின்படி, கர்த்த ருடைய ஆவியானவர் தன்னிடம் பேசச் சொன்ன வார்த்தையையே அவன் பேசினான். அன்று முழுவதும் தேவனுடைய சித்தத்தைத் தயக்கமின்றி நிறைவேற்றினான்; தேவ வார்த்தையின் தீர்க்கதரி சனங்களில் தனக்கிருந்த அசையா விசுவாசத்தை வெளிப் படுத்தினான். இப்பொழுதும், தன்னுடைய திராணிக்குத் தக்கதான அனைத்தையும் செய்துமுடித்த பிறகு, முன்னுரைக்கப்பட்டபடி, பரலோக ஆசீர்வாதங்கள் பொழியும் என்பதை அவன் அறிந்திருந் தான். வறட்சியை அனுப்பின் அதே தேவன்தாமே, நீதி மார்க்கத்தின் பலனாக பரிபூரணமான மழையையும் வாக்களித்திருந்தார். எலியா தன்னைத் தாழ்த்தி, தன் முகம் முழங்காலில் பட குனிந்து, மனந் திரும்பின இஸ்ரவேலின் சார்பாக தேவனிடத்தில் வேண்டிக் கொண்டான். தீஇவ 155.2

தன் ஜெபத்தை தேவன் கேட்டதற்கு அடையாளமாக ஏதாவது தெரிகிறதா என்பதை அறியும்படி, மத்திய தரைக்கடலுக்கு நேராய்ப் பார்த்துவர், தன் வேலைக்காரனை மீண்டும் மீண்டும் அனுப்பினான் எலியா. ஒவ்வொரு முறையும் ஒன்றும் இல்லை’ என்ற பதிலோடு வேலைக்காரன் திரும்பிவந்தான். அதனால் தீர்க்கதரிசி தன்னுடைய பொறுமையையோ, விசுவாசத்தையோ இழந்துவிடவில்லை; ஊக்கத்தோடு தொடர்ந்து வேண்டிக்கொண்டான். வெண்கலம் போன்ற வானத்தில் மழைக்கான எவ்வித அறிகுறியும் தென்பட வில்லை என்ற பதிலோடு ஆறு முறையும் வேலைக்காரன் திரும்பி வந்தான். எலியா ஊக்கங் குன்றாதவராக இன்னொரு முறையும் அவனை அனுப்பினான். ஆனால், இந்தத் தடவை திரும்பி வந்த வேலைக்காரன், ‘’இதோ, சமுத்திரத்திலிருந்து ஒரு மனுஷனுடைய உள்ளங்கை அத்தனைச் சிறிய மேகம் எழும்புகிறது’‘ என்று பதி லளித்தான். தீஇவ 156.1

எலியாவுக்கு அது போதுமானதாயிருந்தது. வானத்தில் கரு மேகங்கள் கூடுகிறவரை அவர் காத்திருக்கவில்லை . அந்தச் சிறிய மேகத்திலும் ஏராளமான மழையை விசுவாசத்தால் அவன் கண்டான். தன்னுடைய விசுவாசத்திற்கு ஏற்றவாறு செயல்பட்ட அவன், உடனடியாக தன்னுடைய வேலைக்காரனை ஆகாபிடம் அனுப்பி, ‘’மழை உம்மைத் தடைசெய்யாதபடிக்கு இரதத்தைப் பூட்டி, போய் விடும்’‘ என்ற செய்தியைத் தெரிவித்தான். தீஇவ 156.2

எலியா மிகுந்த விசுவாசமுள்ளவனாக இருந்ததால்தான், இஸ்ரவேலின் வரலாற்றில் அந்த இக்கட்டான சமயத்தில் தேவ னால் அவனைப் பயன்படுத்த முடிந்தது. வாக்குத்தத்தங்களைப் பற்றிப் பிடித்தவனாய் அவன் ஜெபித்தபோது, அவன் விசுவாசம் பரலோகத்தை எட்டிப்பிடித்தது. தன்னுடைய வேண்டுகோளுக்குப் பதில் கிடைக்கும் வரை அவன் ஜெபத்திலே தரித்திருந்தான். தேவன் தனக்குச் செவிகொடுத்தார் என்பதற்கான முழு ஆதாரத்திற்காக அவன் காத்திருக்கவில்லை . மாறாக, தேவதயவின் அந்தச் சிறு ஆதாரத்தை வைத்து, விசுவாசத்தோடு காரியங்களைச் செய்ய அவன் சித்தங்கொண்டான். தேவனுக்குக் கீழ்ப்படிந்து, எலியாவால் என்னவெல்லாம் செய்ய முடிந்ததோ, அதுபோலதேவசேவையில் நம் செல்வாக்குக்கு உட்பட்ட அனைத்தையும் நாமும் செய்யமுடியும். ஏனெனில், கீலேயாத்தின் மலைப் பகுதியைச் சேர்ந்த அந்தத் தீர்க்க தரிசியைப் பற்றி, ‘எலியா என்பவன் நம்மைப்போலப் பாடுள்ள மனுஷனாயிருந்தும், மழை பெய்யாதபடிக்குக் கருத்தாய் ஜெபம் பண்ணினான், அப்பொழுது மூன்று வருஷமும் ஆறுமாதமும் பூமி யின்மேல் மழை பெய்யவில்லை’ என்று எழுதப்பட்டுள்ளது. யாக் 5:17. தீஇவ 156.3

தேவ வார்த்தையின் வாக்குத்தத்தங்களைப் பற்றிப்பிடித்துக் கொண்டு, பரலோகம் செவிகொடுக்கிறவரைக்கும் அசைய மறுக் கும் இத்தகைய விசுவாசம் தான் இன்றைய உலகில் தேவையா யிருக்கிறது. இத்தகைய விசுவாசம் தான் பரலோகத்தோடு நம்மை நெருக்கமாக இணைத்து, அந்தகாரச்சக்திகளை எதிர்கொள்வதற்குத் தேவையான பெலத்தைப் பெற்றுத்தருகிறது. விசுவாசத்தினாலே தேவபிள்ளைகள் ராஜ்யங்களை ஜெயித்தார்கள்; நீதியை நடப்பித் தார்கள்; அக்கினி யின் உக்கிரத்தை அவித்தார்கள்; யுத்தத்தில் வல்லவர்களானார்கள்; அந்நியருடைய சேனைகளை முறியடித் தார்கள். எபி11:33, 34. இத்தகைய விசுவாசத்தால்தான், தேவன் நமக்காக அவர் வைத்திருக்கும் திட்டத்தின் உச்சத்தை அடைய முடியும். நீ விசுவாசிக்கக் கூடுமானால் ஆகும், விசுவாசிக்கிற வனுக்கு எல்லாம் கூடும்.’‘ மாற்கு 9:23. தீஇவ 157.1

வெற்றிதரும் ஜெபத்தின் ஒரு முக்கியக்கூறு விசுவாசமே. ‘விசுவாசமில்லாமல் தேவனுக்குப் பிரியமாயிருப்பது கூடாத காரியம்; ஏனென்றால், தேவனிடத்தில் சேருகிறவன் அவர் உண் டென்றும், அவர் தம்மைத் தேடுகிறவர்களுக்குப் பலன் அளிக்கி றவரென்றும் விசுவாசிக்கவேண்டும்’. ‘நாம் எதையாகிலும் அவரு டைய சித்தத்தின்படி கேட்டால், அவர் நமக்குச் செவி கொடுக் கிறார். நாம் எதைக் கேட்டாலும், அவர் நமக்குச் செவிகொடுக்கிறா ரென்று நாம் அறிந்திருந்தோமானால், அவரிடத்தில் நாம் கேட்ட வைகளைப் பெற்றுக்கொண்டோமென்றும் அறிந்திருக்கிறோம்.’ எபி 11:6; 1யோவான் 5:14, 15. யாக்கோபின் விடாப்பிடியான விசு வாசத்தோடும், எலியாவின் விட்டுக்கொடுக்காத பிடிவாதத்தோ டும், நம் விண்ணப்பங்களை நம் பிதாவிடம் ஏறெடுக்கலாம்; அவர் வாக்குப்பண்ணியுள்ள யாவற்றையும் உரிமைகோரலாம். தமது வார்த்தையை நிறைவேற்றுவதில்தான் அவருடைய சிங்காசனத் தின் மதிப்பு இருக்கிறது. தீஇவ 157.2

கர்மேல் மலையிலிருந்து புறப்பட ஆகாப் தயாரானபோது, அங்கு இருள்சூழ ஆரம்பித்தது. அதற்குள்ளாக மேகங்களினாலும் காற்றினாலும் வானம் கறுத்தது; பெருமழை உண்டாயிற்று: ஆகாப் ரதத்தில் ஏறி, யெஸ்ரயேலுக்குப் புறப்பட்டான். காரிருளிலும் பெரும் மழையிலும் அரண்மனை நோக்கிப் பயணித்த ஆகாபால் பாதையைத் தெளிவாகப் பார்க்க முடியவில்லை. தேவனுடைய தீர்க்கதரிசியாகிய எலியா அன்று ஆகாபை அவனுடைய மக் களுக்கு முன்பாகத் தலைகுனிய வைத்து, சிலைவழிபாட்டுக்கார னான அவனுடைய பூசாரிகளைக் கொன்று போட்டிருந்தான்; ஆனா லும், அவன் இஸ்ரவேலின் ராஜா என்பதை எலியா இன்னமும் நினைவில் வைத்திருந்தான். அதனால், ராஜாவுக்கு மரியாதை செலுத்தும் வகையில், தேவவல்லமையால் எலியா பெலப்படுத்தப் பட்டவனாக, நகரத்திற்குள் செல்லும் வழியை ராஜாவுக்குக் காட்டு வதற்காக, ராஜாவுடைய ரதத்தின் முன்பாக ஓடினான். தீஇவ 158.1

துன்மார்க்க ராஜாவிடம் தேவ ஊழியர் காட்டின் இந்த இரக்க மானது, தேவனுடைய ஊழியக்காரர் என்று சொல்லிக்கொண்டும் தங்கள் சுய கெளரவத்தால் மேட்டிமை கொள்ளும் யாவருக்கும் ஒரு பாடமாகும். எடுபிடி வேலையென்று தாங்கள் நினைக்கிற கடமைகளைச் செய்வதை இழிவாகக் கருதுகிறவர்கள் இருக்கிறார் கள். தங்களை வேலைக்காரன் என நினைத்துவிடுவார்களோ என்று பயந்தவர்களாய் அவசியமான வேலையைக்கூட செய்ய மறுக்கி றார்கள். எலியாவின் முன்மாதிரியிலிருந்து இவர்கள் அதிகம் கற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது. அவருடைய வார்த்தையாலே பரலோகப் பொக்கிஷங்கள் பூமியை விட்டு மூன்று வருடங்கள் மறைக்கப்பட்டிருந்தன. கர்மேலின்மேல் அவன் செய்த ஜெபத்திற் குப் பதிலாக, வானத்திலிருந்து அக்கினி இறங்கி வந்து, பலியைப் பட்சித்துப்போட்டது. அதனால், அவன் தேவனால் கனம் பெற்ற வனென்பது தெளிவாகிறது. சிலை வழிபாட்டுத் தீர்க்கதரிசிகளைக் கொன்று போட்டதில் எலியாவின் கரமே தேவனுடைய நியாயத் தீர்ப்பை நிறைவேற்றியது. தேவனிடம் மழைக்காக எலியா விண் ணப்பித்தபோது மழை பெய்தது. எலியாவின் பொது ஊழியத்தை இவ்வாறு தேவன்கனப்படுத்திய அந்த முக்கியமான வெற்றிக்குப் பிறகும், எடுபிடிகள் செய்கின்ற ஒரு வேலையைச் செய்ய அவன் ஆயத்தமாயிருந்தான். தீஇவ 158.2

யெஸ்ரயேலின் நுழைவுவாயில் வந்தது. ஆகாபும் எலியாவும் பிரிந்துசென்றார்கள். அலங்கங்களுக்குப் புறம்பாகவே இருக்கத் தீர்மானித்த எலியா, தன்னுடைய மேலங்கியால் தன்னை மூடிக் கொண்டு, வெட்டாந்தரையில் படுத்து உறங்கினான். உள்ளே சென்ற ராஜா, அரண்மனையில் தன்னுடைய படுக்கையறைக்குச் சென்றான். அன்று நடந்த அற்புத நிகழ்வுகளையும், அவற்றில் வெளிப்பட்ட அதிசயமான தேவவல்லமையையும், அதன்மூலம் யேகோவாவே மெய்யான தேவன் என்பது நிரூபணமானதையும் அவன் தன் மனைவியிடம் சொன்னான். சிலைவழிபாட்டுக்காரர்களான பூசாரி கள் கொல்லப்பட்டதை ராணியினிடத்தில் ஆகாப் சொன்னதும், யேசபேல் மனம் மாறவில்லை . அவள் மனம் கடினப்பட்டது; வெறி கொண்டாள். கர்மேல் நிகழ்ச்சிகளிலிருந்து தேவனுடைய ஆளுகை யின் மகத்துவத்தை அவள் உணர்ந்துகொள்ள மறுத்தாள். மனது கடினப்பட்டவளாக, எலியா சாகவேண்டுமென்று துணிகரமாக அறிவித்தாள். தீஇவ 159.1

களைத்துப்போயிருந்த தீர்க்கதரிசியை அன்று இரவு எழுப்பிய ஒரு தூதுவன், ‘’அவர்களில் ஒவ்வொருவனுடைய பிராணனுக்குச் செய்யப்பட்டது போல, நான் நாளை இந்நேரத்தில் உன் பிராண னுக்குச் செய்யாதே போனால், தேவர்கள் அதற்குச் சரியாகவும் அதற்கு அதிகமாகவும் எனக்குச் செய்யக்கடவர்கள்” என்று யேச பேல் சொன்னதாக அவனுக்கு அறிவித்தான். தீஇவ 159.2

சிறிதளவும் அஞ்சாத் துணிவுடன் ராஜாவுக்கும் பூசாரிகளுக் கும் மக்களுக்கும் எதிராக பெரும் வெற்றியடைந்ததால், அதன் பிறகு எலியா ஒருபோதும் கோழைத்தனமாக நடந்திருக்கவோ எவருக்கும் பயந்திருக்கவோ மாட்டான் என்று நினைக்கலாம். ஆனாலும், தேவனுடைய அன்பையும் அக்கறையையும் அநேக விதங்களில் கண்டு, ஆசீர்வதிக்கப்பட்டிருந்த போதிலும், மனித ரின் பெலவீனங்களுக்கு அவன் விதிவிலக்காயிருக்கவில்லை. அந்த இக்கட்டான நேரத்தில் அவனுடைய விசுவாசமும் துணிவும் அவனைக் கைவிட்டன. திகிலடைந்தவனாக தூக்கத்திலிருந்து எழுந்தான். வானம் மழையைக் கொட்டிக்கொண்டிருந்தது. எங் கும் இருள் பரவியிருந்தது. மூன்று வருடங்களுக்கு முன்பு, யேச பேல் கடுங்கோபங்கொண்டு, ஆகாபிடம் சொல்லி எலியாவைத் தேடினபோது, அவரைப் பாதுகாப்பான இடங்களுக்குத் தேவன் வழிநடத்தியிருந்ததை மறந்து, தன் உயிரைக் காப்பாற்ற ஓடினான் தீர்க்கதரிசி. பெயர்செபாவைச் சென்றடைந்ததும், தன் வேலைக் காரனை அங்கே நிறுத்திவிட்டான். அவன் வனாந்தரத்தில் ஒருநாள் பிரயாணம் போனான். தீஇவ 159.3

எலியா தன்னுடைய கடமையை மறந்து ஓடியிருக்கக்கூடாது. யேகோவாவின் மகத்துவத்தை நிலைநிறுத்தும் படியாக, தனக்கு அப் பணியைக் கட்டளையிட்ட அவரிடமே பாதுகாப்பு வேண்டி, யேசபேலின் மிரட்டலை அவன் சந்தித்திருக்கவேண்டும். தான் நம்பியிருக்கும் தேவனால், ராணியின் கோபத்திலிருந்து தன்னைப் பாதுகாக்கமுடியும் என்று அந்தத் தூதுவனிடம் அவன் சொல்லி யிருக்கவேண்டும். தெய்வீக வல்லமையின் ஓர் அற்புத வெளிப் பாட்டைக் கண்டு சிலமணிநேரம்தான் கடந்திருந்தன. எனவே, இப்போதும் தேவன் தன்னைக் கைவிடமாட்டாரென்கிற நம்பிக் கையை அது அவனுக்குக் கொடுத்திருக்கவேண்டும். தான் இருந்த இடத்திலேயே இருந்து, தேவனைத் தன் பாதுகாவலாகவும் பெல னாகவும் கொண்டு சத்தியத்திற்காக உறுதியாக நின்றிருப்பானானால், ஆபத்து நேராதபடி அவன் காக்கப்பட்டிருப்பான். கர்த்தர் யேசபே லின்மேல் தம் நியாயத்தீர்ப்பை அனுப்பி, அவனுக்கு இன்னொரு விசேஷித்த வெற்றியை அருளியிருப்பார். அது ராஜாவிலும் மக் களிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி, அன்று ஒரு பெரும் சீர் திருத்தத்தை நடப்பித்திருக்கும். தீஇவ 160.1

கர்மேலில் நடைபெற்ற அற்புதத்திற்குப் பிறகு, எலியாவின் எதிர்பார்ப்பு அதிகமாயிருந்தது. தேவ வல்லமையின் அத்தகைய வெளிப்பாட்டிற்குப் பிறகு, ஆகாபின் மனதில் யேசபேல் தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்பேயில்லை என்றும், இஸ்ரவேல் முழுவதிலும் வேகமாக சீர்திருத்தம் ஏற்படும் என்றும் அவன் நம்பினான். கர் மேல் மலைமேல் அந்த நாள் முழுவதுமே கடும் பிரயாசப்பட்டி ருந்தான். அவன் சாப்பிடக்கூட இல்லை. அந்தப் பிரயாசத்தால் அவனுடைய சரீரம் சோர்வடைந்திருந்தபோதிலும், யெஸ்ரயேலின் நுழைவு வாயிலுக்கு வழிகாட்டி ஆகாபின் இரதத்திற்கு முன்பாக அவன் சென்றபோது, அவனுடைய துணிவு உறுதிமிக்கதாகவே இருந்தது தீஇவ 160.2

ஆழமான விசுவாசத்தை வெளிப்படுத்துகிற மகிமையான வெற்றியைத் தொடர்ந்து பலருக்கும் ஏற்படுகிற பாதிப்பே எலியா வையும் அழுத்திக்கொண்டிருந்தது. ‘கர்மேலில் ஏற்பட்ட சீர்திருத் தம் நீடிக்காதோ?’ என்று பயந்தான்; மனச்சோர்வு அவனை ஆட் கொண்டது. பிஸ்காவின் உச்சியளவு உயர்த்தப்பட்டவன், இப்போ ழுது கீழே பள்ளத்தாக்கில் வீழ்ந்தான். சர்வவல்லவரின் ஏவுத லின்கீழ், அவன் விசுவாசத்திற்கு வந்த பயங்கரச் சோதனையை மேற்கொள்ள அவனால் முடிந்தது; ஆனால், இப்போது அவன் இருந்த அதைரியமான சூழ்நிலையில், யேசபேலின் மிரட்டல் அவன் காதில் ஒலித்துக்கொண்டிருந்தது; அந்தத் துன்மார்க்க ஸ்திரீ யின் சதியால் சாத்தானின் கை ஓங்குவதுபோல் தெரிந்தது; எனவே, தேவன் மேலுள்ள தன் பிடியை நழுவவிட்டான். முன்பு சொல்ல முடி யாத அளவு அவன் மேன்மையடைந்திருந்தான். அதன் விளைவு அற்புதமானதாக இருந்தது. ஆனால், இப்போது தேவனை மறந்த எலியா வனாந்தரப் பகுதியைச் சேரும் மட்டும் தனியாளாக ஓடிக் கொண்டே இருந்தான். அங்கு முற்றிலும் களைப்படைந்தவனாக ஒரு சூரைச்செடியின் கீழ் உட்கார்ந்து இளைப்பாறினான். அங்கு உட்கார்ந்தவன், தான் சாகவேண்டுமென்று தனக்குத்தானே சொல்லிக் கொண்டு, போதும் கர்த்தாவே, என் ஆத்துமாவை எடுத்துக் கொள்ளும்; நான் என் பிதாக்களைப் பார்க்கிலும் நல்லவன் அல்ல’‘ என்றான். மனிதர் சஞ்சரிக்கும் இடங்களை விட்டு வெகு தூரம் தப்பியோடி, ஏமாற்றத்தால் மிகவும் கசந்துபோய், ஆவி நொறுங்குண்டவனாக, இனிமேல் மனித முகத்தில் விழிக்கவே கூடாதென நினைத்தான். இறுதியில் முற்றிலும் களைத்து, தூங்கிப் போனான். தீஇவ 161.1

நாம் அனைவருமே நம் வாழ்வின் ஏதாவது ஒரு காலக்கட்டத் தில் ஏமாற்றத்தையும் மனமடிவையும் சந்திக்க நேரிடுகிறது. அந் நாட்களில் துக்கமே நம் பங்காக இருக்கலாம். ‘பூமியிலுள்ள தம் பிள்ளைகளுக்கு தேவன் இன்னமும் நன்மை செய்கிறார்’ என்பதை அப்போது நம்புவது கடினமாகிவிடுகிறது; துக்கத்தால் மனமுடைந் திருக்கும் அந்நாட்களில், வாழ்வதைவிட சாவதே சிறந்ததாகத் தோன்றுகிறது. அத்தகைய நேரங்களில்தான் அநேகர் தேவன் மேலுள்ள தங்கள் நம்பிக்கையை விட்டு விலகி, அவிசுவாசத்திற் கும் அவநம்பிக்கைக்கும் அடிமைப்படுகிறார்கள். ஆனால், அத் தகைய நேரங்களில், தெய்வீக நடத்துதலை ஆவிக்குரிய கண்ணால் நாம் பகுத்தறியக் கூடுமானால், நம்மோடிருந்து நம்மைக் காப்பாற்ற தேவதூதர்கள் பிரயாசப்படுவதைக் கண்டுகொள்ளலாம். நித்திய கன்மலைகளைவிட உறுதியான அடித்தளங்கள் மேல் நம் கால்களை ஊன்றி நிறுத்திட, அவர்கள் முயன்று வருவதையும் காணலாம். புது வாழ்விற்கும் புது விசுவாசத்திற்கும் அது வழிநடத்தும். தீஇவ 162.1

தனக்கு அந்தகாரமும் வேதனையுமாக இருந்த நாட்களில் விசு வாச வீரரான யோபு சொன்னதாவது: தீஇவ 162.2

நான் பிறந்தநாள் அழிவதாக. என் சஞ்சலம் நிறுக்கப்பட்டு,
என் நிர்ப்பந்தம் எல்லாம் தராசிலே வைக்கப்பட்டால் நலமாயிருக்கும்.
யெஸ்ரயேலிலிருந்து ஓரேபுக்கு
ஆ, என் மன்றாட்டு எனக்கு அருளப்பட்டு,
நான் வாஞ்சிப்பதைத் தேவன் எனக்குத் தந்து,
தேவன் என்னை நொறுக்கச் சித்தமாய்,
தம்முடைய கையை நீட்டி என்னைத் துண்டித்துப்போட்டால் நலமாயிருக்கும்;
அப்பொழுதாவது எனக்கு ஆறுதல் இருக்குமே.’
“நான் என் வாயை அடக்காமல்,
என் ஆவியின் வேதனையினால் பேசி,
என் ஆத்துமத்தின் கசப்பினால் அங்கலாய்ப்பேன்’
என் ஆத்துமா, நெருக்குண்டு சாகிறதையும் உயிரோடிருக்கிறதைப்பார்க்கிலும்
மரணத்தையும் விரும்புகிறது. இப்படியிருக்கிறதை அரோசிக்கிறேன்;
எந்நாளும் உயிரோடிருக்க விரும்பேன்,
என்னை விட்டுவிடும்;
என் நாட்கள் மாயைதானே’ தீஇவ 163.1

யோபு 3:3; 6:2, 8-10; 7:11,15, 16.

வாழ்க்கையில் யோபு களைப்படைந்தபோதிலும், மரிக்கும் படி கைவிடப்படவில்லை. எதிர்கால வாய்ப்புகள் அவனுக்குக் காட்டப்பட்டன. அதில் நம்பிக்கைச் செய்தி அவனுக்குக் கொடுக்கப் பட்டது. தீஇவ 163.2

’பயப்படாமல் திடன்கொண்டிருப்பீர்.
அப்பொழுது நீர் வருத்தத்தை மறந்து,
கடந்துபோன தண்ணீரைப்போல் அதை நினைப்பீர்.
அப்பொழுது உம்முடைய ஆயுசுகாலம்
பட்டப்பகலைப் பார்க்கிலும் பிரகாசமாயிருக்கும்;
இருள் அடைந்த நீர் விடியற்காலத்தைப் போலிருப்பீர்.
நம்பிக்கை உண்டாயிருக்கிறதினால் திடனாயிருப்பீர்;
சுகமாய்ப்படுத்துக்கொள்வீர்.
பயப்படுத்துவாரில்லாமல் நித்திரை செய்வீர்;
அநேகர் உமது முகத்தை நோக்கி விண்ணப்பம் பண்ணுவார்கள்.
துன்மார்க்கருடைய கண்கள் பூத்துப்போய்,
அவர்கள் அடைக்கலம் அவர்களை விட்டொழித்து,
அவர்கள் நம்பிக்கை சாகிறவன் சுவாசம் போல் அழிந்துபோகும்’ தீஇவ 163.3

யோபு 11:15-20.

கடும் ஏமாற்றமும் மனத்தளர்ச்சியுமாக இருந்த குழியிலிருந்து தேவனின் இரட்சிக்கும் வல்லமையிலும் இரக்கத்திலும் பூரண நம் பிக்கை வைக்குமளவுக்கு உயர்ந்தான்யோபு. ஜெயம் பெற்றவனாக அவன் சொன்னது: தீஇவ 163.4

அவர் என்னைக் கொன்றுபோட்டாலும், அவர்மேல் நம்பிக்கையாயிருப்பேன்;
அவரே என் இரட்சிப்பு’
என் மீட்பர் உயிரோடிருக்கிறார் என்றும்,
அவர் கடைசி நாளில் பூமியின்மேல் நிற்பார் என்றும் நான் அறிந்திருக்கிறேன்.
இந்த என் தோல் முதலானவை அழுகிப்போனபின்பு,
நான் என் மாம்சத்தில் இருந்து தேவனைப் பார்ப்பேன்.
அவரை நானே பார்ப்பேன்;
அந்நிய கண்கள் அல்ல, என் கண்களே அவரைக் காணும்” தீஇவ 164.1

யோபு 13:15,16; 19:25-27. ‘

அப்பொழுது கர்த்தர் பெருங்காற்றிலிருந்து யோபுவுக்கு உத் தரவு’ கொடுத்து, தம்முடைய வல்லமையின் மகத்துவத்தைத் தம் தாசனுக்கு வெளிப்படுத்தினார். யோபு 38:1. கணநேரக் காட்சி யாகத் தன் சிருஷ்டிகரைக் கண்டதும், தன்னையே அருவருத்து, புழுதியிலும் சாம்பலிலும் உட்கார்ந்து மனந்திரும்பினான் யோபு. அதன்பிறகுதான் அவனைப் பரிபூரணமாக ஆசீர்வதிக்க முடிந்தது; அவனுடைய பிந்தின நாட்கள் அவன் வாழ்விலேயே சிறந்த நாட் களாயின. தீஇவ 164.2

தேவனைப் பூரணமாக, சேவிக்க நம்பிக்கையும் துணிவும் மிக அவசியம். இவை விசுவாசத்தின் விளைவுகள் ஆகும். மனச்சோர் வானது பாவமும் பகுத்தறிவுமற்ற செயலுமாகும். சோதனையிலும் வேதனையிலும் தம் தாசர்களுக்குத் தேவையான பெலத்தைப் பரி பூரணமாக’ அருள் தேவனால் கூடும்; அதுவே அவர் விருப்ப மாகும். எபி 6:17. தேவ பணிக்கு எதிரானவர்களின் திட்டங்கள் நன்கு திட்டமிடப்பட்டு, ஸ்திரப்பட்டதுபோலத் தோன்றலாம். ஆனால், எத்தகைய பெரும் திட்டத்தையும் தேவனால் தகர்த்துப் போடமுடியும். தம் தாசர்களின் விசுவாசம் போதுமான அளவிற்குச் சோதிக்கப்பட்டதை அவர் காணும்போது, தாம் குறித்த காலத்தில் தம்முடைய பாணியில் அவர் வெற்றிதருகிறார். தீஇவ 164.3

நம்பிக்கை இழப்போருக்கு நிச்சய மருந்து விசுவாசமும் ஜெப் மும் தன் பணியுமேயாகும். விசுவாசமும் பணியும் நிச்சயத்தையும் நிம்மதியையும் கொடுத்து, ஒவ்வொரு நாளும் அதைப் பெருகச் செய்யும். முற்றிலும் நம்பிக்கை இழக்கவோ, தீமை நிகழுமென்று கவலை கொள்ளவோ நீங்கள் தூண்டப்படுகிறீர்களா? சோதனை மிக்க நாட்களில், அதிகமான தீமை ஏதாவது நிகழப்போவதாகத் தோன்றும்போது பயப்படாதிருங்கள். தேவன்மேல் விசுவாசமா யிருங்கள். தேவன் உங்கள் தேவைகளை அறிவார். அவர் சர்வ வல்லமை படைத்தவர். அளவில்லா அவருடைய அன்பும் உருக்கமும் ஒருபோதும் குறைந்து போவதில்லை. தமது வாக்குத் தத்தத்தை நிறைவேற்றுவதில் அவர் தோற்றுப்போவாரோ என்று நீங்கள் அஞ்ச வேண்டாம். அவர் நித்திய சத்தியர். தம்மில் அன்பு கூருகிறவர்களோடு தாம் செய்து கொண்ட உடன்படிக்கையை ஒரு போதும் மாற்ற மாட்டார். தமது உண்மை ஊழியர்களின் தேவைக்கு ஏற்றவாறு அவர்களுக்கு அவர் அருளுகிறார். ‘’என் கிருபை உனக்குப் போதும்; பலவீனத்தில் என் பலம் பூரணமாய் விளங் கும்” என்றார் தேவன். ஆகையால், கிறிஸ்துவினிமித்தம் எனக்கு வரும் பலவீனங்களிலும், நிந்தைகளிலும், நெருக்கங்களிலும், துன்பங்களிலும், இடுக்கண்களிலும் நான் பிரியப்படுகிறேன்’‘ என்று அப்போஸ்தலனாகிய பவுல் சாட்சிபகருகின்றார். 2கொரிந் தியர் 12:9, 10. தீஇவ 164.4

சோதனை நேரத்தில் எலியாவை நம் தேவன் கைவிட்டுவிட் டாரோ? இல்லையே! எலியா ஜெபித்தபோது, மலைச் சிகரமே பிரகாசிக்கும் அளவிற்கு வானத்திலிருந்து அக்கினி இறங்கி வந் ததே. அப்போது தம்முடைய தாசன் மேல் தேவனுக்கு எவ்வளவு அன்பு இருந்ததோ, அதே அளவு அன்பு எலியா சோர்வுற்றிருந்த போதும் அவர்மேல் இருந்தது. தான் மனிதனாலும் தேவனாலும் கைவிடப்பட்டிருந்ததாக எலியா நினைத்த இந்த நேரத்திலும் அந்த அன்பு எவ்விதத்திலும் குறைந்துவிடவில்லை. எலியா தூங்கிக் கொண்டிருந்தான். மென்மையான தொடுதலை உணர்ந்து, இனி மையான குரலைக் கேட்டபோது விழித்துக்கொண்டான். எதிரிகள் தன்னைக் கண்டு பிடித்துவிட்டார்களோ என்று பீதியடைந்து, தப்பி யோடும்படி எழும்பினான். ஆனால், இரக்கத்தோடு அவனைப் பார்த்துக்கொண்டிருந்த முகம் ஒரு பகைவனின் முகமல்ல; நண்ப னின் முகம். தம்முடைய ஊழியக்காரனுக்கு ஆகாரம் கொடுக்கும் படி, பரலோகத்திலிருந்து ஒரு தூதனை தேவன் அனுப்பியிருந்தார். ‘’எழுந்திருந்து போஜனம்பண்ணு’‘ என்றான் தூதன். அவன் விழித்துப் பார்த்தபோது, இதோ, தழலில் சுடப்பட்ட அடையும், ஒரு பாத்திரத்தில் தண்ணீரும் அவன் தலைமாட்டில் இருந்தது. தீஇவ 166.1

தனக்காக ஆயத்தம்பண்ணப்பட்டிருந்த சிற்றுண்டியைப் புசித்த பிறகு, மீண்டும் தூங்கினான். இரண்டாவது முறையும் தூதன் வந் தான். களைத்துப் போயிருந்தவரைத் தொட்டு, இரக்கமான உருக்கத் தோடு, ‘’எழுந்திருந்து போஜனம்பண்ணு; நீ பண்ணவேண்டிய பிரயாணம் வெகுதூரம் ” என்றான். அப்போது அவன் எழுந்திருந்து, புசித்துக் குடித்து, அந்தப் போஜனத்தின் பலத்தினால் நாற்பது நாள் இரவு பகல் நடந்து, ஓரேப் என்னும் தேவனுடைய பர்வதமட்டும் போய், அங்கே ஒரு கெபிக்குள் அடைக்கலம் புகுந்தான். தீஇவ 166.2