ஆரம்பத்தில் ஆகாபில் யேசபேல் ஏற்படுத்தினதீய செல்வாக்கு, அவன் பின்னான நாட்களிலும் தொடர்ந்தது. எனவேதான், பரிசுத்த வரலாற்றுக்கு ஒவ்வாத அவமானமும் வன்முறையுமான செயல் களைச் செய்தான். ‘தன் மனைவியாகிய யேசபேல் தூண்டிவிட்ட படியே, கர்த்தரின் பார்வைக்குப் பொல்லப்பானதைச் செய்ய, தன்னை விற்றுப்போட்ட ஆகாபைப்போல ஒருவனுமில்லை. ‘1இரா 21:25. தீஇவ 204.1
இயற்கையாகவே, பேராசையுள்ளம் படைத்தவன் ஆகாப். யேசபேலினால் அவனுடைய துன்மார்க்கம் மேலும் வளர்ந்து, பெலப்பட்டது. சுயநல ஆவி தன்னை முற்றிலும் கட்டுப்படுத்தும் வரை, தன் மனதின் தீய ஏவுதல்களுக்கு உடன்பட்டான். தன் ஆசை கள் நிராகரிக்கப்படுவதை அவனால் எவ்விதத்திலும் தாங்கிக் கொள்ள முடியவில்லை. தான் ஒன்றை விரும்பிவிட்டால், அது முறைப்படி தனக்கே சொந்தம் என்று நினைத்தான். தீஇவ 204.2
ஆகாபின் அடக்கியாளும் இத்தன்மையானது அவனுக்குப் பின் வந்த மன்னர்களின் காலத்தில், ராஜ்யத்திலே பேரழிவான தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. எலியா தீர்க்கதரிசியின் காலத்தில் இஸ்ரவேலில் நிகழ்ந்த ஒரு நிகழ்ச்சியில் அத்தன்மை வெளிப் படவும் செய்தது. ராஜாவின் அரண்மனையருகில் யெஸ்ரயேல னாகிய நாபோத்துக்கு ஒருதிராட்சத்தோட்டம் இருந்தது. அதனைத் தனக்குச் சொந்தமாக்க விரும்பினான் ஆகாப். அதனை விலைக்கு வாங்க, அல்லது அதற்குப் பதிலாக வேறொரு நிலத்தைக் கொடுக் கத் திட்டம் போட்டான். அவன் நாபோத்திடம், ‘’உன் திராட்சத் தோட்டம் என் வீட்டிற்கு அடுத்திருக்கிறபடியால், அதைக் கீரைக் கொல்லையாக்கும்படி எனக்குக் கொடு, அதைப் பார்க்கிலும் நல்ல திராட்சத் தோட்டத்தை அதற்குப்பதிலாக உனக்குத் தருவேன்; அல் லது உனக்கு வேண்டுமானால், அதின் விலைக்கிரயமான பணத் தைத் தருவேன்’‘ என்றான். தீஇவ 204.3
தன் பிதாக்களின் சுதந்தரமான அத்திராட்சத்தோட்டத்தை விலைமதிக்க முடியாததாகக் கருதினான் நாபோத். எனவே, அதற்கு இணங்காமல் ஆகாபிடம், ‘’நான் என் பிதாக்களின் சுதந்தரத்தை உமக்குக் கொடாதபடி கர்த்தர் என்னைக் காப்பாராக’‘ என்றான். லேவியச் சட்டஒழுங்கின்படி எந்தவொரு நிலத்தையும் நிரந்தரமாக விற்கவோ கைமாற்றவோ முடியாது. இஸ்ரவேல் புத்திரர் ஒவ் வொருவரும் தங்கள் தங்கள் பிதாக்களுடைய கோத்திரத்தின் சுதந் தரத்திலே நிலைகொண்டிருக்க வேண்டும்.’ எண் 36:7. தீஇவ 205.1
நாபோத் மறுத்துவிட்டதால், சுயநலக்கார மன்னன் சங்கடத் திற்குள்ளானான். ‘யெஸ்ரயேலனாகிய நாபோத் தன்னோடே சொன்ன வார்த்தைக்காக ஆகாப் சலிப்பும் சினமுமாய், தன் வீட்டிற்கு வந்து, போஜனம் பண்ணாமல், தன் கட்டிலின் மேல் படுத்து , தன் முகத்தைத் திருப்பிக் கொண்டிருந்தான்.’ தீஇவ 205.2
விரைவிலேயே அந்த விபரங்களை அறிந்தாள் யேசபேல். ராஜாவின் வேண்டுகோளை மறுத்தவன்மேல் கோபங்கொண்டு, ஆகாப் கவலைப்பட வேண்டாமென உறுதியுடன் சொன்னாள். ‘’நீர் இப்போது இஸ்ரவேலின்மேல் ராஜ்ய பாரம் பண்ணுகிறவர் அல் லவா? நீர் எழுந்து போஜனம்பண்ணி மனமகிழ்ச்சியாயிரும்; யெஸ் ரயேலனாகிய நாபோத்தின் திராட்சத்தோட்டத்தை நான் உமக்குக் கொடுப்பேன்” என்று சொன்னாள். 1இராஜா 21:7. தீஇவ 205.3
தான் விரும்பினதை யேசபேல் எவ்வழியில் பெற்றுத்தரப் போகிறாள் என்பது பற்றி ஆகாப் அக்கறை காட்டவில்லை. தன் னுடைய துன்மார்க்க நோக்கத்தைச் செயல்படுத்துவதில் உடனடி யாக இறங்கினாள் யேசபேல். ராஜாவின் பெயரால் நிருபங்களை எழுதி, அவனுடைய முத்திரையால் முத்தரித்து, நாபோத் குடி யிருந்த பட்டணத்திலுள்ள மூப்பரிடத்துக்கும் பெரியோரிடத்துக்கும் அனுப்பினாள். ‘நீங்கள் உபவாசம் என்று பிரசித்தப்படுத்தி, நாபோத்தை ஜனத்தின் முன் நிறுத்தி, தேவனையும் ராஜாவையும் தூஷித்தாய் என்று அவன்மேல் சாட்சி சொல்லுகிற பேலியாளின் மக்களாகிய இரண்டு பேரை அவனுக்கு எதிராக நிறுத்தி, அவனை வெளியே கொண்டுபோய் அவன் சாகும்படிக்கு அவனைக் கல் லெறியுங்கள்’ என்று அவற்றில் எழுதியிருந்தாள். தீஇவ 205.4
அந்த உத்தரவின்படியே செய்யப்பட்டது. ‘மூப்பரும் பெரி யோருமாகிய அவன் பட்டணத்து மனுஷர், யேசபேல் தங்களுக்கு அனுப்பின் நிருபங்களில் எழுதிக் கட்டளையிட்டிருந்தபடியே செய் தார்கள். அதன் பிறகு, யேசபேல் ராஜாவினிடத்தில் சென்று, ‘’எழுந்து போய் திராட்சத் தோட்டத்தை எடுத்துக்கொள்ளும்” என்றாள். அதன் விளைவுகளைப் பொருட்படுத்தாத ஆகாப், அவளின் அறிவுரைக்குக் குருட்டுத்தனமாக இணங்கினவனாய், இச்சிக்கப்பட்ட அந்தச் சொத்தை அபகரிக்கச் சென்றான். தீஇவ 206.1
வஞ்சகத்தாலும் இரத்தம் சிந்துதலாலும் ராஜா அதனைச் சம் பாதித்ததால், கண்டிக்கப்படாமல் அவன் அதனை அனுபவிக்கக் கூடாதிருந்தது. கர்த்தருடைய வார்த்தை திஸ்பியனாகிய எலியா வுக்கு உண்டாயிற்று, அவன், ‘’நீ எழுந்து, சமாரியாவிலிருக்கிற இஸ்ரவேலின் ராஜாவாகிய ஆகாபைச் சந்திக்கும்படி போ; இதோ, அவன் நாபோத்தின்திராட்சத்தோட்டத்தைச் சொந்தமாய் எடுத்துக் கொள்ள அங்கே போயிருக்கிறான். நீ அவனைப் பார்த்து, ‘நீ கொலை செய்ததும் எடுத்துக்கொண்டதும் இல்லையோ என்று கர்த் தர் சொல்லுகிறார்; நாய்கள் நாபோத்தின் இரத்தத்தை நக்கின ஸ்தலத்திலே உன்னுடைய இரத்தத்தையும் நாய்கள் நக்கும் என்று கர்த்தர் சொல்லுகிறார்’ என்று சொல்” என்றார். ஆகாபின்மேல் இந்தக் கொடிய தீர்ப்பை வழங்க எலியாவுக்குக் கர்த்தர் கட்டளை யிட்டார். தீஇவ 206.2
தேவ கட்டளையை நிறைவேற்றத் துரிதமாகச் சென்றான் தீர்க்கதரிசி. யேகோவாவின் துணிவுமிக்க ஊழியனை, அந்தத் திராட்சத்தோட்டத்தில் முகமுகமாய்ச் சந்தித்ததும், ‘’என் பகை ஞனே, என்னைக் கண்டுபிடித்தாயா?” என்று பீதியோடு கேட்டான் குற்றவாளியான அரசன். தீஇவ 206.3
’’கண்டுபிடித்தேன்; கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பான தைச் செய்ய நீ உன்னை விற்றுப்போட்டாய். நான் உன்மேல் பொல் லாப்புவரப்பண்ணி, உன் சந்ததியை அழித்துப்போடுவேன்’‘ என்று கர்த்தர் சொன்னதை அவர் ஊழியர் தயக்கமின்றிச் சொன்னான் அங்கு அவருக்கு இரக்கம் காட்ட வழியே இல்லாமல் போனது. ‘எனக்குக் கோபம் உண்டாக்கி, இஸ்ரவேலைப் பாவஞ்செய்யப் பண்ணினதினிமித்தம் நேபாத்தின் குமாரனாகிய யெரொபெயாமின் குடும்பத்தையும் அகியாவின் குமாரனாகிய பாஷாவின் குடும்பத் தையும்’ போல ஆகாபின் குடும்பத்தாரையும் முற்றிலுமாக அழித்து விடப் போவதாகத் தம் ஊழியக்காரன் மூலம் தேவன் அறிவித்தார். தீஇவ 206.4
யேசபேலைக் குறித்து, ‘’நாய்கள் யேசபேலை யெஸ்ரயேலின் மதில் அருகே தின்னும். ஆகாபின் சந்ததியில் பட்டணத்திலே சாகிற வனை நாய்களும், வெளி யிலே சாகிறவனை ஆகாயத்துப் பற வைகளும் தின்னும்’‘ என்றார் கர்த்தர். தீஇவ 207.1
இச்செய்தியைக் கேட்டதும் ராஜா, ‘தன் வஸ்திரங்களைக் கிழித்து, தன் சரீரத்தின்மேல் இரட்டைப் போர்த்துக்கொண்டு உபவாசம் பண்ணி, இரட்டிலே படுத்துத் தாழ்மையாய் நடந்து கொண்டான்.’ தீஇவ 207.2
அப்பொழுது கர்த்தருடைய வார்த்தை திஸ்பியனாகிய எலி யாவுக்கு உண்டாயிற்று, அவர், ‘’ஆகாப் எனக்கு முன்பாகத் தன் னைத் தாழ்த்தினதைக் கண்டாயா? அவன் எனக்கு முன்பாகத் தன் னைத் தாழ்த்துகிறபடியினால், நான் அவன் நாட்களில் அந்தப் பொல்லாப்பை வரப்பண்ணாமல், அவன் குமாரன் நாட்களில் அதை அவன் வீட்டின்மேல் வரப்பண்ணுவேன்’‘ என்றார். தீஇவ 207.3
அதிலிருந்து மூன்று வருடங்களில் சீரியரால் கொல்லப்பட்டான் ஆகாப். அவனுக்குப் பிறகு ராஜாவான அகசியா, ‘கர்த்தரின் பார் வைக்குப் பொல்லாப்பானதைச் செய்து, தன் தகப்பன் வழியிலும், தன் தாயின் வழியிலும், இஸ்ரவேலைப் பாவஞ்செய்யப்பண்ணின் நேபாத்தின் குமாரன் யெரொபெயாமின் வழியிலும் நடந்து, பாகா லைச்சேவித்து, அவனைப் பணிந்துகொண்டு, தன் தகப்பன் செய்த படியெல்லாம் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்குக் கோப் முண்டாக்கினான்?’1 இராஜா 22:52, 53. ஆனால் அந்தக் கலகக்கார மன்னனுடைய பாவங்களுக்கு ஏற்ற நியாயத்தீர்ப்பும் நெருங்கி யிருந்தது. மோவாபியருக்கு எதிரான கொடிய யுத்தத்திலும், பிறகு அவனுக்கு ஏற்பட்ட விபத்திலும், அவனுடைய உயிருக்கு ஆபத்து ஏற்பட்டபோது, அவனுக்கெதிரான தேவகோபம் வெளிப்பட்டது. தீஇவ 207.4
’மேல் வீட்டிலிருந்து கிராதியின் வழியாய் விழுந்ததினால்’ அதிக காயமடைந்தான் அகசியா. அதனால் என்ன ஆகுமோ என்று பயந்து, தான் பிழைப்பேனா மாட்டேனா என்று விசாரிக்கும் படி எக்ரோனின் தேவனாகிய பாகால்சேபூபிடத்தில் தன்னுடைய ஆட் களை அனுப்பிவைத்தான். எக்ரோனின் கடவுள் தன் பூசாரிகளின் மூலமாக, எதிர்காலக் காரியங்களைப்பற்றிய விபரங்களைத் தெரி விப்பதாக நம்பப்பட்டது. எனவே, ஏராளமான மக்கள் அங்குக் குறிகேட்கச் சென்றனர். ஆனால் அங்குச் சொல்லப்பட்ட காரி யங்களும் விபரங்களும் இருளின் அதிபதியிடமிருந்து புறப்பட்ட வையாகும். தீஇவ 207.5
அகசியாவின் ஆட்களுக்கு எதிர்கொண்டுபோன தேவ மனி தன் அவர்களிடம், ‘இஸ்ரவேலிலே தேவன் இல்லையென்றா நீங் கள் எக்ரோனின் தேவனாகிய பாகால் சேபூபிடத்தில் விசாரிக்கப் போகிறீர்கள்? இதினிமித்தம் நீ ஏறின் கட்டிலிலிருந்து இறங்காமல், சாகவே சாவாய் என்று கர்த்தர் சொல்லுகிறார்” என்று சொல்லி, அதை ராஜாவிடம் தெரிவிக்கச் சொன்னான். அதன்பிறகு தீர்க்க தரிசி அங்கிருந்து சென்றுவிட்டான். தீஇவ 208.1
அந்த ஆட்கள் திகைப்படைந்தவர்களாய், ராஜாவிடம் விரைந்து சென்று, தேவ மனிதனுடைய வார்த்தைகளை அவனிடம் சொன்னார்கள். ‘’உங்களிடத்தில் சொன்ன மனுஷன் எப்படிப்பட்ட டவன்” என்று ராஜா கேட்டான். அதற்கு அவர்கள், ‘அவன் மயிர் உடையைத் தரித்து, வார்க்கச்சையைத் தன் அரையிலே கட்டிக் கொண்டிருந்தான்’‘ என்றார்கள். ‘’அது திஸ்பியனாகிய எலியா தான்’‘ என்றான் அகசியா. தம்முடைய ஆட்கள் சந்தித்த அந்தப் புதியவன் எலியாவாக இருக்குமானால், தான் சாகப்போவதாகச் சொல்லப்பட்ட வார்த்தைகள் நிச்சயம் நிறைவேறும் என்பதை அவன் அறிந்திருந்தான். மோசமான அந்தத் தண்டனையை முடிந் தால் தவிர்த்துவிட வேண்டும் என்று ஆவல் கொண்டவனாய்த் தீர்க்கதரிசியினிடத்திற்கு ஆட்களை அனுப்பத் தீர்மானித்தான். தீஇவ 208.2
தீர்க்கதரிசியைப் பலவந்தப்படுத்தி அழைத்துவர், இரண்டு முறை சில வீரர்களை அனுப்பிவைத்தான் அகசியா. இரண்டுமுறை யும் தேவகோபாக்கினையின் தண்டனை அவர்களுக்கு நேரிட்டது. மூன்றாவதாகச் சென்ற படைவீரர்கள் தேவனுக்கு முன்பாகத் தங்க ளைத் தாழ்த்தினார்கள். அவர்களின் தலைவன் தேவ ஊழியரிடம் சென்றதும், எலியாவுக்கு முன்பாக முழங்காற்படியிட்டு, அவனை வேண்டிக்கொண்டு, “தேவனுடைய மனுஷனே, என்னுடைய பிரா ணனும் உமது அடியாராகிய இந்த ஐம்பது பேரின் பிராணனும் உமது பார்வைக்கு அருமையாயிருப்பதாக’‘ என்று வேண்டிக்கொண் டான். தீஇவ 208.3
’அப்பொழுது கர்த்தருடைய தூதன் எலியாவை நோக்கி, ‘’அவனோடேகூட இறங்கிப்போ , அவனுக்குப் பயப்படாதே’‘ என்றான்; அப்படியே அவன் எழுந்து அவனோடேகூட ராஜா வினிடத்திற்கு இறங்கிப்போய், அவனைப் பார்த்து, ‘இஸ்ரவே லிலே தேவன் இல்லையென்றா நீ எக்ரோனின் தேவனாகிய பாகால்சேபூபீடத்தில் விசாரிக்க ஆட்களை அனுப்பினாய்? ஆத லால் நீ ஏறின கட்டிலிலிருந்து இறங்காமல் சாகவே சாவாய் என்று கர்த்தர் சொல்லுகிறார்’‘ என்றான்.’ தீஇவ 209.1
தன்னுடைய தகப்பனின் ஆளுகையின்போது, உன்னதமான வரின் அற்புத செய்கைகளைக் கண்டிருந்தான் அகசியா. தம்மு டைய பிரமாணத்தின் மெய்யான கோரிக்கைகளைப் புறக்கணிப் பவர்களைத்தாம் பார்க்கிறவிதத்தை, இஸ்ரவேலின் அவபக்தியால் நேரிட்ட கொடிய சம்பவங்கள் மூலம் தேவன் விளக்கினதையும் அவன் கண்டிருந்தான். நிஜமான இந்தக் கொடிய நிகழ்வுகளைக் கட்டுக்கதைகளாக எண்ணியவன்போல் செயல்பட்டான் அகசியா. கர்த்தருக்கு முன்பாகத் தன்னுடைய இருதயத்தைத் தாழ்த்துவதற்குப் பதிலாகப் பாகாலைப் பின்பற்றினான். கடைசிமட்டும் அவன் அதில் நிலைத்திருந்ததுதான், துணிவுமிக்க அவபக்தியாயிருந்தது. கலகக் காரனாய், மனந்திரும்பவிரும்பாததால், ‘எலியா சொன்ன கர்த்த ருடைய வார்த்தையின்படியே அகசியா மரித்தான். தீஇவ 209.2
இராஜாவாகிய அகசியாவின் பாவம் மற்றும் தண்டனையின் சம்பவத்தில் ஓர் எச்சரிப்பு அடங்கியிருக்கிறது. அதனைப் புறக்க ணித்தால் தண்டனையிலிருந்து யாரும் தப்பமுடியாது. இன்றைய மனிதர் அஞ்ஞான தேவர்களைத் தொழுது கொள்ளாமல் இருக்க லாம். ஆனால், இஸ்ரவேலின் ராஜாவைப்போல, சாத்தானுடைய ஆலயத்தில் ஆயிரக்கணக்கானோர் தொழுது கொள்ளத்தான் செய் கிறார்கள். இன்றைய உலகில் சிலை வழிபாட்டின் ஆவியே எங்கும் காணப் படுகிறது. அறிவியல் மற்றும் கல்வியின் செல்வாக்கே அதற்குக் காரணம் என்றாலும், எக்ரோனின் தேவனை நாடிச் சென்ற அகசியாவின் நாட்களைவிட இன்று அதிக கவர்ச்சியுடனும் மெரு குடனும் அது காணப்படுகிறது. தீர்க்கதரிசனத்தின் நிச்சய வார்த் தைகளிலுள்ள விசுவாசம் குறைந்து வருவதற்கான வருத்தகரமான அடையாளங்கள் ஒவ்வொரு நாளும் அதிகரிக்கின்றன. அதற்குப் பதிலாக, மூட நம் பிக்கையும் சாத்தானின் வஞ்சகமும் அநேகரின் உள்ளங்களை ஆக்கிரமித்துள்ளன. தீஇவ 210.1
சிலைவழிபாடு எனும் விசித்திரச் செயலுக்குப் பதிலாக இன்று ரகசியக் கூட்டணிகளும் ஆவியுலகக் கோட்டுபாடுகளும் குருட்டு நம்பிக்கைகளும் ஆவியுலக மையங்களும் காணப்படுகின்றன. தேவ வார்த்தை, அல்லது அவருடைய ஆவியினால் கிடைக்கும் வெளிச்சத்தைப் புறக்கணிக்கும் ஆயிரக்கணக்கானோர் இத்தகைய மையங்களின் குறிசொல்லுதலை ஆவலோடு ஏற்றுக்கொள்கின்ற னர். ஆவியுலகில் நம்பிக்கையுள்ளவர்கள், முற்கால மந்திரவாதி களைப் புறக்கணிப்பதுபோல் பேசலாம். ஆனால், தன்னுடைய தந்திரத்தின் வேறொரு பரிமாணத்திற்குள் அவர்கள் சிக்கியுள்ள தால், அவர்களைப் பார்த்து மகா வஞ்சகன் வெற்றியோடு சிரிக் கிறான். தீஇவ 210.2
ஆவிகளோடு பேசுபவர்களிடம் சென்று குறி கேட்பதை நினைத்தால் அநேகருக்கு நடுக்கமாக இருக்கிறது. ஆனால், தங் களுக்குப் பிடித்தமான ஆவியுலகக் காரியங்களில் அவர்கள் ஈர்க் கப்பட்டுப் போகிறார்கள். கிறிஸ்தவ அறிவியலின் போதனைகளா லும் ‘தியானத்தால் தெய்வ வெளிப்பாடு கிடைக்கும்’ என்கிற நம் பிக்கையாலும் கிழக்கத்திய மதங்களாலும் சிலர் வழிவிலகிப் போகிறார்கள். தீஇவ 210.3
எத்தகைய மந்திரவாதமானாலும், அதின் அப்போஸ்தலர்கள் தங் களுக்குக் குணமாக்கும் வல்லமை இருப்பதாகச் சொல்லிக் கொள்கிறார்கள். அந்தக் குணமாக்கும் வல்லமைக்குக் காரணம் தங்களிலுள்ள மின்னோட்டம், காந்தம், மனதின் ஆற்றல் என்கிறார் கள். இவையெல்லாம் மாற்றுப் பிரிவு சிகிச்சை’ என்கிறார்கள். இன்றைய காலத்திலும், ஜீவனுள்ள தேவனுடைய வல்லமையையும் நன்கு பயிற்சி பெற்ற மருத்துவர்களின் திறமையையும் நம்புவதற்குப் பதிலாக இத்தகைய வைத்தியர்களை நாடிச் செல்லும் கிறிஸ்தவர்கள் அநேகர் இருக்கிறார்கள். சுகமில்லாமல் படுத்துக்கிடந்ததன் குழந் தையைப் பார்த்த தாய், ‘’நான் இனி என்ன செய்ய? என் குழந்தை யைக் குணமாக்க வல்லவைத்தியர் ஒருவரும் இல்லையா?’ என்று கூக்குரலிடுகிறாள். ஞானதிருஷ்டிக்காரர் அல்லது காந்த சக்தியி னால் சிகிச்சை தரும் வைத்தியர் ஒருவர் அற்புத சுகமளிப்பதாகக் கேள்விப்படுகிறாள். எனவே, தன் பக்கத்தில் நின்றிருக்கும் சாத் தானுடைய கையில் தன் குழந்தையை ஒப்படைப்பது போல, அந்த வைத்தியரிடம் ஒப்படைக்கிறாள். எதிர்காலத்தில் அந்தக் குழந்தை யின் வாழ்க்கை பல தருணங்களில் சாத்தானுடைய வல்லமைக்குக் கட்டுப்பட்டதாகவே இருக்கப்போகிறது. அதிலிருந்து அதால் மீள முடியாமல் போகலாம். தீஇவ 211.1
அகசியாவின் அவபக்தியால் தேவன் அதிருப்தியடையக் காரணம் இருந்தது. இஸ்ரவேல் மக்களின் உள்ளங்களை வெல்ல வும் தம்மேல் நம்பிக்கை கொள்ளும்படியாக அவர்களை ஊக்கப் படுத்தவும் அவர் செய்யாதது என்ன? ஈடு இணையற்ற அன்பையும் இரக்கத்தையும் யுகம் யுகமாக அவர்தம் மக்களுக்கு வெளிப் படுத்திக் கொண்டேயிருந்தார். தாம் ‘மனுமக்களுடன் மகிழ்ந்து கொண்டிருந்ததை ‘ஆதிமுதற்கொண்டு வெளிப்படுத்திவருகிறார். நீதி 8:31. உண்மையோடு தம்மைத் தேடுகிறவர்களுக்கு அவர் அனுகூலமான துணையாயிருந்தார். ஆனாலும், இஸ்ரவேலின் ராஜாவோ தேவனை விட்டு விலகி, தன்னுடைய மக்களின் மோச மான எதிரிகளிடத்தில் உதவி நாடினான். அதன்மூலம், பரலோகத் தின் தேவனைவிட அவர்களுடைய விக்கிரங்களின்மேல் தான் அதிக நம்பிக்கை வைப்பதாக அந்த அஞ்ஞான மார்க்கத்தாரிடம் தெரிவித்தான். அதேபோலவே, பெலத்திற்கும் ஞானத்திற்கும் ஆதாரமானவரை விட்டு விலகி, ஆண்களும் பெண்களும் அந்த கார வல்லமைகளிடம் ஆலோசனை அல்லது உதவிகேட்க நாடும் போது, தேவனுக்கு அவமதிப்பை உண்டு பண்ணுகிறார்கள். அகசியாவின் செயலால் தேவகோபம் மூண்டதனால், அவனைவிட அதிகமான வெளிச்சத்தைப் பெற்றிருந்தும் அந்த அரசனின் போக் கில் போகிறவர்களைத் தேவன் எவ்விதம் பார்ப்பார்? தீஇவ 211.2
சாத்தானின் மந்திரவாதத்திற்குத் தங்களை ஒப்புக்கொடுத்தவர் கள் பெரும் ஆதாயத்தைப் பெற்றுவிட்டதாகப் பெருமை பாராட்ட லாம். ஆனால், அது ஞானமானதும் பாதுகாப்பானதுமான மார்க்க மாகுமா? நாட்கள் நீடிப்பதால் என்ன பயன்? உலக ஆதாயத்தைப் பெற்றுக்கொள்வதால் என்ன பயன்? தேவ சித்தத்தை நிராகரிப் பதால் வரும் முடிவை அதால் நிவிர்த்தி செய்ய முடியுமா? ஆதாய மாகத் தோன்றும் அவையாவும் இறுதியில் ஈடுசெய்ய முடியாத இழப்பாகிவிடும். சாத்தானுடைய வல்லமையிலிருந்து தம்முடைய மக்களைப் பாதுகாக்க தேவனால் எழுப்பப்பட்டுள்ளதடுப்புச்சுவர் களில் ஏதாவது ஒன்றை உடைப்பதாக இருந்தாலும், அதற்கான தண்டனையைப் பெறாமல் தப்பமுடியாது. தீஇவ 212.1
அகசியாவுக்குக் குமாரன் இல்லாதபடியினால், அவனுடைய சகோதரனாகிய யோராம் ஆட்சிக்கு வந்தான். அவன் பத்துக்கோத் திரத்தார் மேல் பன்னிரண்டு வருடங்கள் அரசாட்சி செய்தான். அக் காலக்கட்டத்திலும் அவனுடைய தாயாகிய யேசபேல் உயிரோடிருந் தாள்; ராஜ்யத்தின் காரியங்களில் மோசமான பாதிப்பை அவள் ஏற் படுத்திக்கொண்டேயிருந்தாள். இன்னும் அநேகர் சிலை வழி பாட்டுச் சடங்குகளில் ஈடுபட்டிருந்தனர். யோராமும் ‘கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தான்; ஆனாலும் தன் தகப்பனைப் போலும் தன் தாயைப் போலும் அல்ல; தன் தகப்பன் பண்ணுவித்த பாகாலின் சிலையை அகற்றிவிட்டான். என்றாலும் இஸ்ரவேலைப் பாவஞ்செய்யப்பண்ணின நேபாத்தின் குமார னாகிய யெரொபெயாமின் பாவங்களை அவன் விட்டு நீங்காமல் அவைகளிலே சிக்கியிருந்தான்’. 2 இராஜா 3:2,3. தீஇவ 212.2
இஸ்ரவேலின்மேல் யோராம் ராஜாவாயிருந்த சமயத்தில்தான் யோசபாத் மரித்தான். யோசபாத்தின் குமாரன் யூதாராஜ்யத்தின் சிங் காசனம் ஏறினான். களின்மேல் மேடைகளை உண்டாக்கி, எருசலேமின் குடிகளைச் சோரம்போகப் பண்ணி, யூதாவையும் அதற்கு ஏவிவிட்டான்.’ 2நாளா 21:6, 11. தீஇவ 212.3
இந்தக் கொடிய வழிவிலகலைத் தொடர்ந்து நடப்பிக்காத படிக்கு யூதாவின் ராஜா கண்டனத்திற்கு உள்ளானான். தீர்க்கதரிசி யாகிய எலியா இன்னமும் எடுத்துக்கொள்ளப்படவில்லை. வட ராஜ்யத்தை அழிவின் விளிம்பிற்குக் கொண்டு வந்திருந்த அதே மார்க்கத்தை யூதா ராஜ்யமும் பின்பற்றுவதைப் பார்த்துக்கொண்டு, அவனால் அமைதியாக இருக்கமுடியவில்லை. யூதாவின் யோரா முக்கு ஒரு நிருபத்தை அனுப்பினான் தீர்க்கதரிசி. அதில் எழுதப் பட்டிருந்த அச்சம் தரும் வார்த்தைகளை வாசித்தான் ராஜா : தீஇவ 213.1
’உம்முடைய தகப்பனான தாவீதின் தேவனாகிய கர்த்தர் உரைக்கிறது என்னவென்றால், நீ உன் தகப்பனாகிய யோசபாத்தின் வழிகளிலும், யூதாவின் ராஜாவாகிய ஆசாவின் வழிகளிலும் நடவாமல், இஸ்ரவேல் ராஜாக்களின் வழியிலே நடந்து, ஆகாபு டைய குடும்பத்தின் சோரமார்க்கத்திற்கு ஒத்தபடியே யூதாவையும் எருசலேமின் குடிகளையும் சோரம் போகப் பண்ணி, உன்னைப் பார்க்கிலும் நல்லவர்களாயிருந்த உன் தகப்பன் வீட்டாரான உன் சகோதரரையும் கொன்று போட்டபடியினால், இதோ, கர்த்தர் உன் ஜனத்தையும், பிள்ளைகளையும், உன் மனைவிகளையும் உனக்கு உண்டான எல்லாவற்றையும் மகா வாதையாக வாதிப்பார். நீயோ உனக்கு உண்டாகும் குடல் நோயினால் உன் குடல்கள் நாளுக்கு நாள்இற்றுவிழுமட்டும் கொடிய வியாதியினால் வாதிக்கப்படுவாய்’. தீஇவ 213.2
இந்தத் தீர்க்கதரிசனம் நிறைவேறும் படியாக, ‘கர்த்தர் பெலிஸ் தரின் ஆவியையும், எத்தியோப்பியாவுக்கடுத்த தேசத்தாரான அர பியரின் ஆவியையும் யோராமுக்கு விரோதமாக எழுப்பினார். அவர்கள் யூதாவில் வந்து, பலாத்காரமாய்ப் புகுந்து, ராஜாவின் அரமனையில் அகப்பட்ட எல்லாப் பொருள்களையும், அவன் பிள்ளைகளையும், அவன் மனைவிகளையும் பிடித்துக்கொண்டு போனார் கள்; யோவாகாஸ், அகசியா, அசரியா என்னும் அவன் குமாரரில் இளையவனை அல்லாமல் ஒரு குமாரனும் அவனுக்கு மீதியாக வைக்கப்படவில்லை. தீஇவ 213.3
‘ இவைகள் எல்லாவற்றிற்கும் பிற்பாடு கர்த்தர் அவன் குடல் களில் உண்டான தீராத நோயினால் அவனை வாதித்தார். அப்படி நாளுக்குநாள் இருந்து, இரண்டு வருஷம் முடிகிற காலத்தில் அவ னுக்கு உண்டான கொடிய வியாதியினால் செத்துப்போனான். அவ னுக்குப் பதிலாக அவன் குமாரனாகிய அகசியா ராஜாவானான்.’ வச. 12-19; 2நாளா 22:1; 2இராஜா 8:24. தீஇவ 213.4
தன்னுடைய சகோதரியின் குமாரனாகிய அக்சியா யூதாவின் சிங்காசனத்தில் அமர்ந்த சமயத்தில், இஸ்ரவேல்ராஜ்யத்தில் இன்ன மும் அரசாட்சி செய்துகொண்டிருந்தான் ஆகாபின் குமாரனாகிய யோராம். ஒரே ஒரு வருடம் அரசாண்டான் அகசியா. அக்காலக் கட்டத்தில் அவர் துன்மார்க்கமாய் நடக்க’ அவனுடைய தாயாகிய அத்தாலியாள் அவனுக்கு ‘ஆலோசனைக்காரியாயிருந்தாள்.’ அவன், ‘ஆகாபின் குடும்பத்தாரைப்போல் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தான்.’ 2நாளா 22:3, 4; 2இராஜா 8:27. அவனுடைய பாட்டியாகிய யேசபேல் இன்னமும் உயிரோடிருந் தாள். மேலும், தன் மாமனாகிய இஸ்ரவேலின் யோராமோடு துணி கரமாகக் கூட்டணியும் வைத்துக்கொண்டான். தீஇவ 214.1
யூதாவின் அகசியா விரைவிலேயே கொடூர முடிவைச் சந்தித் தார். அவனுடைய தகப்பன் மரித்தபிறகு, ஆகாபின் வீட்டாரே, ‘அவனுக்குக் கேடாக அவனுடைய ஆலோசனைக்காரராயிருந் தார்கள். ‘2நாளா 22:3, 4. அகசியா தன் மாமனைப் பார்க்க யெஸ்ர யேலுக்குச் சென்றிருந்தபோது, இஸ்ரவேலின் ராஜாவாக யெகூவை அபிஷேகம் பண்ண கீலேயாத்திலுள்ள ராமோத்துக்குத் தீர்க்கதரிசி யின் புத்திரரில் ஒருவனை அனுப்புமாறு எலிசாவுக்குக் கட்டளை யிட்டார் தேவன். அச்சமயத்தில், இஸ்ரவேல் மற்றும் யூதாவின் படைகள் கீலேயாத்தின் ராமோத்திலிருந்த சீரியருக்கு எதிராக ராணுவ நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அந்த யுத்தத்தில் யோராம் காயமடைந்ததால், படைகளின் பொறுப்பை யெகூவிடம் ஒப்படைத்து விட்டு, அவன் யெஸ்ரயேலுக்குத் திரும்பினான். தீஇவ 214.2
எலிசா அனுப்பின ஊழியக்காரன், யெகூவை அபிஷேகம் பண்ணி, ‘’உன்னைக் கர்த்தருடைய ஜனமாகிய இஸ்ரவேலின் மேல் ராஜாவாக அபிஷேகம் பண்ணினேன்” என்றான். அதன்பிறகு, பர லோகத்திலிருந்து கொடுக்கப்பட்ட ஒரு விசேஷித்தப் பணிக்காக யெகூவுக்குப் பரிசுத்தப்பிரமாணம் செய்துவைத்தான். ‘நான் என் ஊழியக்காரராகிய தீர்க்கதரிசிகளின் இரத்தப்பழியையும், கர்த் தருடைய சகல ஊழியக்காரரின் இரத்தப் பழியையும், யேசபேலின் கையிலே வாங்கும்படிக்கு நீ உன் ஆண்டவனாகிய ஆகாபின் குடும்பத்தை அழித்துவிடக்கடவாய். ஆகாபின் குடும்பமெல்லாம் அழியும்’‘ என்று கர்த்தர் தம் ஊழியக்காரன் மூலம் அறிவித்தார். 2இராஜா 9:6-8. தீஇவ 214.3
படைவீரர்கள் தன்னை ராஜாவாக அறிவித்ததும் யெஸ்ர யேலுக்கு விரைந்தான் யெகூ . துணிகரமாகப் பாவம் செய்து மற்ற வர்களையும் பாவத்திற்குள்ளாக வழிநடத்தத் தெரிந்துகொண்ட வர்களைக் கொல்லும் பணியில் அங்கு ஈடுபட்டான். இஸ்ரவேலின் யோராமையும் யூதாவின் அகசியாவையும் மகாராஜாவின் தாயா கிய யேசபேலையும் ‘யெஸ்ரயேலில் ஆகாபின் குடும்பத்தாரில் மீதியான யாவரையும், அவனுக்கு இருந்த எல்லா மந்திரிகளையும் அவனைச் சேர்ந்த மனுஷரையும் அவனுடைய ஆசாரியர்களையும் ‘ கொன்று போட்டான். சமாரியாவின் அருகே, பாகாலின் தொழுகை மையத் தில் தங்கியிருந்த ‘பாகாலின் சகல தீர்க்கதரிசிகளையும், அவனுடைய சகல பணிவிடைக்காரரையும், அவனுடைய சகல ஆசாரியரையும் பட்டயத்திற்கு இரையாக்கினான். விக்கிரகங்களும் சிலைகளும் நொறுக்கப்பட்டு, தீக்கொளுத்தப்பட்டன; பாகாலின் கோவில் இடித்துப்போடப்பட்டது. ‘இப்படியே யெகூ பாகாலை இஸ்ரவேலில் இராதபடிக்கு அழித்துப்போட்டான்.’ 2இராஜா 10:11, 19, 28. தீஇவ 215.1
ராஜ்யமெங்கும் நிறைவேற்றப்பட்ட இந்தத் தண்டனையின் செய்தியானது யேசபேலின் மகளாகிய அத்தாலியாளை எட்டியது. யூதா ராஜ்யத்தில் அவள் ஒரு முக்கியப் பதவி வகித்து வந்தாள். யூதாவின் ராஜாவாகிய தன்னுடைய மகன் மரித்ததை அறிந்ததும் அவள் எழும்பிராஜவம்சத்தார் யாவரையும் சங்காரம் பண்ணினாள்.’ இந்தப் படுகொலையில் ஒரே ஒரு குழந்தையைத் தவிர, சிங்காச னத்தைச் சுதந்தரிக்கத் தகுதியுள்ள தாவீதின் வம்சத்தைச் சேர்ந்த மற்ற யாவரும் கொல்லப்பட்டார்கள். அந்தக் குழந்தையின் பெயர் யோவாஸ். அவனைப் பிரதான ஆசாரியனாகிய யோய்தாவின் மனைவி எடுத்து, ஆலயத்தின்பள்ளி அறையில் ஒளித்துவைத்தாள். ‘அத்தாலியாள் தேசத்தின்மேல் ராஜ்ய பாரம் பண்ணினாள்’. அக் காலக்கட்டத்தில், அந்தக் குழந்தை ஆறுவருடம் ஒளித்து வைக்கப் பட்டிருந்தது. 2நாளா 22:10,12. தீஇவ 215.2
அக்காலக்கட்டத்தின் முடிவில், பிரதான ஆசாரியனாகிய யோய்தாவோடு, ‘லேவியரும் யூதா கோத்திரத்தார் அனைவரும்’ சேர்ந்துகொண்டு, அந்தக் குழந்தைக்கு முடிசூட்டி, அவனைத் தங் கள் ராஜாவாக அபிஷேகம் பண்ணி, ஆர்ப்பரித்தார்கள். ‘ராஜா வாழ்க என்று சொல்லிக் கைகொட்டினார்கள்.’ 2நாளா 23:11, 2இராஜா 11:12. தீஇவ 215.3
’ஜனங்கள் ஓடி வந்து, ராஜாவைப் புகழுகிற சத்தத்தை அத் தாலியாள் கேட்டபோது, அவள் கர்த்தருடைய ஆலயத்திற்கு ஜனங் களிடத்தில் வந்தாள். ‘’இதோ, ராஜா முறைமையின்படியே தூணண் டையிலே நிற்கிறதையும் . ராஜாவண்டையில் நிற்கிற பிரபுக்களை யும், எக்காளம் ஊதுகிறவர்களையும், தேசத்து ஜனங்கள் எல்லா ரும் சந்தோஷப்பட்டு எக்காளம் ஊதுகிறதையும் கண்டாள்’. தீஇவ 216.1
உடனே, தன் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு, ‘’துரோகம் துரோகம் என்று கூவினாள்’ அத்தாலியாள். 2இராஜா 11:14. ஆனால், அத்தாலியாளையும் அவளைப் பின்பற்றினவர்களையும் பிடித்து, ஆலயத்திற்குப் புறம்பே கொண்டுபோய், கொன்றுபோடு மாறு அதிகாரிகளுக்குக் கட்டளையிட்டான் யோய்தா . தீஇவ 216.2
இப்படியாக, ஆகாப் வீட்டாரின் கடைசி அங்கத்தினளும் அழிந்தாள். யேசபேலின் துணையோடு ஆகாப் செய்த பயங்கரத் தீமையானது அவனுடைய சந்ததியின் கடைசி நபர் அழியும் மட் டும் தொடர்ந்தது. மெய்த் தேவனைத் தொழுதுகொள்வதிலிருந்து விலகாத யூதா தேசத்திலும் அநேகரை வழிவிலகச் செய்வதில் வெற்றி கண்டாள் அத்தாலியாள். பாவத்திற்கு அஞ்சாத அந்த ராணியானவள் கொல்லப்பட்ட உடனே, ‘தேசத்தின் ஜனங்கள் எல் லாரும் பாகாலின் கோவிலில் போய், அதை இடித்து, அதின் பலி பீடங்களையும் அதின் விக்கிரகங்களையும் முற்றிலும் உடைத்து, பாகாலின் பூஜாசாரியாகிய மாத்தானைப் பலி பீடங்களுக்கு முன் பாகக் கொன்று போட்டார்கள். ஆசாரியன் கர்த்தருடைய ஆல யத்தை விசாரிக்கும் உத்தியோகஸ்தரை ஏற்படுத்தினான். ‘2இராஜா 11:18. தீஇவ 216.3
அதனைத்தொடர்ந்து ஒரு சீர்திருத்தம் ஏற்பட்டது. யோவாஸை ராஜாவாக ஏற்றுக்கொண்டு ஆர்ப்பரித்தவர்கள், ‘தாங்கள் கர்த் தருடைய ஜனமாயிருக்கும்படிக்கு பயபக்தியுடன் உடன்படிக்கை பண்ணிக் கொண்டார்கள். யேசபேலின் குமாரத்தி ஏற்படுத்தி வந்த தீமையான செல்வாக்கு யூதா ராஜ்யத்திலிருந்து அகற்றப்பட்டது. பாகாலின் தீர்க்கதரிசிகள் கொல்லப்பட்டார்கள்; அவர்களுடைய கோவில் அழிக்கப்பட்டது. ‘தேசத்து ஜனங்களெல்லாரும் மகிழ்ந் தார்கள். நகரம் அமரிக்கையாயிற்று’ 2நாளா 23:16, 21. தீஇவ 216.4