எலியா தனக்குப்பின் இன்னொருவனைத் தீர்க்கதரிசியாக அபி ஷேகம் பண்ண தேவன் அவனுக்குக் கட்டளையிட்டார். ‘’சாப்பாத் தின் குமாரனாகிய எலிசாவை உன் ஸ்தானத்திலே தீர்க்கதரிசியாக அபிஷேகம் பண்ணு” என்றார் தேவன். 1இராஜா 19:16 அக்கட்ட ளைக்குக் கீழ்ப்படிந்து, எலிசாவைத் தேடிச் சென்றான் எலியா. வடதிசையை நோக்கி அவன் சென்றான். சில காலத்திற்கு முன் தேசம் இருந்த நிலைக்கும் அப்போதிருந்த நிலைக்கும் எத்தனை மாற்றம்! மூன்றரை வருடங்கள் மழையோ பனியோ பெய்யாத தினால், நிலங்கள் வறண்டு, விவசாய வட்டாரங்கள் செயலற்றிருந் தன். இப்போதோ, பஞ்சத்திற்கும் வறட்சிக்கும் ஈடுகொடுக்கும் வகையில் எப்பக்கத்திலும் பயிர்கள் வளரத் தொடங்கியிருந்தன. தீஇவ 217.1
எலிசாவின் தந்தை ஒரு விவசாயி; செல்வந்தன். எங்கும் அவ பக்தி நிலவியபோது பாகால் முன் முழங்காலிடாதவர்களில் அவன் வீட்டாரும் அடங்குவர். தேவனைக் கனப்படுத்தும் ஓர் இடமாக வும், முற்கால இஸ்ரவேலின் விசுவாசத்தை அனுதினமும் பக்தி யாய்க் கடைப்பிடித்த இடமாகவும் அவர்கள் குடும்பம் விளங் கியது. அத்தகைய சூழ்நிலையில் எலிசா தன் ஆரம்ப நாட்களைக் கழித்திருந்தான். நாட்டுப்புறவாழ்வின் அமைதியும், தேவனிடமிருந் தும் இயற்கையிடமிருந்தும் கிடைத்த போதனையும், பயன்மிக்க உழைப்பால் கிடைத்த ஒழுக்கமும் அவன் தன் பெற்றோருக்கும் தேவனுக்கும் கீழ்ப்படியவும், எளிமையான வாழ்க்கை வாழவும் அவனுக்குப் பயிற்சியளித்தன; பிற்காலத்தில் அவன் செய்யவிருந்த உன்னதமான பணிக்கு அவனைத் தகுதிப்படுத்தின. தீஇவ 217.2
தன் தகப்பனின் வேலைக்காரனோடு வயலில் உழுதுகொண் டிருந்தபோதுதான், தீர்க்கதரிசியாக அழைக்கப்பட்டான் எலிசா . தனக்குத் தெரிந்த தொழிலை முழு ஈடுபாட்டுடன் செய்து வந்தவன் அவன். மனிதர்களுக்குத் தலைமை தாங்கும் பண்பும், பிறருக்குச் சேவை செய்ய விரும்பும் தாழ்மையான குணமும் அவனிடம் காணப்பட்டன. அமைதியும் சாந்தமுமான ஆவியைப் பெற்றிருந்த அவன் சுறுசுறுப்பும் உறுதியுமானவன். நேர்மையும் மெய்ப்பற்றும் தேவ அன்பும் தேவபயமும் அவனிடம் காணப்பட்டன. அனுதின மும் வாடிக்கையாகி விட்டிருந்த அவனுடைய கடின உழைப்பு உறுதியான நோக்கத்தையும் மேன்மையான குணத்தையும் அவ னுக்குக் கொடுத்தன. கிருபையிலும் ஞானத்திலும் தொடர்ந்து அவனை அது பெருகச்செய்தது. வீட்டுக் கடமைகளைச் செய்ய, தன் தகப்பனோடு ஒத்துழைத்ததன் மூலம் தேவனோடு ஒத்துழைக்க அவன் கற்றுக்கொண்டான். தீஇவ 218.1
சிறு காரியங்களில் உண்மையோடிருந்து, பெரிய பொறுப்பு களுக்கு ஆயத்தப்பட்டான் எலிசா. ஒவ்வொருநாளும், அன்றாட அனுபவங்களால் உன்னதமும் விஸ்தாரமுமான பணிக்கு ஆயத்தப் பட்டுக் கொண்டிருந்தான். சேவை செய்யக் கற்றான். தான் கற்ற தைப் பிறருக்குப் போதித்து, வழிநடத்தவும் கற்றுக்கொண்டான். இது அனைவருக்குமுரிய ஒரு பாடமாகும். தேவன் தம் ஞானத்தில் கொண்டிருக்கும் நோக்கத்தை எவரும் அறியமுடியாது; ஆனால், சிறு காரியங்களில் உண்மையோடிருப்பதுதான் மேன்மையான பொறுப்புகளுக்குத் தகுதிப்படுத்தும் ஆதாரம் என்பதை எல்லா ருமே நிச்சயமாக அறியலாம். வாழ்வின் ஒவ்வொரு செயலும் குணத்தை வெளிப்படுத்துகிறதாயிருக்கிறது. சிறு காரியங்களில் ‘வெட்கப்படாத ஊழியக்காரனாய் விளங்குகிறவனை மாத்திரமே, உன்னதப் பணிகளுக்கு தேவன் பயன்படுத்தமுடியும். 2தீமோ 2:15. தீஇவ 218.2
சிறுசிறு காரியங்களில் அக்கறை காட்டுவதால், எவ்வித நன் மையும் ஏற்படப்போவதில்லை என்று நினைக்கிறவன் மேன்மை யான பணிக்குத் தான் தகுதியற்றவன் என்பதைக் காட்டுகிறான். மேன்மையான பொறுப்புகளுக்கு தான் முற்றிலும் தகுதியுள்ளவர் னென் ஒருவன் நினைத்துக்கொள்ளலாம். ஆனால், புறத்தோற் றத்தை அல்ல, உள்மனதையே தேவன் பார்க்கிறார். சோதித்து, விசாரிக்கப்பட்ட பிறகு, ‘நீ தராசிலே நிறுக்கப்பட்டு, குறையக் காணப்பட்டாய்’ என்கிற தீர்ப்பு அப்படிப்பட்டவனுக்கு எதிராக எழுதப்படும். அவனுடைய உண்மையற்ற தன்மை அவனுக்கு எதி ராகத் திரும்பும். முழு அர்ப்பணிப்பால் கிடைக்கக்கூடிய கிருபை யையும் வல்லமையையும் குணபெலத்தையும் அவன் இழந்து விடுவான். தீஇவ 218.3
மதச் சம்பந்தமான பணிகளில் நேரடியாக ஈடுபட்டிராத பலர் ‘தாங்கள் பயனற்றவர்கள்’ என்றும், ‘தேவ ராஜ்யத்தின் வளர்ச்சிக் குத் தாங்கள் எதுவும் செய்யவில்லை’ என்றும் நினைக்கிறார்கள். மேலான காரியங்களைச் செய்யும்படி வாய்த்தால், எவ்வளவு சந் தோஷமாக ஈடுபடுவார்கள்! சிறுசிறு காரியங்களைச் செய்யத் திரா ணியுள்ளவர்களாய் அவர்கள் இருந்தும், ஒன்றுமே செய்யாமல் தங்களுக்குள் சமாதானம் சொல்லிக்கொள்கிறார்கள். இதில் அவர் கள் தவறிழைக்கிறார்கள். மரம் வெட்டுவது, நிலத்தைச் சுத்தம் செய்வது, உழுவது போன்ற அன்றாட வேலைகள் சாதாரணமா னவைகள்தாம். ஆனால், இவற்றைச் செய்வது தேவபணியில் ஒரு வன் மும்முரமாக ஈடுபடுவதற்குச் சமமாகும். கிறிஸ்துவுக்காகத் தன் பிள்ளைகளைப் பழக்கும் ஒரு தாய், பிரசங்க மேடையில் நிற் கும் போதகர் போல, மெய்யாகவே, தேவனுக்கு ஊழியம் செய் கிறவளாயிருக்கிறாள். தீஇவ 219.1
மகத்தான ஒரு பணியைச் செய்வதற்கான விசேஷித்த தாலந் துக்காக அநேகர் ஏங்குகிறார்கள். ஆனால், வாழ்க்கையை வசந்த மாக மாற்றக்கூடும் கடமைகள் தங்கள் கரங்களிலேயே கொடுக்கப் பட்டிருந்தும் அவர்களால் காண முடிவதில்லை. எனவே, அப்படிப் பட்டவர்கள் தங்களுக்கு வாய்க்கும் கடமைகளில் கவனம் செலுத்து வார்களாக. வெற்றி என்பது விருப்பத்தோடும் உற்சாகத்தோடும் செயல்படுவதாகும். அது தாலந்தை மாத்திரம் சார்ந்ததல்ல. மிகச் சிறந்த தாலந்துகளைப் பெற்றால்தான் பயன்மிக்க சேவையாற்ற முடியும் என்பது தவறு. மனச்சாட்சியின்படி அனுதினக் கடமை களை நேர்மையாக நிறைவேற்றுவதும், போதுமென்ற ஆவியும், பிறர்நலனில் உண்மையாய் ஆர்வங் காட்டுவதுமே சேவையாகும். பணிவுமிக்க நடத்தையில் தான் மெய் மேன்மையைக் காணமுடியும். உண்மை அன்போடு நிறைவேற்றப்படும் அனுதினக்கடமைகள், தேவபார்வையில் அருமையானவை. தீஇவ 219.2
தனக்குப்பின் ஒருவரைத் தேர்ந்தெடுக்கத் தேவனால் வழிநடத் தப்பட்ட எலியா, எலிசா உழுதுகொண்டிருந்த வயல்வழியாய்க் கடந்து சென்றான்; அபிஷேகத்தின் சால்வையை அந்த வாலிபனின் தோளில் போட்டான். எலியாவின் ஊழியப் பணி குறித்து சாப்பாத் தின் குடும்பத்தினர் பஞ்சக்காலத்தின்போது நன்கு அறிந்திருந்தனர். இப்பொழுதும், எலியாவினுடைய செயலின் அர்த்தத்தை எலிசா வின் மனதில் ஆவியானவர் புரியவைத்தார். எலியாவின் ஸ்தானத் தில் தேவன் தன்னை அழைத்ததற்கு அது அடையாளம் என்றுணர்ந் தான். தீஇவ 219.3
’அப்பொழுது அவன் மாடுகளை விட்டு, எலியாவின் பிறகே ஓடி, ‘’நான் என் தகப்பனையும் என் தாயையும் முத்தஞ் செய்ய உத் தரவு கொடும், அதற்குப்பின் உம்மைப் பின்தொடர்வேன்” என் றான்.’ அதற்கு போய்த் திரும்பிவா; நான் உனக்குச் செய்ததை நினைத்துக் கொள்” என்றான் எலியா. அவனை ஊக்கமிழக்கச் செய்வதற்காக அல்ல; அவனுடைய விசுவாசத்தைச் சோதிக்கத் தக்கதாக அந்நிலை ஏற்பட்டது. அந்த அழைப்பிற்கு இணங்குவதா வேண்டாமா எனத் தீர்மானித்து, அதற்கான விலையை எலிசா எண் ணிப்பார்க்க வேண்டியிருந்தது. அவன் ஆசைதன் குடும்பத்தாரை யும் அதன் அனுகூலங்களையும் பற்றியதாக இருக்குமானால், அங் கேயே இருந்துவிட அவனுக்கு உரிமை இருந்தது. ஆனால் அது தேவனால் கொடுக்கப்பட்ட அழைப்பு என்பதை விளங்கிக்கொண் டான் எலிசா . அதற்குக் கீழ்ப்படிய அவன் தயங்கவில்லை . தேவ னுடைய தூதுவனாகக் கிடைத்த வாய்ப்பை , எவ்வித உலக ஆதா யத்திற்காகவும் நழுவவிட, தேவனுடைய ஊழியக்காரனோடு சேர்ந் திருக்கும் சிலாக்கியத்தைப் பலிகொடுக்க அவன் விரும்பவில்லை. ‘அவன் ஓர் ஏர்மாடுகளைப் பிடித்து அடித்து, ஏரின் மரமுட்டுகளால் அவைகளின் இறைச்சியைச் சமைத்து ஜனங்களுக்குக்கொடுத்தான்; அவர்கள் சாப்பிட்ட பிற்பாடு , அவன் எழுந்து, எலியாவுக்குப் பின் சென்று அவனுக்கு ஊழியஞ் செய்தான். ‘1இராஜா 19:20, 21. எதிர் கால வாழ்க்கை பற்றி நிச்சயமற்றிருந்த தீர்க்கதரிசியைப் பின்பற்ற, தயக்கமின்றி தன் பிரியமான குடும்பத்தை விட்டுப் பிரிந்தான். தீஇவ 220.1
’நான் என்ன செய்யவேண்டும்?’ என்றும், ‘என்னுடைய பணி என்ன?’ என்றும் எலியாவிடம் எலிசா கேட்டிருப்பானானால், ‘அதை தேவன் அறிவார். அவர் அதை உனக்குத் தெரியப்படுத்து வார். கர்த்தருக்காகக் காத்திருப்பாயானால், உன்னுடைய ஒவ் வொரு கேள்விக்கும் அவர் பதிலளிப்பார். உன்னை அழைத்தவர் தேவனே என்பதை நீ நம்பினால் நீ என்னோடு வரலாம். எனக்குப் பின்னிருந்து செயல்படுகிறவர்தேவனே என்பதையும் அவருடைய சத்தத்தையே நீ கேட்டாய் என்பதையும் நீயாகவே அறிந்துகொள். சகலத்தையும் குப்பையென்று எண்ணுவாயானால், தேவ தயவைப் பெறலாம், வா’ என்று சொல்லியிருப்பான். தீஇவ 220.2
எலிசாவுக்குக் கொடுக்கப் பட்ட அழைப்பைப்போலவே, ‘நித்திய ஜீவனை அடைவதற்கு நான் எந்த நன்மையைச் செய்ய வேண்டும்?’ என்று தம்மிடம் கேட்ட வாலிபனிடம் இயேசு, ‘நீ பூரண சற்குணனாயிருக்க விரும்பினால், போய், உனக்கு உண்டா னவைகளை விற்று, தரித்திரருக்குக் கொடு, அப்பொழுது, பரலோ கத்தில் உனக்குப் பொக்கிஷம் உண்டாயிருக்கும்; பின்பு என்னைப் பின்பற்றி வா’‘ என்றார். மத்தேயு 19:16, 21. தீஇவ 221.1
தன் சொத்தையும் சுகத்தையும் விட்டுவிட வேண்டியதிருந் ததைப் பின்னிட்டுப் பாராமல், ஊழிய அழைப்பை ஏற்றான் எலிசா. தலைவனான வாலிபனோ, இரட்சகரின் வார்த்தைகளைக் கேட்ட தும், தான் மிகுந்த ஆஸ்தியுள்ளவனாயிருந்தபடியால் துக்கமடைந் தவனாய்ப் போய்விட்டான். ‘ வச. 22. அதனைத் தியாகம் செய்ய அவன் விரும்பவில்லை. தேவன் மேலிருந்த அன்பைக் காட்டிலும் தன் சொத்தின்மேல் அதிக அன்பு வைத்திருந்தான். கிறிஸ்துவுக்காகச் சகலத்தையும் புறக்கணிக்க மறுத்ததால், எஜமானுடைய சேவையில் ஓர் இடத்தைப் பெறதான் தகுதியற்றவன் என்பதைக் காட்டினான். தீஇவ 221.2
ஊழியம் எனும் பலிபீடத்தின்மேல் சகலத்தையும் அர்ப் பணிக்க வேண்டிய அழைப்பு ஒவ்வொருவருக்கும் கொடுக் கப்படுகிறது. நாம் அனைவருமே எலிசாவைப்போல ஊழியம் செய்ய அழைக்கப்படவில்லை; நாம் அனைவருமே நம்மிடமுள்ள அனைத்தையும் விற்கக் கட்டளையிடப்படவும் இல்லை. ஆனால், நம் வாழ்வில் தேவசேவைக்கு முதலிடம் கொடுக்கவேண்டுமென்று அவர் நம்மிடம் கேட்கிறார்; பூமியில் தம் ஊழியம் வளர்ச்சியடை வதற்கு ஏதுவாக ஏதாவது செய்யாமல் ஒரு நாளைக்கூட கழிக்க வேண்டாமென்கிறார். அவர் அனைவரிடமும் ஒரேவிதமான ஊழி யத்தை எதிர்பார்ப்பதில்லை. அந்நிய தேசத்தில் ஊழியம் செய்ய ஒருவர் அழைக்கப்படலாம்; சுவிசேஷப் பணியைத் தாங்கத் தன் னிடமுள்ளதை விற்குமாறு இன்னொருவர் அழைக்கப்படலாம். இருவரின் காணிக்கையையுமே தேவன் ஏற்றுக்கொள்கிறார். வாழ்க்கையையும் அதன் சகல காரியங்களையும் பரிசுத்தமாக அர்ப்பணிப்பதே அவசியமாயிருக்கிறது. இந்த அர்ப்பணிப்பைச் செய்கிறவர்கள் பரலோக அழைப்பைக் கேட்டு, அதற்குக் கீழ்ப்படி கிறார்கள். தீஇவ 221.3
தம் கிருபையில் பங்குகொள்ளும் ஒவ்வொருவரையும் பிறர் சேவையில் தேவன் நியமிக்கிறார். ‘இதோ நான், என்னை அனுப் பும்’ என்று நாம் ஒவ்வொருவரும் நம்மைத் தனித்தனியாக ஒப்படைக்க வேண்டும். ஒருவர் வார்த்தையைப் போதிக்கிறவரா யிருக்கலாம்; அல்லது மருத்துவராக, வியாபாரியாக, விவசாயி யாக இருக்கலாம்; அல்லது இயந்திரத் தொழிலாளராகவோ தொழில் வல்லுநராகவோ இருக்கலாம்; அவரவர் பொறுப்பு அவர் வரைச் சார்ந்தது. தங்கள் இரட்சிப்பின் சுவிசேஷத்தைப் பிறருக்கு அறிவிப்பது அவரவரது கடமையாகும். அவர் ஈடுபடும் ஒவ் வொரு காரியமும் இதற்கான வழிமுறைகளைக் காண்பதாகவே இருக்கவேண்டும். தீஇவ 222.1
முதன்முதலில் எலிசாவிடம் ஒரு மேன்மையான பணி எதிர் பார்க்கப்படவில்லை; அன்றாடக் கடமைகளில்தான் அவன் ஒழுக் கமாய் இருக்க வேண்டியதிருந்தது. தன் எஜமான் எலியாவின் கரங் களுக்குத் தண்ணீர் வார்த்தவன் என்று அவனைப் பற்றிச் சொல்லப் பட்டுள்ளது. கர்த்தர் சொன்ன எதையும் செய்ய அவன் தயாராக இருந்தான். தாழ்மை மற்றும் சேவை குறித்த பாடங்களை ஒவ் வொரு முறையும் கற்றுக்கொண்டான். எலியா தீர்க்கதரிசியின் தனிப்பட்ட ஊழியனாக, சிறுசிறு காரியங்களில் தொடர்ந்து உண் மையோடிருந்தான். அதேநேரத்தில், அனுதினமும் பெலப்படு வதற்கு ஏதுவாக, தேவன் தனக்கு நியமித்த பணியில் தன்னை முற்றி லும் அர்ப்பணித்திருந்தான். தீஇவ 222.2
எலியாவிடம் சேர்ந்த பிறகும், எலிசாவின் வாழ்க்கையில் பாவத்தூண்டுதல்கள் இல்லாமலில்லை. ஏகப்பட்ட சோதனைகள் ஏற்பட்டன; ஒவ்வொரு இக்கட்டான நேரத்திலும், தேவனையே சார்ந்திருந்தான். தன் குடும்பம் பற்றி யோசிக்கத் தூண்டப்பட்டான். அதில் அவன் விழுந்துவிடவில்லை. கலப்பையில் கைவைத்த பிறகு, திரும்பிப் பார்க்கக்கூடாதென்பதில் தீர்மானமாயிருந்தான். தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட பொறுப்பில் தான் உண்மையாயிருந் ததைத் தனக்கு ஏற்பட்ட எல்லாச் சோதனைகளிலும் நிரூபித்தான். தீஇவ 222.3
வார்த்தையைப் போதிப்பதைக் காட்டிலும் அதிகமானது ஊழி யத்தில் உள்ளது. எலிசாவை எலியா பயிற்றுவித்தது போல, வாலி பர்களைப் பயிற்றுவிப்பதும், சாதாரண வேலைகளிலிருந்து அவர் களை விலக்கி, தேவ பணியில் அப்பியாசிக்கத் தேவையான பொறுப்புகளை அவர்களிடம் ஒப்படைப்பதுமாகும். முதலில் சிறு பொறுப்புகளைக் கொடுத்து, அவர்கள் பெலப்பட்டு, அனுபவப் பட்ட பிறகு, பெரும் பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டும். ’ஆதி முதல் இருந்ததும், நாங்கள் கேட்டதும், எங்கள் கண்களினாலே கண்டதும், நாங்கள் நோக்கிப்பார்த்ததும், எங்கள் கைகளினாலே தொட்டதுமாயிருக்கிற ஜீவவார்த்தையைக் குறித்து உங்களுக்கு அறிவிக்கிறோம். நாங்கள் கண்டு அதை உங்களுக்கு அறிவிக் கிறோம்’ என்று விசுவாசத்திலும் ஜெபத்திலும் நிறைந்து ஊழியம் செய்கிறவர்கள் இருக்கிறார்கள். அனுபவமிக்க இத்தகைய தேவ ஊழியர்களின் கடுமையான பிரயாசத்தால், வாலிபர்களும் அனு பவமற்ற ஊழியர்களும் பயிற்றுவிக்கப்பட வேண்டும். அதன் மூலம், பொறுப்புகளைச் சுமக்க அவர்கள் கற்றுக்கொள்வார்கள். 1யோவான் 1:1-3. தீஇவ 222.4
இவ்வாறு, இளம் ஊழியர்களைப் பயிற்றுவிப்போர், மகத் தான சேவை செய்கிறவர்களாவார்கள். அவர்களின் முயற்சி களோடு தேவன்தாமே ஒத்துழைக்கிறார். பரிசுத்த வார்த்தை அறி விக்கப்பட்டு தேவ ஊழியர்களின் பக்கமாகக் கொண்டுவரப்படும் வாலிபர்கள் சிலாக்கியம் பெற்றவர்கள். அதில் தேவஊழியர்கள் தங்கள் வாய்ப்பை முழுவதும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். தம் ஊழியத்திற்காக அவர்களைத் தேர்ந்தெடுத்து, அதற்கு அவர் கள் தகுதியடையும் படியான இடத்தில் வைத்து, அவர்களைக் கனப் படுத்துகிறார் தேவன். எனவே, அவர்கள் தாழ்மையும் உண்மையும் கீழ்ப்படிதலும் தியாகம் செய்யச் சித்தங்கொண்டவர்களுமாய் இருக்க வேண்டும். தேவன் தரும் ஒழுக்கப் பயிற்சிக்கு அவர்கள் தங்களை அர்ப்பணித்து, அவர் வழிநடத்துதலின்படி நடந்து, அவர் ஊழியர் களைத் தங்களுக்கு ஆலோசர்களாகக் கொள்வார்களானால், அவர்கள் நீதியும் உயரிய நியதியும் உறுதியும் உள்ளவர்களாக மாறு வார்கள்; தேவன் அவர்களிடம் பொறுப்புகளை ஒப்படைப்பார். தீஇவ 223.1
சுவிசேஷம் அதன் பரிசுத்தத்தன்மையோடு பிரசங்கிக்கப்படும் போது, வயல்களில் உழுகிறவர்களும் வியாபார சம்பந்தமான தொழில் செய்கிறவர்களும் தேவ ஊழியத்திற்கு அழைக்கப்பட்டு, அனுபவமிக்க தேவ ஊழியர்களோடு சேர்ந்து கற்றுக்கொள்வார் கள். ஏனெனில், இத்தகைய தொழில் காரியங்கள்தாம் மனிதரின் மனதைப் பெரிதும் ஆக்கிரமித்துள்ளன. அவர்கள் திறமையாக ஊழியம் செய்யக் கற்றுக்கொண்ட பிறகு, வல்லமையோடு சத்தி யத்தை அறிவிக்கிறவர்களாவார்கள். தேவனுடைய நடத்துதலின் உன்னதமான கிரியைகளால், பிரச்சனை எனும் மலைகள் அகற் றப்பட்டு, கடலில் எறியப்படும். பூமியில் வாசஞ் செய்கிறவர்களுக்கு மிகவும் தேவையாயிருக்கிற செய்தி எங்கும் கேட்கப்படும்; விளக் கப்படும். மெய்யான சத்தியத்தை மனிதர் அறிந்துகொள்வார்கள். பூமி முழுவதும் எச்சரிக்கப்படும் வரை இந்தப் பணி மேன்மேலும் வளர்ந்துகொண்டே வரும். அதன்பிறகு, முடிவு வரும். தீஇவ 223.2
எலிசா அழைக்கப்பட்ட பிறகு அநேகவருடங்களாக, எலியா வும் எலிசாவும் சேர்ந்து பணிபுரிந்தார்கள். தன்னுடைய ஊழியத்திற் கான மிகப்பெரும் ஆயத்தத்தை அனுதினமும் பெற்று வந்தான் அந்த வாலிபன். அசுரத்தனமான தீமைகளைப் புரட்டிப் போடு வதில் தேவ கருவியாக விளங்கி வந்தான் எலியா. ஆகாபாலும் அஞ்ஞான யேசபேலாலும் ஆதரிக்கப்பட்டு, தேசத்தை மருட்சிக் குள்ளாக்கியிருந்த சிலை வழிபாடு, திட்டமாகத் தடுத்து நிறுத்தப் பட்டது. பாகாலின் தீர்க்கதரிசிகள் கொல்லப்பட்டார்கள். இஸ்ர வேலர் அனைவரிலும் ஆழமான மாற்றம் ஏற்பட்டது. தேவனையே வழிபட அநேகர் திரும்பினார்கள். எலியாவின் வாரிசாக, கவனத் தோடும் பொறுமையோடும் போதித்து, இஸ்ரவேலைப் பாதுகாப் பான பாதைகளில் வழிநடத்த எலிசா பெரிதும் முயல வேண்டிய திருந்தது. மோசேயின் நாட்களுக்குப் பிறகு மிகப்பெரும் தீர்க்கதரிசி யாக உருவெடுத்திருந்தான் எலியா. எலியாவுடன் எலிசா இருந் ததால், சீக்கிரமே தான் தனியாகச் செய்ய வேண்டியிருந்த பணிக்கு ஆயத்தமானான் எலிசா. தீஇவ 224.1
இருவரும் இணைந்திருந்து ஊழியம் செய்த காலக்கட்டங்க ளில், மோசமானதீமைகளைக் கடிந்துகொள்ளும்படி அவ்வப்போது அழைக்கப்பட்டான் எலியா. நாபோத்தின் திராட்சத்தோட்டத்தை துன்மார்க்க ஆகாப் எடுத்துக்கொண்டபோது, அவனுடைய அழி வையும் அவனுடைய வீட்டாரின் அழிவையும் முன்னுரைத்தது எலியாவின் குரல்தான். அகசியா ராஜா தன் தந்தை ஆகாபின் மர ணத்திற்குப் பிறகு, ஜீவ தேவனைவிட்டு எக்ரோனின் கடவுளாகிய பாகால் சேபூ பிடத்தில் திரும்பியபோது, அதனைத் தீவிரமாகக் கண்டிக்க மீண்டுமாக எழுந்தது எலியாவின் குரல்தான். தீஇவ 224.2
சாமுவேலால் நிறுவப்பட்ட தீர்க்கதரிசிகளின் பள்ளிகள், இஸ்ரவேல்சோரம்போன காலக்கட்டங்களில் அழிந்து கொண்டிருந் தன். அந்தப் பள்ளிகளை மீண்டும் நிறுவினான் எலியா. அதன் மூலம், வாலிபர்கள் தேவபிரமாணத்தை மகிமைப்படுத்தவும், அத னைக் கனம்பண்ணவும் கற்றுக்கொள்ள வழி உண்டுபண்ணினான். அத்தகைய பள்ளிகளில் மூன்று வேதாகமத்தில் பதிவு செய்யப் பட்டுள்ளன. அதில் ஒன்று கில்காலிலும் மற்றொன்று பெத்தேலிலும், இன்னொன்று எரிகோவிலும் இருந்தன. பரலோகத்திற்கு எலியா எடுத்துக்கொள்ளப்படுவதற்குச் சில காலத்திற்கு முன்னர் எலியா வும் எலிசாவும் அந்தப் பயிற்சி மையங்களைச் சந்தித்தனர். தான் முன்னர் வந்திருந்தபோது அவர்களுக்குப் போதித்த காரியங் களையே மீண்டும் போதித்தான் தேவனுடைய அந்தத் தீர்க்கதரிசி. பரலோகத்தின் தேவன் மேலுள்ள தங்கள் மெய்ப்பற்றை நேர்மை யோடு பாதுகாக்க, அவர்களுக்குக் கொடுக்கப்பட்டிருந்த உன்னத சிலாக்கியம் குறித்து விசேஷமாகப் போதித்தான். தாங்கள் கற்றுக் கொள்ளும் ஒவ்வொரு காரியத்திலும் அவர்கள் தெளிவுடன் காணப்பட வேண்டியதின் முக்கியத்துவத்தை அவர்கள் உள்ளங் களில் ஊன்றும் வண்ணம் போதித்தான். அதன் மூலமாக மாத்திரமே அவர்கள் பரலோகச் சாயலைப்பெற்று, கர்த்தருடைய வழிகளில் ஊழியஞ்செய்ய வாய்ப்பு இருந்தது. தீஇவ 224.3
அப்பள்ளிகள் நிறைவேற்றின் பணிகளைக் கண்டு, எலியா வின் உள்ளம் மகிழ்ந்தது. சீர்திருத்தத்தின்பணி முழுமையாக நிறை வேற்றப்பட்டிருக்கவில்லை. ஆனால், ‘பாகாலுக்கு முடங்காதிருக் கிற முழங்கால்களுடைய ஏழாயிரம் பேரை இஸ்ரவேலிலே மீதி யாக வைத்திருக்கிறேன்’ எனும் கர்த்தரின் வார்த்தை உண்மை என் பதை ராஜ்யம் முழுவதிலும் அவரால் காணமுடிந்தது. 1இராஜா 19:18. தீஇவ 225.1
தன்னுடைய பணிமுறைப்படி எலியா தீர்க்கதரிசியோடு பள்ளி பள்ளியாகச் சென்று கொண்டிருந்தபோது, எலிசாவின் விசுவாச மும் உறுதியும் மீண்டுமாகச் சோதிக்கப்பட்டது. தன்னைவிட்டுத் திரும்பிச் செல்லுமாறுகில் காலிலும், பெத்தேலிலும், எரிகோவிலும் தீர்க்கதரிசி அவனைக் கேட்டுக்கொண்டான். ‘’நீ இங்கே இரு; கர்த்தர் என்னைப் பெத்தேல் மட்டும் போக அனுப்புகிறார்” என் றான். ஆனால், முன்புதான் கலப்பை பிடித்து வேலை செய்தபோது, ‘சோர்ந்துபோகக் கூடாது, தோற்றுப்போகக் கூடாது’ என்பதைக் கற்றிருந்தான் எலிசா. இப்பொழுதும், இன்னொரு கடமைப்பணி யைச் செய்யக் கலப்பையில் கைவைத்திருந்தான். அந்த நோக்கத் திலிருந்து பிறழ அவன் விரும்பவில்லை. எலிசா தன்னை ஊழியத் திற்கு மேலும் தகுதிப் படுத்துவதற்கான வாய்ப்பு காத்திருந்தது. அதைத்தவறவிடாதபடி தன் எஜமானிடமிருந்து பிரிய அவர் விரும்ப வில்லை. எலியா மறுரூபமாக்கப்பட இருந்த செய்தி அவனுக்குத் தெரியாமலேயே தீர்க்கதரிசிகளுக்கான பள்ளிகளின் மாணாக்கர் களுக்கு அறிவிக்கப்பட்டிருந்தது. அதிலும் குறிப்பாக எலிசாவுக்கு அறிவிக்கப்பட்டிருந்தது. ஆகவே, சோதனைக்குள்ளான அந்த ஊழியக்காரன் அந்தத் தேவ மனிதனுக்குப் பின்னாகவே சென் றான். திரும்பிச் செல்லுமாறு மீண்டும் மீண்டும் சொன்னபோது, ‘நான் உம்மை விடுகிறதில்லை என்று கர்த்தரின் ஜீவனையும் உம்முடைய ஜீவனையும் கொண்டு சொல்லுகிறேன்’ என்பதே பதிலாயிருந்தது. தீஇவ 225.2
’அப்படியே இருவரும் போனார்கள். அவர்கள் இருவரும் யோர்தான் கரையிலே நின்றார்கள். அப்பொழுது எலியா, தன் சால் வையை எடுத்து முறுக்கித் தண்ணீரை அடித்தான் ; அது இரு பக்க மாகப் பிரிந்தது; அவர்கள் இருவரும் உலர்ந்த தரைவழியாய் அக் கரைக்குப் போனார்கள். அவர்கள் அக்கரைப்பட்ட பின்பு, எலியா எலிசாவை நோக்கி, ‘’நான் உன்னைவிட்டு எடுத்துக் கொள்ளப்படு முன்னே நான் உனக்குச் செய்யவேண்டியது என்ன, கேள் என்றான்.’ தீஇவ 226.1
உலக மேன்மையையோ, உலகின் மேன்மக்கள் மத்தியில் உயர்வான ஸ்தானத்தையோ எலிசா கேட்கவில்லை. மறுரூபமாக் கப் படும் மேன்மையைப் பெறவிருந்தவர்மேல் தாராளமாகப் பொழியப்பட்டிருந்த தேவ ஆவி அதிகளவில் தனக்குக் கிடைக்க வேண்டுமென்பதே அவனுடைய பேராவலாயிருந்தது. இஸ்ர வேலின் தேவன் தன்னை தேவன் எந்தப் பணிக்கென்று அழைத் திருக்கிறாரோ, அந்தப் பணியை நிறைவேற்ற, எலியாவின் மேல் தங்கியிருந்த ஆவியேயன்றி வேறெதுவும் தன்னைத் தகுதிப்படுத்த முடியாது என்பதை அவர் அறிந்திருந்தார். எனவேதான், ‘’உம் மிடத்திலுள்ள ஆவியின் வரம் எனக்கு இரட்டிப்பாய்க் கிடைக் கும்படி வேண்டுகிறேன்’‘ என்று கேட்டான். தீஇவ 226.2
எலியா அந்த வேண்டுகோளுக்குப் பிரதியுத்தரமாக, ‘’அரி தான காரியத்தைக் கேட்டாய்; உன்னை விட்டு நான் எடுத்துக் கொள்ளப் படுகையில் என்னை நீ கண்டால் உனக்குக் கிடைக்கும்; இல்லாவிட்டால் கிடையாது” என்றான். அவர்கள் பேசிக்கொண்டு நடந்து போகையில், இதோ, அக்கினிரதமும் அக்கினிக் குதிரை களும் அவர்கள் நடுவாக வந்து இருவரையும் பிரித்தது; எலியா சுழல் காற்றிலே பரலோகத்திற்கு ஏறிப்போனான்.’ 2 இராஜா 2:1-11. தீஇவ 227.1
கிறிஸ்துவின் இரண்டாம் வருகையின்போது பூமியில் வாழும் பரிசுத்தவான்களுக்கு, அதாவது, மரணத்தை ருசிக்காமல், ‘கடைசி எக்காளம் தொனிக்கும்போது, ஒரு நிமிஷத்திலே, ஒரு இமைப் பொழுதிலே மறுரூபமாக்கப்படும்’ நபர்களுக்கு முன்மாதிரியாக விளங்கினான் எலியா. 1கொரி 15:51, 52. இவ்வாறு மறுரூபமாக் கப்படும் யாவருக்கும் மாதிரியாக, கிறிஸ்துவின் பூலோக ஊழியத் தின் முடிவில், மறுரூபமலையின் மேலே இரட்சகருக்குப் பக்கத்தில், மோசேயோடு நிற்கும் பாக்கியம் பெற்றிருந்தான் எலியா. மீட்கப் பட்டவர்களின் ராஜ்யம் எப்படியிருக்கும் என்பதை இவர்கள் மூலம் சிறிய அளவில் சீடர்கள் கண்டார்கள். ஏனெனில், பரலோக ஒளியால் இயேசு சூழப்பட்டிருந்ததை அவர்கள் கண்டார்கள்; ‘மேகத்திலிருந்து ஒரு சத்தமுண்டாகி’ அவர் தேவனுடைய குமார னென்று ஊர்ஜிதப்படுத்தினதைக் கேட்டார்கள். லூக்கா 9:35; இரண்டாம் வருகையில் மரித்தோரிலிருந்து உயிர்த்தெழப் போகிற வர்களுக்கு அடையாளமாயிருக்கிற மோசேயைக் கண்டார்கள்; பூலோக வரலாற்றின் முடிவில் அழிவுக்கேதுவானதிலிருந்து அழி யாமையைத் தரித்து, மரணத்தைக் காணாமல் பரலோகத்திற்கு எடுத்துக்கொள்ளப்படப் போகிறவர்களுக்கு அடையாளமா யிருக்கிற எலியாவும் அங்கு நின்றிருந்தான் தீஇவ 227.2
வனாந்தரத்தில் தனிமையோடும் ஏமாற்றத்தோடும் நின்றிருந்த எலியா, தான் வாழ்ந்தது போதுமென்றும், தான் சாகவேண்டுமென் றும் வேண்டினான். ஆனால் தேவன் இரக்கம் கொண்டார்; அவர் கேட்டுக்கொண்டது போல எதுவும் செய்யவில்லை. எலியாவால் செய்யப்பட வேண்டிய மேன்மையான பணி ஒன்று இருந்தது. அந் தப் பணி முடிந்ததும், தனிமையிலும் ஏமாற்றத்திலும் அவன் மரிக்க வேண்டியதிருக்கவில்லை. அதாவது, கல்லறைக்குள் இறங்குவ தல்ல; தேவ தூதர்களோடு தேவ மகிமையின் பிரசன்னத்திற்குள் ஏறிச் செல்வதே அவனுக்கு நியமிக்கப்பட்டிருந்தது. தீஇவ 228.1
’அதை எலிசா கண்டு, “என் தகப்பனே, என் தகப்பனே, இஸ்ர வேலுக்கு இரதமும் குதிரை வீரருமாய் இருந்தவரே” என்று புலம்பி னான்; அவனை அப்புறம் காணாமல், தன் வஸ்திரத்தைப் பிடித்து இரண்டு துண்டாகக் கிழித்தான். பின்பு அவன் எலியாவின் மேலிருந்து கீழே விழுந்த சால்வையை எடுத்துத் திரும்பிப் போய், யோர்தானின் கரையிலே நின்று, எலியாவின் மேலிருந்து கீழே விழுந்த சால்வையைப் பிடித்து, “எலியாவின் தேவனாகிய கர்த்தர் எங்கே?’‘ என்று சொல்லித் தண்ணீரை அடித்தான்; தண்ணீரை அடித்தவுடனே அது இரு பக்கமாய்ப் பிரிந்ததினால் எலிசா இக் கரைப் பட்டான். எரிகோவில் பார்த்துக்கொண்டு நின்ற தீர்க்கதரிசி களின் புத்திரர் அவனைக் கண்டவுடனே, எலியாவின் ஆவி எலிசா வின்மேல் இறங்கியிருக்கிறது என்று சொல்லி, அவனுக்கு எதிர் கொண்டுபோய்த்தரைமட்டும் குனிந்து அவனை வணங்கினார்கள்.’ 2இராஜா 2:12-15. தீஇவ 228.2
தேவனால் ஞானம் பெற்றவர்கள் அவனுடைய விருப்பத்தின் படி அவனுடைய ஊழியத்திலிருந்து ஓயும் காலம் வரும்போது, அவர்களின் உதவியாளர்கள் தேவனை நோக்கிப் பார்த்து, தங் களுக்கு உதவுமாறு வேண்டி, அவருடைய வழிகளில் நடந்தால், அவர் அவர்களுக்குத் துணை நின்று, பெலப்படுத்துவார். தங்கள் எஜமான்களின் அனுபவங்களால் அவர்கள் அனுகூலமடைந்து, அவர்களுடைய தவறுகளிலிருந்து கற்றுக்கொள்வதால், அவர் களைக் காட்டிலும் ஞானிகளாகத் திகழலாம். தீஇவ 228.3
அச்சமயமுதல் எலியாவின் ஸ்தானத்தில் நின்றான் எலிசா . கொஞ்சத்தில் உண்மையோடிருந்தவன் அதிகமானதிலும் உண்மை யோடிருக்க வேண்டியிருந்தது. தீஇவ 228.4