Go to full page →

46 - ஆசீர்வாதங்களும் சாபங்களும் PPTam 643

ஆகானின் மேல் தண்டனையை செயல்படுத்தினபின்பு யுத்த மனிதர்கள் அனைவரையும் கூட்டி, மீண்டும் ஆயிக்கு எதிராக படையெடுக்க யோசுவா கட்டளையிடப்பட்டான். தேவனுடைய வல்லமை அவருடைய ஜனங்களோடு இருந்தது. அவர்கள் விரைவாக பட்டணத்தை சுதந்தரித்தார்கள். PPTam 643.1

பக்தி விநயமான ஆவிக்குரிய ஊழியத்தில் இஸ்ரவேல் அனைத்தும் ஈடுபடும்படியாக யுத்த செயல்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டன. அவர்கள் தங்கள் குடும்பங்களுக்கு வீடுகளையாகிலும் நிலங்களையாகிலும் இன்னும் பெறாததால், கானானில் குடியேறும் படி ஆவலோடு இருந்தனர். இதைப் பெறும்படி கானானியர்களைத் துரத்தவேண்டும். எனினும் அவர்களுடைய முதல் கவனத்தைக் கோரின் உன்னதமான ஒரு கடமைக்காக இந்த முக்கியமான வேலை தாமதிக்கப்படவேண்டும். PPTam 643.2

தங்களுடைய சுதந்தரத்தை சொந்தமாக்கும் முன்பாக தேவனுக்கு உண்மையாக இருப்பதற்கான தங்கள் உடன்படிக்கையைப் புதுப்பிக்க வேண்டும். தேவனுடைய பிரமாணத்தை பவித்திரமாக ஒப்புக்கொள்ளும்படி ஏபால் மலையிலும் சீகேமிலிருந்த கொசீம் மலையிலும் கோத்திரங்களின் விழாவைக்குறித்து மோசேயின் கடைசிப் போதனைகளில் இரண்டு முறை கட்டளை கொடுக்கப்பட்டிருந்தது. இந்த உத்தரவுகளுக்கு கீழ்ப்படிந்து ஆண்கள் மாத்திரமல்ல, ஸ்திரீகளும் பிள்ளைகளும், அவர்களுக்குள் நடமாடிச்சஞ்சரித்த அந்நியர்களும் கூடஜனங்கள் முழுவதும் கில்காலிலிருந்த தங்கள் பாளயத்தை விட்டு, தங்கள் சத்துருக்களின் தேசத்தின் வழியாக அணிவகுத்து, தேசத்தின் மையத்திலிருந்த சீகேமின் பள்ளத்தாக்கிற்குச் சென்றனர். வெற்றி கொள்ளப்படாத சத்துருக்களால் சூழப்பட்டிருந்தபோதும் தேவனுக்கு உண்மையாக இருக்கும் வரையிலும் அவருடைய பாதுகாப்பின் கீழ் அவர்கள் பத்திரமாக இருந்தார்கள். யாக்கோபின் நாட்களைப்போலவே இப்போதும் அவர்களைச் சுற்றிலும் இருந்த பட்டணத்தாருக்குத் தேவனாலே பயங்கரம் உண்டானதினால் ஆதி. 35:5 எபிரெயர்கள் தீங்கிழைக்கப்படவில்லை . PPTam 643.3

இந்த பயபக்தியான ஆராதனைக்கு நியமிக்கப்பட்ட இடம் அவர்களுடைய பிதாக்களின் சரித்திரத்தோடு தொடர்பு கொண்டிருந்ததில் ஏற்கனவே பரிசுத்தப்படுத்தப்பட்டிருந்தது. கானான் தேசத்தில் இங்கேதான் ஆபிரகாம் யெகோவாவிற்கு முதல் பலிபீடத்தை எழுப்பினான். இங்கே ஆபிரகாமும் யாக்கோபும் தங்கள் கூடாரங்களைப் போட்டிருந்தனர். இங்கே யோசேப்பின் ச ரீரத்தை அடக்கம் செய்ய அந்தக் கோத்திரம் ஒரு நிலத்தை வாங்கியிருந்தது. யாக்கோபு தோண்டியிருந்த கிணறும் அவனுடைய வீட்டாரின் விக்கிரகங்களை அவன் புதைத்த இடமும் இங்கே இருந்தது. PPTam 644.1

தெரிந்துகொள்ளப்பட்டிருந்த இடம் பாலஸ்தீனம் முழுவதிலும் மிகவும் அழகான இடமாகவும், இந்த பிரம்மாண்டமான பதியக்கூ காட்சி செய்யப்படுவதற்கு பொறுத்தமான அரங்கமாகவும் இருந்தது. ஒலிவத்தோப்புகளோடு, ஆங்காங்கே ஓடிக்கொண்டிருந்த ஊற்றுகளினால் நீர் இரைக்கப்பட்டு, ரத்தினம் பதிக்கப்பட்டதைப்போன்று காட்டு மலர்களால் நிறைந்திருந்த அந்த இனிமையான பள்ளத்தாக்கிலிருந்த பசுமையான வயல்வெளிகள் தரிசுநிலக் குன்றுகளின் நடுவே வரவேற்பதைப் போல் இருந்தது. பள்ளத்தாக்கின் இரு பக்கங்களிலும் இருந்த ஏபாலும் கொசீமும் ஏறக்குறைய ஒன்றையொன்று பார்த்திருக்க, அவைகளின் கீழ் முகடு இயற்கையான மேடையை அமைத்திருந்ததைப்போன்று தோன்றி, ஒன்றில் கூறப்பட்ட வார்த்தைகள் தெளிவாக மற்றதில் கேட்கும்படியாக மலை சரிவுகள் பின் சென்று பரந்த திரளானோர் கூடுவதற்கு இடத்தை அமைத்துக் கொடுத்திருந்தது. PPTam 644.2

மோசேயினால் கொடுக்கப்பட்ட நடத்துதலுக்கேற்ப ஏபால் மலையில் மாபெரும் கற்களால் ஒரு நினைவுச்சின்னம் எழுப்பப்பட்டது. சாந்தினால் முன்னதாகவே ஆயத்தப்படுத்தியிருந்த இந்தக் கற்களின் மேல் - சீனாயில் பேசப்பட்டு கற்பலகைகளில் பொறிக்கப்பட்டிருந்த பத்துப் பிரமாணங்கள் மட்டுமல்லாது, மோசேயினால் புத்தகத்தில் எழுதப்பட்டிருந்த சட்டங்களும் பொறிக்கப்பட்டன. இந்த நினைவுச்சின்னத்திற்கு அருகில் உளியிடப்படாத கற்களால் ஒரு பலிபீடம் கட்டப்பட்டு, அதன் மேல் ஆண்டவருக்கு பலிகள் செலுத்தப்பட்டன. சாபங்களைக் கூற வேண்டியிருந்த ஏபால் மலையின் மேல் பலிபீடம் ஸ்தாபிக்கப்பட்டது என்ற உண்மை, தேவனுடைய பிரமாணத்தை மீறினதினால் அவருடைய உக்கிரத்தை கடைசியாக இஸ்ரவேல் வருவித்திருந்தது என்றும், அப்படியிருந்தும், அந்தப் பலிபீடத்தின் வழியாக எடுத்துக்காட்டப்பட்ட கிறிஸ்துவின் பாவநிவாரணம் இல்லாதிருந்தால் அது உடனடியாக அனுப்பப்பட்டிருக்கும் என்றும் குறிப்பாகக் காட்டப்பட்டது. PPTam 645.1

லேயாளுக்கும் ராகேலிற்கும் பிறந்த ஆறு கோத்திரங்கள் கெரிசம் மலையின் மேல் நிறுத்தி வைக்கப்பட்டனர். பணிப்பெண்களின் வழியாகப் பிறந்த பிள்ளைகள் ரூபனியரோடும் செபுலோனோடும் ஏபால் மலையில் தங்கள் இடத்தை எடுத்துக் கொண்டனர். அவர்களுக்கு இடையே உடன்படிக்கைப் பெட்டியோடு ஆசாரியர்கள் பள்ளத்தாக்கில் நின்றனர். குறிப்பான எக்காளத்தின் வழியாக அமைதியாயிருக்க அறிவிக்கப்பட்டது. பின்னர் அமைதியில் அந்த பரந்த கூட்டத்தின் முன்னிலையில் பரிசுத்த உடன்படிக்கைப் பெட்டியின் பக்கத்தில் நின்று தேவனுடைய பிரமாணங்களுக்குக் கீழ்ப்படிவதினால் விளையும் ஆசீர்வாதங்களை யோசுவா வாசித்தான். கொசீம் மலையில் நின்றிருந்த கோத்திரங்களெல்லாம் ஆமென் என்று பதில் தந்தன. பின்னர் அவன் சாபங்களை வாசிக்க ஏபேல் மலையிலிருந்த கோத்திரங்கள் அதேபோல் தங்கள் ஒப்புதலை அளிக்க, ஆயிரமாயிரமான குரல்கள் ஒரே குரலில் பவித்திரமாக பதில் கொடுத்தன. இதைத் தொடர்ந்து தேவனுடைய பிரமாணமும் மோசேயினால் அவர்களுக்குக் கொடுக்கப்பட்டிருந்த கட்டளைகளும் நியாயத்தீர்ப்புகளும் வாசிக்கப்பட்டன. இஸ்ரவேல் சீனாய் மலையில் தேவனுடைய வாயிலிருந்து நேரடியாகப் பேசக் கேட்டு அவருடைய சொந்த விரல்களால் எழுதப்பட்ட பரிசுத்த நியமங்கள் இன்னமும் உடன்படிக்கைப்பெட்டிக்குள் காக்கப்பட்டிருந்தது. அனைவரும் வாசிக்கக்கூடிய விதத்தில் அது மீண்டும் எழுதப்பட்டது. கானானை சுதந்தரிக்கும் உடன்படிக்கையின் நிபந்தனைகளை தாங்களே பார்த்துக்கொள்ள அனைவருக்கும் சந்தர்ப்பம் இருந்தது. உடன்படிக்கையின் நிபந்தனைகளுக்கு தங்களுடைய ஒப்புதலை காண்பித்து, அதைக் கீழ்ப்படிவதன் ஆசீர்வாதத்திற்கோ அல்லது நெகிழ்வதன் சாபத்திற்கோ அனைவரும் ஒப்புதல் அளிக்க வேண்டும். பிரமாணம் நினைவுக்கற்களின் மேல் எழுதப்பட்டது மாத்திரமல்ல, இஸ்ரவேல் அனைவரும் கேட்கும்படி யோசுவாவால் வாசிக்கவும்பட்டது . மோசே உபாகம் புத்தகம் முழுவதையும் பேசி ஜனங்களுக்குக் கொடுத்து குறைவான வாரங்கள் தான் சென்றிருந்தன ; எனினும் யோசுவா பிரமாணம் முழுவதையும் படித்தான். // PPTam 645.2

இஸ்ரவேலின் ஆண்கள் மாத்திரமல்ல, ஸ்திரீகளும் பிள்ளைகளும் பிரமாணத்தை வாசிக்கிறதை கவனித்திருந்தனர். அவர்களும் தங்கள் கடமைகளை அறிந்து செய்யவேண்டியது முக்கியமாயிருந்தது. தேவன் தமது கட்டளைகளைக் குறித்து இஸ்ரவேலுக்கு ஆகையால் கர்த்தர் உங்கள் பிதாக்களுக்குக் கொடுப்பேன் என்று அவர்களுக்கு ஆணையிட்ட தேசத்தில் உங்கள் நாட்களும், உங்கள் பிள்ளைகளின் நாட்களும், அநேகமாயிருக்கும்படிக்கு, நீங்கள் என் வார்த்தைகளை உங்கள் இருதயத்திலும் உங்கள் ஆத்துமாவிலும் பதித்து, அவைகளை உங்கள் கையின் மேல் அடையாளமாகக் கட்டி, உங்கள் கண்களின் நடுவே ஞாபகக் குறியாக வைத்து, அவைகளை உங்கள் பிள்ளைகளுக்கு உபதேசித்து,..... அவைகளை உங்கள் வீட்டு நிலைகளிலும் உங்கள் வாசல்களிலும் எழுதுவீர்களாக (உபா. 11:18-21) என்று கட்டளையிட்டிருந்தார். PPTam 646.1

விடுதலையின் வருஷமாகிய ஒவ்வொரு ஏழாம் வருஷத்தின் முடிவிலே கூடாரப்பண்டிகையில், உன் தேவனாகிய கர்த்தர் தெரிந்து கொள்ளும் ஸ்தானத்தில், இஸ்ரவேலர் எல்லாரும் அவருடைய சந்நிதியில் சேர்ந்து வந்திருக்கும் போது, இந்த நியாயப்பிரமாணத்தை இஸ்ரவேலர் எல்லாரும் கேட்க அவர்களுக்கு முன்பாக வாசிக்கக்கடவாய். புருஷர்களும் ஸ்திரீகளும் பிள்ளைகளும் உன் வாசல்களிலிருக்கும் அந்நியர்களும் கேட்டு, கற்றுக்கொண்டு, உங்கள் தேவனாகிய கர்த்தருக்குப் பயந்து, இந்த நியாயப்பிரமாண வார்த்தைகளின் படியெல்லாம் செய்யக் கவனமாயிருக்கும் படிக்கும், அதை அறியாத அவர்கள் பிள்ளைகளும் கேட்டு, நீங்கள் யோர்தானைக் கடந்து சுதந்தரிக்கப்போகிற தேசத்தில் உயிரோடிருக்கும் நாளெல்லாம், உங்கள் தேவனாகிய கர்த்தருக்குப் பயப்படக் கற்றுக்கொள்ளும் படிக்கும் ஜனத்தைக் கூட்டி அதை வாசிக்க வேண்டும் (உபா. 31:10-13) என்று மோசே கட்டளையிட்ட தைப்போல் ஒவ்வொரு ஏழாவது வருடமும் அனைத்துச் சட்டங்களும் இஸ்ரவேலின் கூட்டத்தில் வாசிக்கப்படவேண்டும். PPTam 646.2

தேவன் சொல்லியிருந்ததை முறைகேடாக்கி, மனிதர்களின் மனதை குருடாக்கி, புரிந்து கொள்ளுதலை இருட்டடித்து இவ்விதமாக மனிதனை பாவத்திற்குள் நடத்த சாத்தான் எப்போதும் முயன்று கொண்டிருந்தான். இதனால் தான் ஒருவரும் தவறு செய்ய வேண்டிய அவசியமில்லாதபடி ஆண்டவர் தமது கோரிக்கைகளை மிகவும் தெளிவாக்கி வெளிப்படையாக்கியிருந்தார். சாத்தான் அவனுடைய கொடுமையையும் வஞ்சிக்கும் வல்லமையையும் அவர்கள் மேல் செயல்படுத்தாதிருக்கும்படி மனிதர்களை தம்முடைய பாதுகாப்பின் மேல் நிறுத்திவைத் துக்கொள்ளுவதற்கு தேவன் தொடர்ச்சியாக தேடிக்கொண்டிருக் கிறார். பரிசுத்த பிரமாணங்களை தம்முடைய சொந்தக் குரலினால் அவர்களோடு பேசி, தமது சொந்தக் கைகளால் எழுதுவதற்கு அவர் இறங்கியிருந்தார். ஜீவனால் மேம்படுத்தப்பட்டு சாத்தியத் தினால் பிரகாசமாகியிருந்த இந்த ஆசீர்வாதமான வார்த்தைகள் பரிபூரண நடத்துதலாக மனிதனிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. மனதை அப்புறப்படுத்தி, பிரியங்களை ஆண்டவருடைய வாக்குத்தத்தங்களிலிருந்தும் கோரிக்கைகளிலிருந்தும் திசை திருப்ப சாத்தான் எப்போதும் ஆயத்தமாக இருப்பதால், மனதில் அவைகளை இறுத்திவைக்கவும் இருதயத்தில் பதிக்கவும் மிக அதிக ஜாக்கிரதை அவசியமாயிருக்கிறது. PPTam 647.1

வேதாகம் சரித்திரத்தின் உண்மைகளையும் பாடங்களையும் ஆண்டவருடைய எச்சரிப்புகளையும் கோரிக்கைகளையும் மக்களுக்குப் போதிப்பதற்கு மதபோதகர்களால் அதிக கவனம் கொடுக்கப்பட வேண்டும். எளிமையான வார்த்தைகளில் கொடுக்கப்பட்டு, குழந்தைகளும் புரிந்து கொள்ளுவதற்கு ஏதுவாக அவைகள் இருக்கவேண்டும். வாலிபர்கள் வேத வாக்கியங்களில் போதிக்கப்படுகிறார்களா என்பதைப் பார்ப்பது ஊழியக்காரர் மற்றும் பெற்றோர்களின் வேலையில் ஒரு பங்காக இருக்கிறது. PPTam 647.2

பரிசுத்த பக்கங்களில் காணப்படும் வெவ்வேறு அறிவுகளில் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு ஆர்வம் கொடுக்கமுடியும் கொடுக்கவும் வேண்டும். அவர்கள் தங்கள் குமாரர்களையும் குமாரத்திகளையும் தேவனுடைய வார்த்தையில் ஈடுபடுத்த வேண்டுமென்றால் அவர்கள்தானும் அதில் ஆர்வம் காட்ட வேண்டும். அதன் போதனைகளில் பரீட்சயமாகியிருந்து, வீட்டில் உட்கார்ந்திருக்கிற போதும், வழியிலே நடக்கிற போதும், படுத்துக்கொள்ளுகிற போதும், எழுந்திருக்கிற போதும் (உபா. 11:19) அதைக்குறித்துப் பேசம்படி தேவன் இஸ்ரவேலுக்குக் கட்டளையிட்டதைப் போல அவர்கள் அதன் போதனைகளில் பழகியிருக்க வேண்டும். தங்கள் பிள்ளைகள் தேவனை நேசித்து அவருக்குப் பயபக்தியைக் காண்பிக்க வேண்டும் என்று விரும்புகிறவர்கள், அவருடைய வார்த்தையிலும் சிருஷ்டிப்பின் கிரியைகளிலும் வெளிப்படுத்தப்பட்டிருக்கிற அவருடைய நன்மையையும் அவருடைய மாட்சிமையையும் அவருடைய வல்லமையையுங்குறித்துப் பேசவேண்டும். PPTam 648.1

வேதாகமத்தில் இருக்கும் ஒவ்வொரு அதிகாரமும் ஒவ்வொரு வசனமும் தேவன் மனிதனோடு தொடர்பு கொள்ளுகிறவைகளே . நாம் அதன் கட்டளைகளை கையின் மேல் அடையாளமாகக் கட்டி, கண்களின் நடுவே ஞாபகக்குறியாக வைக்கவேண்டும். ஆராய்ச்சி செய்யப்பட்டு கீழ்ப்படியப்படுமானால், பகலிலே மேகஸ்தம்பத்தினாலும் இரவிலே அக்கினி ஸ்தம்பத்தினாலும் இஸ்ரவேலர்கள் நடத்தப்பட்டதைப் போல் அது அவர்களை நடத்தும். PPTam 648.2