Go to full page →

47 - கிபியோனியர்களுடன் உடன்படிக்கை PPTam 649

சீகேமிலிருந்து இஸ்ரவேலர்கள் கில்காலிலிருந்த தங்கள் பாளயத்திற்குத் திரும்பினர். அவர்களோடு ஒப்பந்தம் செய்ய விரும்பியிருந்த வர்களோடு வெகு சீக்கிரத்தில் ஒரு அந்நிய வாதத்தை அவர்கள் சந்தித்தனர். தாங்கள் வெகு தூரத்திலிருக்கிற ஒரு நாட்டிலிருந்து வந்ததாக தூதுவர்கள் கூறினர். அவர்களுடைய தோற்றத்தினால் அது உறுதி செய்யப்படுவதைப் போலத் தோன்றியது. அவர்களுடைய ஆடை பழையதும் கிழிந்ததும் அவர்களுடைய பாதரட்சைகள் ஓட்டு போடப்பட்டதும் அவர்களுடைய உணவுகள் பூசணம் பிடித்ததும் அவர்களுடைய திராட்சத்துருத்திகள் வழியிலே அவசரமாக சரி செய்யப்பட்டதைப் போன்று கிழிந்து கட்டப்பட்டதுமாயிருந்தன. PPTam 649.1

பாலஸ்தீனத்தின் எல்லைகளைத் தாண்டி இருந்ததாக அறிவிக்கப்பட்ட அந்த தங்களுடைய தூரதேசத்தில், தங்களுடைய சகவாசிகள் தேவன் தமது ஜனங்களுக்காக நடப்பித்த அதிசயங்களைக் கேட்டிருந்ததாகவும், இஸ்ரவேலோடு ஒரு ஒப்பந்தம் பண்ண தங்களை அனுப்பியிருப்பதாகவும் அவர்கள் கூறினர். கானானின் விக்கிரகாராதனைக்காரரோடு எந்தவித ஒப்பந்தத்திற்குள்ளும் நுழைவதற்கு எதிராக எபிரெயர்கள் விசேஷமாக எச்சரிக்கப்பட்டிருந்தனர். அந்நியர்களின் வார்த்தைகளின் உண்மையைக் குறித்த சந்தேகம் தலைவர்களின் மனங்களில் எழுந்தது. நீங்கள் எங்கள் நடுவிலே குடியிருக்கிறவர்களாக்கும் என்று கூறினார்கள். இதற்கு அந்தத் தூதுவர்கள் நாங்கள் உமக்கு அடிமைகள் என்று மாத்திரம் பதிலளித்தனர். ஆனால் யோசுவா நேரடியாக அவர்களிடம் நீங்கள் யார், எங்கேயிருந்து வந்தீர்கள் என்று கோரின் போது, தங்களுடைய பழைய வார்த்தைகளையே திரும்பக்கூறி, தங்கள் உண்மையின் நிரூபணமாக : உங்களிடத்தில் வர நாங்கள் புறப்படுகிற அன்றே, எங்கள் வழிப்பிரயாணத்துக்கு இந்த அப்பத்தைச் சுடச்சுட எங்கள் வீட்டிலிருந்து எடுத்துக் கொண்டு வந்தோம், இப்பொழுது, இதோ, உலர்ந்து பூசணம் பூத்திருக்கிறது. நாங்கள் இந்தத் திராட்சரசத் துரத்திகளை நிரப்புகையில் புதிதாயிருந்தது. ஆனாலும், இதோ, கிழிந்து போயிற்று, எங்கள் வஸ்திரங்களும் பாதரட்சைகளும் நெடுந்தூரமான பிரயாணத்தினாலே பழசாய்ப்போயிற்று என்று கூறினர். PPTam 649.2

இந்த பிரதிநிதித்துவம் வெற்றி கண்டது. எபிரெயர்கள் கர்த்தருடைய வாக்கைக் கேளாமல் அவர்களுடைய போஜனபதார்த்தத்தில் சிறிது வாங்கிக்கொண்டார்கள். யோசுவா அவர்களோடே சமாதானம் பண்ணி, அவர்களை உயிரோடே காப்பாற்றும் உடன்படிக்கையை அவர்களோடே பண்ணினான். அதற்காகச் சபையின் பிரபுக்கள் அவர்களுக்கு ஆணையிட்டுக் கொடுத்தார்கள். இவ்விதம் அந்த ஒப்பந்தம் செய்யப்பட்டது. மூன்று நாட்கள் கழித்து உண்மை கண்டுபிடிக்கப்பட்டது. அவர்கள் தங்கள் அயலார் என்றும் தங்கள் நடுவே குடியிருக்கிறவர்கள் என்றும் கேள்விப்பட்டார்கள். எபிரெயர்களை எதிர்த்து நிற்பது கூடாத காரியம் என்று அறிந்து தங்கள் உயிரை காப்பாற்றுவதற்காக இப்படிப்பட்ட உபாயத்தை கிபியோனியர்கள் கையிலெடுத் திருந்தனர். PPTam 650.1

தங்கள் மேல் செய்யப்பட்ட வஞ்சகத்தைக் குறித்துக் கேள்விப்பட்ட இஸ்ரவேலர்கள் மாபெரும் கோபத்தில் இருந்தனர். மூன்று நாள் பிரயாணத்திற்குப்பின் தேசத்தின் மையத்திலிருந்த கிபியோனியர்களை சென்றடைந்தபோது இந்தக் கோபம் உச்ச கட்டத்தை அடைந்தது. சபையார் எல்லாரும் பிரபுக்கள் மேல் முறு முறுத்தார்கள். மோசடியால் பெறப்பட்டிருந்தபோதும் அதிபதிகள் ஒப்பந்தத்தை முறிக்க மறுத்தனர். இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் பேரில் ஆணையிட்டிருந்தபடியினால், இஸ்ரவேல் புத்திரர் அவர்களைச் சங்காரம் பண்ணவில்லை, விக்கிரக ஆராதனையை விட்டொழிப்பதாகவும் யெகோவாவின் ஆராதனையை ஏற்றுக்கொள்ளுவதாகவும் கிபியோனியர்கள் உறுதிமொழி அளித்திருந்தனர். அவர்களை பாதுகாப்பது, விக்கிரகாராதனைக்காரரான கானானியர்களை அழிக்க வேண்டும் என்ற தேவனுடைய கட்டளையை மீறுவதாகாது . எனவே தங்களுடைய ஆணையினால் பாவம் செய்வதற்கு எபிரெயர்கள் உறுதியளித்திருக்கவில்லை. அந்த ஆணை வஞ்சகத்தினால் பெறப்பட்டிருந்த போதும் அது அலட்சியப்படுத்தப்படக்கூடாது. ஒருவனுடைய வார்த்தைகள் தவறான செய்கை செய்ய அவனைக் கட்டியிருக்காத பட்சத்தில் பரிசுத்தமாக எடுத்துக் கொள்ளப்பட வேண்டும். ஆதாயத்தையோ பழிவாங்குதலையோ அல்லது சுய இலாபத்தையோ கருத்தில் கொண்ட எதுவும் எந்தவிதத்திலும் ஆணை அல்லது உறுதிமொழியின் நித்தியத்தை பாதிக்கக்கூடாது. பொய் உதடுகள் கர்த்தருக்கு அருவருப்பானவைகள், நீதி. 1222. அவருடைய பரிசுத்த ஸ்தலத்தில் நிலைத்திருப்பான்? ஆணையிட்டதில் தனக்கு நஷ்டம் வந்தாலும் தவறாதிருக்கிற (வனே ) - சங்.24:3; 15:4. PPTam 650.2

கிபியோனியர்கள் பிழைத்திருக்க அனுமதிக்கப்பட்டனர். ஆனாலும் ஆசரிப்புக் கூடாரத்தில் அனைத்து கீழான வேலையும் செய்வதற்கு வேலைக்காரர்களாக இணைக்கப்பட்டனர். யோசுவா அவர்களைச் சபைக்கும், கர்த்தர் தெரிந்துகொள்ளும் இடத்தி லிருக்கும் அவருடைய பலிபீடத்துக்கும் விறகு வெட்டுகிறவர்களாகவும் தண்ணீர் எடுக்கிறவர்களாகவுமாக் கினான். தாங்கள் தவறில் இருப்பதை அறிந்தவர்களாக, எந்த நிபந்தனையிலும் தங்கள் உயிரைப் பெற்றுக்கொள்ளுவதில் மகிழ்ந்து, இந்த நிபந்தனைகளை நன்றியோடு அவர்கள் ஏற்றுக்கொண்டனர். இப்போதும், இதோ, உமது கையிலிருக் கிறோம், உம்முடைய பார்வைக்கு நன்மையும் நியாயமுமாய்த் தோன்றுகிறபடி எங்களுக்குச் செய்யும் என்றார்கள். நூற்றுக்கணக்கான வருடங்களாக அவர்களுடைய பின்னடியார்கள் ஆசரிப்புக் கூடாரத்தின் சேவையில் இணைக்கப்பட்டிருந்தனர். PPTam 651.1

கிபியோனின் எல்லை நான்கு பட்டணங்களை உள்ளடக்கியிருந்தது. மக்கள் இராஜாவின் கீழிருக்கவில்லை . மாறாக, மூப்பர்கள் அல்லது அதிகாரத்தில் இருந்த அங்கத்தினர்களால் ஆட்சி செய்யப்பட்டிருந்தனர். அவர்களுடைய பட்டணங்களில் மகிவும் முக்கியமான கிபியோன் ராஜதானி பட்டணங்களில் ஒன்றைப் போல பெரிய பட்டணமும்,... அதின் மனுஷரெல்லாரும் பலசாலிகளாகவும் இருந்தார்கள். அப்படிப்பட்ட ஒரு பட்டணவாசிகள் தங்கள் ஜீவனைக் காப்பாற்றும்படி இவ்வளவு கீழான ஒரு சி றுமைக்கு தங்களைக் கொடுத்திருந்தது, இஸ்ரவேலர்கள் கானானின் குடிகளுக்கு எத்தகைய பயத்தைக் கொடுத்திருந்தனர் என்பதற்கு குறிப்பான சான்றாக இருக்கிறது. PPTam 651.2

ஆனால் கிபியோனியர்கள் இஸ்ரவேலோடு உண்மையாக நடந்திருப்பார்களானால் மேன்மையாக விலை பேசப்பட்டிருப் பார்கள், யெகோவாவிற்கு ஒப்புக்கொடுத்ததினால் அவர்களுடைய வாழ்க்கை பாதுகாக்கப்பட்டிருந்தபோதும், அவர்களுடைய வஞ்ச கம் ஒரு அவமதிப்பையும் அடிமைத்தனத்தையுமே அவர்கள் மேல் கொண்டு வந்திருந்தது. புறஜாதி மார்க்கத்தை விட்டுவிடும் அனைவரும் இஸ்ரவேலோடு இணைந்து உடன்படிக்கையின் ஆசீர்வாதங்களை பகிர்ந்து கொள்ள தேவன் ஏற்பாடு செய்திருந்தார். உங்களிடத்தில் தங்கும் பரதேசி என்ற அடிப்படையில் அவர்கள் சேர்க்கப்பட்டிருந்தனர். சில விதிவிலக்கோடு இந்தக் கூட்டமும் இஸ்ரவேலுக்குச் சமமான சந்தர்ப்பத்தையும் தயவையும் அனுபவிக்கவேண்டியதிருந்தது. ஆண்டவருடைய நடத்துதல். யாதொரு அந்நியன் உங்கள் தேசத்தில் உங்களோடே தங்கினால், அவனைச் சிறுமைப்படுத்த வேண்டாம். PPTam 652.1

உங்களிடத்தில் வாசம் பண்ணுகிற அந்நியனைச்சுதேசி போல எண்ணி, நீங்கள் உங்களில் அன்புகூருகிறது போல அவனிலும் அன்பு கூரு வீர்களாக, (லேவி. 1933, 34) என்றிருந்தது. பஸ்காவையும் பலிகாணிக்கையையும் குறித்து : சபையாராகிய உங்களுக்கும் உங்களிடத்தில் தங்குகிற அந்நியனுக்கும் ஒரே பிரமாணம் இருக்கவேண்டும் ... கர்த்தருக்கு முன்பாக அந்நியனும் உங்களைப்போலவே இருக்க வேண்டும் (எண். 1515) என்ற கட்டளை கொடுக்கப்பட்டிருந்தது. PPTam 652.2

இதன் அடிப்படையிலேயே கிபியோனியர்கள் அவர்கள் நாடின வஞ்சகத்தை செயல்படுத்தாதிருந்திருந்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டிருப்பார்கள். இராஜதானி பட்டணம் அதன் மனுஷரெல்லாரும் பலசாலிகள், இப்படிப்பட்ட பட்டணத்தின் குடிகளுக்கு, அவர்களுடைய சந்ததி முழுவதும் அனைத்து தலைமுறைகளிலும் மரம் வெட்டுவதும் தண்ணீர் இரைப்பதும் ச ராதாரண சிறுமையாக இல்லை. ஆனால் வஞ்சிப்பதற்கென்று வறுமையின் ஆடையை அவர்கள் போட்டிருந்தனர். அது நித்திய சேவையின் சின்னமாக அவர்கள் மேல் கட்டப்பட்டது. இவ்விதம் பொய்யின் மேல் தேவனுக்கிருக்கும் வெறுப்பிற்கு அனைத்து தலைமுறைகளிலுமான அவர்களுடைய அடிமைத்தனம் காட்சி பகரும். PPTam 652.3

கிபியோனியர்கள் இஸ்ரவேலுக்கு ஒப்புக்கொடுத்தது கானானின் இராஜாக்களுக்கு அச்சத்தைக் கொடுத்தது. அத்துமீறி நுழைந்தவர்களோடு சமாதானம் பண்ணிக்கொண்டவர்களை பழிவாங்க உடனடியாக முயற்சிகள் எடுக்கப்பட்டன. எருசலேமின் இராஜாவான அதோனி சேதேக் கோடு ஐந்து கானானிய இராஜாக்கள் கிபியோனுக்கு எதிரான யுத்தத்தில் நுழைந்தனர். அவர்கள் வெகு வேகமாக வந்தனர். தங்களைப் பாதுகாக்க கிபியோனியர்கள் ஆயத்தமாயிராததால் கில்காலிலிருக்கும் யோசுவாவிற்கு உமது அடியாரைக் கைவிடாமல், சீக்கிரமாய் எங்களிடத்தில் வந்து, எங்களை ரட்சித்து, எங்களுக்குத் துணை செய்யும், பர்வதங்களிலே குடியிருக்கிற எமோரியரின் ராஜாக்களெல்லாரும் எங்களுக்கு விரோதமாய்க் கூடினார்கள் என்று ஒரு செய்தி அனுப்பினார்கள். அந்த ஆபத்துகிபியோனியரை மாத்திரமல்ல, இஸ்ரவேலையும் பயமுறுத்தியது. இந்தப் பட்டணத்தின் வழியாகவே பாலஸ்தீனத்தின் மையத்திற்கும் தென்புறத்திற்கும் செல்லவேண்டும். அந்தப் பட்டணம் பிடிக்கப்படுமானால் அவர்கள் தாண்டக்கூடாது போகும். PPTam 653.1

கிபியோனியரை விடுவிக்கும்படியாக யோசுவா உடனே ஆயத்தஞ்செய்தான். தாங்கள் செய்த மோசடியினால் தங்களுடைய வேண்டுகோளை மறுத்து விடுவார்களோ என்ற பயத்தில் முற்றுகையிடப்பட்ட பட்டணவாசிகள் இருந்தனர். ஆனால் இஸ்ரவேலின் கட்டுப்பாட்டிற்கு அவர்கள் தங்களை ஒப்படைத்து தேவனை தொழுது கொள்ளுவதை ஏற்றுக்கொண்டதினால் அவர்களைக் காப்பாற்றும் கடமையில் இருப்பதாக அவன் உணர்ந்தான். இந்த முறை தெய்வீக ஆலோசனையின்றி அவன் செயல்படவில்லை . அவர்களுக்குப் பயப்படாயாக, உன் கைகளில் அவர்களை ஒப்புக்கொடுத்தேன், அவர்களில் ஒருவரும் உனக்கு முன்பாக நிற்பதில்லை என்று சொல்லி ஆண்டவர் அவனுடைய வேலையை உற்சாகப்படுத்தினார். PPTam 653.2

இரவு முழுவதும் அணிவகுத்து காலையில் கிபியோனைச் சென்றடைந்தனர். யோசுவா அவர்கள் மேல் வந்தபோது, சண்டைக்கு வந்த கூட்டணியின் பிரபுக்கள் தங்கள் சேனைகளை வரவழைத்திருக்கவில்லை. இந்தத் தாக்குதல், தாக்கினவர்களை முடியடித்தது . எண்ணக் கூடாத அந்த சேனை யோசுவாவின் முன்பாக பெத்தாரானுக்கு மலையிடுக்கின் வழியாக தப்பித்து ஓடியது. மலை உச்சியை அடைந்து அதன் அடுத்த பக்கத்தில் இருந்த சரிவில் வேகமாகச் சென்றது. இங்கே கடுமையான கல்மழை அவர்கள் மேல் வீசியது. கர்த்தர் வானத்திலிருந்து பெரிய கற்களை விழப்பண்ணினார். அவர்கள் செத்தார்கள்; இஸ்ரவேல் புத்திரர் பட்டயத்தால் கொன்றவர்களைப்பார்க்கிலும் கல்மழையினால் செத்தவர்கள் அதிகமாயிருந்தார்கள். PPTam 653.3

மலையின் அரண்களில் அடைக்கலம் காணும் படியாக எமோரியர்கள் தாங்கள் தலைதெறிக்க ஓடுவதில் தொடர்ந்த போது, மேலிருந்த முகடின் வழியாக பார்த்த யோசுவா, தன்னுடைய வேலையை முடிப்பதற்கு அந்த நாள் மிகக் குறுகியதாக இருக்கும் என்று கண்டான். சத்துருக்கள் மீண்டும் ஒன்று சேர்ந்து தங்கள் போராட்டத்தைப் புதுப்பிப்பார்கள். யோசுவாகர்த்தரை நோக்கிப் பேசி, பின்பு இஸ்ரவேலின் கண்களுக்கு முன்பாக சூரியனே, நீ கிபியோன் மேலும், சந்திரனே, நீ ஆயலோன் பள்ளத்தாக்கின் மேலும், தரித்து நில்லுங்கள் என்றான். அப்பொழுது ஜனங்கள் தங்கள் சத்துருக்களுக்கு நீதியைச் சரிக்கட்டு மட்டும் சூரியன் தரித்தது, சந்திரனும் நின்றது;.... அப்படியே சூரியன் அஸ்தமிக்கத் தீவிரிக்காமல், ஏறக்குறைய ஒரு பகல் முழுவதும் நடுவானத்தில் நின்றது. PPTam 654.1

மாலை நேரம் வருவதற்குள் யோசுவாவிற்கு தேவன் கொடுத்த வாக்குத்தத்தம் நிறைவேறியது. சாத்துருவின் முழு சேனையும் அவன் கையில் கொடுக்கப்பட்டது . இஸ்ரவேலின் நினைவில் தங்கியிருக்கவேண்டிய அந்த நாளின் சம்பவங்கள் மிக நீண்டதாயிருந்தன. இப்படிக் கர்த்தர் ஒரு மனிதனுடைய சொல் கேட்ட அந்நாளையொத்த நாள் அதற்கு முன்னுமில்லை அதற்குப் பின்னுமில்லை. கர்த்தர் இஸ்ரவேலுக்காக யுத்தம் பண்ணினார். PPTam 654.2

சந்திரனும் சூரியனும் தன்தன் மண்டலத்தில் நின்றன; உமது அம்புகளின் ஜோதியிலும், உமது ஈட்டியினுடைய மின்னல் பிரகாசத்திலும் நடந்தன. நீர் கோபத்தோடே பூமியில் நடந்தீர், உக்கிரத்தோடே ஜாதிகளைப் போரடித்தீர். உமது ஜனத்தின் இரட்சிப்புக்காகவும் நீர் அபிஷேகம் பண்ணுவித்தவனின் இரட்சிப்புக்காகவுமே நீர் புறப்பட்டீர்; கழுத்தளவாக அஸ்திபாரத்தைத் திறப்பாக்கி, துஷ்டனுடைய வீட்டிலிருந்த தலைவனை வெட்டினீர்; ஆபகூக் 3:12,13 PPTam 654.3

இஸ்ரவேலின் தேவனுடைய வல்லமையைக் குறித்த சான்று மீண்டும் கொடுக்கப்படுவதற்கேதுவாக தேவனுடைய ஆவியானவர் யோசுவாவின் ஜெபத்தை ஏவியிருந்தார். இவ்விதம் இந்த விண்ணப்பம் அந்தப் பெரிய தலைவனின் பங்கில் துணிகரமானதாக காணப்படவில்லை. தேவன் இஸ்ரவேலின் சத்துருக்களை நிச்சயமாக கவிழ்ப்பார் என்கிற வாக்குத்தத்தத்தை யோசுவா பெற்றிருந்தான். எனினும் இஸ்ரவேலின் சேனைகளைச் சார்ந்து மாத்திரமே வெற்றி இருக்கிறது என்பதைப் போல் ஊக்கமான முயற்சி எடுத்தான். மனித பெலம் செய்யக்கூடிய அனைத்தையும் செய்து, பின்னர் தெய்வீக உதவிக்காக விசுவாசத்தோடு அழைத்தான். வெற்றியின் இரகசியம் தெய்வீக வல்லமையும் மனித முயற்சியும் இணைவதில் தான் இருக்கிறது. மாபெரும் விளைவுகளைச் சாதிக்கிறவர்கள் சர்வ வல்லவரின் புயத்தில் முழுமையாக சார்ந்து கொள்ளுகிறவர்களே. சூரியனே, நீ கிபியோன் மேலும், சந்திரனே, நீ ஆயலோன் பள்ளத்தாக்கின் மேலும், தரித்து நில்லுங்கள் என்று கட்டளையிட்ட மனிதன் கில்காலின் பாளயத்தில் மணிக்கணக்காக முகங்குப்புற விழுந்து கிடந்தவனே! ஜெபிக்கும் மனிதர்கள் வல்லமை கொண்ட மனிதர்கள். PPTam 654.4

சிருஷ்டிப்பு சிருஷ்டிகரின் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கிறது என்பதற்கு இந்தவல்லமையான அற்புதம் சான்று பகருகிறது. இந்த சரீரப்பிரகாரமான உலகத்தில் தெய்வீக முகவர்களை மனிதர்களிடமிருந்து மறைக்க - ஆதிகாரணரின் சோர்வில்லாத கிரியைகளை பார்வையிலிருந்து மறைக்க சாத்தான் வழிதேடுகிறான். இந்த அற்புதத்தில் இயற்கையை இயற்கையின் தேவனுக்கு மேலாக உயர்த்துகிறவர்கள் அனைவரும் கடிந்துகொள் ளப்படுகிறார்கள். PPTam 655.1

தமது சொந்த சித்தத்தின்படியே தமது சத்துருக்களின் வல்லமையை கவிழ்க்கும்படி இயற்கையின் வல்லமைகளை அக்கினியே, கல்மழையே, உறைந்தமழையே, மூடுபனியே, அவர் சொற்படி செய்யும் பெருங்காற்றே, (சங். 148:8) என்று தேவன் அழைக்கிறார். அவருடைய நோக்கத்தை எதிர்க்கும்படி புறஜாதி எமோரியர்கள் தங்களை நிறுத்தின போது, வானத்திலிருந்து பெரிய கற்களை இஸ்ரவேலின் சத்துருக்களின் மேல் வீசி ஆண்டவர் தலையிட்டார். கர்த்தர் தம்முடைய ஆயுதசாலையைத் திறந்து, தம்முடைய சினத்தின் அஸ்திராயுதங்களை எடுத்துக்கொண்டு (எரே. 50:25) வரும்போது இந்த பூமியின் சரித்திரத்தினுடைய கடைசி காட்சிகளில் மாபெரும் யுத்தம் ஒன்று நடக்கவிருப்பதாக நாம் அறிவிக்கப்பட்டிருக்கிறோம். உறைந்த மழையின் பண்ட சாலைகளுக்குள் நீ பிரவேசித்தாயோ? கல்மழையிருக்கிற பண்டசாலைகளைப் பார்த்தாயோ? ஆபத்து வருங்காலத்திலும், கலகமும் யுத்தமும் வருங்காலத்திலும், பிரயோகிக்கும்படி நான் அவைகளை வைத்துவைத்திருக்கிறேன் (யோபு 38:22, 23) என்று அவர் கேட்கிறார். PPTam 655.2

பரலோகத்தின் ஆலயத்திலுள்ள சிங்காசனத்திலிருந்து : ஆயிற்று என்று சொல்லிய பெருஞ்சத்தம் பிறக்கும் போது நடக்கவிருக்கிற மாபெரும் அழிவை வெளிப்படுத்துதல் காரன். தாலந்து நிறையான பெரிய கல்மழையும் வானத்திலிருந்து மனுஷர்மேல் விழுந்தது (வெளி. 1617, 21) என்று கூறுகிறான். PPTam 656.1