பாடுபடுகிறவர்களின் வேதனைகளை கிறிஸ்து அறிவார். தீய ஆவிகள் சரீரத்தை அலைக்கழிக்கும்போது, அந்தச் சாபம் கிறிஸ்துவுக்குப் புரியும். வாழ்க்கை ஓட்டத்தை வியாதிகள் தாக்கும்போது அதன் வேதனை அவருக்குப் புரியும். அவர் பூமியில் மனிதனாக இருந்தபோது, வியாதியஸ்தர்களைக் குணமாக்கினதுபோலவே இப்போதும் குணமாக்க ஆயத்தமாக இருக்கிறார். கிறிஸ்துவின் ஊழியர்கள் அவருடைய பிரதிநிதிகளாக, அவருடைய கிரியையின் ஊடகங்களாக இருக்கிறார்கள். அவர்கள்மூலம் குணமாக்கும் தம் வல்லமையைச் செயல்படுத்த அவர் விரும்புகிறார். 1 DA, 823,824 TamChS 178.1
வியாதியஸ்தரும் நிர்ப்ப்பாக்கியசாலிகளும் பிசாசுபிடித்தவர்களும் தேவனுடைய சத்தத்தைக் கேட்கவேண்டும் என்பது தேவனுடைய திட்டம். உலகம் அறியாத அளவுக்கு அவர் ஆறுதல்படுத்து கிறவர் என்பது மனித ஏதுகரங்கள்மூலமாக வெளிப்பட வேண்டுமென்று அவர் விரும்புகிறார். 2MH, 106 TamChS 178.2
மருத்துவ நற்செய்தி ஊழியத்தில் ஈடுபடுகிறவர்களின் பணி யில் கிறிஸ்துவும் உதவுகிறார். 37T, 51 TamChS 178.3
ஆண்டவர் அவர்கள் மூலம் செயல்பட்டார். அவர்கள் சென்ற இடங்களிலெல்லாம் வியாதியஸ்தர்கள் குணமானார்கள். தரித்திரருக்கு சுவிசேஷம் பிரசங்கிக்கப்பட்டது. 4AA, 106 TamChS 178.4
பெருநகரங்கள், சிறு நகரங்கள், கிராமங்கள் எல்லாம் சுற்றி வந்து, வியாதியஸ்தர்களைக் குணமாக்குவதற்கு இன்று கிறிஸ்து இவ்வுலகத்தில் இல்லை. ஆனால் தாம் ஆரம்பித்த மருத்துவ நற்செய்தி பணியை நாம் தொடர்ந்து நடத்துவதற்கு அவர் கட்டளை கொடுத்துள்ளார். 59T, 168 TamChS 178.5