Go to full page →

திருச்சபை ஒவ்வொன்றும் செய்யவேண்டிய ஊழியம் TamChS 178

சுகாதார சீர்திருத்தம் குறித்து ஒவ்வொரு திருச்சபையும் தாங்க வேண்டிய செய்தி ஒன்று உள்ளது. 66T, 370 TamChS 178.6

நம் தேசத்திலுள்ள ஒவ்வொரு திருச்சபையின் ஊழியத்திலும் ஓர் அங்கமாக மருத்துவ நற்செய்திப் பணி இருக்கவேண்டும். 76T, 289 TamChS 178.7

திருச்சபையின் ஒவ்வோர் அங்கத்தினரும் மருத்துவ நற்செய்திப் பணியில் உறுதியாக இறங்கவேண்டிய ஒரு காலக்கட்டத்திற்கு நாம் வந்திருக்கிறோம். 17T, 62 TamChS 178.8

நம் உலகத்தில் வேதனையைத் தணிப்பதற்கும், ஆண்டவருடைய திருச்சபையைச் சுத்திகரிப்பதற்கும் அவர் பயன்படுத்துகிற ஒரு வழிவகைதான் சுகாதாரச் சீர்திருத்த ஊழியம். உன்னதப் பணியாளருடன் சேர்ந்து பணியாற்றுவதன்மூலம் சரீர, ஆவிக்குரிய நலனைக் கொடுப்பதில் தேவனுடைய உதவிக்கரமாகச் செயல்படலாம் என்பதை மக்களுக்குப் போதியுங்கள். இந்தப் பணி பரலோக முத்திரையைப் பெற்றிருக்கிறது. வேறு விலைமதிப்புமிக்க சத்தியங்கள் மனதில் இடம்பிடிப்பதற்கு இந்த ஊழியம் கதவுகளைத் திறக்கும். இந்தப் பணியை புத்திசாலித்தனமாகக் கையாளுகிற அனைவருமே இதைச் செய்வதற்குச் சாத்தியமிருக்கிறது. 29T, 112,113 TamChS 179.1

புயல்போன்ற காலங்கள் காத்திருக்கின்றன. அதனால் அவநம்பிக்கையான, அதைரியமான ஒரு வார்த்தைகூட நாம் பேசக் கூடாது. பாவநோய் நிறைந்த ஓர் உலகத்திற்கான குணமாக்குதலின் செய்தியைப் பெற்றவர்கள் நாம் என்பதை மறக்கக்கூடாது. 3SpTB no.8, 24 TamChS 179.2

இந்தப் பணியைச் சரியாகச் செய்தால், திருச்சபைகள் புறக்கணித்த அநேக நிர்ப்பந்தமான பாவிகளை இரட்சிப்புக்குள் வழி நடத்தலாம். கிறிஸ்தவர்கள் செய்யக் கடமைப்பட்டுள்ள உதவிக்காக நம் விசுவாசத்தைச் சேராத அநேகர் ஏங்கி நிற்கிறார்கள். மக்கள் தங்கள் அயலகத்தார்மேல் மெய்யான அக்கறைகாட்டியிருந்தால் இக்காலத்திற்கான விசேஷித்த சத்தியங்கள் அநேகரைச்சென்று சேர்ந்திருக்கும். மக்கள் இருக்கிற இடத்திற்கே சென்று அவர்களுக்கு உதவுவதைப்போல இந்த ஊழியத்திற்கு அழகை வேறு எதுவும் கொடுக்காது; அல்லது, ஒருபோதும் கொடுக்கவும் முடியாது. தேவனை நேசிப்பதாகவும், அவருடைய கற்பனைகளைக் கைக்கொள்வதாகவும் சொல்லிக்கொள்கிறவர்கள் கிறிஸ்து ஊழி யம் செய்ததுபோல ஊழியம் செய்தால் இந்தச் செய்தியைப் பெற்றதில் ஆயிரக்கணக்கானோர் மகிழ்ந்திருப்பார்கள். மருத்துவ நற்செய்தி ஊழியத்தால் இவ்வாறு ஆண்களும் பெண்களும் ஆதாயப்பட்டு, கிறிஸ்துவையும் அவருடைய சத்தியத்தையும்பற்றிய இரட்சிப்புக்கேதுவான அறிவைப் பெறும்போது, அந்த ஊழியத்திற்காக பணத்தையும் பிரயாசத்தையும் முதலீடு செய்யலாம்; ஏனெனில், இது என்றென்றும் நிலைத்திருக்கிற பணியாகும். 46T, 280 TamChS 179.3

மருத்துவ நற்செய்திப்பணியில் தங்களுக்கு மெய்யான ஆர்வம் இருப்பதை நம் மக்கள் காட்டுவார்களாக. இதுசம்பந்தமான அறி வுரை புத்தகங்களை அவர்கள் வாசித்து, பயனுள்ள வாழ்க்கை வாழ தங்களை ஆயத்தப்படுத்துவார்களாக. அவர்களுக்கு ஏற்கனவே கிடைத்திருப்பவற்றைவிட இத்தகைய புத்தகங்கள் அதிக கவனத்திற்கும் பாராட்டிற்கும் உரியவை. சுகாதார நியதிகள்பற்றி அனைவரும் அறிந்திருக்கவேண்டும் என்கிற விசேஷித்த நோக்கத்திற்காக, அனைவருக்கும் நன்மையுண்டாகும்படி இவை எழுதப்பட்டுள்ளன. இந்த நியதிகளை ஆராய்ந்து, அதன்படி நடக்கிறவர்கள் சரீரப்பிரகாரமாகவும் ஆவிக்குரிய பிரகாரமாகவும் அதிகம் ஆசீர்வதிக்கப்படுவார்கள். சுகாதாரக் கொள்கைளை சரியாகப் புரிந்துகொள்வது, தொடர்ந்து அதிகரித்துவருகிற அநேக தீமைகளுக்கு எதிராக ஒரு பாதுகாப்பாக இருக்கும். 17T; 63 TamChS 179.4

சீர்கேட்டின் அடிமட்டத்திற்கே சென்று, தன்னடக்கமின்றியும் ஒழுக்கக்கேடாகவும் வாழ தங்களை ஒப்புக்கொடுத்தவர்கள் செவி சாய்க்கக்கூடிய மிகச்சரியான ஊழியமாக மருத்துவ நற்செய்தி ஊழியம் இருக்குமென எனக்கு அறிவுறுத்தப்பட்டது. ஆனால் அப்படிப்பட்டவர்களை அடையாளம் கண்டு, ஊக்கப்படுத்த வேண்டும். அவர்களைத் தூக்கிவிடுவதற்கு உறுதியும் பொறுமையும் ஊக்கமுமான முயற்சி தேவை.அவர்களாக வேதங்களை மீட்டெடுக்க முடியாது. கிறிஸ்துவின் அழைப்பை அவர்கள் கேட்கலாம்; ஆனால், அதன் அர்த்தம் புரியாத அளவுக்கு அவர்களுடைய காதுகள் மந்தமாக இருக்கும்; தங்களுக்கு இன்னமும் நன்மை இருக்கிறது என்பதைக் காணமுடியாத அளவுக்கு கண்கள் குருடாக இருக்கும். பாவங்களிலும் அக்கிரமங்களிலும் மரித்தநிலையில் இருப்பார்கள். ஆனாலும், சுவிசேஷ விருந்தில் பங்குபெறவிடாமல் இவர்களை ஒதுக்கக்கூடாது. ‘வா’ என்கிற அழைப்பை அவர்கள் பெறவேண்டும். அவர்கள் அபாத்திரராக உணர்ந்தாலும், ‘வரும்படி வருந்திக் கூட்டிக்கொண்டுவா’ என்று ஆண்டவர் சொல்கிறார். சாக்குப்போக்குகளுக்குச் செவிகொடுக்கவேண்டாம். அன்பாலும் இரக்கத்தாலும் அவர்களைப் பற்றிப்பிடியுங்கள். 26T, 279,280 TamChS 180.1

பிரசுரங்களை விநியோகிக்கிற இவ்வகைபணியை மேற்கொள்கிறவர்கள் மருத்துவ நற்செய்தி ஊழியம் செய்ய ஆயத்தப்பட்டவர்களாகச் செல்லவேண்டும். வியாதியஸ்தருக்கும் பாடுள்ளோருக்கும் உதவவேண்டும். இரக்கத்தின் இந்த ஊழியத்தால் பயனடைகிற அநேகர் ஜீவவார்த்தைகளுக்குச் செவிகொடுத்து, அவற்றை ஏற்றுக்கொள்வார்கள். 39T, 34 TamChS 180.2

மருத்துவ நற்செய்தி ஊழியத்தை விருப்பத்தோடு செய்வதற்கு ஆயத்தமாக இருப்பவர் யார்? ஒவ்வோர் ஊழியரும் போதுமான அளவுக்கு திறன்பெற்றவராக இருக்கவேண்டும். அப்போது இயேசுவிலுள்ள சத்தியத்தை அதன் சகல ஆழ அகலத்துடன் அறிவிக்க முடியும். 17T, 70 TamChS 181.1

ஆண்டவருடைய பணி தொடர்ந்து முன்னேறட்டும். மருத்துவ ஊழியப்பணியும் கல்விப்பணியும் சேர்ந்தே செய்யப்படட்டும். ஊக்கமும் அர்ப்பணிப்பும் புத்திசாலித்தனமும் திறமையும் உள்ள ஊழியர்கள் இல்லாததே நம்முடைய மிகப்பெரிய குறை என்பது எனக்கு உறுதியாகத் தெரியும். 29T, 168,169 TamChS 181.2

சமுதாயத்தில் பெரும்பாலான மக்கள் சுகாதாரச் சீர்திருத்தம் குறித்த ஜீவ நியதியை அறியாதவர்களாக இருப்பதால், அவர்களுக்கு அவற்றை எடுத்துச் செல்லவேண்டும். 39T, 118 TamChS 181.3

சுகாதாரச் சீர்திருத்தக் கல்வியாளர்களிடம்,’ தொடர்ந்து செல்லுங்கள்’ என்று சொல்லும்படி எனக்கு அறிவுறுத்தப்பட்டது. ஒழுக்கச் சீர்கேட்டின் அலையை பின்னுக்குத் தள்ளும்படியான செல்வாக்கை சிறிதும் குறைவின்றி உலகத்தில் காட்டவேண்டும். மூன்றாம் தூதனுடைய தூதைப் போதிப்பவர்கள் தாங்கள் அறிந்த நியதிகளில் உண்மையுள்ளவர்களாக நிற்பார்களாக. 49T, 113 TamChS 181.4