Go to full page →

உடல் நல வெளியீடுகள் TamChS 201

புத்தக ஊழியர்கள் தாங்கள் சந்திக்கும் நபர்களுடைய கவனத்தை நம்முடைய சுகாதார வெளியீடுகளுக்கு நேராகத் திருப்ப வேண்டும்; வியாதியஸ்தர்களைக் கவனிப்பது, நோய்களுக்குச் சிகிச்சையளிப்பது குறித்த முக்கிய அறிவுரைகள் இந்தப்பத்திரிக்கைகளில் இருப்பதாக நீங்கள் அவர்களிடம் சொல்லவேண்டும். அந்த அறிவுரைகளை வாசித்து அதன்படி நடந்தால், குடும்பத்தில் ஆரோக்கியம் இருக்குமென அவர்களிடம் சொல்லுங்கள். வாழ்க்கை அறிவியலை ஒவ்வொரு குடும்பத்தினரும் புரிந்துகொள்வது எவ்வளவு முக்கியமென விளக்குங்கள். சரீரத்தின் அற்புதச் செயல்பாட்டை உருவாக்கி, அதைச் செயல்படுத்தி வருபவருக்கு நேராக அவர்களுடைய சிந்தைகளைத் திருப்புங்கள். நம்முடைய சகலமனத் திறன்களையும் உறுப்புகளையும் ஞானமாக கையாண்டு, அதில் தேவனோடு ஒத்துழைப்பது நம் கடமையெனச் சொல்லுங்கள். TamChS 201.1

சரீரத்தின்மேல் சரியான கவனம் செலுத்துவது மிகப்பெரிய கடமை; அதற்கு அதன் உறுப்புகள் குறித்த அதிகப்பட்ச அறிவு அவசியம். பசியையும் உணர்ச்சி வெறிகளையும் திருப்திப்படுத்த சரீரத்தின் செயல்பாட்டை மனிதன் தவறாகப்பயன்படுத்தும்போது தேவன் கனவீனம்பண்ணப்படுகிறார்; அதனால் சரீரம் பெலவீனமடைந்து சங்கடப்படுகிறது. இவற்றை அவர்களிடம் சொல்லுங்கள். நீங்கள் விற்பனைக்கு வைத்திருக்கிற புத்தகங்களில் ஆரோக்கியம்குறித்த மிகமுக்கிய அறிவுரைகள் இருப்பதையும், அவற்றின் படி நடந்தால் அதிக உபத்திரவத்திலிருந்து தப்பலாம்; மருத்துவருக்குக் கொடுக்கும் அதிகபணத்தையும் மிச்சப்படுத்தலாம். இதையும் அவர்களிடம் சொல்லுங்கள். சற்று நேரமே பரிசோதிக்கிற மருத்துவரிடமிருந்து பெறுவதற்கு சாத்தியமற்ற ஆலோசனைகள் அந்தப் புத்தகங்களில் இருப்பதைச் சொல்லுங்கள். 1SW, Nov. 20, 1902 TamChS 201.2

சகமனிதர்கள் இரட்சிக்கப்படவேண்டும் என்கிற தீவிர ஆசையால் நிறைந்து, புத்தக ஊழியத்தில் வாலிபர்கள் இறங்கும்போது, ஆத்துமாக்கள் மனமாற்றமடைவதை அவர்கள் காணலாம். தங்கள் ஊழியத்தால் கர்த்தருக்கென ஓர் அறுவடையை அவர்கள் சேர்க்க முடியும். எனவே, தற்காலச் சத்தியத்தை அறிவிக்கும் நற்செய்தியாளர்களாக அவர்கள் புறப்பட்டுச் செல்வார்களாக; இளைப்படைந்தவர்களுக்கு சமயத்திற்கேற்ற வார்த்தைகளைப் பேச அறிந்துகொள்ளும்படி அதிக வெளிச்சத்திற்காகவும் அறிவுக்காகவும் தொடர்ந்து ஜெபிப்பார்களாக. இரக்கமான செயல்களைச் செய்வது ஆண்டவருக்கே ஊழியம் செய்வது என்பதை நினைவு கூர்ந்து, அதைச் செய்வதற்கான ஒவ்வொரு வாய்ப்பையும் அவர்கள் மேம்படுத்தவேண்டும். ஊழியத்திற்குச் செல்லும்போதெல்லாம் அவர்கள் தங்களோடு, உடல்நலப் புத்தகங்களையும் எடுத்துச் செல்லவேண்டும்; ஏனென்றால், சுகாதாரச் சீர்திருத்தமே நற்செய்தியின் வலக்கரமாக உள்ளது. 1 SW, Jan. 15, 1903 TamChS 201.3