Go to full page →

உபத்திரவம் ஏன் தூங்குகிறது TamChS 210

“கிறிஸ்து இயேசுவுக்குள் தேவபக்தியாய் நடக்கமனதாயிருக்கிற யாவரும் துன்பப்படுவார்கள்” என்று அப்போஸ்தலனாகிய பவுல் அறிவிக்கிறான். அப்படியானால், உபத்திரவம் இன்று நித்திரை நிலையில் இருப்பதுபோலக் காணப்படுவதற்கான காரணம் என்ன? திருச்சபை உலகத்தரத்திற்கு ஒத்துப்போய்விட்டது என்பதே காரணம். அதனால்தான் எந்த எதிர்ப்பும் எழும்புவதில்லை. கிறிஸ்துவின் நாட்களிலும் அவருடைய அப்போஸ்தலர்களுடைய நாட்களிலும் கிறிஸ்தவ விசுவாசத்தில் காணப்பட்ட பரிசுத்தமும் தூய்மையுமான தன்மை தற்போதைய நாட்களில் கிறிஸ்தவமார்க்கத்தில் காணப்படவில்லை .பாவத்தோடு சமரசமாகிற ஆவி காணப்படுவதாலும், வேத வசனத்தின் மாபெரும் சத்தியங்கள் அலட்சியமாகக் கருதப்படுவதாலும், சபையில் மெய்யான தேவபக்தி காணப்படாததாலும் கிறிஸ்தவ மார்க்கம் உலகத்தில் பிரபலமாக இருக்கிறது. ஆதிகாலத் திருச்சபையின் விசுவாசமும் வல்லமையும் மீண்டும் புதுப்பிக்கப்படட்டும்; அப்போது, உபத்திரவத்தின் ஆவி மீண்டும் எழுச்சியடையும்; உபத்திரவத்தின் அக்கினிப்பிழம்புகள் மறுபடியும் மூட்டப்படும். 3GC, 48 TamChS 210.2