சகல தேசங்களிலும் சிதறுண்டு கிடக்கும் பூமியின் குடிகளில், பாகாலுக்கு முழங்காலிடாதவர்களும் இருப்பார்கள். இரவில் மட்டுமே தென்படும் வானத்து நட்சத்திரங்கள்போல, பூமியை இருள் மூடும்போதும், மக்களை அந்தகாரம் சூழும்போதும் இந்த மெய் விசுவாசிகள் ஜொலிப்பார்கள். அஞ்ஞான ஆப்ரிக்காவிலும், ஐரோப்பாவிலுள்ள கத்தோலிக்கத் தேசங்களிலும், தென் அமெரிக்காவிலும், சீனாவிலும், இந்தியாவிலும், கடற்தீவுகளிலும், பூமியின் சகல அந்தகாரப்பகுதிகளிலும், தம்மால் தெரிந்துகொள்ளப்பட்டோரை தேவன் தமக்காக வைத்துள்ளார். இருளில் ஜொலித்து, தேவபிரமாணத்திற்குக் கீழ்ப்படிவதால் கிடைக்கிற சீர்திருத்த வல்லமையை வான்வெள்ளிகளைப்போல அவர்கள் அஞ்ஞான உகிற்குத் தெளிவாக வெளிப்படுத்துவார்கள். ஒவ்வொரு தேசத்திலும், சகல மக்களுக்கும் பாஷைக்காரருக்கும்மத்தியில் இப்பொழுதும் கூட அவர்கள் இருக்கிறார்கள். ஆனால், வழிவிலகல் மிதமிஞ்சும் வேளையில், சிறியோர், பெரியோர், ஐசுவரியவான்கள், தரித்திரர், சுயாதீனர், அடிமைகள்’ என பொய்யான ஓய்வு நாளைத் தொழாத அனைவரும் மரணதண்டனை பெறும்படியான ஓர் அடையாளத்தைக் கொடுக்க சாத்தான் முழுமூச்சில் முயலும் போது, ‘குற்றமற்றவர்களும் கபடற்றவர்களும் தேவனுடைய மாசற்ற பிள்ளைகளுமான’ இவர்கள், ‘உலகத்திலே சுடர்களைப் போலப் பிரகாசிப்பார்கள். ‘வெளி 13:16; பிலி 2:14,15. அந்தகாரம் அதிகரிக்க அதிகரிக்க, இவர்களும் அதிகமதிகமாக ஜொலிப்பார்கள். 2 PK, 188,189 TamChS 217.1
உபத்திரவம் எனும் புயல் நம்மேல் சடிதியாக வீசும்போது, உண்மையுள்ள ஆடுகள் மெய்யான மேய்ப்பனின் சத்தத்தைக்கேட்கும். தொலைந்துபோனோரை மீட்பதற்கு சுயதியாக முயற்சிகள் எடுக்கப்படும். மந்தையை விட்டு வழிவிலகிச்சென்ற அநேகர் மாபெரும் மேய்ப்பனின் மந்தைக்குள் மீண்டும் வருவார்கள். 3 STA, Jan. 26, 1903 TamChS 217.2