Go to full page →

தெய்வீக பாதுகாப்பு TamChS 218

இந்தப் போராட்டம் முடிவற்றது என்றாலும், தனியே போராடும்படி எவரும் விட்டு விடப்படவில்லை. தேவனுக்கு முன்பாகத் தாழ்மையோடு நடக்கிறவர்களுக்குத் தேவதூதர்கள் உதவி செய்து பாதுகாக்கிறார்கள். தம்மில் நம்பிக்கைவைக்கிற ஒருவரையும் தேவன் புறக்கணிக்கமாட்டார். தீமையிலிருந்து பாதுகாப்பு வேண்டி தம் பிள்ளைகள் தம்மிடம் வரும்போது, அவர்கள்மேல் அன்பும் இரக்கமும் கொண்டு அவர்கள் நிமித்தம் சத்துருவுக்கு எதிராக ஒரு கொடியை ஏற்றுவார். அவர்களைத் தொடாதே, அவர்கள் என்னுடையவர்கள்; என் உள்ளங்கைகளில் நான் அவர்களை வரைந் துள்ளேன்”என்று சொல்லுவார். 1PK, 571 TamChS 218.1

நீதியின் நிமித்தம் துன்பப்படுகிறவர்களுக்குப் பரலோகம்மிக அருகாமையில் இருக்கிறது. தமக்கு உண்மையாயிருப்போரின் நலன்களில்தான் கிறிஸ்து அக்கறை செலுத்துகிறார்; தம்முடைய பரிசுத்தவான்களின் நிமித்தம் பாடனுபவிக்கிறார்; அவரால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களைத் தொடுகிற எவனும் அவரைத் தொடுகிறான். சரீரப்பிரகாரமாக நேரிடும் ஆபத்திலிருந்து விடுவிக்க சமீபமாகஇருக்கும் அதே வல்லமைதான் பெரும்பாதகத்திலிருந்தும் இரட்சிக்கவும் சமீபத்தில் இருக்கிறது. தேவஊழியன் எல்லாச் சூழ்நிலைகளிலும் தன் ஒழுக்கத்தைக் காத்துக்கொள்ளவும், தேவ கிருபைமூலம் வெற்றிபெறவும் அது உதவுகிறது.” 2PK, 545 TamChS 218.2

தம் சபைக்கு ஏற்படுகிற ஆபத்துகளையும், அதன் சத்துருக்களால் அதற்கு ஏற்படும் பாதிப்புகளையும் தேவன் காணமறந்தவர் போலவும் கண்டுகொள்ளாதவர் போலவும் சில சமயங்களில் தெரியலாம். ஆனால் தேவன் மறக்கவில்லை. தம்முடைய சபையைப் போல தேவனுடைய இருதயத்திற்கு மிகவும் பிரியமானது இவ்வுலகில் வேறேதும் இல்லை. உலகக் கொள்கைகள் அதன் சாதனையைக் கெடுத்துப்போடுவது தேவசித்தமல்ல. சாத்தானின் சோதனைகளால் மேற்கொள்ளும்படி, அவர் தம் மக்களை விட்டு விடவில்லை. தம்மைத் திரித்துக்காட்டுவோரை அவர் தண்டிப்பார். ஆனால், மெய்யாக மனம்மாறும் யாவருக்கும் கிருபைகாட்டுவார். 3PK, 590 TamChS 218.3