Go to full page →

ஆதி இஸ்ரவேலரின் தோல்வியிலிருந்து ஒரு பாடம் TamChS 243

கானானுக்குள் சென்றதும் அந்தத் தேசம் முழுவதையும் இஸ்ரவேலர்தங்களுக்குச் சொந்தமாக்கவேண்டும் என்பதுதேவனுடைய திட்டம். அதை அவர்கள் செய்யவில்லை. அத்தேசத்தை அரைகுறையாக ஆக்கிரமித்து, தங்கள் வெற்றியின் பலனை அனுபவிப்பதில் திருப்தியடைந்து விட்டார்கள். தாங்கள் ஏற்கனவே ஆக்கிரமித்த பகுதிகளைச் சுற்றியே குடியிருந்தார்களே தவிர, புதிதாக இடங்களைப் பிடிக்கும்படி முன்னேறிச் செல்லவில்லை. அவநம்பிக்கையும் மெத்தனப்போக்கும்தான் காரணம். அதனால் தேவனை விட்டு பின்வாங்கத் துவங்கினார்கள். அவருடைய நோக்கத்தை அவர்கள் நிறைவேற்றத் தவறியதால், அவர்களை ஆசீர்வதிப்பதாக தேவன் கொடுத்திருந்த வாக்குறுதியை நிறைவேற்றுவதும் இயலாமற்போயிற்று. இன்றைய சபையும் இதேபோல செயல்படவில்லையா? உலகம் முழுவதிலும் சுவிசேஷச் செய்தி அறிவிக்கப்பட வேண்டியுள்ளது; ஆனால் கிறிஸ்தவர்களெனச் சொல்லிக்கொள்பவர்கள், சுவிசேஷத்தின் சிலாக்கியங்களை தாங்கள் மட்டுமே அனுபவிக்கும்படி கூடுகிறார்கள். புதிய பகுதிகளில் கால்மிதித்து, தூரத்திலுள்ள பகுதிகளுக்கும் இரட்சிப்பின் செய்தியைக் கொண்டு செல்லவேண்டியதின் அவசியத்தை உணர்வதில்லை. ‘நீங்கள் உலகெங்கும் போய், சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள்” என்கிற கிறிஸ்துவின் ஊழியக்கட்டளையை நிறைவேற்ற மறுக்கின்றார்கள். யூத சபையின் பாவத்தைவிட எவ்விதத்திலும் இது குறைந்ததா? 28T, 119 TamChS 243.1