Go to full page →

17—கிறிஸ்தவ உதவிப்பணி TamChS 244

கிறிஸ்துவின் அடிச்சுவடுகளைப் பின்தொடர்தல் TamChS 244

பூமியில் கிறிஸ்து வாழ்ந்த இடங்களுக்குச் சென்று பார்ப்பதும், அவர் நடந்த இடங்களில் நடந்துசெல்வதும், அவர் எந்த ஏரியின் அருகில் நின்று போதிப்பதை விரும்பினாரோ அந்த ஏரியைப் பார்ப்பதும், அவர் பார்த்து மகிழ்ந்த மலைகளையும் பள்ளத்தாக்குகளையும் காண்பதும் ஒரு பெரிய சிலாக்கியமென அநேகர் நினைக்கலாம். ஆனால், இயேசுவின் அடிச்சுவடுகளில் நடப்பதற்கு நாம் நாசரேத்துக்கோ, கப்பர்நகூமுக்கோ பெத்தானியாவுக்கோ போக வேண்டியதில்லை. வியாதியஸ்தரின் அருகிலும், ஏழைகள் வாழும் குடிசைகளிலும், பெருநகரத்தின் நெருக்கடிமிக்க சந்துக்களிலும், ஆறுதலுக்காக ஏங்குகிற இருதயத்தோடு வாழ்கிறவர்களின் பகுதிகளிலும் அவருடைய அடிச்சுவடுகளைக் காணலாம். இயேசு பூமியில் இருந்தபோது என்ன செய்தாரோ, அவ்வாறு நாம் செய்யும் போது, அவருடைய அடிச்சுவடுகளில் நடக்கிறோம். 1 DA, 640 TamChS 244.1

தாம் கண்ட ஒவ்வொரு துன்பத்தையும் நீக்குவதற்கு இயேசு பிரயாசப்பட்டார். கொடுப்பதற்கு அவரிடம் பணமில்லை ; ஆனால், தம்மை விட அதிக தேவையிலிருந்தோரின் தேவைகளைச் சந்திக் கும்படி உணவு உண்ணாமல்கூட இருந்திருக்கிறார். தங்களுடைய செல்வாக்கின் தாக்கத்தை இயேசுவின் செல்வாக்கு மாற்றியதை அவருடைய சகோதரர்கள் உணர்ந்தார்கள். அவர்களிடம் இல்லாத, அவர்கள் பெறவிரும்பாத ஒரு சாதுரியம் அவரிடம் இருந்தது. ஏழைகளிடமும் நலிந்தவர்களிடமும் அவர்கள் கடினமாகப் பேசியபோது, இயேசு ஏழைகளைத் தேடிச்சென்று, தைரியமூட்டுகிற வார்த்தைகளைப் பேசினார். தேவையிலிருந்தோருக்கு குளிர்ந்த நீர் கொடுத்து, தாம் சாப்பிடும் உணவையும் அவர்களுடைய கரங்களில் கொடுத்துவிடுவார். அவர்களுடைய வேதனைகளை அவர் தணித்த செயலானது, அவர் போதித்த இரக்கத்திற்கு இசைந்திருந்தது; எனவே, மக்கள் மனதில் அவை ஆழமாகப்பதிந்தன. 1DA, 86,87 TamChS 244.2