Go to full page →

நினைவில் வைக்கவேண்டியவை TamChS 248

நம்முடைய கண்களுக்குத் தெரியாத அத்தியாயங்கள் பிறருடைய அனுபவங்களில் இருக்கின்றன என்பதை நாம் யாருடன் பழகினாலும் நினைவில் கொள்ளவேண்டும். நாம் ஆர்வத்தோடு தேடினாலும் காணமுடியாதபடி மறைக்கப்பட்ட சோக வரலாறுகள் அவர்கள் நினைவுகளில் பதிந்திருக்கும். சோதனையான சூழ்நிலைகளால் உண்டான கடும்போராட்டங்களும், குடும்பவாழ்க்கையின் பிரச்சனைகளும் வெகுகாலமாக நினைவில் பதிந்திருந்து, தினம் தினம் தைரியத்தையும் தன்னம்பிக்கையையும் விசுவாசத்தையும் பெலவீனப்படுத்திக் கொண்டிருக்கும். வாழ்க்கைப்போராட்டத்தில் சச்சரவுகளோடு போராடிக்கொண்டிருப்பவர்களை சற்றே அன்புடன் கவனிப்பதற்கு முயற்சிப்பதன்மூலம் அவர்களைப் பெலப்படுத்தி, ஊக்கப்படுத்தலாம். அப்படிப்பட்டவர்களின் கரங்களை உண்மையான நண்பன் ஒருவன் அன்பாகவும் உறுதியாகவும் பிடித் தாலே அது பொன்னையும் வெள்ளியையும் விட மேலானது. அன்பின் வார்த்தைகள் எல்லாம் தூதர்களின் புன்னகையைப் போல வரவேற்கத்தக்கவை. TamChS 248.3

கடுமையான வறுமையில் சிக்கி, கொஞ்ச சம்பளத்திற்கும் மிகக்கடினமான உழைத்து, வாழ்க்கையின் அடிப்படைத் தேவைகளுக்கு மட்டுமே சம்பாதிக்கக்கூடியவர்கள் ஏராளமானோர் இருக்கிறார்கள். இனி நன்மைவரும் என்கிற எந்த நம்பிக்கையும் இல்லாமல், வறுமையும் கடும் பிரயாசமும் அவர்களுடைய பாரத்தைக் கனமாக்குகின்றன. கூடவே வேதனையும் வியாதியும் சேர்ந்துவிட்டால், அந்தப்பாரத்தைத் தாங்கவே முடியாது. நீண்டகால வறுமைக்கும் ஒடுக்கத்துக்கும் ஆளாகி, நிவாரணத்திற்கு எங்கே செல்வதென்றே தெரியாது இருக்கிறார்கள். அவர்களுடைய பாடுகளிலும் மனவேதனைகளிலும் ஏமாற்றங்களிலும் அவர்களுக்கு பரிவுகாட்டுங்கள். அவர்களுக்கு உதவி செய்ய இது வழியைத் திறக்கும். அவர்களுக்கு தேவனுடைய வாக்குறுதிகளைக் கூறுங்கள். அவர்களோடு சேர்ந்தும் அவர்களுக்காகவும் ஜெபியுங்கள். அவர்களுக்கு நம்பிக்கை ஊட்டுங்கள். 1MH, 158 TamChS 249.1

அநேகருக்கு வாழ்க்கை ஒரு வேதனையான போராட்டமாக இருக்கிறது; தங்கள் குறைவுகளை நினைத்து நம்பிக்கை இழக்கிறார்கள்; அவிசுவாசிக்கிறார்கள். தாங்கள் நன்றி பாராட்ட எதுவுமில்லையென நினைக்கிறார்கள். போராட்டத்திலும் தனிமையிலும் இருப்பவர்களிடம் அன்பாகப் பேசுவதும், அவர்களைப் பரிவோடு நோக்குவதும், மதிப்புகாட்டுவதும் கடும்தாகத்தில் இருப்பவருக்கு ஒரு குவளை குளிர்ந்த நீரைக் கொடுப்பது போன்றது. களைத்திருக்கிறவர்களின் தோள்களை அழுத்தும் பாரங்களை பரிவான ஒரு வார்த்தையும், அன்பான ஒரு செயலும் இறக்கிவைக்கும். சுயநலமற்ற இரக்கத்தோடு பேசுவதும் செய்வதும் தொலைந்து போனமனித இனத்திற்கு கிறிஸ்து காட்டிய அன்பின் வெளிப்பாடாக இருக்கின்றன. 2MB, 23 TamChS 249.2