Go to full page →

உதவிக்கரம் நீட்டுதல் TamChS 249

தீமைகளிலெல்லாம் பெரியது பாவம், பாவிகள்மேல் பரிவு காட்டி அவர்களுக்கு உதவவேண்டியது நம் கடமை. ஆனால் எல்லாரையும் இதே பாணியில் ஆதாயப்படுத்த முடியாது. தங்கள் ஆத்துமப் பசியை வெளிகாட்டாத அநேகர் இருக்கிறார்கள். இப் படிப்பட்டவர்களுக்கு அன்பான ஒரு வார்த்தை அல்லது அன்பான நினைவு கூருதலால் அதிகமாக உதவலாம். தாங்கள் மிகப்பெரும் தேவையிலிருந்தாலும் அதை அறியாதநிலையில் பலர் இருக்கிறார்கள். ஆத்துமா கடுமையான வறட்சியில் இருப்பதை அவர்கள் உணர்வதில்லை. பெருந்திரளானவர்கள் பாவத்தில் எவ்வளவுக்கு மூழ்கியிருக்கிறார்கள் தெரியுமா? நித்திய உண்மைகள் குறித்த உணர்வுகளை இழந்திருப்பார்கள்; தேவனுக்கொத்த தன்மைகளை இழந்திருப்பார்கள்; ‘ஆத்தும இரட்சிப்பு தேவையா? தேவையில்லையா?’ என்பதே தெரியாமல் போயிருக்கும். தேவன்மேல் விசுவாசமோ, மனிதனில் நம்பிக்கையோ அவர்களுக்கு இருக்காது. நாம் பாரபட்சமற்ற அன்போடு அணுகினால்மட்டுமே அவர்களை ஆதாயப்படுத்த முடியும்.அவர்களுடைய சரீரப்பிரகாரமான தேவைகளை முதலில் சந்திக்கவேண்டும். அவர்களுக்கு உணவு கொடுத்து, சுத்தப்படுத்தி, சிறந்த உடைகளை உடுத்துவிக்கவேண்டும். உங்கள் சுயநலமற்ற அன்பைச் செயலில் அவர்கள் காணும் போது, கிறிஸ்துவின் அன்பில் அவர்கள் நம்பிக்கைகொள்வது எளிதாக இருக்கும். TamChS 249.3

தவறுசெய்கிற அநேகர் அதற்காக வெட்கப்படுகிறார்கள்; தாங்கள் முட்டாள்தனமாக நடந்ததை உணர்கிறார்கள். தங்களுடைய குற்றங்களையும் தவறுகளையுமே யோசித்து, நம்பிக்கையற்ற நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். இப்படிப்பட்ட ஆத்துமாக்களை நாம் புறக்கணிக்கக்கூடாது. நீரோட்டத்திற்கு எதிராக ஒருவர் நீந்த வேண்டியிருந்தால், நீரின் போக்கு பலத்த ஆற்றலுடன் அவரைப் பின்னுக்குத் தள்ளும். மூழ்கிக்கொண்டிருந்த பேதுருவைத் தூக்க நம் மூத்த சகோதரர் எவ்வாறு கரம் நீட்டினாரோ, அதுபோல அவர்களுக்கு உதவிக்கரம் நீட்டவேண்டும். நம்பிக்கையூட்டும் வார்த்தைகளை அவரிடம் பேசவேண்டும்; அந்த வார்த்தைகள் அவருக்குள் தன்னம்பிக்கையை உண்டாக்கி, அவருடைய அன்பை விழிக்கச் செய்யவேண்டும். 1COL, 387 TamChS 250.1

பாவவாழ்க்கையால் களைப்படைந்து, விடுதலைக்காக எங்கே செல்ல வேண்டுமென தெரியாமல் இருக்கிற ஆத்துமாவுக்கு மனதுருக்கமுள்ள இரட்சகரைப்பற்றிச் சொல்லுங்கள்.அவருடைய கரத்தைப் பிடித்து, அவரைத் தூக்கிவிடுங்கள். தைரியமும் நம்பிக்கையும் உண்டாக்கக்கூடிய வார்த்தைகளை அவரிடம் பேசுங்கள். இரட்சகரின் கரத்தை அவர் பிடித்துக்கொள்ள அவருக்கு உதவுங்கள். 2MH, 168 TamChS 250.2