Go to full page →

விருந்தோம்பல் ஒரு கிறிஸ்தவ கடமை TamChS 251

மற்றவர்களுடைய நன்மைக்காக வாழ்வதும், மற்றவர்களை வாழ்த்துவதும், விருந்தோம்பலுடன் நடத்துவதும் இவ்வுலகில் நம் கடமை; நம் சமுதாயத்திற்கும் வீட்டிலுள்ளவர்களுக்கும் நன்மை செய்வதிலும், உண்மையிலேயே நம் உதவி அவசியமானவர்களுக்கு உதவி செய்வதிலும் சிரமங்கள் ஏற்படலாம். தேவையற்றதென இந்தச் சிரமங்களை சிலர் தவிர்க்கிறார்கள். ஆனால், யாராவது ஒருவர் அவற்றைத் தாங்கித்தான் ஆகவேண்டும். பொதுவாகவே சகோதரர்கள் விருந்தோம்புகிறவர்களாக இருப்பதில்லை; இந்தக் கிறிஸ்தவக் கடமைகளில் தாங்கள் சுமக்க வேண்டியவற்றைச் சுமப்பதும் இல்லை. உதவி தேவைப்படுகிறவர்களுக்கு உதவி செய்வதை சந்தோஷமாக ஏற்கிறவர்களும், அதைச் செய்ய விருப்பத்தோடு இருக்கிறவர்களும்தான் பிறர் பாரத்தைச் சுமக்கிறார்கள். 12T; 645 TamChS 251.1

“அந்நியரை உபசரிக்க மறவாதிருங்கள்; அதினாலே சிலர் அறியாமல் தேவதூதரையும் உபசரித்ததுண்டு.” எபி 13:2. இந்த வார்த்தைகள் முற்காலத்தில் எழுதப்பட்டபோதிலும் இவைதங்கள் மகிமையை இழந்துபோகவில்லை. மாறுவேடம் பூண்டு வருகிற ஆசீர்வாதமான தருணங்களை நம் பரலோகப் பிதா இன்றும் தம் பிள்ளைகள் செல்லும் பாதையில் வைத்துவருகிறார். அந்தத் தருணங்களைப் பயன்படுத்துகிறவர்கள் மேன்மையான சந்தோஷத் தைக் கண்டடையலாம். 2PK, 132, TamChS 251.2