சிலர், பூலோக சொத்துக்களை தாங்கள் இழக்கநேரிடுமெனப் பயந்து, தங்கள் பண்ணைகளிலும் தொழிலிலும் அதிக நேரத்தைச் செலவழிப்பதற்காக, தேவனை ஆராதிப்பதற்காக ஒன்றாகக் கூடி வருவதையும் ஜெபிப்பதையும் விட்டு விடுகிறார்கள். எந்த உலகத்தின்மேல் அவர்களுடைய சிந்தை முக்கியமாக நிலைத்திருக்கிறது என்பதை தங்களுடைய கிரியைகளால் காட்டுகிறார்கள். இவ்வுலக வாழ்க்கையின் காரியங்களுக்காக தங்களுடைய ஆவிக்குரிய வளர்ச்சிக்கு மிகவும் அவசியமான ஆவிக்குரிய சிலாக்கியங்களைப் பலியிடுகிறார்கள்; தேவசித்தம் குறித்த அறிவைப்பெறத் தவறுகிறார்கள். கிறிஸ்தவ குணம் அவர்களில் பூரணப்படுவதில்லை ; தேவனுடைய அளவுகோலையும் எட்டுவதில்லை. தங்களுடைய லௌகீக, உலகப்பிரகாரமான நலன்களுக்கு முக்கியத்துவம் அளிக்கிறார்கள்; தேவனுக்குச் செலவிடவேண்டிய நேரத்தைச் செலவிடாமல், அவரைக் கொள்ளையிடுகிறார்கள். அப்படிப்பட்ட நபர்களை தேவன் கவனிக்கிறார்; ஆசீர்வாதத்திற்குப் பதிலாகச் சாபத்தைப் பெறுகிறார்கள். 22T, 654 TamChS 280.1