Go to full page →

இச்சையடக்கச் சீர்திருத்தம் TamChS 286

இச்சையடக்கத்தோடு வாழ்பவர்கள் எனச் சொல்லிக்கொள்வோரில் செவந்த்-டே அட்வென்டிஸ்டினர்தான் முன்னணியில் நிற்கவேண்டும். 2 GW, 384 TamChS 286.1

இச்சையடக்கம் குறித்த கேள்வியைப் பொறுத்தவரை, எந்தத் தடுமாற்றமும் இல்லாமல் நில்லுங்கள். கற்பாறையைப்போல உறுதியாயிருங்கள். 3GW, 394 TamChS 286.2

பொது இடங்களில் பிரசங்கம் செய்வதுதவிர, இச்சையடக்கம் சம்பந்தமான விஷயங்களில் நாம் செய்யவேண்டிய ஓர் ஊழியம் உள்ளது. துண்டுப்பிரதிகளிலும் நம் பத்திரிக்கைகளிலும் நம் நியதிகளை வெளியிட வேண்டும். சத்தியத்தை அறியாதோருடன் தொடர்பு கொள்வதற்காக மக்களை அவர்களுடைய கடமை குறித்து விழிக்கச்செய்ய எல்லா வழிகளிலும் முயலவேண்டும். நாம் எவ்வளவுக்கு சுயமறுப்போடும் சுயதியாகத்தோடும் முயற்சிகளை எடுத்தோமோ, அவ்வளவுக்குத்தான் நம் ஊழியப்பணியில் வெற்றி கிடைத்திருக்கிறது. நாம் திருச்சபையாக ஆண்டவருக்குமுன் நம்மைத் தாழ்த்தியிருக்கவேண்டும்; தெளிவாகவும் நேரடியாகவும் இச்சையடக்கச் சத்தியத்தை அறிவித்திருக்க வேண்டும்; அப்போது நாம் எவ்வளவு அதிகம் சாதித்திருப்போம் என்பதை ஆண்டவர் மட்டுமே அறிவார். 4GW, 385 TamChS 286.3

இச்சையடக்க விஷயத்தில் தேவ மக்கள் உறுதியான ஆதரவு கொடுக்கவேண்டும். இச்சையடக்கம் இல்லாத நிலை மேலோங்கி வருகிறது; சுய இன்ப நாட்டங்கள் அதிகரித்துவருகின்றன; சுகாதாரச் சீர்திருத்தம் பேசுகிற வெளியீடுகள் அதிகம் தேவைப்படுகின்றன. இந்த விஷயம்பற்றிப் பேசுகிற புத்தகங்கள் சுவிசேஷத்தின் உதவிக்கரமாக இருக்கின்றன; சத்தியத்தை சிறப்பாக அறிந்து கொள்ளும் படி வேதாகமத்தை ஆராய ஆத்துமாக்களை வழி நடத்துகின்றன. இச்சை எனும் மாபெரும் தீங்கிற்கு எதிராக எச்சரிப்பின் செய்தியை உரக்கக்கூறவேண்டும். ஓய்வுநாளைக் கைக்கொள்கிறவர்கள் நம் சுகாதாரப் புத்தகங்களும் பத்திரிக்கைகளும் சொல்கிற அறிவுரைகளை வாசித்து, அவற்றின்படி நடந்தால் இதைச் சாதிக்கலாம். இதைவிடவும் அதிகமாக அவர்கள் செய்யவேண்டும்: தங்கள் அக்கம்பக்கத்தாருக்கு மத்தியில் இந்த வெளியீடுகளைக் கொடுப்பதற்கு ஊக்கமான முயற்சிகளை எடுக்கவேண்டும். 1 SW, Nov. 20, 1902 TamChS 286.4

“மது, புகையிலை, இதுபோன்ற சிற்றின்ப நாட்டங்கள் ஆகியவற்றுக்குச் செலவழிக்கிற பணத்தை மிச்சப்படுத்துவேன். வியாதியஸ்தருக்கும் ஏழைகளுக்கும் நிவாரணம் வழங்கவும், இந்த உலகத்தில் பயனுள்ள வாழ்க்கை வாழப் பிள்ளைகளுக்கும் வாலிபர்களுக்கும் பயிற்சி கொடுக்கவும் அந்தப் பணத்தைச் செலவிடுவேன்” என்று உறுதிமொழி எடுக்கச் சொல்லுங்கள். 2MH, 211 TamChS 287.1