Go to full page →

பரலோகப் பதிவேடு TamChS 290

ஒவ்வொரு மனிதனுடைய கிரியையையும் தூதர்கள் உண்மையோடு பதிவுசெய்கிறார்கள். 21T, 198 TamChS 290.1

அன்பான ஒவ்வொரு செயலும், இரக்கமான ஒவ்வொரு வார்த்தையும், உபத்திரவத்திலும் ஒடுக்கத்திலும் இருப்பவர்களுக்காகச் செய்யப்படும் ஒவ்வொரு ஜெபமும் நித்திய சிங்காசனத்திற்கு முன்பாகப் பதிவுசெய்யப்பட்டு, அழியாத பரலோகப் பதிவில் வைக்கப்படுகின்றன. 35T, 133 TamChS 290.2

இருளை அகற்றவும், கிறிஸ்துவைப்பற்றிய அறிவை தூர தேசத்தில் பரப்பவும் நாம் எடுக்கிற ஒவ்வொரு வெற்றிகரமான முயற்சி பற்றிய அறிக்கை பரலோகத்திற்குக் கொண்டுசெல்லப்படுகிறது. அந்தச் செயலை பிதாவுக்கு முன்பாக நினைவுகூரும்போது, பரலோகச் சேனை முழுவதிலும் சந்தோஷம் நிரம்பி வழிகிறது. 4 AA, 154 TamChS 290.3

நமக்கு உதவியாளர்களாக இருக்கும்படி தூதர்களுக்கு தேவன் கட்டளையிட்டிருக்கிறார். பூமிக்கும் பரலோகத்திற்கும் வருவதும் போவதுமாக இருக்கிறார்கள்; மனுபுத்திரரின் கிரியைகள் பற்றிய பதிவை பரலோகத்திற்குக் கொண்டுசெல்கிறார்கள். 5 SW, Apr. 2, 1903 TamChS 290.4

உன்னதத்தில் பதிவு செய்யப்பட்டு வருகிற ஒரு பதிவுகுறித்து ஞாபகம் இருந்தால் நலமாயிருக்கும். அந்தப் பதிவுப்புத்தகத்தில் எதுவும் விடுபடப்போவதும் இல்லை; தவறு ஏற்படப்போவதும் இல்லை; அதிலிருந்துதான் அவர்கள் நியாயந்தீர்க்கப்படுவார்கள். தேவனுடைய சேவையில், புறக்கணிக்கப்படும் ஒவ்வொரு தருணமும் அங்குப் பதிவுசெய்யப்படப் போகின்றன; மேலும், அன்பாலும் விசுவாசத்தாலும் விளைந்த ஒவ்வொரு செயலும் நித்தியமாக அங்குப் பதிவு செய்யப்பட்ட நிலையிலேயே இருக்கும். 6PK, 639 TamChS 290.5