கிறிஸ்தவ முயற்சிகளுக்கு அல்பாவும் ஓமேகாவுமாக இருப்பவரின் நோக்கத்தை நிறைவேற்றுவதற்கே நம் வசதிவாய்ப்புகளைச் செலவிடவேண்டும். 59T, 49 TamChS 287.5
பணம் முக்கியம்தான்; பணத்தால் ஏராளமான நன்மைகளைச் செய்யமுடியும். தேவபிள்ளைகளின் கரங்களில் அது இருந்தால், பசியுள்ளோரைப் போஷிக்கவும், தாகமுள்ளோரின் தாகங்தணிக்கவும், வஸ்திரமில்லாதோரை உடுத்துவிக்கவும் பயன்படும். ஒடுக்கப்படுவோருக்கு அது ஒரு பாதுகாப்பு. நோயுற்றோருக்கு உதவுவதற்கான வழி. ஆனால் வாழ்வின் தேவைகளைச் சந்திக்கவும், மற்றவர்களுக்கு உதவி செய்யவும், கிறிஸ்துவின் நோக்கத்தை முன்னெடுக்கவும் பயன்பட்டாலொழிய பணம் வெறும் மணலுக்குத் தான் சமம். 1COL, 351 TamChS 287.6
தமது ஊழியம் தொடர்ந்து நடைபெறுவதற்கான திட்டங்களை தேவன்தாமே உருவாக்கினார். மேலும், தம் நோக்கத்திற்கு உதவி செய்யும்படி அவர் அழைக்கும்போது, “ஆண்டவனே, உம்முடைய ராத்தலினால் கூடுதலாக ஆதாயம் கிடைத்தது” என்று அவர்கள் பதில் சொல்லும்படி, வசதிவாய்ப்புகளை பரிபூரணமாக தம் மக்களுக்கு அருளியிருக்கிறார்.” 29T, 58 TamChS 288.1
மறுமை உலகத்திற்குள் பணத்தை எடுத்துச் செல்லமுடியாது. அங்கு அது தேவையுமில்லை. ஆனால் கிறிஸ்துவிற்கு ஆத்துமாக்களை ஆதாயம் பண்ணுவதற்காகச் செய்யப்படுகிற நற்கிரியைகள் பரலோக மன்றங்களுக்குக் கொண்டுசெல்லப்படுகின்றன. கர்த்தருடைய ஈவுகளை தங்களுடைய சுயநலத்திற்காக மட்டுமே செலவிட்டு, ஏழ்மையிலிருக்கும் தங்கள் சகமனிதர்களுக்கு உதவவும், உலகத்தில் தேவ ஊழியத்தை வளர்க்கவும் எதுவுமே செய்யால் இருப்பவர்கள், தங்கள் சிருஷ்டிகரைக்கனவீனப்படுத்துகிறார்கள். பரலோகப் பதிவுகளில் அவர்களுடைய பெயர்களுக்கு நேராக, தேவனைக் கொள்ளையடித்தவர்கள் என்று எழுதப்பட்டிருக்கும். 3COL, 266 TamChS 288.2
ஆத்துமாக்களின் மதிப்போடு ஒப்பிடும்போது, இக்காலத்தில் பணத்திற்கு என்ன மதிப்பிருக்கிறது? நம்மிடமுள்ள ஒவ்வொரு பணத்தையும் நம்முடையதாக அல்ல, ஆண்டவருடையதாகக் கருத வேண்டும்; ஆண்டவரிடமிருந்து வந்த ஒப்பற்ற பொக்கிஷமாகக் கருதவேண்டும். தேவையற்ற சிற்றின்பங்களில் அவற்றை வீணாக்காமல் தேவனுடைய நோக்கத்திற்காகவும், ஆண்களையும் பெண்களையும் அழிவிலிருந்து இரட்சிக்கும் பணிக்காகவும் பயன்படுத்த வேண்டும். 4LS, 214 TamChS 288.3
நற்செய்தி ஊழியம் எவ்வளவு பெரிது! உலகில் அதைச் செய்வதற்கு நம் செல்வாக்கும் ஆதரவும் தேவை என்பதற்கு இந்த ஊழியத்தின் முக்கியத்துவம் போதுமான காரணமாக இருக்காதா? சத்தியம் பிற நாடுகளிலும் அறிவிக்கப்படவேண்டும்; உள்ளூர் ஊழியப் பணிகள் தாங்கப்படவேண்டும். சகல விதமான ஆடம்பரத்தையும் மறுத்துவிட்டு, நம் காணிக்கைகளை தேவனுடைய பொக்கிஷச் சாலையில் போடவேண்டாமா? இந்த ஊழியம் பரலோகத்தின் அங்கீகாரத்தைப் பெறாததா? இக்கடைசி நாட்களுக்கான ஊழியம் பரம்பரைச் சொத்துகளால் ஆதரிக்கப்படவில்லை; உலகச் செல்வாக்கால் நடத்தப்படவுமில்லை. சுயமறுப்பாலும் தியாகமனப்பான்மையாலும் தாங்கப்படுகிறது. கிறிஸ்துவின் பாடுகளில் இங்கே நாம் பங்காளர்களாகிற சிலாக்கியத்தை தேவன் நமக்குக்கொடுத்திருக்கிறார்; புதிதாகச் சிருஷ்டிக்கப்படும் பூமியில் நாம் சுதந்தரத்தைப் பெறுவதற்கான உரிமையையும் அருளியிருக்கிறார். 1RH, Dec. 2, 1890 TamChS 288.4
அர்ப்பணிப்போடு தேவனுக்காகப் பொக்கிஷசாலையில் போட்ட காணிக்கையையும், அந்தக் காணிக்கையால் உண்டான விளைவையும் தூதர்கள் உண்மையோடு பதிவுசெய்வது எனக்குக் காட்டப்பட்டது. தேவனுடைய நோக்கத்திற்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒவ்வொரு காசையும், கொடுப்பவரின் விருப்பம் அல்லது தயக்கத்தையும் தேவனுடைய கண் ஆராய்ந்தறிகிறது. கொடுப்பதிலுள்ள நோக்கமும் பதிவுசெய்யப்படுகிறது. தேவன் தங்களிடம் எதிர்பார்ப்பதுபோல, தேவனுக்குச் சொந்தமானவற்றை அவரிடமே திரும்பக்கொடுக்கிற சுயதியாகமும் அர்ப்பணிப்பும் உள்ளவர்கள் தங்கள் கிரியைகளுக்குத்தக்க பலனைப் பெறுவார்கள். அவ்வாறு வழங்கப்பட்ட காணிக்கைகள் தவறாகப் பயன்படுத்தப்படலாம்; தேவமகிமைக்காகவும், ஆத்துமாக்களின் இரட்சிப்புக்காகவும் பயன்படவேண்டுமென்று அவற்றைக் கொடுத்தவரின் நோக்கம் அதனால் நிறைவேறாமல் போகலாம். ஆனாலும், ஆத்துமாவில் உண்மையுடன், தேவமகிமையை மட்டுமே நினைத்து அவற்றைக் கொடுத்தவர்கள் தங்களுக்குரிய பலனை அடையாமற் போவதில்லை. 22T, 518,519 TamChS 289.1
தேவையிலுள்ள ஒரு சகோதரருக்கு உதவி செய்யவோ, சத்தியத்தைப் பரப்புவதில் தேவநோக்கத்திற்கு உதவி செய்யவோ கிடைக்கிற ஒவ்வொரு வாய்ப்பும் ஒரு முத்து போன்றது; அதை முன்னரே பரலோகத்திற்கு அனுப்பி, பத்திரப்படுத்துவதற்காகப் பரலோகவங்கியில் செலுத்திவிடலாம். தேவன் உங்களைச் சோதித்தறிகிறார். தம் கையை தாராளமாகத் திறந்து, தம் ஆசீர்வாதங்களை உங்களுக்குக் கொடுக்கிறார்; அவற்றை நீங்கள் எவ்வாறு பயன் படுத்துகிறீர்கள்? உதவி தேவைப்படுகிறவர்களுக்கு உதவி செய்வீர்களா? ஆத்துமாக்களின் மதிப்பை உணர்வீர்களா? அவர் உங் களிடம் ஒப்படைத்துள்ள வசதிகளைவைத்து முடிந்ததைச் செய்வீர்களா? இவற்றையெல்லாம் தேவன் பார்த்துக்கொண்டிருக்கிறார். இதுபோன்று மேம்படுத்தப்பட்ட ஒவ்வொரு வாய்ப்பும் உங்களுடைய பரலோகப் பொக்கிஷத்தோடு சேர்கிறது. 13T, 249,250 TamChS 289.2