அனைத்து வகை கிறிஸ்தவ ஊழியத்திலும் பேச்சுத்திறனை நாகரிகமான விதத்தில் பயன்படுத்தவேண்டும். இனிய தொனிகளில் பேசவேண்டும். சரியான வார்த்தைகளைப் பயன்படுத்த வேண்டும். அன்பும் மனிதாபிமானமுமான வார்த்தைகளைப் பயன்படுத்தவேண்டும். இதற்கென பயிற்சியெடுக்க வேண்டும். 2 COL, 336 TamChS 292.2
நித்திய நலன்கள் சம்பந்தப்பட்ட செய்தியை நான் ஜனங்களுக்கு அறிவிக்கிறேன் என்பதை ஒவ்வொரு ஊழியனும், ஒவ்வொரு போதகனும் மனதில் பதித்திருக்கவேண்டும். அவர்கள் பேசுகிற ஒவ்வொரு சத்தியமும், இறுதியாகக் கணக்குக்கொடுக்க வேண்டிய மகா நாளில் அவர்களை நியாயந்தீர்க்கும். செய்தி கொடுக்கிறவர் செய்தியைக் கொடுக்கிற விதத்தைப் பொறுத்து சில ஆத்துமாக்கள் அதை ஏற்றுக்கொள்கிறார்கள்; அல்லது புறக்கணிக்கிறார்கள். எனவே சிந்தையில் உரைக்கும்படியும், இருதயத்தில் பதியும்படியும் வார்த்தையைப் போதிக்கவேண்டும். மெதுவாக, தெளிவாக, பக்திவிநயத்தோடு பேசவேண்டும். அதன் முக்கியத்துவத்தை உணர்ந்து, உற்சாகமிகுதியோடு பேசவேண்டும். 3COL, 336 TamChS 292.3
தேவன்பின் எல்லைக்குள் மற்றவர்களையும் இழுப்பதற்கு முயற்சிக்கும்போது, உங்கள் வார்த்தையில் காணப்படுகிற சுத்த மும்,சேவையில் காணப்படுகிற சுயநலமின்மையும், வாழ்க்கையில் காணப்படும்மகிழ்ச்சியும் அவருடைய கிருபையின்வல்லமைக்குச் சாட்சிபகருவதாக. 4 MH, 156 TamChS 292.4
கிறிஸ்துவின் ஆராய்ந்து முடியாத ஐசுவரியங்களை மற்றவர்களுக்கு அறிவிக்கும்படி ஒவ்வொரு கிறிஸ்தவனும் அழைக்கப்பட்டிருக்கிறான்; ஆகவே பேச்சாற்றலில் சிறந்து விளங்க அவன் வகை தேடவேண்டும். கேட்பவர்கள் அங்கீகரிக்கும் விதத்தில் பேச வேண்டும். தமது ஊழியர்கள் பண்பற்றவர்களாகக் காணப்படுவது தேவனுடைய நோக்கமல்ல. மனிதன் தன்மூலமாக உலகத்திற்குப் பாய்ந்தோடும் பரலோக ஆற்றலின் மதிப்பைக்குறைப்பதோ, தரங்கெடச் செய்வதோ அவரது சித்தமல்ல. 5COL, p. 336 TamChS 292.5
ஊழியர்கள் பொறுமையாகவும் இரக்கமாகவும் நட்பாகவும் உதவிகரமாகவும் இருப்பதற்கான பயிற்சியைப் பெறுவார்கள். தங்களுடைய தோழரான கிறிஸ்து கடினமான அன்பற்ற வார்த்தைகளையோ உணர்வுகளையோ அங்கீகரிக்கமாட்டாரென உணர்ந்து, மெய்யான கிறிஸ்தவ மனிதாபிமானத்துடன் நடக்கப் பிரயாசப்படுவார்கள். பேச்சுத்திறன் மிகவும் விலையுயர்ந்த ஒரு தாலந்து ஆகும்; மேன்மையும் பரிசுத்தமுமான வேலையைச் செய்வதற்கு அது கைகொடுக்கும். 1 GW, 97 TamChS 293.1