Go to full page →

மனவளப் பயிற்சி TamChS 293

இக்காலத் தேவைகளை நிறைவேற்றுவதற்கு ஒரு திருச்சபையாக நமக்கு மனவளப் பயிற்சி தேவைப்படுகிறது. இது அத்தியாவசியத் தேவை ஆகும். 24T, 414 TamChS 293.2

ஆயத்தம் எதுவுமின்றி, ஆண்டவருடைய பணியில் நுழைந்து விட்டு, வெற்றி கிடைக்குமென எதிர்பார்க்கக்கூடாது. சிந்தனை மிக்க, அறிவாற்றல்மிக்க மனிதர்கள் ஆண்டவருக்கு தேவை. மடத்தனமாகச் செயல்படுகிறவர்கள் அல்ல, அவரோடு சேர்ந்து செயல்படுகிறவர்களே இயேசுவுக்குத் தேவை. ஆத்துமாக்களின் இரட்சிப்புக்கு அவசியமான மாபெரும் ஊழியத்தைச் செய்ய, சரியான யோசனையும் புத்திக்கூர்மையும் உள்ள மனிதர்கள் தேவனுக்குத் தேவை. 34T, 67 TamChS 293.3

மனதிற்குப் பயிற்சிகொடுத்து, அதை ஒழுங்குபடுத்த வேண்டும். யோசிப்பதற்கு மனதை கட்டாயமாகப் பழக்கவேண்டும். தங்களுக்காக யோசிக்க வேறொருவரைச் சார்ந்திருக்கிறீர்களா? சிந்திப்பதற்கு மூளைக்கு கடும் வேலை கொடுக்காமல் இருக்கிறீர்களா? நினைவுத்திறன் இல்லாத நிலையும், பகுத்தறிகிற திறன் இல்லாத நிலையும் தொடரும். அதனால், மனதிற்குப்பயிற்சியளிக்க ஒவ்வொரு நபரும் முயற்சி எடுக்கவேண்டும். 42T, 188 TamChS 293.4

சோம்பேறித்தனம், கட்டுப்படாத மனது, பயனற்ற சிந்தனைகள், எங்கும் திரிகிற நினைவுகள் போன்றவற்றால் நாம் திருப்தியடைவதை தேவன் விரும்புவதில்லை. 5 CT, 506 TamChS 293.5

தேவ மனிதர்கள் இமைப்பொழுதைக்கூட வீணாக்காமல், ஆராய்ச்சியில் கருத்தோடும், அறிவைப்பெறுவதில் ஊக்கத்தோடும் இருக்கவேண்டும். விடாமுயற்சி செய்தால், கிறிஸ்தவர்களாகவும் செல்வாக்கு மிக்கவர்களாகவும் எவ்வளவு உயரத்தையும் அவர்கள் எட்டமுடியும். 14T, 411 TamChS 293.6

கணப்பொழுது நேரத்தைக்கூட பொக்கிஷமாகப் போற்ற வேண்டும். பயணம் செய்து நேரத்தைக் கழிப்பது, உணவுக்காகக் காத்திருப்பது, சொன்ன நேரத்திற்கு வராமல் மெத்தனமாயிருக்கிற ஒருவருக்காகக் காத்திருப்பது போன்ற சமயங்களில் ஏதாவது புத்தகத்தை வைத்திருந்தால், கிடைக்கிற அந்தக் கொஞ்ச நேரத்தையும் படிப்பதிலும் வாசிப்பதிலும் கவனமாகச் சிந்திப்பதிலும் செலவிட்டால், எதைத்தான் சாதிக்கமுடியாது! 2 COL, 343,344 TamChS 294.1

உறுதியான நோக்கமும் கடினமான உழைப்பும் நேரத்தை கவனமாகச் செலவிடுவதும் இருந்தால், மனிதர்கள் அறிவும் மன ஒழுங்கும் பெற்றுக்கொள்ள உதவியாக இருக்கும்; செல்வாக்கும் பயனும் உள்ள எந்தப் பதவிக்கும் அவர்களைத் தகுதிப்படுத்தும். 3 COL, 334 TamChS 294.2

பொறுப்புமிக்க பதவியில் இருப்பவர்கள் தொடர்ந்து தங்களை மேம்படுத்தவேண்டும். ஏதாவது பழைய அனுபவத்தையே பிடித்துக்கொண்டு, அதுவே போதுமென நினைக்கக்கூடாது. அறிவியல்படியான ஊழியத்தைச் செய்யவேண்டும். தேவனுடைய சிருஷ்டிப்புகளில் பிறக்கும்போது, மிகவும் உதவி தேவைப்படுகிற நிலையில் இருப்பவன் மனிதனே. தன் இயல்பில் மாறுபாடுள்ளவனாகவும் இருக்கிறான். இருந்தாலும், தொடர்ந்து மேம்பாடு அடைகிற திறனைப் பெற்றிருக்கிறான். தேவ தூதர்களின் தூய்மையையும் பூரணத்தையும்விட சற்றே குறைவாக அறிவுக்கூர்மையும் குணத்தூய்மையும் அடையும்வரை அவன் வளரலாம்; அதற்கு அறிவியலைப் பயன்படுத்தலாம். நல்லொழுக்கத்தால் மேன்மையடையலாம்; மனதிலும் ஒழுக்கத்திலும் கண்ணியத்தில் வளரலாம். 44T, 93 TamChS 294.3

தேவனோடு சேர்ந்து பணிபுரிய விரும்புகிறீர்களா? உங்கள் சரீரத்தின் ஒவ்வோர் உறுப்பும் பூரண நிலையில் இருப்பதற்கும், சிந்தை தெளிவுடன் இருப்பதற்கும் கடும்முயற்சி செய்யவேண்டும். ஒவ்வொரு கடமையையும் செய்ய சரீர மன ஒழுக்கத்திறன்களை ஆயத்தப்படுத்துவதே உண்மையான கல்வியாகும்; அது தேவனுடைய சேவைக்காக சரீரத்தையும் மனதையும் ஆத்துமாவையும் பயிற்றுவிப்பதாகும். இந்தக் கல்வியே நித்திய ஜீவனுக்கேதுவாக நிலைத்திருக்கும். 5 COL, 330. TamChS 294.4

இயந்திர வல்லுனர்களும் வழக்கறிஞர்களும் வியாபாரி களும் தொழில் வல்லுனர்களும் வர்த்தகர்களும் தங்கள் தொழி லி ல் நிபுணர்களாக மாறவேண்டும். கிறிஸ்துவின் சேவையைச் செய்வதாகச் சொல்கிற கிறிஸ்துவின் பின்னடியார்கள் அச்சேவையைச் செய்கிற வழிகளும் வழிமுறைகளும் தெரியாதவர்களாக, அறிவில் குறைந்தவர்களாக இருக்கலாமா? இவ்வுலகில் கிடைக்கும் பிரதிபலன்களுக்கெல்லாம் மேலாக நித்திய ஜீவனைப் பெறுவதற்கான முயற்சியை மேற்கொள்ளவேண்டும். ஆத்துமாக்களை இயேசுவிடம் வழிநடத்துவதற்கு மனித இயல்பு குறித்த அறிவும், மனித சிந்தை குறித்த ஆராய்ச்சியும் அவசியம். சத்தியம் எனும் மாபெரும் விஷயத்தை எவ்வாறு ஆண்களிடமும் பெண்களிடமும் கொண்டு செல்லவேண்டும் என்பதை அறிவதற்கு அதிகயோசனையும் ஊக்கமான ஜெபமும் அவசியம். 14T, 67 TamChS 294.5