Go to full page →

வைராக்கியம TamChS 299

ஊக்கமிக்க கிறிஸ்தவ வைராக்கியம் தேவைப்படுகிறது: அந்த வைராக்கியம் ஏதாவது செய்வதில் வெளிப்படவேண்டும். நயகரா நீர்வீழ்ச்சியின் தண்ணீர் விழாதபடிக்கு எவ்வாறு தடுக்க முடியாதோ, அதுபோல கிறிஸ்துவைப் பெற்றிருக்கிற ஒருவர் கிறிஸ்துவை அறிக்கையிடாதவாறு அவரைத் தடுக்கமுடியாது. 59T, 233 TamChS 299.4

கிறிஸ்துவை தன் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொள்கிற ஒவ்வொருவரும் தேவனைச் சேவிக்கிற சிலாக்கியத்திற்காக ஏங்குவார்கள். பரலோகம் தனக்காகச் செய்திருப்பதைத்தியானிப்பதால், எல்லையற்ற அன்பாலும் பணிவான நன்றியுணர்வாலும் அவருடைய இருதயம் அசைக்கப்படும். தேவனுடைய சேவையில் தன் திறமைகளை எல்லாம் ஈடுபடுத்தி, அவருக்கு தான் நன்றியுணர்வோடு இருப்பதைக் காட்டுவதற்கு ஆவலோடு இருக்கிறார். கிறிஸ்து மேலும், அவர் விலைகொடுத்து வாங்கிய சொத்துமேலும் தன் அன்பைக்காட்டுவதற்கு ஏங்குகிறார். கடினமாக உழைக்கவும், பாடனுபவிக்கவும், தியாகம் செய்யவும் பேராவல்கொள்ளுகிறார். 6MH, 502 TamChS 299.5

ஆவிக்குரிய ஊழியத்தை மும்முரமாகச் செய்யவேண்டுமென்கிற வைராக்கியமுள்ள மார்த்தாள்களுக்கு ஒரு பரந்த களம் உள்ளது. ஆனால் முதலாவது அவர்கள் மரியாளுடன் இயேசுவின் பாதத்தில் அமருவார்களாக. அவர்களுடைய கருத்தான பிரயாசமும் துடிப்பும் ஆற்றலும் பரிசுத்தமாக்கப்படுவதாக; அப்போது அவர்களுடைய வாழ்க்கை நன்மைக்கேதுவான ஈடு இணையற்ற வல்லமையாக விளங்கும். 1DA, 525 TamChS 300.1

கிறிஸ்து விடாமுயற்சியோடு தளராமல், உறுதியான வைராக்கியத்தோடு பிரயாசப்பட்டதுபோல, ஆண்டவருடைய நாமத்தில் நாம் அவருடைய ஊழியத்தை முன்னெடுத்துச் செல்லவேண்டும். 29T, 25 TamChS 300.2

நம் ஆவிக்குரிய பிரயாசங்களில் ஒரே பாணியையே பின்பற்றுவதை விட்டுவிட வேண்டும். நாம் உலகத்தில் ஊழியம் செய்கிறோம். போதுமான சுறு சுறுப்பையும் வைராக்கியத்தையும் நாம் காட்டுவதில்லை. அதிக ஊக்கத்தோடு ஊழியம் செய்திருந்தால், நாம் அறிவிக்கிற சத்தியம் உண்மையென்று மனிதர்கள் உணர்ந்திருப்பார்கள். ஆர்வமின்றி, ஒரே பாணியில் ஊழியம் செய்வது உயர் வகுப்பைச் சேர்ந்த பல ஆத்துமாக்களை ஆதாயப்படுத்தத் தவறுகிறது. ஆழமும் ஊக்கமும் பரிசுத்தமாக்கப்பட்டதுமான வைராக்கியத்தை அவர்கள் நம்மில் காணவேண்டும். 36T, 417 TamChS 300.3