இயேசுவோடு உடன் வேலையாளாகச் செயல்படவேண்டுமா? யாருக்காக ஊழியம் செய்கிறீர்களோ அவர்கள் மேல் சகலவிதமான பொறுமையும் அவசியம். இந்த ஊழியத்தில் என்ன பிரமாதம் இருக்கிறது என்று சொல்லாமல், பாக்கியமான முடிவை எண்ணிப்பார்க்க வேண்டும். நீங்கள் யாருக்காக ஊழியம் செய்தீர்களோ, அவர்கள் மேல் உங்களுக்கு உடன்பாடு இல்லையென்றால், ‘அவர்கள் போகட்டும்; இரட்சிக்கப்பட தகுதியற்றவர்கள்’ என்று சொல்கிறீர்கள். புறக்கணிக்கப்பட்ட மக்களை கிறிஸ்துவும் இவ்வாறு நடத்தியிருந்தால் என்னவாகியிருக்கும்? நம்பிக்கையற்ற நிலையிலிருந்த பாவிகளை இரட்சிக்க கிறிஸ்து மரித்தார். அவரைப் பின்பற்றுகிற நீங்களும் அவர் காட்டின முன்மாதிரியின்படியே நடந்து, அதே ஆவியோடு ஊழியம் செய்து, விளைவுகளை தேவனிடம் விட்டு விட்டால், இந்த வாழ்க்கையில் நீங்கள் எவ்வளவு நன்மையைச் செய்திருக்கிறீர்கள் என்பதை அளக்கவே முடியாது. 44T, 132 TamChS 300.4
நீங்கள் தொடர்புகொள்கிற அனைவருக்காகவும் தன்னலம் பாராமல், அன்போடும் பொறுமையோடும் ஊழியம் செய்யுங்கள். பொறுமை இழக்கவே கூடாது. ஒரு அன்பற்ற வார்த்தைகூட பேசாதீர்கள். கிறிஸ்துவின் அன்பு உங்களுடைய இருதயங்களிலும், இரக்கத்தின் பிரமாணம் உங்களுடைய உதடுகளிலும் இருக்கட்டும். 19T, 41 TamChS 301.1