Go to full page →

தன்னலமின்மை TamChS 316

கிறிஸ்துவின் ஊழியம் நமக்கு முன்மாதிரியாக இருக்கிறது. அவர் எப்போதும் நன்மை செய்கிறவராகச் சுற்றித்திரிந்தார். தேவாலயத்திலும், ஜெபாலயங்களிலும், நகரத்தின் வீதிகளிலும், சந்தை வெளியிலும், பணிமனையிலும், கடலோரத்திலும், குன்றுகளுக்கு நடுவிலும், சுவிசேஷத்தைப் பிரசங்கித்தார்; வியாதியஸ்தரைக்குணமாக்கினார். அவரது சேவை சுயநலமற்ற சேவையாக இருந்தது; அதுவே நம் பாடப்புத்தகமாக இருக்கவேண்டும். அவருடைய கனிவான, பரிவுமிக்க அன்பை நாம் யோசித்தால், நம் சுயநலமும் இரக்கமற்ற மனதும் மிகவும் மோசமானவைகளாக நமக்கே தெரியும். 39T, 31 TamChS 316.2

தேவனுக்காகச் சேவை செய்ய விரும்புகிற நோக்கத்தில் சுயநலம் இருக்கக்கூடாது. தேவனுக்கு உகந்த சேவைசெய்ய முதலில் தேவையானவை சுயநலமற்ற அர்ப்பணிப்பும்தற்தியாக ஆவியுமே. இவையே இன்றும் என்றும் அவசியம். நாம் அவருக்காகச் செய்கிற சேவையில் சுயநலம் ஓர் இழையளவுகூட ஊடுருவிச்செல்வதை நம் ஆண்டவரும் எஜமானுமானவர் விரும்புவதில்லை. பூலோகப் பரிசுத்த ஸ்தலத்தைக் கட்டினவர்களிடம் பரிபூரணத்தின் தேவன் எதிர்பார்த்த அதே திறமையோடும் மதிநுட்பத்தோடும் ஞானத்தோடும் செம்மையோடும் நாம் வேலைசெய்ய வேண்டும். சுயநலத்தைப் பலிபீடத்தின்மேல் வைத்து, அதை ஜீவபலியாக எரித்தால்தான், நம் மேன்மையான தாலந்துகளும் உன்னதமான சேவைகளும் தேவனுக்கு ஏற்புடையவையாகும். இதனை ஞாபகத்தில் வைத்து, நாம் சகல வேலைகளையும் செய்யவேண்டும். 1PK, 65 TamChS 316.3

உலகத்திலுள்ள எல்லா மக்களிலும் சீர்திருத்தவாதிகள்தாம் அதிக சுயநலமற்றவர்களாகவும், அதிக இரக்கமுள்ளவர்களாகவும், அதிக மனிதாபிமானமுள்ளவர்களாகவும் இருக்கவேண்டும். சுயநலமற்ற கிரியைகளின் மெய்யான நற்குணங்கள் அவர்களுடைய வாழ்க்கையில் காணப்பட வேண்டும். 2MH, 157 TamChS 317.1