Go to full page →

கிறிஸ்துவுக்குப் பின்வந்தவர் TamChS 334

பரிசுத்த ஆவியானவர் கிறிஸ்துவின் பிரதிநிதியாக இருக் கிறார்; ஆனால், மனிதரின்ஆள்தத்துவப்பண்புகளைப் பெறாதவர்; அந்த விதத்தில் அவர் எல்லைகளுக்கு அப்பாற்பட்டவர். கிறிஸ்து மனிததன்மைகளின் வரம்புக்குட்பட்டிருந்ததால்,அவர்தனிப்பட்ட விதத்தில் ஒரே நேரத்தில் எல்லா இடங்களிலும் இருக்கமுடியாது. எனவே, மனிதர்களுடைய நலனை முன்னிட்டு, அவர் பிதாவிடம் சென்று, பூமியில் தம்முடைய பதிலாளாக இருப்பதற்கு ஆவியான வரை அனுப்பவேண்டியிருந்தது. மற்றவர்களைவிட நான்தான் கிறிஸ்துவின் அருகில் இருக்கிறேனென்று இப்போது மனிதர் எவரும் சொல்லமுடியாது. ஆவியானவர்மூலம் இரட்சகர் எல்லாருக்கும் அருகில் இருக்கிறார். கிறிஸ்து பரலோகத்திற்குச் செல்லாமல் இங்கேயே இருந்திருந்தால்கூட, ஒரேநேரத்தில் அவர் எல்லோருக்கும் அருகில் அவர் இருந்திருக்க முடியாது; இப்போதோ ஏவர் அனைவருக்கும் சமீபமாக இருக்கிறார். 1DA, 669 TamChS 334.2