Go to full page →

நீதியான பிரதிபலன் TamChS 350

கர்த்தர் நல்லவர், இரக்கமுள்ளவர், கனிவானவர். தம் பிள்ளைகள் ஒவ்வொருவரைப்பற்றியும் அவருக்கு மிக நன்றாகத் தெரியும். நாம் ஒவ்வொருவரும் என்ன செய்கிறோம் என்பதும் அவருக்குத் தெரியும். ஒவ்வொருவருக்கும் எவ்வளவுக்கு பிரதிபலன் வழங்கவேண்டும் என்பதும் அவருக்குத் தெரியும். எனவே, உங்கள் பிரதிபலன் பட்டியலையும், உங்கள் குற்றச்சாட்டுப்பட்டியலையும் கீழே வைத்துவிட்டு, தேவன் தம் பணியைச் செய்வதற்கு அனுமதிப்பீர்களா? தேவன் உங்களுக்குக் கொடுத்திருக்கிற வேலையை நீங்கள் செய்தால், மகிமையின் கிரீடம் உங்களுக்குக் கொடுக்கப்படும். 3 SW, My 14, 1903 TamChS 350.2

எவ்வளவு பிரதிபலன் கிடைக்கும் என்கிற கேள்வியே கேட்காமல், தேவனை நாம் சார்ந்திருப்பதையை அவர் விரும்புகிறார். ஆத்துமாவில் கிறிஸ்து வாசஞ்செய்தால், பிரதிபலன் குறித்த எண்ணம் மேலோங்கி நிற்காது. அதுவே நமது ஊழியத்தை இயக்குகிற நோக்கமாகவும் இருக்காது. 4COL, 398 TamChS 350.3

உப்பரிகைகளிலிருந்தும் குடிசைகளிலிருந்தும் நிலவறைகளிலிருந்தும் தூக்குமரங்களிலிருந்தும் மலைகளிலிருந்தும் வனாந்தரங்களிலிருந்தும் பூமியின் குகைகளிலிருந்தும் சமுத்திரங்களின் ஆழங்களிலிருந்தும் கிறிஸ்து தமது பிள்ளைகளை தம்மிடமாகக் கூட்டிச்சேர்ப்பார். பூமியில் இவர்கள் தனிமையாக்கப்பட்டு, துன் புறுத்தப்பட்டு, சித்திரவதை அனுபவித்தவர்கள். சாத்தானுடைய வஞ்சகக் கோரிக்கைகளுக்கு இணங்க மறுத்ததால், முற்றிலும் அவமதிக்கப்பட்டுக் கல்லறைக்குச் சென்றவர்கள் இலட்சக்கணக்கானோர். தேவனுடைய பிள்ளைகளை கொடுங்குற்றவாளிகளாக மனித நீதிமன்றங்கள் தீர்ப்பு செய்தன. ஆனால், ‘தேவனே நியாயாதிபதியாக’ இருக்கும் நாள் சமீபமாயிருக்கிறது. அப்பொழுது பூலோகத்தார் வழங்கிய தீர்ப்புகள் மாற்றப்படும். தமது ஜனத்தின் நிந்தையை பூமியிலிராதபடிக்கு முற்றிலும் நீக்கிவிடுவார்.’ அவர்கள் ஒவ்வொருவருக்கும் வெள்ளை அங்கிகள் கொடுக்கப்படும். ‘அவர்களைப் பரிசுத்த ஜனமென்றும், கர்த்தரால் மீட்கப்பட்டவர்களென்றும் சொல்லுவார்கள். 1COL, 179,180 TamChS 350.4