மகிழ்ச்சி TamChS 351.1
கிறிஸ்துவைப் போல ஊழியம் செய்ய தங்கள் வாழ்க்கையைக் கொடுப்பவர்கள் மெய்யான மகிழ்ச்சியின் அர்த்தத்தை அறிவார்கள். அவர்கள் விருப்பங்களும் ஜெபங்களும் அவர்களையும் தாண்டி அப்பால் செல்லும். மற்றவர்களுக்கு உதவிசெய்ய முயலும் போது, அவர்கள்தாமே வளருவார்கள். மிகப்பெரிய திட்டங்களும் அதிகபரபரப்பு நிறைந்த முயற்சிகளும் அவர்களுக்கு அத்துப்படியாகும். வெளிச்சத்திற்கும் ஆசீர்வாதங்களுக்கும் தெய்வீகவாய்க்கால்களாக அவர்கள் விளங்கினால் வளராதிருக்கமுடியுமா? அப்படிப்பட்டவர்கள் பரலோகத்திலிருந்து ஞானத்தைப் பெறுகிறார்கள். கிறிஸ்துவின் திட்டங்களிளெல்லாம் அவரோடு தங்களை ஒன்றிணைக்கிறார்கள். ஆவிக்குரிய மந்தநிலைக்கு அங்கு வாய்ப்பே இல்லை. 29T, 42 TamChS 351.2
இந்தப் பணியில் வெற்றிகரமாக ஈடுபடுகிற சபையானது சந்தோஷமிக்க சபையாகும். எந்த மனுஷன் அல்லது மனுஷியின் ஆத்துமா பாவத்தில் இருப்போர்மேல் அன்பாலும் மனதுருக்கத்தாலும் இழுக்கப்பட்டு, மகா மேய்ப்பனுடைய மந்தைக்குள் அவர்களைக் கொண்டுவர பிரயாசப்படுகிறதோ அவர்கள் பாக்கியமான ஓர் ஊழியத்தில் ஈடுபடுகிறார்கள். ஓ, ஒரு பாவி அவ்வாறு மீட்கப் படும்போது, தொன்னூற்றொன்பது நீதிமான்களைப் பாக்கிலும் அந்த ஒருபாவிக்காக பரலோகில்மிகுந்த சந்தோஷம் உண்டாகிறது. 32T, 22 TamChS 351.3
தேவ சித்தத்திற்கு அடிபணிந்தவருக்கு எந்த வேலையும் பளு மிக்கதாகத் தெரியாது. தேவன் அவருக்கு எந்த வேலையைக் கொடுத்தாலும் ‘அதை ஆண்டவருக்காச் செய்கிறோம்’ என்கிற எண்ணம் அதன்மேல் ஆர்வத்தை உண்டாக்கும். 19T, 150 TamChS 351.4
பரலோகம் தனக்கு நியமித்த பணியில் கிறிஸ்தவ ஊழியர் களைப்படையவே மாட்டார். பாவத்தின் அடிமைத்தனத்திலிருந்து ஆத்துமாக்கள் விடுதலையடைவதைக் கண்டு, ஆண்டவருடைய சந்தோஷத்திற்குள் பிரவேசிக்கிறார்; சுயமறுப்போடு செய்கிற ஒவ்வொன்றுக்கும் இந்தச் சந்தோஷம் பிரதிபலனாகக் கிடைக்கும். 2SW, Apr. 2, 1903 TamChS 352.1
கடின உழைப்பாளியாக மாறுவதும், நன்மை செய்யும்படி சுயத்தை மறுத்து பொறுமையோடு தொடர்ந்து ஊழியம் செய்வதும் மகிமையான ஒருபணியாகும்; பரலோகம் அதில் பிரியப்படுகிறது. 32T, 24 TamChS 352.2
சாத்தான் எவர்களைச் சீரழித்து, எவர்கள்மூலமாகச் செயல்பட்டானோ, நம்பிக்கையற்ற பாத்திரங்களான அவர்களை எடுத்து, தம் கிருபையின் குடிமக்களாக மாற்றுவதில் கிறிஸ்துமகிழ்ச்சியடைகிறார். தம் பணியை நிறைவேற்றுவதிலும், அதை வெற்றிபெறச் செய்வதிலும் தம் பிள்ளைகளை தம் ஏதுகரங்களாக அவர் மாற்றுகிறார்; இந்த வாழ்க்கையில்தானே அவர்கள் ஒப்பற்ற பிரதிபலனைக் கண்டு கொள்கிறார்கள். 46T, 308,309 TamChS 352.3