Go to full page →

ஆரோக்கியம் TamChS 353

நன்மை செய்வதே வியாதிக்கான மிகச் சிறந்த நிவாரணம். இந்த ஊழியத்தில் ஈடுபட்டிருக்கிறவர்கள் தேவனை நோக்கிக் கூப்பிடவேண்டும்; தாம் அவர்களுக்குப் பதிலளிப்பதாக தேவன் உறுதியளித்திருக்கிறார். வறட்சியான காலத்தில் அவர்களுடைய ஆத்துமாதிருப்தியாகும்; அவர்கள் நீர்ப்பாய்ச்சலான தோட்டத்தைப் போலவும் வற்றாத நீரூற்றைப்போலவும் இருப்பார்கள். 32T, 29 TamChS 353.2

இவர்கள் தேவனோடும்கிறிஸ்துவோடும் பரிசுத்ததூதர்களோடும் ஐக்கியப்பட்டு, பரலோகச் சூழலால் சூழப்பட்டிருக்கிறார்கள். அந்தச் சூழலானது சரீரத்திற்கு ஆரோக்கியத்தையும், அறிவுத் திறனுக்கு ஆற்றலையும், ஆத்துமாவுக்குச் சந்தோஷத்தையும் கொண்டு வருகிறது. 46T, 306 TamChS 353.3

மற்றவர்களுக்கு நன்மை செய்வதால் கிடைக்கிற சந்தோஷமானது உணர்வுகளுக்குப் புதுத்தெம்பைக் கொடுக்கிறது; அது நரம்புகளூடே மின்சாரம் போலப் பாய்ந்து, இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது; சரீர, மன நலனைத் தூண்டுகிறது. 54T, 56 TamChS 353.4