மற்றவர்களுக்காகச் செயல்படும்போது, இனிய மனதிருப்தி கிடைக்கிறது; அந்த மனச் சமாதானம் போதுமான பிரதிபலனாக இருக்கிறது. மற்றவர்களுக்கு நல்லது செய்யவேண்டுமென்கிற உயர்வானதும் உன்னதமானதுமான ஆசையால் தூண்டப்படும் போது, வாழ்க்கையின் பல்வேறு கடமைகளை உண்மையோடு செய்வதில் மெய்சந்தோஷம் காணலாம். பூலோகப் பிரதிபலனைக் காட்டிலும் அதிமானதை இது கொண்டு வரும்; ஏனென்றால், உண்மையோடும் சுயநலமில்லாமலும் செய்யப்படுகிற ஒவ்வொரு கடமையையும் தேவதூதர்கள் கவனிக்கிறார்கள்; வாழ்க்கைப் பதிவேட்டில் பொறிக்கிறார்கள். 22T, 132 TamChS 354.2